Monday, December 15, 2014

பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது



பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது

அங்கு....

ஆசைகள் இல்லை
திருப்தி உண்டு

தேவைகள் எதுவும் இல்லை
அனைத்தும் அடங்கி இருக்கும்

மொழிகள் இல்லை
அர்த்ததங்கள் ஆயிரம் உண்டு

ஆரவாரம் எதுவும் இல்லை
நிசப்தம் நிறைந்து இருக்கும்

கவலைகள் எதுவும் இல்லை
நிம்மதி நிறைந்திருக்கும்

சிறகுகள் இல்லாமலே
மனம் சிறகடித்து பரந்திருக்கும்

தொடக்கமும் முடிவும்
திறந்தே இருக்கும்

ராஜா வாவுபிள்ளை

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்"


அஸ்ஸலாமு அலைக்கும்,

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி சகோக்களின் உதவியோடு இணைய கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கியில் பங்களிக்க அதன் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், நம் பக்கத்திலான சிறு பங்களிப்பே இக்கட்டுரை. பார்க்க https://ta.wikipedia.org/s/46rl

இதற்கு முன்பு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ற பதம் குறித்த ஆய்வுக்கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை படிக்க https://ta.wikipedia.org/s/2pcz


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

மறக்கக் கூடாத நினைவுகள் ...- அபூ ஹாஷிமா வாவர்

வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை 1992 டிசம்பர் 6ம் நாள் இடித்தார்கள்.
அப்போதே சங் பரிவாரக் கும்பல்...." இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து பள்ளியும் தர்காவும் கட்டி இருக்கிறார்கள். அவற்றையும் இடித்து கோயில் கட்டுவோம் " என்று சொன்னார்கள்.

இப்போது தாஜ்மகாலை கோயில் என்று சொல்ல அரம்பித்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் அறிஞர்கள்
பத்திரிகையாளர்கள்
மாற்று மத சமூக ஆர்வலர்கள்
ஒரு விஷயம் குறித்து வெகுவாக ஆதங்கப்பட்டார்கள். அது...

முஸ்லிம்களிடமும் அவர்களின் ஜமாத்துகளிடமும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை உரியமுறையில் ஆவணப்படுத்த் தவறியதால் அந்த சொத்துக்களை யார்யாரெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.
வக்ப் வாரியமும் அவற்றை சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்று சொன்னார்கள்.

இந்திய முஸ்லிம்களின் வரலாறையோ தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளையோ இன்னும் முழுமையாக யாரும் ஆவணப்படுத்தவில்லை என்ற குறையும் இருந்தது.

அப்போதுதான் தமிழ் முஸ்லிம்களின் அரலாறுகளை ஆய்ந்து பார்க்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ரிபாயி சாஹிப் அவர்கள்
எஸ்.எ.கமால் அவர்கள்
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் போன்ற ஒரு சிலரே கொஞ்சம் வரலாறுகளை செதுக்கிவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.

Saturday, December 13, 2014

எது வளர்ச்சி ... !


பாலினத்தின் தன்மைக்கு
உகந்த பொறுப்புகளில்

சீர்பெற்று வலிமைபெற்று
வளமாவதே பரிபூரண வளர்ச்சி ... !

பெண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஆண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஒன்றை ஒன்று மீறுவதல்ல வளர்ச்சி
ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதே வளர்ச்சி

Thursday, December 11, 2014

யாஅல்லாஹ்....! நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் - ராஜா வாவுபிள்ளை



பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யா அல்லாஹ்

வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ்

பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ்

புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ்

உனது கட்டளைளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ்

வாழ்வு தந்தாய்
வாழும்கலை சொல்லித் தந்தாய்
நல்நெறி வழுவா
நடப்பினை தருவாயே யாஅல்லாஹ்

மரணத்தை எழுதிவிட்டாய்
எழுதியதை எதிர்கொண்டு
எம்பெருமான் வழிசென்று
உன்னடி சேர்ந்திடவே ஏகனே கருணை கட்டிடுவாயே யாஅல்லாஹ்

Wednesday, December 10, 2014

காதெலென்பது யாதெனில்…- யாசர் அரபாத்

என் பக்கம்'s photo.
சண்டையெனும் போது
மல்லுக்கு நிற்பாய்;
சமாதானத்திற்கு நீயேதான்
முன்னுக்கு நிற்பாய்;

கோபமாக இருந்தாலும்
தோசை சுடுவாய்;
இன்னொன்று வேண்டுமாயென
பேச்சைத் துவங்குவாய்;

பொறையேறும் போது
தண்ணீயோடு ஓடி வருவாய்;
கோபத்தோடு தலையில் நாலுபோட்டு
நானிருக்கும்போது எவர்
நினைக்கிறாரென வம்பிழுப்பாய்;

உண்மையைச் சொன்னா கோபம்
வருதாயென குத்திகாட்டுவாய்;
பதிலுக்கு பதில் பேசினால்
நீங்க மட்டுந்தான் சரி..
போதுமாயென வாயடைப்பாய்;

புரியாத காதலில் வகுத்தெடுப்பாய்;
புன்னகையால் அன்பை பெருக்கெடுப்பாய்;
புண்பட்டத் தருணத்தைக் கழித்தெடுப்பாய்;
புத்தி வேண்டுமென நக்கலோடு கூட்டி முடிப்பாய்!!

Yasar Arafat

விமர்சனமும் நட்பும்

விமர்சனங்கள் இனியவைகளாக இல்லையென்றாலும், விமர்சனங்களே பிழைகளறியும் அளவுகோல், விமர்சனங்களே பிழைகலர கருவி, விமர்சனங்களே நம்மை தாக்கும், விமர்சனங்களே நம்மை பக்குவபடுத்தும், விமர்சனத்திற்கு பயந்தவர்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை, விமர்சனவளையம் நுழையதோர் வளர்ந்ததாக பொருளில்லை.

ts not necessary to answer all the question that has been asked to us... Most of the time silent is the salient answer even if they don't understand..
i stopped looking at others mistake when i begun to notice mine...

Rafeequl Islam T


இருள் சேர் நேரங்கள்
தன் நிழலையும் கொல்லும்
முற்றிலும் இருண்டாலும்
வாழ்வில் பொருள் சேர்க்க
உடன் நட்பு நில்லும்..
நன்றி : http://rafeeqspoem.blogspot.in

LinkWithin

Related Posts with Thumbnails