Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும்
பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன்,
அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர்
இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து
திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற
சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி
வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு
1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்
டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல்
அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த
நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த
எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில்
ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார்.

