(கவிஞர் ப.அத்தாவுல்லா)
பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.
அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.
'எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'
'ஆமாம்'
'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.
Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts
Thursday, October 2, 2014
Saturday, May 19, 2012
வயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண்டும்
தனியே தொழும்போது சரியாக முறையாக தொழுகின்றோமா என்ற குழப்பம் வருவதுண்டு. கவலை வேண்டாம். உங்கள் மனதைத்தான் இறைவன் பார்க்கின்றான்.நீங்கள் மனப் பூர்வமாக இறைவனை மனதில் நினைத்து தொழுகின்றீர்கள்.அதனால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என முழுமையாக நம்புங்கள்.
முடிந்தவரை பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் தொழும்போது இந்த குழப்பம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. தொழுகையில் தொழ வைக்கும் இமாம் தவறு செய்து விட்டால் அந்த தவறு உங்களுக்கு வந்து சேராது.
வயதாகிவிட்டால் தேவையில்லாமல் பேசுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையை கேளுங்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள் .ஒத்திப்போடாதீர்கள். வயதாகி விட்டார் உளறுகின்றார் என்று மற்றவர் சொல்வதற்கு வழி வகுத்து வந்துவிடாதீர்கள். நாம் அடைந்த அனுபவத்தினையும் பெற்ற அறிவுகளையும் தம் மக்களுக்கு சொல்ல விருப்பம் வரத்தான் செய்யும்,ஆனால் இக்கால மக்கள் நம்மை விட மிக்க அறிவு பெற்றவர்களாகவே உள்ளார்கள். அவர்களுக்கு அறிவுரை ஒரு வேப்பு போல் கசப்பாகவே இருக்கின்றது. வேப்பு கசப்பானாலும் அது உடலுக்கு நலன்தரக் கூடியதுதான். அதிலும் அளவு தேவை அளவுக்கு மேல் போனால் நன்மைதராது பாதகம் விளைவிக்கும்.
வேடிகையாக வயதானவர்கள் உளறுவார்கள் என்பதற்கு சொல்லும் பண மோகம் கொண்ட மகன்கள் கட்டிவிடும் கதை
ஒரு நேர்மையான தகப்பன் மரண தருவாயில் தன் மகன்களை அழைத்து தான் மற்றவர்களிடம் கொடுத்து அவை தனக்கு வர வேண்டியவைகள் அதனை குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே அவரது மகன்கள் வேகமாக அதனை குறித்துக் கொண்டார்கள். பின்பு அந்த தகப்பன் தான் கொடுக்கவேண்டிய கடன்களைப் பற்றி சொல்லி அதனை குறித்துக் கொண்டு கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மகன்கள் 'அப்பாவுக்கு கோமா வந்து விட்டது உளறுகின்றார்' என்று சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டியதை மட்டும் குறிப்பு எடுக்காமல் நிறுத்திக் கொண்டனர்.
Labels:
நினைவுகள்,
மக்களுக்கு,
வயது
Subscribe to:
Posts (Atom)

