Showing posts with label காலை. Show all posts
Showing posts with label காலை. Show all posts

Thursday, July 7, 2011

காலை எழுந்தவுடன்.....

காலை எழுந்தவுடன்.....

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்க வேண்டும்,குழந்தைகளை  கொஞ்ச வேண்டும்....கடைதெருக்கு சென்று காய் கறி வாங்கி அங்கு சிறிது நேரம் நாட்டு நடப்பு அறிய மனம் விட்டு பேச வேண்டும்,செய்தித்தாள் படிக்க வேண்டும்    இது இயல்பு . இதைவிட முக்கியமானது ... 

இறைவனிடம் வேண்டி இந்த துவாவை ஒதவேண்டும்.
நம்மை மரணமடையச் செய்து பிறகு உயிர் கொடுத்து எழுப்பிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும் நாம் அனைவரும் அவன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். (அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷுர்)


 திரு்வாசகத்தில், திருப்பள்ளியெழுச்சி என்ற பதிகத்தில், “மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுதோம்” என மாணிக்க வாசகர் வேண்டுகிறார். விவிலியம் “இந்த நாளை, இறைவன் எமக்குத் தந்தார்.  இதில் நாம் மகிழ்வோம்” எனக் கூறுகிறது.


   காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
    தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.

LinkWithin

Related Posts with Thumbnails