by நாகூர் ரூமி
லீக்வான்யூ விருது
by நாகூர் ரூமி
என் (சகோதரரின்) மகன் இல்முதீனுக்கு சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான லீக்வான்யூ விருது சென்ற ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டுள்ளது. என் தம்பி முஹிய்யித்தீன் அப்துல் காதரின் அர்ப்பணிப்பு பற்றி ஒரு நூலே எழுதலாம். இன்று அவர் சிங்கப்பூரில் DNH Consultants என்ற கம்பனியை சொந்தமாக நடத்தி வருகிறார். பாசிஸ்-ரிஸ் என்ற பள்ளியில் படித்துவரும் அவருடைய மகன் இல்முதீன் All Round Excellnce-க்காக இந்த விருது பெற்றுள்ளார்.
இது ஒரு பெருமைக்குரிய விருது. எளிதில் வாங்க முடியாதது. இங்கே செய்வதுபோல் அரசியல் செல்வாக்கு போன்ற சமாச்சாரங்களை வைத்து வழங்கப்படும் விருது அல்ல. தகுதி அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் விருது. இந்த ஆண்டு அது எட்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதில் இல்முதீனும் ஒருவர்.
அதற்காக முதலில் My Greatest Influence in Life என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அவர் அதை எழுதி முதலில் எனக்கு அனுப்பி கருத்து கேட்டிருந்தார். அதைப் படித்துப் பார்த்து நான் அசந்துபோனேன். அவ்வளவு திறமையும், உழைப்பும், அறிவும் அதில் பிரதிபலித்தது. சில மாற்றங்களை மட்டும் நான் அதில் செய்து கொடுத்தேன். அது செலக்ட் ஆனது.
