Showing posts with label ஹமாஸ். Show all posts
Showing posts with label ஹமாஸ். Show all posts

Monday, November 14, 2011

1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின் அவக்கேடாகிவிட்ட ஊழல்+விசாரணைகளும் நம்மை இச்செய்தியை விட்டும் திசை திருப்பியிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

ஓர் இஸ்ரேலியப் பட்டாளத்தானை விடுவித்து, இஸ்ரேலின் சிறைகளிலிருந்து 1027 ஃபலஸ்தீனப் போராளிகளை ஹமாஸ் மீட்டெடுத்த நிகழ்வை இருதரப்புமே வெற்றியாகக் கொண்டாடியிருந்தாலும், அந்தக் கொண்டாட்டத்திற்குரிய நாயகர்கள் ஹமாஸ் போராளிகள் மட்டுமே என்பது தெளிவு. பரிமாறப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாம் இதனைச் சொல்லவில்லை. மாறாக, ஐந்து வருடங்களுக்கு முன்பு, கிலாட் ஷாலிட் என்கிற அந்த இஸ்ரேலியப் பட்டாளத்தானை, ஹமாஸ் தனக்கே உரிய ஒரு ‘நடவடிக்கை’யில் ‘கைப்பற்றிய’ போது (அதை பிபிசி வகையறாக்கள் ‘ஊடகங்களுக்கே உரித்தான குறுக்குப்புத்தியில் “கடத்தப்பட்ட” என்று கூறின) இஸ்ரேல் வாந்தியெடுத்த வார்த்தைகளை அந்நாடு மீண்டும் தின்றது என்ற வகையில் தான் ஹமாஸுக்கு அந்த வெற்றி.

அப்போது இஸ்ரேல் சொன்னது என்ன?

“(ஹமாஸ் என்கிற) இந்தப் ‘பயங்கரவாத அமைப்பு’டன் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை”

‘கைது’ செய்யப்பட்ட ஷலாட்டை விடுவிக்க இஸ்ரேல் பலவழிகளில் முயன்றது. முதலில், மூன்றாம் நாடுகளான நார்வே, ஜெர்மனி, எகிப்து, பாலஸ்தீனிய அத்தாரிட்டி, என்ற பலரையும் தூது அனுப்பியது. ம்ஹூம், பலனில்லை. ஃபலஸ்தீனியர்களின் நலம் விரும்பியாகச் செயற்படும் சவூதி அரசும்கூட, அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, ஷலாட்டை விடுவித்துவிடும்படி கோரியிருந்தது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails