Wednesday, April 30, 2014
பயணத்தின் போது செய்ய வேண்டிய பிராத்தனை!
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
பின்னர்
ஸூப் ஹானல்லதீ சக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க பீ ஸப ரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மாத்தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸபரனா ஹாதா வத்வி அன்னா புக்தஹு, அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு பிஸ் ஸபரி வல்கலீபத்து பில் அஹ்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின்
வக்ஸாயிஸ் ஸபரி வகாபதில் மன்ளரி வஸுயில் முன்கலபி பில் மாலி வல் அஹ்லி.
Sunday, April 27, 2014
வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?
ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ, இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு – மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது!
இது நல்ல பழக்கம்தானா?
காலையில் எழுந்ததும் face ஐ கழுவுவதற்கு பதில், facebook இல் கழுவி குடிக்கின்றோம். டிஃபன் பட்டர் ஐ அசை போடுவதற்கு முன் ட்விட்டெரை அரைக்கின்றோம்! அரைமணி நேரம் ரோட்டில் ஒடுகின்றோமோ இல்லையோ, அரை நாள் முழுவதும் சாட்டிங்கில் ஒட்டுகின்றோம்.
கண் டியூப்கள் வெடிக்கும் அளவிற்கு யு டியூபைக் கண்டு களிக்கின்றோம். இது நல்ல பழக்கம்தானா? சிந்தித்துப் பார்க்கவும்! வேலைக்கு உலை வைக்காதா? சில வருடங்களுக்கு முன் வேலை போக மீதி நேரம் கிடைத்தால் சாட்டிங் என்ற நிலை மாறி, இப்போது சாட்டிங் போக மீதி நேரம் கிடைத்தால் வேலை என்ற நிலையல்லவா இருக்கின்றது!

Saturday, April 26, 2014
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Labels:
பி.எஸ். அப்துல் ரஹ்மான்,
வாழ்நாள் சாதனையாளர்,
விருது
Thursday, April 24, 2014
வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி!
அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

Tuesday, April 22, 2014
சிறுவர்கள் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் அமர்ந்தால் எலும்புகள் பலவீனமடையும்: ஆய்வில் தகவல்!
லண்டன்: சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Saturday, April 19, 2014
பிணத்திற்கு போர்த்தும் ஆடையில் பாக்கெட்டுகள் இல்லை !
ஒரு அருமையான கட்டுரை..
படித்துத்தான் பாருங்களேன் !
அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட்டின் (WARREN BUFFET) ஒரு நாள் வருமானம் 222 கோடி ரூபாய். கழிந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவரும் அவர்தான்.
அவரைப்பற்றி துபாய் தோஷிபா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எம்.ஜே.எம் . முஹம்மது இக்பால் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...
" சமீபத்தில் vaarran buffet ன் நேர்காணலை டிவியில் பார்த்தேன். உயர்தரமான ஒளி பரப்பு அது.
இவர் 2006 ல் செய்த தர்மம் மட்டும் 31 பில்லியன் அமெரிக்க டாலர். எவ்வளவு இந்திய ரூபாய் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ) இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுத்துவிட்டு தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறினார் இவர். அப்படிப்பட்ட மனம் இவருக்கு இருப்பதுதான் இவருக்குள்ள தனி சிறப்பு."
" எப்படி இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுக்க உங்களுக்கு மனம் வந்தது ? உங்கள் மனைவி இதற்கு ஒப்புக் கொண்டார்களா ?" என்று நிருபர்கள் கேட்டதற்கு ...

Friday, April 18, 2014
போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !
------ ஹாஜியா K. கமருன்னிஸா M.A.,B.T.,
நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவருக்கும், அவரவர் மார்க்கத்தை பேணும் உரிமையும், வழிபடும் உரிமையும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கலாசாரத்தை மேம்படுத்தும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று வாக்குரிமையும் உண்டு. இவ்வுரிமையை செம்மையான முறையில் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மணியும் தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கையாளர்கள்,
ஓட்டு,
தகுதியானவர்கள்,
நம்பிக்கை
Subscribe to:
Posts (Atom)