Showing posts with label முஸ்லிம் புத்தாண்டு. Show all posts
Showing posts with label முஸ்லிம் புத்தாண்டு. Show all posts

Saturday, November 26, 2011

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


ஒளிமயமான எதிர்காலம் உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.
இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

LinkWithin

Related Posts with Thumbnails