திருமணத்திற்கு முன் நாம் நெருங்கிப்
பழகும் வாய்ப்பு இருந்தது, நாம் இருவரும் திருமணமாகி கணவர் இல்லம் சென்று விட்டோம். பல மைல்களுக்கப்பால் பிரிந்து வாழும் நாம் பல வருஷங்களாக
சந்திக்க முடியாமல் போயிற்று. நாம் நேரில்
தான் சந்தித்து அளவளாவ இயலாவிட்டாலும் கடிதத்தொடர்பு மூலமாவது நம் நட்பை வளர்த்துக்
கொண்டிருக்கலாமல்லவா! தன் மனத்தின் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ உற்ற தோழியிடம்
சொன்னால் தான் மனம் அமைதியடையும். நான் உன்
முகவரியை அடையமுடியவில்லை. அடிக்கடி அலுவலக
மாற்றலின் காரணமாக நம்மைப் போன்ற குடும்பத்தினர் வாழ்வு, புகைவண்டி பிரயாணம் போல் இருக்கிறது. இருவருக்கும் கடிதத் தொடர்பு தொடர்ந்து நடக்கத்தான் நான் இதை எழுதுகிறேன்.
