Showing posts with label பாலியல் கல்வி. Show all posts
Showing posts with label பாலியல் கல்வி. Show all posts

Friday, August 12, 2011

பாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்

பள்ளிகளில் பாலியல் கல்வி யை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சவூதி நாட்டைச் சேர்ந்த பழமை வாத இமாம் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார்.

சவூதி அரேபியாவில் பழமைவாத ஆளுமை மிக்க புரைதா மாகாணத்தில் உள்ள பெரிய பள்ளியான இமாம் முஹம்மது இப்னு அப்துல்வஹ்ஹாப் பள்ளியின் இமாமாக ஸாலிஹ் அல் வன்யான் என்பவர் உள்ளார்.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர தொழுகையின் போதான உரையில் "இந்தப்(பாலியல்) பிரச்னை பற்றி வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவேண்டும்" என்றும், "சமூகத்தில் அதிகரித்துவரும் சிறார் வன்புணர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "இதைப் பேசுவது வெட்கக்கேடானது அல்ல" என்றார் அவர்.

LinkWithin

Related Posts with Thumbnails