நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள்
ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன்
உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை
தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35
கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு
உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2
ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு
வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.


