Showing posts with label பெண் கல்வி. Show all posts
Showing posts with label பெண் கல்வி. Show all posts

Saturday, May 23, 2015

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு) / ஆமினா


இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)
12ம் வகுப்பு ரிசல்ட் போடப்பட்டதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை என்று  சுட்டிக் காண்பித்த, சிந்திக்கும் திறன் கொண்ட சகோதரர்களுக்கு நன்றி கூறியவளாய் இக் கட்டுரையை தொடங்குகிறேன்.


ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த பத்வா ஓர் உதாரணம் என்பதால்..மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.

Sunday, July 24, 2011

பெண்ணாக பிறப்பது பெருமை !

சரியான பராமரிப்புடன்   குழந்தைகளை வளர்ப்பது  பெற்றோர்களது  முதன்மை கடமையாக  உள்ளது. ஆனால்   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக்  கூடாது. எனினும், உண்மையில்  சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்   பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக  இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
 
 
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள்  பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.

 

 

LinkWithin

Related Posts with Thumbnails