எந்த ஊர் என்றவனே......
(சுய விமர்சனமா என்றால், யாவரும் சுயம் அறியும் விமர்சனம்)
இனி ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது. சிறிய வயதிலிருந்தே கேள்வி படும், நெடும் தொலைவில் இருக்குமோ என்று நினைக்கும் ஒரு புதிய ஊருக்கு போக; புதுப்பிக்கும் பாஸ்போர்ட்டில், அந்த ஊருக்கான எண்டார்ஸ்மென்ட் செய்ய வேண்டும். வயது 23-ல் இருந்து ஆரம்பித்து, சில நாடுகளை பார்த்தும், அவைகளிலிருந்து உழைத்தும் பிழைத்தும் எல்லாம் ஆயிற்று, இனி அந்த புதிய ஊரையும் அதற்கான பாதையையும் பார்த்து விடத்தான் வேண்டும். அது எந்த ஊர் என்பவரே, அந்த ஊர் நீயும்(ங்களும்) கூட அறிந்த ஊர் அல்லவா என்று சொல்லி விடும் நோக்கம்தான் இந்த பதிவு !
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Wednesday, August 27, 2014
Friday, April 18, 2014
போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !
------ ஹாஜியா K. கமருன்னிஸா M.A.,B.T.,
நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவருக்கும், அவரவர் மார்க்கத்தை பேணும் உரிமையும், வழிபடும் உரிமையும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கலாசாரத்தை மேம்படுத்தும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று வாக்குரிமையும் உண்டு. இவ்வுரிமையை செம்மையான முறையில் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மணியும் தெரிந்திருக்க வேண்டும்.

Labels:
இறை நம்பிக்கையாளர்கள்,
ஓட்டு,
தகுதியானவர்கள்,
நம்பிக்கை
Monday, February 24, 2014
பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்
வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.
இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

Wednesday, June 12, 2013
பொறுமை கடலினும் பெரிது.
பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.
ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம்.
பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.
Sunday, December 16, 2012
ஸஃபர் மாதம் – பீடை மாதமா?
எழுதியவர் :அபூ ரம்லா.
மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.
அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?
அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை. திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?

Tuesday, September 25, 2012
படித்தேன் பிடித்தேன் (பகுதி-3)
குர-ஆன்
முகம்மது நபி வழியே இறங்கிய இறை வசனங்கள்
ஹதீத்
முகம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகள் உபதேசங்கள்
குர்-ஆன்
எல்லா காலத்துக்கும் ஏற்புடையவை என சில வசனங்கள், நபி வாழ்ந்த காலத்துக்கு என்று சில வசனங்கள், நபிக்கு முன் வாழ்ந்தவர்களின் வரலாறு என்று சில வசனங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.
ஹதீத்
முகம்மது நபி சொன்னதாக பத்துத் தலைமுறைகளாக செவி வழியாகவும் ஏடுகள் வழியாகவும் சொல்லப்பட்டு முகம்மது நபி இறந்து இருநூறு வருடங்கள் கழித்து தவறானவற்றை நீக்கி அன்றைய நாள் சுன்னத் ஜமாத் ஆய்வுக் குழுவினருக்கு ஏற்புடையவற்றை மட்டும் தொகுத்த குறிப்புகள்
குர்-ஆன்
பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை
ஹதீத்
பெரும்பாலும் நபி வாழ்ந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவை
படித்தேன் பிடித்தேன் 008
நம்பிக்கையே காமதேனு - பாரதியார்
பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது.
நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது.
சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை.
குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்

படித்தேன் பிடித்தேன் 009
இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை
அந்த ஏகத்துவக் கொள்கையில்
தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்
உலக வாழ்க்கைப் பயணத்தில்
ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும்
தீர்வு காண்பதும் தவறானதல்ல
ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும்
இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத
அக்கறையும் கவனமும் எப்போதும் இருப்பது
எல்லோருக்கும் கடமையாக வேண்டும்
Source : http://anbudanislam
படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)
படித்தேன் பிடித்தேன்
Labels:
ஏகத்துவக் கொள்கை,
குர்-ஆன்,
நம்பிக்கை,
ஹதீத்
Wednesday, June 20, 2012
நீங்கதான் பொறுப்பு .
நீங்கதான் பொறுப்பு .
நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும் இருந்தும் அதனை நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!
குடிப்பழக்கம் பிறக்கும்போதே வருவதில்லை. சூழ்நிலை, சரியற்ற நட்பு, தூண்டுதல் மற்ற பல காரணங்களால் வருவது. அதனால் ஒரு மனிதன் வியாதியை வரவழைத்துக் கொள்கின்றான் மற்றும் சமுதாயத்தில் தாழ்தப்பட்டவனாக், மதிக்கப்படாதவனாக ஆக்கப்படுகின்றான் குடிப்பவர் அனைவரும் கெட்டவர் என்ற முடிவு செய்து அவனை ஒதுக்காமல் நல்லோர் அவனுக்கு நல்வழியில் உற்சாகம் கொடுத்து அவனையும் தன நண்பனாக,உறவினனாக ஏற்றுக் கொண்டு இறை வழியில் அவன் மனதை திருப்பி தொழ அழைத்துச் செல்லுங்கள் அவனிடத்து மாற்றம் ஏற்படுவதனை காணமுடியும். நமக்கே நம்மீது நம்பிக்கை இல்லை .அவனோடு சேர்ந்தால் நாமும் கெட்டு விடுவோம் அத்துடம் சமுதாயம் நம்மையும் மதிக்காது என்ற தாழ்வான எண்ணம்.போலி வாழ்வு. மற்றவருக்காக போடும் வேடம். இது ஒழிய வேண்டும். அடுத்த வீடு எறிய நம்வீடு பாதுகாப்பில் இல்லை. நல்லதை நாடுவோம்.அல்லதை நீக்க முயல்வோம். பிறப்பது நிச்சயமில்லை இறப்பது உறுதி. அதற்குள் நாம் நமது சேவையை மக்களுக்கு செய்து இறைவனது அருள் பெற்றாக வேண்டும் .நம்மோடு நம் சகோதரனையும் சுவனத்திற்கு அழைத்துச் செல்ல பாடுபட வேண்டும் . நம்பிக்கையே வாழ்கை

Thursday, December 23, 2010
சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.
சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது,
சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.
அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.
பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே
எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்
அன்புடன் புகாரி
Subscribe to:
Posts (Atom)

+at+the+time+f+Conquering+Makkah...+He+is+So+humble......jpg)