மகிழ்ச்சியான செய்தி ....இதுதான் ...மகள்
வீட்டிலிருந்தே படிக்கும் முடிவை மாற்றி என் வீட்டிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலவிலிருக்கும் காலேஜில் BBA படிக்க முடிவு செய்து ....................என்னோடு கடந்த 2 நாளைக்கு முன்பு கேட்டுச்சு ...
அத்தா உங்க முடிவு தான் எனக்கு வேணும் என் தோழிகள் யாவரும் காலேஜ் சேர்ந்து விட்டார்கள் ...நானும் படிக்கிறேன்
நான் சொன்னேன் ...எனக்கு அனாவசிய சிந்தனை எப்பவுமே கிடையாதும்மா இன்ஷாஅல்லாஹ் அவனின் நாட்டம் நீ படிக்க வேண்டுமெனயிருக்கும் போல தெரியுது அதன்படியே நடக்கட்டும் ...அவன் நிச்சயம் துணை செய்வான் போயி பிஸ்மில்லாஹ் னு அட்மிஷன் போட்டு வா ம்மானு சொ்ல்லிட்டேன் ....................மனைவி கேட்டார்
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts
Wednesday, June 18, 2014
Sunday, December 30, 2012
கலாச்சாரம் என்ற போர்வையில்...
நபியே!) உம்முடைய மனைவிகளுக்கும், உமது பெண் மக்களுக்கும் மூமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள் ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். -அல்குர்ஆன் 33:59
மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)
(நபியே!) மூமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)
கலாச்சாரம் என்ற போர்வையில் கண்டபடி வாழ்ந்து வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாமல் அடக்க ஒடுக்கத்துடன்,மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுத்து மற்றவர்களின் இச்சையை தூண்ட வாழாமல் நெறியுடன் வாழ்ந்து இறையன்பைப் பெறுவோமாக.
-----------------------------------------------------------------------------

Friday, October 19, 2012
படித்தேன் பிடித்தேன் (பகுதி-7)
படித்தேன் பிடித்தேன் 019
என் பார்வையில் பெண்கள் மட்டுமே செய்யத்தக்க சில வேலைகள் உண்டு என்று குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை மட்டும் பட்டியல் இட்டிருந்தார் ஒரு நண்பர். மற்ற வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது என்றார். சில பிரத்யேக குணங்கள், பொறுமை, தாய்மை பண்பு, போன்றவைகள் அவர்களே பெற்றிருக்கின்றனர் அதனால் அவர்கள் அப்படியான பணிகளைத்தான் செய்யவேண்டும் என்றார்.
உங்கள் பார்வை உங்களுக்கு. அதில் நான் தலையிடமாட்டேன்.
ஆனால் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை
பொறுமை, தாய்மை போன்றவை கூடுதல் தகுதிகள்தானே? குறைவில்லயே?
ஆகவே சில காரியங்களை ஆண்களைவிடச் சிறப்பாகப் பெண்களால் செய்யமுடியும் என்றாகிறது - சில காரியங்களை பெண்களைவிட ஆண்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதைப்போல.
பலர் பெண்களின் படிப்பையும் வேலையையும் தடுப்பது அவர்களை நம்பாததால்தான்.
பெண்களை நம்புவோம்!
நம் தாயை நம்புவோம்
நம் மனைவியை நம்புவோம்
நம் சகோதரியை நம்புவோம்
நம் மகளை நம்புவோம்
நம்பிக்கைதான் இஸ்லாத்தின் அடிப்படை.
ஒரு பெண்
தன் தந்தையை நம்புகிறாள்
தன் கணவனை நம்புகின்றாள்
தன் தமயனை நம்புகின்றாள்
தன் மகனை நம்புகின்றாள்
நம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள்
நம்பாத ஆண் தாழ்வானவனாகிவிடுகிறான்.

Labels:
உன்னத உயிர்,
குர்-ஆன்,
பெண்கள்
Wednesday, March 7, 2012
இன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்?
பெண்கள் தினம் உருவானது எப்படி?
ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பலவகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன்
முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில்
சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள்
தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி
பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
பிறகு,
கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது
பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல
நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த
வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக,
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்,
மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை
பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில்
விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு
எடுக்கப்பட்டது.
நன்றி: நக்கீரன் (மார்ச்-2011)
இன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்?
பெண்கள் தினம் என்று ஒரு நாளை
குறிவைத்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்துவிட்டதாக மேதாவி(?)
மேற்கத்தியவாதிகளும், பெண்ணுரிமை பாதுகாவலர்கள் (?) என்று சொல்லிக்கொள்ளும்
இவர்கள் இந்திய அறிவுஜீவிகள்(?) என்று நம்மிடையே நாடகமாடுகிறார்கள் என்பது
மட்டுமே நிதர்சனம்.
முழுவதும்
ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்திலும்
பெண்களின் இனக்கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாய தோற்றத்தை
ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை
நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் போலி நாகரீக
பெண்களை நினைத்து வேதனைப்படுவதா? சிரிப்பதா?
டென்னிஸ் விராங்கனையின் ஆடைக்கு
வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் வைத்திருக்கும் நிரந்தரக் காரணம் “ஆடையைப்
பார்க்காதே; பெண் விளையாடும் விளையாட்டை பார்” என்பது. பெண்கள் பெண்களாக
வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும்.
நான் எப்படியும் இருப்பேன் என்று கலாச்சார சீர்க்கேட்டால் அறைகுறை அடையுடன் வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே நிற்கிறார்கள். அப்படியே கிடைக்கும் போலி உரிமை தான் கிழவியானாலும் தன் இளம் வயது அறைகுறை ஆடை புகைப்படங்கள் இன்றைய வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தன் பேரன் மற்றும் கொள்ளுப்பேரன்மார்களின் காம உணர்ச்சி தூண்டுதலுக்கு அவ்வகை புகைப்படங்கள் காரணமாகி விடப்போவது என்பது தான் பெண்ணுரிமையா?

இன்றைய நிலை, பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை மொபைல் போனில் படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கில் இணையத்தில் காணொளியை இலவசமாகவும், காசுக்காவும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வக்கிரபுத்தி கொண்ட பொறம்போக்கு அநாகரீக மிருகங்கள். இதை பற்றி எழுதவோ, குரல் எழுப்பவோ, தடுக்கவோ முடியவில்லையே பெண் சுதந்திரம் என்று பேசும் அறிஜீவிகளாலேயே. கூகுல் குதிரை போன்ற தேடல் தளங்களும் தட்டியவுடன் உடனே வாரி வழங்குகிறது.
உலகிலேயே பெண் பாலியல்
கொடுமைகளுக்கு பதிக்கப்படும் சமுதாயங்களில் முஸ்லீம் சமுதாயம் மிக மிக மிக
குறைவே. ஏதாவது ஒரு நாள் இந்தியாவில் பல பகுதிகளின் பாலியல் கொடுமைகள்
நடைப்பெறவில்லை என்ற செய்தி வந்தால் அது அன்றைய தினத்தின் மிக ஆச்சரியமான
செய்தியாகவே இருக்கும். இந்த லட்சனத்தில் பெண்கள் சாதனை பட்டியல் என்று ஒரே
ஒரு நாளில்
மட்டும் தங்களின் செய்தி ஊடகங்களின் புகழ்பாடி செய்திகள் வெளியிட்டு பெண்களிடம்
நாடகமாடி காலாச்சார சீரழிவை தினிக்கிறார்கள் மேற்கத்திய போலி நாகரீக
மேதாவிகளின் புரோகிதர்கள் உலகெங்கும் ஏன் அதிகம் நம் நாட்டிலும்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு
சுதந்திரமில்லை, உரிமையில்லை, இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்றெல்லாம்
இன்று புலம்பி பிழைப்பு நடத்திவரும் மேதாவிகளுக்கு பதில் தரும் விதமாக,
உலக புகழ் பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் சகோதரர் காலித் யாஸீன்
அவர்கள் ஆற்றிய செற்பொழிவுகளிலிருந்து ஒரு சில பகுதியை உங்களிடம்
பகிர்ந்துக்கொள்கிறோம். (இந்த காணொளி நம்
அதிரைநிருபரில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், மீண்டும் உங்கள் பார்வைக்கு
சூழல் கருதி மீள்பதிவு செய்கிறோம்.)
இச்சொற்பொழிவு ஆங்கிலத்தில்
இருந்தாலும், சாதாரன ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கும் புரியும்படி உள்ளது.
இறைவனின் மார்க்கமான இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும்
மார்க்கம் என்பதை மேற்கத்திய கலாச்சார மேதாவிகள் புரிந்துக்கொள்ளட்டும்.
போலிப் பெண்ணுரிமை பேசும்
கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி
வைத்து விட்டு, இஸ்லாமிய வாழ்வியலின் வசந்தம், உலக மனிதர்கள் அனைவருக்குமாக
அருளப்பட்ட திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல்
அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன்
சிந்தித்து பார்த்தார்கள் என்றால் 1429 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம்
பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு
அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.
இஸ்லாத்தினைக் குறை கூற முற்படும்
முன்னர் தங்களின் வழிபாட்டு சடங்குகளோ, மதங்களோ பெண்ணுரிமை பற்றி என்ன
போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒன்றுக்கு பலமுறை முறை நினைவு படுத்திக்கொண்டு
இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப்
பார்த்தாரேயானால் அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து
வெட்கித் தலை குனிந்திடுவர்.
பிறப்பதில் உள்ள உரிமை, அறிவைப்
பெருக்குவதில் உரிமை, கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப், திருணத்தில் உரிமை,
திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை, வாரிசு உரிமை என்று
எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள ஒரே மார்க்கம் இனிய
இஸ்லாமிய மார்க்கம்.
ஒருவர்
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம்
கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப
கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது
முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள்
அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.
இஸ்லாமிய
பெண்கள் தங்கள் வீட்டை ஆட்சி செய்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி சந்தோசமாக
இருந்து வருகிறார்கள். இஸ்லாத்தில் பெண்ணுரிமை பற்றி அறிய வேண்டுமா? நடிகை
குஸ்பு, எழுத்தாளர்(?) தஸ்லீமா நஸ்ரின், சல்மான் ருஸ்டி (பல வருடங்களாக
இவர்களை பற்றியே பேசுறவய்ங்க, வேற ஆளுங்க இன்னும் கிடைக்கல போல) போன்ற
பெயர் தாங்கிகளிடம் இன்னும் ஏன் மாரடிக்கிறீர்கள், எங்கே பெண்ணுரிமை
சிறைப்படுத்தப்படுகிறது என்று கை நீட்டுகிறீகளோ அங்கே சென்று இஸ்லாமிய
நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து வரும் இஸ்லாமிய பெண்களிடம்
கேட்டுப்பாருங்கள் தெளிவான பதிலும் கிடைக்கும் உங்கள் உள்ளத்தை உருக்கும்
மார்க்கமும் உள்புகும் உங்கள் இதயங்களிலும் இடம் தேடி இன்ஷா அல்லாஹ்.
(தகவல்கள் சேகரிக்கும்போது உதவிய இஸ்லாம்கல்வி மற்றும் சத்தியமார்க்கம் என்ற இரண்டு இணையதளங்களுக்கும் மிக்க நன்றி)
- அதிரைநிருபர் குழு.
Labels:
இஸ்லாம்,
பெண்கள்,
பெண்கள் தினம்,
பெண்ணுரிமை
Sunday, December 11, 2011
மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும். RASMIN M.I.Sc
"கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருசன்" என்ற பல மொழியை அடிக்கடி நாம்
கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக
சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும்.
கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.
ஏன் என்றால் இன்று பல வீடுகளில்
கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம்
என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு
முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.
Sunday, July 24, 2011
பெண்ணாக பிறப்பது பெருமை !
சரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மை கடமையாக உள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக் கூடாது. எனினும், உண்மையில் சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல
என்று சொல்கிறார்கள் பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள் மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர் நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல
Labels:
குழந்தைகள்,
பெண் கல்வி,
பெண்கள்
Wednesday, November 17, 2010
பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள் !
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள்
பக்ரீத் பண்டிகை அன்று முழுவதும் முஸ்லிம் பெண்கள் அடுப்பாங்கரையில் தனது நாளை ஒட்டிஓயாத வேலையால் சோர்வடைகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அது மகிழ்வான சோர்வுதான்.
கடமை ,சேவை,நன்மை, குர்பானி தங்களால் பகிர்ந்து கொடுக்கிறோம் என்னும் எண்ணம் அவர்களுக்கு மகிழ்வினை தருகின்றது .
ஆண்கள் மசூதிக்கு சிறப்பாக சென்று தொழுது கொண்டாடுகின்றார்கள் .அந்த நிலை நம் நாட்டில் பொதுவாக பெண்களுக்கு இல்லை . ஏன்! இஸ்லாம் அதனை தடுக்கவில்லை பின் நாம் ஏன் அந்த முயற்சி செய்யாமல் இருக்கிறோம் ! மனைவி ஆடையில் பாதி என்று பெருமையாக சொல்வதில் மட்டும் போதாது. புதிய ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதுமா! நாம் ஈடுபடும் ஜமாஅத் தொழுதுகைக்கு அவர்களையும் அழைத்து சென்று
அவர்களுக்கு தனி இடம் கொடுத்து ஜமாஅத் தொழுதுகையில் அவர்களும் கலந்து கொண்டால் நல்லது .நாம் மட்டும் முக்கிய திடல்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது.என்று பெருமை அடைகின்றோம் . அந்த வாய்ப்பு பெண்களுக்கும் கிடைக்கட்டும்
புனித ரமளான் நோன்பினை தென் இந்திய முஸ்லிம்கள் எவ்விதம்
நோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம் என்ன
இதனைக் காண இங்கு கிளிக் செய்யவும் Episode 26 - City Wrap -
Dubai TV - Dubai Media
Labels:
பக்ரீத் பண்டிகை,
பெண்கள்,
மசூதி
Wednesday, October 27, 2010
ஹிஜாப்-ஏன் ? எங்கிருந்து வந்தது !
ஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும்! இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது .‘ஹிஜாப்’ என்பதனை நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதுதான் ‘ஹிஜாப்’.உடல் அனைத்தையும் மறைப்பது அல்ல. மறைக்க வேண்டியதனை மறைக்காமல் விடும்பொழுது பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய நிலைமை எற்பட்டு விடுகின்றது. அந்த நிலை யாருக்கும் வரக்கூடது.பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள். தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்தும் தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்து அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செலகின்றது .
சிலர் நினைகின்றனர் ஹிஜாப் என்னும் இஸ்லாமிய பண்பாடு முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏற்படுத்திய முறை என்று. ஆனால் இதனை பழைய பைபிள்(Old Testament) ,புதிய பைபிள்(New Testament)இரண்டிலும் இதனைக் காணலாம் .
The Book of Genesis, [24:64, 65] says: “Rebekah also looked up and saw Isaac. She got down from her camel and asked the servant, “Who is that man in the field coming to meet us?” “He is my master,” the servant answered. So she took her veil and covered herself.”
The fifth song of the Songs of Solomon, a woman says: “Tell me, you whom I love, where you graze your flock and where you rest your sheep at midday. Why should I be like a veiled woman beside the flocks of your friends?”
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிவதெப்படி
பெண்கள் முகம் மறைப்பது அவசியமா?
‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதுதான் ‘ஹிஜாப்’.உடல் அனைத்தையும் மறைப்பது அல்ல. மறைக்க வேண்டியதனை மறைக்காமல் விடும்பொழுது பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய நிலைமை எற்பட்டு விடுகின்றது. அந்த நிலை யாருக்கும் வரக்கூடது.பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள். தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்தும் தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்து அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செலகின்றது .
The Book of Genesis, [24:64, 65] says: “Rebekah also looked up and saw Isaac. She got down from her camel and asked the servant, “Who is that man in the field coming to meet us?” “He is my master,” the servant answered. So she took her veil and covered herself.”
The fifth song of the Songs of Solomon, a woman says: “Tell me, you whom I love, where you graze your flock and where you rest your sheep at midday. Why should I be like a veiled woman beside the flocks of your friends?”
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன: (33 : 59) வேலைக்கு செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிவதெப்படி
பெண்கள் முகம் மறைப்பது அவசியமா?
Labels:
அல்குர்ஆன்,
இஸ்லாம்,
கட்டுரை,
பெண்கள்,
வீடியோ
Subscribe to:
Posts (Atom)