If Allah is with us who can be against us!
சர்வாதிகாரம் இஸ்லாத்தில் கிடையாது. நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசினை இஸ்லாம் அனுமதிக்கவில்லைஇறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது ராணுவ ஆட்சியை
ஆதரிக்கவில்லை. அதுபோல் இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப் படுத்தி இணைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அது அனுமதிக்கவுமில்லை
"(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்." (2:256)
யாரும் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் அவர்கள் சுய சிந்தனையோடு அவர்கள் விரும்பியே இஸ்லாத்திற்குள் இணைவதனை இஸ்லாம் விரும்புவதுடன் அதுதான் இஸ்லாமிய சட்டமாக உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் ஒரு முஸ்லீம் இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகாரியாக இருந்து தனது ஆட்சியை திணிக்க உரிமை கிடையாது..
முஹம்மது நபிக்குப் பிறகு இஸ்லாத்தில் வந்த நான்கு கலிபாக்களும் மக்களால்,சஹாபாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் பரவலான ஆதரவும் மற்றும் மரியாதையும் பெற்று ஆட்சி செய்து மகிழ்ந்தனர். ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)ஹஸ்ரத்உமர்(ரலி),ஹஸ்ரத் உதுமான்(ரலி),மற்றும் ஹஸ்ரத்அலி (ரலி)சமூகத்தின் நம்பகமான பெரியவர்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)திறந்த பொது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலிப் அமீர் முவையா சரியாக வழிநடத்திய ஆட்சியாளர். அமீர் முவையா தனது மகனை தன்னிச்சையாக ஆட்சி செய்ய நியமனம் செய்தார். அமீர் முவையாவின் மகனார் முறையற்ற வழியில் ஆட்சியை கைப்பற்றி தவறான இராணுவ ஆட்சி செய்ததால் அதனை எதிர்த்துப் போராடிய நபியின் சொந்த பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மற்றவர்கள் வேண்டுதலுக்கு இணங்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உண்டானது.
