அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...
"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.
Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts
Saturday, April 25, 2015
Thursday, October 7, 2010
இஸ்லாமிய சட்டத்தின் ஆதாரங்கள
குர் ஆன் - ஆண்டவனால் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஹதீஸ் - பெருமானாரின் போதனைகள்
இஜ்மஃ - மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு
கியாஸ் - தனிமனிதன் யூகித்துணரும் அனுமானம்
நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை கஷ்ட்டப்பட்டு தொகுத்தவர்கள்(முஹத்திதுகள்) ஆறு பேர்.
1.இமாம் புஹாரி
2.இமாம் முஸ்லிம்
3.இமாம் திர்மிதி
4.இமாம் அபுதாவூத்
5.இமாம் நஸயீ
6.இமாம் இபுனு மாஜா
இந்த ஆறு பேரின் தொகுப்பும் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்.
இமாம் புஹாரி (ரஹ்)
***************************
பிறந்த இடம் - குராஸான் பிரதேசம்
பிறந்த ஆண்டு - ஹிஜ்ரி194 ஷவ்வால் பிறை13
இயற்பெயர் - முஹம்மத்
இறந்த ஆண்டு - ஹிஜ்ரி256 ரமலான்மாதம்
ஹதீஸ் தொகுப்பு - இஸ்லாமிய உலகின் பல பாகங்களுக்கும் சென்று40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஹதீஸ் தொகுத்தவர்.600000 ஹதீஸ்களை சேகரித்து 4000 ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்
ஹதீஸ் நூலின் பெயர் - ஸஹீஹ் புஹாரி
இமாம் முஸ்லிமா(ரஹ்)
****************************
பிறந்த இடம் - நைஷாபூர்
பிறந்த ஆண்டு - ஹிஜ்ரி 204
இயற்பெயர் - அபுல் ஹுசைன் முஸ்லிம்
இறந்த ஆண்டு - ஹிஜ்ரி 261
ஹதீஸ் தொகுப்பு - இராக்,சிரியா,எகிப்த்,ஆகிய நாடுகள் சென்று 3 லட்சம் ஹதீஸ்கள் சேகரித்தார்.300000 ஹதீஸ்களை சேகரித்து 9200 ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்.
ஹதீது நூலின் பெயர் - ஸஹீஹ் முஸ்லிம்
இமாம் அபூதாவூத்(ரஹ்)
*****************************
பிறந்த இடம் - ஸிஜிஸ்தான்
பிறந்த ஆண்டு - 203ஹிஜ்ரி
இறந்த ஆண்டு - 275ஹிஜ்ரி
இயற்பெயர் - சுலைமான்
ஹதீஸ் தொகுப்பு - இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்)அவர்கள் தான் இவரின் ஆசிரியர்.கிட்டத்தட்ட 5 லட்சம் ஹதீஸ் சேகரித்து 4800ன் ஹதீஸ்களை புத்தகமாக வெளியிட்டார்கள்.500000
இமாம் நஸயீ(ரஹ்)
***********************
பிறந்த இடம் -குராஸான் பிரதேசம் நஸ்க்
பிறந்த ஆண்டு -214 ஹிஜிரி
இறந்த ஆண்டு -303
இயற்பெயர் -அஹ்மத்
ஹதீஸ் தொகுப்பு - பலரிடம் இருந்து தொகுத்தார்.முக்கியமாக ஹுதைபா பின் ஸயீத்.
இமாம் திர்மிதி(ரஹ்)
*****************************
பிறந்த இடம் -திர்மிதி
பிறந்த ஆண்டு -209 ஹிஜிரி
இறந்த ஆண்டு -279 ஹிஜிரி
இயற்பெயர் -முஹம்மத்
ஹதீஸ் தொகுப்பு - பல பிரதேசங்கள் சென்று ஆங்காங்கே
கிடைத்த ஹதீஸை சேகரித்தார்.50000 ஹதீஸ்களை சேகரித்து 1600ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார்.
இமாம் இபுனு மாஜா(ரஹ்)
**********************************
பிறந்த இடம் -கஃஸவின்
பிறந்த ஆண்டு -209 ஹிஜிரி
இறந்த ஆண்டு -279 ஹிஜிரி
இயற்பெயர் -முஹம்மத்
ஹதீஸ் தொகுப்பு - சிரியா,மக்கா,பஸ்ரா,பக்தாத்,கூஃபா முதலான இடங்களுக்கு சென்று ஹதீஸ்களை சேகரித்தார்.
ஹதீஸ்களின் பெயர்கள்
******************************
கொவ்லி - இறைத்தூதர் தன் திருவாயால் கூறியவை
பிஃலி - இறைத்தூதரின் செயல்களை ஸஹாபாக்கள் தம் வாயால் கூறியவை.
தஃரிரி - இறைத்தூதரின் முன்னிலையில் செய்யப்பட்டவை.
ஹதீஸ் நபவி - இறைத்தூதர் பொதுவாக கூறியவை
ஹதீஸ் குத்ஸீ - அல்லாஹ் கூறியவை
Source : http://allaaahuakbar.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Wednesday, September 22, 2010
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
| முஹிப்புல் இஸ்லாம் |
| 1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் - அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4). 2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103) 3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3) 4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3) தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்: தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம். தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர - தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது - என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா? இஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் - இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் - குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட - தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் - தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம். தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல. “தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி, பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப் பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம். தவ்ஹீத்-ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல: இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. சீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத் வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள். தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் - வல் - ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது? உண்மை - சத்தியம் கசக்கத் தானே செய்யும். எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட - இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்" அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்;ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முன கலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று. பத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் எ;ன்றோ, அதைவிட கூடுதலாகவோ - பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் - குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ - இயக்கங்கள் காணவோ - அமைப்புகள் ஏற்படுத்தவோ - ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக -
- இதை நாமாகக் கூறவில்லை. இறை நெறிநூலும், இறை தூதர்(ஸல்) அவர்கள் வாழ்க்கை வழிகாட்டுதலும் நமக்கிதை ஐயத்திற்கிடமின்றி உணர்த்திக் காட்டுகின்றன. மாதிரிக்கு சில இறைவாக்குகளை மட்டும் தலைப்பில் முகப்புரையாக அன்பர்கள் சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளோம். நெறிநூல் அல்குர்ஆனை உற்று நோக்கி இதை உணர்ந்து கொள்ளலாம். இல்லையெனில் மேலோட்டமாய் நோட்ட மிட்டாலே புரிந்து கொள்ளலாம். மனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓரிறைக்கொள்கை - இறை ஒருமை! பல தெய்வ வழிகேடுகளை - வழிபாடுகளாகவும், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதைப் பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்களையும், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக் கொண்டும், அனைத்து அநாகரிகங்களையும் நன்மைகளாகவும்;, புண்ணியங்களாகவும், விலங்கினும் கீழாய் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை! இறை ஒருமை! இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்; மூலக் கொள்கை, இறைவன், ஏகன், அநேகன் அல்லன்" இறைவனை-இறைவனாகவும், மனிதனை மனிதனாகவும் வேறுபடுத்தி இனங்காட்டும் ஒப்பற்றக் கொள்கை! இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை! (அல்குர்ஆன் 112;:1-4) இவ்வற்புதம், இறுதி நெறிநூல் யாருக்கருளப்பட்டதோ - அந்த இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், 23 ஆண்டுகளில், அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்த பேருண்மை இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சரியத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிகமிக (எளிதாய் இல்லை) கஷ்டமாயிருக்கிறது. ஏன்? ஒற்றுமையின் எதிர்ப்பதங்கள்: இவர்கள் வாழ்வு - ஒற்றுமைக்கு எதிர்ப்பதமாகவே அமைந்திருக்கிறது. பிரிந்து வாழ்வதிலும் பிளவுபடுவதிலும் இன்புறும் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு, இஸ்லாம், ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில், முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது. இன்றைய பெயர் தாங்கிகள்-ஒற்றுமை ஒற்றுமை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் பிரிவினைவாதங்களே! உண்மை ஒற்றுமையல்ல! இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் குழு மனப்பான்மைக் கொண்டவர்களே! அன்றி சமுதாய உணர்வு உள்ளவர்கள் அல்ல. ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். விதிவிலக்கு பொது நியதியல்ல. தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அல்லது ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறும் முன் அல்லது நிறைவுற்றதும் மீண்டும் பிரிந்து விடுவதும் சமுதாயமாகுமா? உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது. பிரிவுகளும், பிளவுண்ட குரூப்பிஸ போக்குகளும் (எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் அது ஒற்றுமையாகாது) அணி மனப்பான்மையும், அவற்றிற்கு இவர்கள் சுய வாழ்வு அனுபவங்களும் மிகப் பெரிய சாட்சியங்களாகும். இவர்கள் நடைமுறைக்கும், சொந்த அனுபவத்திற்கும், பரம்பரை வழக்கத்திற்கும், மூதாதையர்கள், பெரும்பான்மையோர் முடிவிற்கும் மாற்றமான ஒன்றை - ஏற்பது மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் கடினமே! சாத்தியமே இல்லாத விஷயமாய் தெரிகிறது. இது மனிதன் அல்லது மனிதர்கள், மனித இயல்பின் அடிப்படையில் கண்ட முடிவு. ஆனால் மார்க்க முடிவோ - இதற்கு முரணாயிருக்கிறது. நெறிநூலிலிருந்தும், நபி வழி காட்டுதல்களிலிருந்து நேரடியாக அல்லது அவைகளுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியவைகள் மட்டும் மார்க்க முடிவுகளாகும். அல்லாஹ்வும், இறைத்தூதரும் ஒரு கருத்து அல்லது கொள்கை குறித்து, இறுதி முடிவெடுத்து விட்டால், அதில் எக்கார ணத்தை முன்னிட்டும் வேறு அபிப்பிராயம் அல்லது மாற்றுக் கருத்து ஏற்படுத்திக் கொள்ள எந்த முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமில்லை. மாற்றுக் கருத்து கொள்பவர் வழிகேட்டில் நிலைத்திருப்பவராவர். (அல்குர்ஆன்: 33:36 இறைவாக்கின் சாரம்சம்) மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா? உலகெங்கும், பரவலாய், பிளவுண்டு, சிதறிக்கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமுதாயமயமாக்கும் உயர் இலட்சியம், நீண்ட நெடுங்காலமாய் வெறும் கற்பனையான தோற்றமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மனித சக்திக்கு உட்பட்டு, மனிதர்கள் சாதிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது மனித சமுதாயம் முழுமையும் ஒன்றிணைப்பதே! அறிஞர் முதல் பாமரர் வரை இதில் அனைவரும் கருத்தொருமிக்கின்றனர். மொழி, இனம், நாடு, நிறம், பல்வேறுபட்ட தத்துவங்கள், அரசியல், பொருளாதாரம், ஆத்திக மதங்களால், நாத்திக சித்தாத்தந்தங்களால் ஏற்பட்டு வரும் வழிகேடுகள், விபரீதங்கள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க கேடுகள் போன்றவைகளால் கணக் கிலடங்கா பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கி நாளுக்கு நாள், எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட மனித சமுதாய (மய)மாக்கும் சாத்தியக் கூறுகள் - வெற்றுக் கனவுகளே! இது, சில காலம் முன்பு வரை அஞ்ஞானிகள் கண்ட தவறான முடிவு. ஆனால், இன்று, அல்ஹம்துலில்லாஹ், அந்த அவல நிலை மாறி அதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டு. இஸ்லாம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடுடைய சமூக இயல் ஆய்வாளர்களும் உதயமாகி இருக்கிறார்கள். இந்த வியப்பிற்குரிய உண்மையை, ஜீரணிக்கு முன், இதை எடுத்துக் காட்டியவர், ஒரு முஸ்லிம் அல்ல என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. (காண்க நூல்: இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். பக்கங்கள் 256 முதல் 269 வரை) ஆம்! இஸ்லாத்தை அதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியும் வேட்கையுடன், ஆய்வு செய்வோருக்கே இந்த பேருண்மை புலப்படும், பரம்பரை பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இது புலப்படாமல் போனதில் வியப்பில்லை. ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்: அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-வ-அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு - என்ற இஸ்லாமிய கொள்கை முழக்கத்தோடு, இறைத் தூதர் (ஸல்) அவர்களின், இஸ்லாமிய அழைப்புப் பணித் துவங்கியது. இருபத்து மூன்றாம் ஆண்டு, ஹஜ்ஜத்துல் விதாவுவில், இஸ்லாம் நிறைவுற்றது (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;.5:3) என்ற இனிய இறைவாக்கு அருளப்படும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை, முஸ்லிம்களின் ஜமாஅத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இப்படிப்பட்ட உன்னதமான ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அடிகோலியது எது? இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் 7:3, இறை வாக்கின் அடிப்படையில், இறையருளியதை மட்டுமே பின்பற்றி இந்த அற்புத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அன்று பிரிவுக்கும், பிளவுக்கும் வித்திடும் அனைத்து வழிகேடுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. 3:103, இறைவாக்கின் அடியொற்றி, இஸ்லாமிய ஒற்றுமை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது. முஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும், அதில் நிலைத்திருந்ததையும் 5:3 இறைவாக்கு இஸ்லாம் நிறைவுற்றது என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இறைவாக்கை மூச்சுக்கு முன்னூறு தடவை என்றல்ல, இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுகிறோம் என் போர் பேச்சிலும், எழுத்திலும் முழங்கி வரும் நம்மவர்கள் - அதிலிருந்து படிப்பினை பெறத் தவறியது ஏன்? இஸ்லாம் நிறைவு பெறும்போது (5:3) ஓரிறைக் கொள்கை - தவ்ஹீத் - முஸ்லிம்கள் அனைவர்களது வாழ்க்கை நடைமுறையால் பிரதிபலித்துக் காட்டப்பட்டதேயன்றி, தங்களைத் தனிமைப்படுத்திக் காட்ட பயன்படுத்தப் படவேயில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று யாரும் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டவில்லை. தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று எதுவும் உருவாகவில்லை. பிற்காலத்தில் அப்படி உருவாக்கும் எந்த முகாந்திரத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. தவ்ஹீத் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதைத் தனிமைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை என்பதை அன்றைய உண்மை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தார்கள். கொள்கை சகோதரர்கள் இன்றைய வழிகேடர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திட தவ்ஹீதைப் பயன்படுத்துவது சரிதானா? தவ்ஹீதைப் பிரிவினைவாதத்துக்கும் பிளவுபடுவதற்கும் துணைக்கழைப்பது இஸ்லாத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம். தவ்ஹீத்வாதிகள் - நேர்வழி பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அனாச்சாரவாதிகள்- வழிகேடர்கள்-தாழ்ந்தவர்கள். இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுகிறோம் என்போர் எழுதவில்லை. பேசவில்லை. உண்மை, அவர்களின் நடைமுறை இதை மெய்ப்பிக்கிறது" விதிவிலக்கு வெகு சொற்பம். மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை! இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா? சம்பந்தப்பட்டவர்கள் ஆத்திரம் அடைய வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்து - தவறிலிருந்து விடுபட அன்போடு அழைக்கிறோம். மற்றப் பிரிவுப் பெயர்கள்: ஹனபி, ஷாஃபி என்றும் மத்ஹபுகள் பெயரால், தரீக்காக்கள் பெயரால், மன்றங்கள் பெயரால், ஜமாஅத்கள் பெயரால், அரசியல் கட்சிகள் பெயரால் இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை, (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.7:3 இறையருளியதைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103) இறை நெறிநூலோடு ஐக்கியமாகி ஒன்றுபட்ட உண்மை முஸ்லிம்களாக அழைப்பு விடுக்கும் மகத்தான சேவையில் ஈடுபட வேண்டிய நாம் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம், ~ஜாக்ஹ், அஹ்ல ஹதீஃது, ஸலஃபி, இவையன்றி, அந்தந்த குழுக்கள் சரிகண்ட தனித்தனி பெயர்களில், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், மன்றங்கள், அழைப்பு மையங்கள் என்று முன்னரே பல்வேறு பெயர்களில் பிளவுண்டோரை மீண்டும் பிரிக்காமல், முஸ்லிம்கள் என்று நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரிந்து செல்லாமல், முஸ்லிம்கள் என்ற நிலையில் உம்மத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைக்கும் தொலை நோக்கிற்கு - நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அனைவரையும் கேட்டுக்கொண்டு, அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம். வஸ்ஸலாம். Source : http://www.readislam.netநபிகால இஸ்லாமிய ஒற்றுமை! |
பொன்னான நேரங்கள்-1 by அஹ்மத் பாகவி
( 15.04.2010 அன்று ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து )
வீணாகும் காலங்கள்
வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.
அதை நாம் இஸ்லாமியப் பார்வையில் அலசுவோம்.
நேரம் என்பதற்கு அரபியில் ‘வக்து’ (وقت) எனக் கூறப்படும்.எனவே விலைமதிக்க முடியாத நேரத்தின் தலைப்பை
காலம் என்றால் என்ன?
ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?
1.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
2.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
3. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் றெ;றிருக்கவில்லை.
4.காலமும் கடல் அலையும் எவருக்காகவும் காத்து நிற்காது என்பார்கள்.
5.ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும், ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது சீனப் பழமொழி.
6.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு. இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
7. காலமகளின் பின்தலை வழுக்கையாக இருப்பதால் அவளின் முன் கூந்தலைப் பற்றிப்பிடித்துக்கொள்.
காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும தெளிவு படுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமமாதல் போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
ஒரு நிமிஷம் தானே!
ஒரு நிமிஷம் தானே! கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களா? குடியா முழுகிப்போகும்?என்றெல்லாம் நம் நண்பர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுவதைப் பர்க்கிறோம்.பாருங்கள் ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்களை!
ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்கள்
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத் தானே சுற்றிவிடுகின்றது.
2. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் நாம் நிமிடத்திற்கு 91,500 அடி நகர்ந்து போகிறோம்
3. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு நிமிடத்திற்கு 1110 மைல்கள் பிரயாணம் செய்கிறோம.
4. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள் சுவாசிக்கிறான்.
5. மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 தடவைகள் ஆகும்.
(ஒரு மணி நேரத்துக்கு 4320 தடவைகள் 24 மணிக்கு 10,3680 தடவைகள்.
ஆயுளில் 250 கோடி தடவைகள் துடிக்கின்றன. (4 நிமிட நேரம் இதயம்
இயங்காவிட்டால் மனிதனின் உயிரே போய்விடும்)
6. 1400 கன அடி மழை மாநிலத்தில் பொழிந்து விடுகின்றன.
7. 35000 தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றன.
8. 68 கார்கள் உற்பத்தியாகின்றன.
9. 4600 செருப்புகள் உற்பத்திச ;செய்யப்படுகின்றன.
10. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
11. 100 பேர் இறக்கின்றனர்.
12. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
13. தேனீ ஒரு நிமிடத்தில் 13 பூக்களில் தேன் எடுக்கிறது.
14. 6000 விண்கற்கள் வீழுகின்றன.
15. அறுபது இலட்சம் சிகரெட்டுகள் பிடிக்கப்படுகின்றன.
16. 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
நாற்பதாண்டுகளுக்கு முன் (20.8.1966 ஆம் ஆண்டில்) ஒரு புள்ளி விவரக் கணக் கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தியுள்ளார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர்.
இன்று அதை பத்தாகப் பெருக்கிப் பர்க்க வேண்டும்.அப்போது தான் நேரத்தின் அருமை நமக்குப் புரியும்.
மனிதன் நேரத்தின் அருமையைஉணர்ந்து கொள்வதற்காகவே உலகில் எங்கு பார்த்தாலும் கடிகாரங்களைக் காண முடிகிறது.
எங்கும் கடிகாரங்கள்
கையிலே கடிகாரம்,
தெலைபேசியிலே கடிகாரம்,
கணிணியிலே கடிகாரம்,
வீடடுச்சுவர்களிலே கடிகாரம்,
வரவேற்பறையிலே கடிகாரம்
அலுவகத்திலே கடிகாரம்,
பள்ளிக்கூடத்திலே கடிகாரம்
வாகனத்திலே கடிகாரம்,
பேருந்திலே கடிகாரம்
விமானத்திலே கடிகாரம்,
ஊர் முகப்பிலே கடிகாரம்,
பூங்காக்களிலே கடிகாரம்,
காணும் பொருளிலெல்லாம் காலத்தை காட்டும் கடிகாரங்கள்.
பார்க்கும் பொருளிலெல்லாம் நம்மை உணர்த்தும் கடிகாரங்கள்!.
பேருந்து நிலையங்களிலும் இரயில்வே நிலையங்களிலும் விமான நிலையங்களிலும்அவ்வப்போது பயண அறிவிப்பு நேரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?காலத்தின் அருமையை யல்லவா காட்டுகின்றன.
இஸ்லாமியப் பார்வையில் நேரம்
இப்போது இஸ்லாமியப் பார்வையில் நேரம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேரம் இறைவனின் மாபெரும் அருட்கொடை!
நேரம் என்பது இறைவனின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அந்த நேரத்தைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது (அதாவது குர்ஆனும் ஸுன்னாவும் என்னகூறுகிறது) என்பதைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது குர்ஆன் என்ன கூறுகிறது:-
வல்ல இறைவன், ‘இரவைப் பகலைத் தொடர்ந்து வருமாறும், பகலை இரவைத் தொடர்ந்து வருமாறும் ஒரு வினாடி கூட பிசகாது இயங்குமாறு செய்துள்ளான்.இந்த சுழற்சி நிகழ்ச்சியில் ஒருவினாடி கூட பிசகிவிட்டால் உலகமே நிலைகுலைந்துவிடும்.அதனால் தான் ஒவ்வொரு கோளங்களையும் ஒரு வட்டவரைக்குள் (எல்லைக்குள்) சுற்றிவருமாறு செய்துள்ளான்.
என்ற குர்ஆனின் அறிவியற் செய்தி உலகையே வயப்பிலாழ்த்துகிறது.
அதற்கான கால வரையை அறிவதற்கு சூரியனையும் சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான. இரவை இருளாக்கி சுகம் பெறவும், பகலைப் பிரகாசமாக்கி அவனது அருட்கொடைகளைத் தேடவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் வழங்கிய காலம் மனித குலத்திற் கோர் அருட்கொடையாகும்.
காலத்தைக் குறித்து வரும் வசனங்கள் 18
நேரத்தின் முக்கியத்தைக் கருதியே குர்ஆனில் காலத்தின் மீது ஆணையிட்டுப் பல வசனங்கள் வருகின்றன. குர்ஆனில் ஆணையிட்டு வரும் மொத்தம் வசனங்கள் 92 ஆகும். இவற்றில் 18 வசனங்கள் காலத்தின் மீது ஆணையிட்டே வருகின்றன.
உதாரணமாக:-
காலத்தைப்பற்றி இறை தூதர் (ஸல்) கூறியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விலைமதிக்க முடியாத நேரத்தின் மாண்பையும், அதன் முக்கியத்துவத்தையும் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
கியாமத் என்னும் விசாரணை நாளிலே இறைவன் மிக முக்கியமானதாக அதுவும் முதன்மையாகக் கேட்கப்படும் நான்கு கேள்விகளிலே தலையாயதாக ‘நேரத்தைப் பற்றியே இரு கேள்விகள் அமைந்திருக்கும்’ என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்படடிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.
1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)
ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?
ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.
வாலிபப் பருவம் பற்றி இறைமறை
வலிமைமிக்க வாலிபம் பற்றி இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்தே திடமான இளமப் பருவமே செயலாற்றவேண்டிய காலம் எனத்தெரிகிறது.வலிமையுள்ள காலத்தை நாம் வீண்விரயம் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய வணக்கங்கள்
அடுத்து இஸ்லாமிய வணக்கமுறைகளும் நேரத்தின் மதிப்பையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதைப்; பாருங்கள்.
பர்ளான வணக்கங்களும், இதர கடமைகளும்; விலைமதிக்க முடியாத நேரத்தை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின் இயக்கம், அண்டஙகளின் சுழற்;சி,சூரிய சந்திரனின் ஓட்டங்கள், அதன் மூலம் இரவு பகல் மாறி மாறி ஓயாமல்; வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் கால ஓட்டத்தை உணர்த்தி மனிதன் சீராக இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
ஃபஜ்ருத் தொழுகை
ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுது மறைந்து அதிகாலைப் பொழுது மலர்ந்தும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலி முழக்கம் தூங்கிக் கொண்டிருப்போரை எழுப்பி விடுகிறது. உணர்வர்வற்ற மனிதனை உசுப்பி விடுகிறது. ‘மனிதா! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூங்கும் நேரம் முடிந்து விட்டது. எழுந்து செயலாற்றும் நேரம் வந்து விட்டது என முழங்குகிறது.
உலகெலாம ஒலிக்கும் அந்த முழக்கத்தை கேளுங்கள்.
அப்பப்பா! எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரோட்ட முள்ள சொற்கள், எந்த மதமும் அழைக்காத ஒலி முழக்கங்கள். ஒரு நாளா இருநாட்களா? நாள் தோறும் முழக்கங்கள்! வரரந்தோறும் முழக்கங்கள்! மதந்தோறும் முழக்கங்கள!
ஆண்டு முழுவதும் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதைக் கேட்ட பின்னருமா நம் மக்களுக்கு அதிகாலையில் தூக்கம் வருகிறது?
கல்லையும் கனியச் செய்யும் அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் இறைவனை நினைந்துருகும் இதயங்கள் நன்றிப் பெருக்கால் அந்த அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே உளுச் செய்துவிட்டு தொழுகைக்கு விரைந்து வருகின்றனர். தாலாட்டும் சைத்தானின் மாய வலையில் விழாது ஓடோடி வரும் காட்சிகள் இறைவனைப் பரவசப்படுத்துகின்றன.
அது மட்டுமா இரவில் சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்திருப்போருக்கு இறைவனின் பேரருள் கிடைக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
லுஹர் தொழுகை
அடுத்து பகல் வேளையிலே வேலையில் மழுமூச்சுடன் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் மனிதன்நோக்கி மீண்டும் அதே பாங்கோசைகள்!
அஸ்ர் தொழுகை
வேலையிலிருந்து வீடு திரும்பியதும் ஓய்ந்து விடாதே! உடல் வலிமையோடு பகலெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்த (அஸர்) மாலை நேரத் தொழுகையை நோக்கி வா! இது மூன்றாவது அழைப்பொலி!
மஃரிப் தொழுகை
பகல் நேரம் முடிந்து இரவின் துவக்கம்! மஃரிப் என்னும் அந்தி நேரம் வந்து விட்டது. அமைதியைத் தரும் அந்த நேரத்திலும் அல்லாஹ் வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக மீண்டும் நான்காவது அழைப்பொலி !
இஷாத் தொழுகை
இறுதியாக உறங்கச் செல்லு முன் இரவின் இருளிலும் இறைவனை மறவாது ‘பகற் பொழுதை வெற்றிகரமாக கழித்ததற்கு நன்றி செலுத்தும் முகமாக கடைசிநேர பாங்கோசை!’ இது ஐந்தாவது அழைப்பொலி! இறை நினைவிலே வாழும் அடியான் கடைசி நேரத் தொழுகையை தொழுது விட்டு உறங்கச் செல்லுகிறான்.
ஒரு நாள் பொழுதை, அதிகாலைத் தொழுகையோடு துவங்கி இரவுத்தொழுகையோடு முடிக்கும் மனிதன் நாள் முழுவதும் ஐவேளை இறைவனை மறக்காது நன்றிப் பெருக்கோடு துதிக்கிறான். ஒவ்வொரு வேளையும் அவன் முன் நின்று,
இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். நீயே ரப்புல் ஆலமீன்.அகிலத்தின் அதிபதி! நீயே மாலிக்கி யவ்முத்தீன்! நியாயத்தீர்ப்பு நாளின் பேரரசன்!
இறை உணர்வுகளோடு செயலாற்றும் அடியானின் பொன்னான நேரங்கள் நன்மையான காரியங்களில் பதிவு செய்யப்படுகின்றன். அவன் மனிதப் புனிதனாக வாழ்கிறான்.
ஜும்ஆத் தொழுகை
அடுத்து வாரந்தோறும் மக்கள் ஒன்று கூடும் சிறப்புத் தொழுகையான ஜும்மாத் தொழுகையை நிறைவேற்றுதற்கு வார அழைப்பு! பல சிறப்பு அம்சங்களோடு இத் தொழுகை நிறை வேற்றப்படுகிறது.இந்த நாளும் இறைவனின் பேரருளைப் பெறுவதற்கு ஒரு பென்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுவும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மகத்தான பாக்கியமாகும்.
பர்ளான நபிலான வணக்கங்கள்.
இவை போதாதென்று இரவு வேளைகளில் தனித்திருந்து அமைதியாக இறைவனை வணங்கி வழிபட்டு,அவனோடு உரையாடவும் ஸலாத்துல்லைல் போன்ற இரவுத் தொழுகைகளை தொழுது அல்லாஹ்வின் நினைவுகளிலே தோய்ந்து அவனது அருளைப்; பெறும் மகத்தான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
இறைவனின் நல்லடியார்கள் அந்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. இது குறித்து இறைவன், அருள் மறை குர்ஆனில்
இவை போன்று இரவிலும் பகலிலும் அல்லாஹ்வின் நல்டியார்கள் அல்லாஹ்வின் அருளைத்தேடுவதற்கு ளுஹா,தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற நஃபிலான பல வணக்கங்களும் உள்ளன.
இவையெல்லாம் மனிதனை புனிதனாக்கும் சிறப்பு வணக்கங்களாகும். மனிதன் எந்தச் சூழலிலும் அவனது பொன்னான நேரங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நேரத்தை பயனோடு செலவிடுவதற்கு அவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
புதுப்பிறையால் புத்தணர்வு.
மாதம் பிறந்து விட்டால் புதுப்பிறை தோன்றுகிறது.அப்போது ஒரு முஸ்லிம் மகிழ்ச்சிப் பெருக்கால் விண்ணை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறியவனாக அந்த பிறையை நோக்கி “அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறி சந்திரனைப் படைத்து பல நிலைகளாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சியாக ஆக்கியமைத்ததற்காக நன்றி கூறி,
الله أكبر ألله أكبر الحمد لله الذي خلقك، وقدرك منازل ، وجعلك آية للعالمين . أللهم أهله علينا بالأمن والايمان
இறைவா! இந்த பிறை தோன்றிய இம்மாதத்தை ஈமானோடும், அமைதியோடும், இஸ்லாமிய நெறிகளோடும், இறைவன் விரும்பும் அருளோடும், நன்மை பயக்கும் நேர்வழியோடும் எங்களை வாழச் செய்வாயாக! என்னுடையவும், உன்னுடையவும் நாயன் அல்லாஹ் வாகும். என்று இறைவனிடம் பிரார்த்தித்து புத்துணர்வு பெறுகிறான். (திர்மிதி, அறிவிப்பவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
ஒரு மாதம் பிறந்ததும் அதை எவ்வாறு வரவேற்றுச் சிறப்பிக்க வேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.
ரமளானின் வருகை
ஆண்டு தோறும் ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன.; ஷைத்தன்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அப்போது இறைவனின் அமரர்கள் கீழ்வானத்திற்கு இறங்கி வந்து
(அக்பில் : முன்னோக்கு.அக்ஸிர்: (அத்பிர்)- பின்னோக்கு)
ஹஜ்ஜுடைய காலம்
அடுத்து ரமளான் முடிந்ததும் ஹஜ்ஜுடைய காலம் வருகிறது. உலகோர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே உடையில் ஒரே குரலில் விண்ணதிர தல்பியா கூறியவர்களாக வந்து நிற்பார்கள்.
இவ்வாறே ஆண்டு தோறும் ஏழை எளியவர்களுக்காக வழங்கும் ஸகாத் ஏழை வரியையும் முறையாக வினியோகிக்க வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அறிஞர் பெருமக்களில் சிலர் இந்த வணக்கங்களின் தத்துவத்தைக் குறிப்பிடும் போது
1. ஐவேளைத் தொழுகையை ஒருநாள் திட்டம் ميزان اليوم
(One day Programe) என்றும்
3. ரமளான் மாதத்தையும், ஸகாத் கடமையையும்
ميزان العام ஓராண்டுத் திட்டம் ( One year Programe) என்றும்,
4. ஹஜ்ஜுக் கடமையை ميزان العمر ஆயுள் திட்டம் ( Life Programe) என்றும்வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு நாள் வணக்கம் என்றும்
வாராந்தோறும் நிறைவேற்றும் வணக்கம் என்றும்
ஆண்டிற்கொரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
ஆயுளிலே ஒரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
இவ்வாறாக அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.அதை ஏனோ தானோ என்றில்லாமல் இது தான் நமது கடைசி வணக்கமாக இருக்கும் என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு எவ்வாறெல்லாம் இஸ்லாம் உணர்த்துகிறது பார்த்தீர்களா? இவ்வாறு மனித குலம் மாண்பு பெறவேண்டுமென அல்லாஹ் மகத்தான பல சந்தர்பங்களையும் நேரங்களையும் நமக்குத்தந்து ஊக்குவிக்கிறான்.
பொருள் பொதிந்த வணக்கங்கள்! இறையருளையும் சுவர்க்கத்தையும்
பெற்றுத்தரும் அரிய இபாதத்துகள்! வாய்ப்புகள்!! இதனை கண் இமை போல் பேணிக் காத்து வாருங்கள்.
தொடரும்…..
வீணாகும் காலங்கள்
வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.
அதை நாம் இஸ்லாமியப் பார்வையில் அலசுவோம்.
நேரம் என்பதற்கு அரபியில் ‘வக்து’ (وقت) எனக் கூறப்படும்.எனவே விலைமதிக்க முடியாத நேரத்தின் தலைப்பை
الوقت في حيات المسلم
‘ஒரு முஸ்லிமின் வாழ்வில் நேரம்’ என வைத்துக் கொள்ளலாம்.காலம் என்றால் என்ன?
ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?
1.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
2.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
3. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் றெ;றிருக்கவில்லை.
4.காலமும் கடல் அலையும் எவருக்காகவும் காத்து நிற்காது என்பார்கள்.
5.ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும், ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது சீனப் பழமொழி.
6.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு. இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
7. காலமகளின் பின்தலை வழுக்கையாக இருப்பதால் அவளின் முன் கூந்தலைப் பற்றிப்பிடித்துக்கொள்.
காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும தெளிவு படுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமமாதல் போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
ஒரு நிமிஷம் தானே!
ஒரு நிமிஷம் தானே! கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களா? குடியா முழுகிப்போகும்?என்றெல்லாம் நம் நண்பர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுவதைப் பர்க்கிறோம்.பாருங்கள் ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்களை!
ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்கள்
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத் தானே சுற்றிவிடுகின்றது.
2. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் நாம் நிமிடத்திற்கு 91,500 அடி நகர்ந்து போகிறோம்
3. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு நிமிடத்திற்கு 1110 மைல்கள் பிரயாணம் செய்கிறோம.
4. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள் சுவாசிக்கிறான்.
5. மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 தடவைகள் ஆகும்.
(ஒரு மணி நேரத்துக்கு 4320 தடவைகள் 24 மணிக்கு 10,3680 தடவைகள்.
ஆயுளில் 250 கோடி தடவைகள் துடிக்கின்றன. (4 நிமிட நேரம் இதயம்
இயங்காவிட்டால் மனிதனின் உயிரே போய்விடும்)
6. 1400 கன அடி மழை மாநிலத்தில் பொழிந்து விடுகின்றன.
7. 35000 தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றன.
8. 68 கார்கள் உற்பத்தியாகின்றன.
9. 4600 செருப்புகள் உற்பத்திச ;செய்யப்படுகின்றன.
10. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
11. 100 பேர் இறக்கின்றனர்.
12. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
13. தேனீ ஒரு நிமிடத்தில் 13 பூக்களில் தேன் எடுக்கிறது.
14. 6000 விண்கற்கள் வீழுகின்றன.
15. அறுபது இலட்சம் சிகரெட்டுகள் பிடிக்கப்படுகின்றன.
16. 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
நாற்பதாண்டுகளுக்கு முன் (20.8.1966 ஆம் ஆண்டில்) ஒரு புள்ளி விவரக் கணக் கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தியுள்ளார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர்.
இன்று அதை பத்தாகப் பெருக்கிப் பர்க்க வேண்டும்.அப்போது தான் நேரத்தின் அருமை நமக்குப் புரியும்.
மனிதன் நேரத்தின் அருமையைஉணர்ந்து கொள்வதற்காகவே உலகில் எங்கு பார்த்தாலும் கடிகாரங்களைக் காண முடிகிறது.
எங்கும் கடிகாரங்கள்
கையிலே கடிகாரம்,
தெலைபேசியிலே கடிகாரம்,
கணிணியிலே கடிகாரம்,
வீடடுச்சுவர்களிலே கடிகாரம்,
வரவேற்பறையிலே கடிகாரம்
அலுவகத்திலே கடிகாரம்,
பள்ளிக்கூடத்திலே கடிகாரம்
வாகனத்திலே கடிகாரம்,
பேருந்திலே கடிகாரம்
விமானத்திலே கடிகாரம்,
ஊர் முகப்பிலே கடிகாரம்,
பூங்காக்களிலே கடிகாரம்,
காணும் பொருளிலெல்லாம் காலத்தை காட்டும் கடிகாரங்கள்.
பார்க்கும் பொருளிலெல்லாம் நம்மை உணர்த்தும் கடிகாரங்கள்!.
பேருந்து நிலையங்களிலும் இரயில்வே நிலையங்களிலும் விமான நிலையங்களிலும்அவ்வப்போது பயண அறிவிப்பு நேரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?காலத்தின் அருமையை யல்லவா காட்டுகின்றன.
இஸ்லாமியப் பார்வையில் நேரம்
இப்போது இஸ்லாமியப் பார்வையில் நேரம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேரம் இறைவனின் மாபெரும் அருட்கொடை!
நேரம் என்பது இறைவனின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அந்த நேரத்தைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது (அதாவது குர்ஆனும் ஸுன்னாவும் என்னகூறுகிறது) என்பதைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது குர்ஆன் என்ன கூறுகிறது:-
وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்குமாறு அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.அவனே இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான் (14:33)وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُوراً
சிந்திக்க விரும்புபவனுக்;கும், நன்றி செலுத்த விரும்புவனுக்கும் இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருமாறு அமைத்துள்ளான்;.(அல்புர்கான் 25:62)வல்ல இறைவன், ‘இரவைப் பகலைத் தொடர்ந்து வருமாறும், பகலை இரவைத் தொடர்ந்து வருமாறும் ஒரு வினாடி கூட பிசகாது இயங்குமாறு செய்துள்ளான்.இந்த சுழற்சி நிகழ்ச்சியில் ஒருவினாடி கூட பிசகிவிட்டால் உலகமே நிலைகுலைந்துவிடும்.அதனால் தான் ஒவ்வொரு கோளங்களையும் ஒரு வட்டவரைக்குள் (எல்லைக்குள்) சுற்றிவருமாறு செய்துள்ளான்.
وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
அவனே இரவையும் பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வாரு கோளங்களும் அதன் வட்டவரைக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. (21:33)என்ற குர்ஆனின் அறிவியற் செய்தி உலகையே வயப்பிலாழ்த்துகிறது.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ
மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். (9:36)அதற்கான கால வரையை அறிவதற்கு சூரியனையும் சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான. இரவை இருளாக்கி சுகம் பெறவும், பகலைப் பிரகாசமாக்கி அவனது அருட்கொடைகளைத் தேடவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் வழங்கிய காலம் மனித குலத்திற் கோர் அருட்கொடையாகும்.
காலத்தைக் குறித்து வரும் வசனங்கள் 18
நேரத்தின் முக்கியத்தைக் கருதியே குர்ஆனில் காலத்தின் மீது ஆணையிட்டுப் பல வசனங்கள் வருகின்றன. குர்ஆனில் ஆணையிட்டு வரும் மொத்தம் வசனங்கள் 92 ஆகும். இவற்றில் 18 வசனங்கள் காலத்தின் மீது ஆணையிட்டே வருகின்றன.
உதாரணமாக:-
وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وَالنَّهَارِ إِذَا تَجَلَّى
وَالْفَجْرِ ، وَلَيَالٍ عَشْرٍ
وَالضُّحَى، وَاللَّيْلِ إِذَا سَجَى
وَالْعَصْرِ، إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
92:1-2, 89:1-2,93:1-2, 103:1-2 ஆகிய வசனங்களில் இரவின் மீது ஆணையாக! பகலின் மீது ஆணையாக, விடியற்காலையின் மீது ஆணையாக, முற்பகல் மீது ஆணையாக, மாலைவேளை மீது ஆணையாக என்று சத்தியமிட்டுக் கூறுகிறான் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை தனது அடியார்களுக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.காலத்தைப்பற்றி இறை தூதர் (ஸல்) கூறியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விலைமதிக்க முடியாத நேரத்தின் மாண்பையும், அதன் முக்கியத்துவத்தையும் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
கியாமத் என்னும் விசாரணை நாளிலே இறைவன் மிக முக்கியமானதாக அதுவும் முதன்மையாகக் கேட்கப்படும் நான்கு கேள்விகளிலே தலையாயதாக ‘நேரத்தைப் பற்றியே இரு கேள்விகள் அமைந்திருக்கும்’ என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்படடிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
عن معاذ بن جبل أن النبي صلعم قال
لن تزول قدما عبد يوم القيامة حتي يسأل عن أربع خصال عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين إكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به ( رواه البزار والطبراني باسناد صحيح واللفظ له)
மறுமை நாளில் நான்கு கேள்விகள்முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.
1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)
ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?
ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.
வாலிபப் பருவம் பற்றி இறைமறை
வலிமைமிக்க வாலிபம் பற்றி இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفاً وَشَيْبَةً
பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான்.பின்னர் பலவீனத்திற்குப்பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் ஏற்படுத்தினான். (அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்). (அர்ரூம் 30:54)பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்தே திடமான இளமப் பருவமே செயலாற்றவேண்டிய காலம் எனத்தெரிகிறது.வலிமையுள்ள காலத்தை நாம் வீண்விரயம் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய வணக்கங்கள்
அடுத்து இஸ்லாமிய வணக்கமுறைகளும் நேரத்தின் மதிப்பையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதைப்; பாருங்கள்.
பர்ளான வணக்கங்களும், இதர கடமைகளும்; விலைமதிக்க முடியாத நேரத்தை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின் இயக்கம், அண்டஙகளின் சுழற்;சி,சூரிய சந்திரனின் ஓட்டங்கள், அதன் மூலம் இரவு பகல் மாறி மாறி ஓயாமல்; வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் கால ஓட்டத்தை உணர்த்தி மனிதன் சீராக இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
ஃபஜ்ருத் தொழுகை
ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுது மறைந்து அதிகாலைப் பொழுது மலர்ந்தும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலி முழக்கம் தூங்கிக் கொண்டிருப்போரை எழுப்பி விடுகிறது. உணர்வர்வற்ற மனிதனை உசுப்பி விடுகிறது. ‘மனிதா! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூங்கும் நேரம் முடிந்து விட்டது. எழுந்து செயலாற்றும் நேரம் வந்து விட்டது என முழங்குகிறது.
உலகெலாம ஒலிக்கும் அந்த முழக்கத்தை கேளுங்கள்.
حي علي الصلاة – حي علي الصلاة
அல்லாஹ்வைத் தொழ ஓடி வாருங்கள்!حي علي الفلاح حي علي الفلاح
வெற்றியிச் சிகரத்தை நோக்கி பீடு நடை போட வாருங்கள்!الصلاة خير من النوم
தூக்கத்தை விட தொழுகை மேலானது.அப்பப்பா! எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரோட்ட முள்ள சொற்கள், எந்த மதமும் அழைக்காத ஒலி முழக்கங்கள். ஒரு நாளா இருநாட்களா? நாள் தோறும் முழக்கங்கள்! வரரந்தோறும் முழக்கங்கள்! மதந்தோறும் முழக்கங்கள!
ஆண்டு முழுவதும் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதைக் கேட்ட பின்னருமா நம் மக்களுக்கு அதிகாலையில் தூக்கம் வருகிறது?
கல்லையும் கனியச் செய்யும் அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் இறைவனை நினைந்துருகும் இதயங்கள் நன்றிப் பெருக்கால் அந்த அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே உளுச் செய்துவிட்டு தொழுகைக்கு விரைந்து வருகின்றனர். தாலாட்டும் சைத்தானின் மாய வலையில் விழாது ஓடோடி வரும் காட்சிகள் இறைவனைப் பரவசப்படுத்துகின்றன.
அது மட்டுமா இரவில் சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்திருப்போருக்கு இறைவனின் பேரருள் கிடைக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
اللهم بارك لامتي في بكورها (رواه أحمد، وحاكم
இறைவா! என் சமுதாய மக்களுக்கு அதிகலை வேளையில் அருள் பொழிவாயாக! (ஆதாரம்: அஹ்மத், ஹாக்கிம்)லுஹர் தொழுகை
அடுத்து பகல் வேளையிலே வேலையில் மழுமூச்சுடன் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் மனிதன்நோக்கி மீண்டும் அதே பாங்கோசைகள்!
الله أكبر الله أكبر
பணம் தேடும் ஆசையில் படைத்தோனை மறந்து விடாதே! ‘மனிதா! இதுவரை ஊக்கத்தோடு உழைப்பதற்கு வாய்ப்பளித்த வல்லோனை வணங்கிட மீண்டும் ஓடிவா! உணவளித்துக் காக்கும் வல்லானின் முன் நின்று உன் தேவைகளை முறையிட வா! மறுஉலக வெற்றியை நோக்கிவா! என்ற லுஹர் நேர அழைப்பு! இது இரண்டாவது அழைப்பு!அஸ்ர் தொழுகை
வேலையிலிருந்து வீடு திரும்பியதும் ஓய்ந்து விடாதே! உடல் வலிமையோடு பகலெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்த (அஸர்) மாலை நேரத் தொழுகையை நோக்கி வா! இது மூன்றாவது அழைப்பொலி!
மஃரிப் தொழுகை
பகல் நேரம் முடிந்து இரவின் துவக்கம்! மஃரிப் என்னும் அந்தி நேரம் வந்து விட்டது. அமைதியைத் தரும் அந்த நேரத்திலும் அல்லாஹ் வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக மீண்டும் நான்காவது அழைப்பொலி !
இஷாத் தொழுகை
இறுதியாக உறங்கச் செல்லு முன் இரவின் இருளிலும் இறைவனை மறவாது ‘பகற் பொழுதை வெற்றிகரமாக கழித்ததற்கு நன்றி செலுத்தும் முகமாக கடைசிநேர பாங்கோசை!’ இது ஐந்தாவது அழைப்பொலி! இறை நினைவிலே வாழும் அடியான் கடைசி நேரத் தொழுகையை தொழுது விட்டு உறங்கச் செல்லுகிறான்.
ஒரு நாள் பொழுதை, அதிகாலைத் தொழுகையோடு துவங்கி இரவுத்தொழுகையோடு முடிக்கும் மனிதன் நாள் முழுவதும் ஐவேளை இறைவனை மறக்காது நன்றிப் பெருக்கோடு துதிக்கிறான். ஒவ்வொரு வேளையும் அவன் முன் நின்று,
இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். நீயே ரப்புல் ஆலமீன்.அகிலத்தின் அதிபதி! நீயே மாலிக்கி யவ்முத்தீன்! நியாயத்தீர்ப்பு நாளின் பேரரசன்!
إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ
இன்ன ஸலாத்தீ வநுஸ்கீ வமஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் ….(6:162) எனது வணக்கம், தியாகம்,வாழ்வு, மரணம் யாவும் உனக்காகவே உள்ளது என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அந்த நாயனுக்கு மாறு செய்ய எப்படி மனம் துணியும்? பாவம் செய்ய எப்படி மனம் வரும்? விலை மதிக்கமுடியாத நேரங்களை வீணாக்குவதற்கு எப்படி அவன் மனம் துணிகிறது?இறை உணர்வுகளோடு செயலாற்றும் அடியானின் பொன்னான நேரங்கள் நன்மையான காரியங்களில் பதிவு செய்யப்படுகின்றன். அவன் மனிதப் புனிதனாக வாழ்கிறான்.
ஜும்ஆத் தொழுகை
அடுத்து வாரந்தோறும் மக்கள் ஒன்று கூடும் சிறப்புத் தொழுகையான ஜும்மாத் தொழுகையை நிறைவேற்றுதற்கு வார அழைப்பு! பல சிறப்பு அம்சங்களோடு இத் தொழுகை நிறை வேற்றப்படுகிறது.இந்த நாளும் இறைவனின் பேரருளைப் பெறுவதற்கு ஒரு பென்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுவும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மகத்தான பாக்கியமாகும்.
பர்ளான நபிலான வணக்கங்கள்.
இவை போதாதென்று இரவு வேளைகளில் தனித்திருந்து அமைதியாக இறைவனை வணங்கி வழிபட்டு,அவனோடு உரையாடவும் ஸலாத்துல்லைல் போன்ற இரவுத் தொழுகைகளை தொழுது அல்லாஹ்வின் நினைவுகளிலே தோய்ந்து அவனது அருளைப்; பெறும் மகத்தான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
இறைவனின் நல்லடியார்கள் அந்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. இது குறித்து இறைவன், அருள் மறை குர்ஆனில்
وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً وَقِيَاماً
(அந்த நடுநிசி வேளைகளில்) இறைவனின் நல்லடியார்கள் நின்றவர்களாகவும், பணிந்து (ஸுஜூது) சிரம் தாழ்த்தியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள் (25:64) எனக்கூறிச் சிறப்பிக்கிறான்.இவை போன்று இரவிலும் பகலிலும் அல்லாஹ்வின் நல்டியார்கள் அல்லாஹ்வின் அருளைத்தேடுவதற்கு ளுஹா,தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற நஃபிலான பல வணக்கங்களும் உள்ளன.
இவையெல்லாம் மனிதனை புனிதனாக்கும் சிறப்பு வணக்கங்களாகும். மனிதன் எந்தச் சூழலிலும் அவனது பொன்னான நேரங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நேரத்தை பயனோடு செலவிடுவதற்கு அவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
புதுப்பிறையால் புத்தணர்வு.
மாதம் பிறந்து விட்டால் புதுப்பிறை தோன்றுகிறது.அப்போது ஒரு முஸ்லிம் மகிழ்ச்சிப் பெருக்கால் விண்ணை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறியவனாக அந்த பிறையை நோக்கி “அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறி சந்திரனைப் படைத்து பல நிலைகளாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சியாக ஆக்கியமைத்ததற்காக நன்றி கூறி,
الله أكبر ألله أكبر الحمد لله الذي خلقك، وقدرك منازل ، وجعلك آية للعالمين . أللهم أهله علينا بالأمن والايمان
والسلآم والاسلآم والتوفيق بما تحب وترضي ، هلال خير ورشد ربي وربك الله
இறைவா! இந்த பிறை தோன்றிய இம்மாதத்தை ஈமானோடும், அமைதியோடும், இஸ்லாமிய நெறிகளோடும், இறைவன் விரும்பும் அருளோடும், நன்மை பயக்கும் நேர்வழியோடும் எங்களை வாழச் செய்வாயாக! என்னுடையவும், உன்னுடையவும் நாயன் அல்லாஹ் வாகும். என்று இறைவனிடம் பிரார்த்தித்து புத்துணர்வு பெறுகிறான். (திர்மிதி, அறிவிப்பவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)5094 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-
كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ « هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِى خَلَقَكَ ». ثَلاَثَ مَرَّاتٍ. ثُمَّ يَقُولُ « الْحَمْدُ لِلَّهِ الَّذِى ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا
நன்மையை வழங்கி நேர்வழியைக் காட்டும் பிறையே! என்று மூன்று முறைகள் கூறிவிட்டு, உன்மைப்படைத்த நாயனை ஈமான் கொண்டேன் என்று சொல்லியவர்களாக சென்ற மாதத்தை போக்கி (அந்த மாதத்தைக் குறிப்பிட்டு) புது மாதத்தை வழங்கிய நாயனுக்கே புகழ் யாவும் என்று கூறுவார்கள்.(ஸுனனு அபூ தாவூது)ஒரு மாதம் பிறந்ததும் அதை எவ்வாறு வரவேற்றுச் சிறப்பிக்க வேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.
ரமளானின் வருகை
ஆண்டு தோறும் ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன.; ஷைத்தன்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அப்போது இறைவனின் அமரர்கள் கீழ்வானத்திற்கு இறங்கி வந்து
يا باغي الخير أقبل ! وياباغي الشر أقصر
நன்மை தேடுவோரே! முன்னோக்கி வா ! தீமையைத் தேடுவோரே! பின்னோக்கிச் செல்!. என்று கூறி நம்மை புத்தார்வத்தோடும் எழுச்சியோடும் இயங்கவேண்டும் என வாழ்த்துவார்கள்.(அக்பில் : முன்னோக்கு.அக்ஸிர்: (அத்பிர்)- பின்னோக்கு)
ஹஜ்ஜுடைய காலம்
அடுத்து ரமளான் முடிந்ததும் ஹஜ்ஜுடைய காலம் வருகிறது. உலகோர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே உடையில் ஒரே குரலில் விண்ணதிர தல்பியா கூறியவர்களாக வந்து நிற்பார்கள்.
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். (2:197) என ஹஜ்ஜின் காலத்தைக் குறிப்பிட்டுவிட்டு அதில் கடைபிடிக்கவேண்டிய விதிகளையும் கூறிவிட்டு அதையடுத்து அல்லாஹ’ கூறுகிறான்:وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى
நீங்கள் செய்யும் நன்மையான காரியங்கள் யாவற்றையும் அல்லாஹ் அறிகிறான். ஹஜ்ஜிலே நல்லமல்களை திரட்டிக் கொண்டு, கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பை மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். (2:197)இவ்வாறே ஆண்டு தோறும் ஏழை எளியவர்களுக்காக வழங்கும் ஸகாத் ஏழை வரியையும் முறையாக வினியோகிக்க வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அறிஞர் பெருமக்களில் சிலர் இந்த வணக்கங்களின் தத்துவத்தைக் குறிப்பிடும் போது
1. ஐவேளைத் தொழுகையை ஒருநாள் திட்டம் ميزان اليوم
(One day Programe) என்றும்
2. ஜும்ஆ தொழுகையை ميزان الأسبوع ஒரு வாரத்திட்டம் (One week Programe ) என்றும
3. ரமளான் மாதத்தையும், ஸகாத் கடமையையும்
ميزان العام ஓராண்டுத் திட்டம் ( One year Programe) என்றும்,
4. ஹஜ்ஜுக் கடமையை ميزان العمر ஆயுள் திட்டம் ( Life Programe) என்றும்வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு நாள் வணக்கம் என்றும்
வாராந்தோறும் நிறைவேற்றும் வணக்கம் என்றும்
ஆண்டிற்கொரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
ஆயுளிலே ஒரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
இவ்வாறாக அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.அதை ஏனோ தானோ என்றில்லாமல் இது தான் நமது கடைசி வணக்கமாக இருக்கும் என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு எவ்வாறெல்லாம் இஸ்லாம் உணர்த்துகிறது பார்த்தீர்களா? இவ்வாறு மனித குலம் மாண்பு பெறவேண்டுமென அல்லாஹ் மகத்தான பல சந்தர்பங்களையும் நேரங்களையும் நமக்குத்தந்து ஊக்குவிக்கிறான்.
பொருள் பொதிந்த வணக்கங்கள்! இறையருளையும் சுவர்க்கத்தையும்
பெற்றுத்தரும் அரிய இபாதத்துகள்! வாய்ப்புகள்!! இதனை கண் இமை போல் பேணிக் காத்து வாருங்கள்.
தொடரும்…..
Source : http://albaqavi.com/home/?p=877பொன்னான நேரங்கள்-1
வீணாகும் காலங்கள்! from islamkalvi on Vimeo.
Saturday, September 18, 2010
[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்
“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.
வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
“அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.
எழுதியவர் டாக்டர் ஷேக் சையது M.D
Source : http://www.islamkalvi.com/portal/?p=4569
சென்னை மக்கா மஸ்ஜித் இமாமின் அறவுரை!
| சென்னை மக்கா மஸ்ஜித் இமாமின் அறவுரை! |
| சகோதரர்களே! அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுசென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காசிமி அவர்களின் 10-செப் ஜும்ஆ உரையின் மூலம், தமிழகத்து அணைத்து பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு இமாம் அவர்கள் கொடுத்துள்ள செய்தி என்னவென்றால், தற்போதுள்ள தடைகளை நீக்கி, தொப்பி போட்டவர்கள், தொப்பி போடாதவர்கள், நெஞ்சில் கை கட்டுபவர்கள் வயிற்றில் கை கட்டுபவர்கள், விரல் அசைப்பவர்கள், விரல்நீட்டுபவர்கள் என்று யாதொரு பாகுபாடின்றி அனைவரையும் எல்லா பள்ளிவாசலிலும் தொழுக அனுமதிப்பது பள்ளிதலைவர் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்பு. இது நடைமுறை செய்வதன் மூலம் தமிழகத்து முஸ்லிம்களுக்கிடையில் நிலவிலிருக்கும் பிரிவு நீங்கி, பரஸ்பரத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமையும்.' என்பதாகும். அவர்களின் இக்கருத்தை முழுவதுமாக ஆதரிக்கின்றோம். தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், மற்றும் ஷஹீதை விட முக்கியமான ஒரு செயலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஒற்றுமை''யை வலியுறுத்தியிருக்கும்போது தொழுகையில் உள்ள மசாயில்களைக்குறித்து கருத்து வேறுபாடு கொண்டு ஒருவரையொருவர் விமரிசித்து, வெறுத்து, பிளவு பட்டு, சுன்னத்துக்கு மாற்றமாக நடந்துகொள்வதை இனிமேலாவது முஸ்லிம்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆலிம்கள்! ஆம்! ஆலிம்கள்தான் இந்த சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோன்று இந்த சமுதாயத்தை வழிகெடுப்பவர்களும் அவர்களில் சிலராகவே இருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமான உண்மை. உண்மையான இறையச்சம் உள்ள எவரும் நிச்சயமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். Please be and to be a true Muslim. Source : www.nidur.info
|
Tuesday, September 7, 2010
அபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அபு தாபி : 2010 இந்த ஆண்டு இந்நாள் வரை பல நாட்டினை சார்ந்த 559 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொன்டனர் என்று அபு தாபி ஜுடிசியல் டிபார்ட்மென்ட் (Abu Dhabi Judicial Department -(ADJD) ) தெரிவிக்கின்றது .
கடந்த ஆண்டை விட 25 % மதிப்பு (percent) அதிகம்.
இந்திய , யு . எஸ் , பின்லாந்த் , இத்தாலி , ஸ்வீடன் , பெல்ஜியம் , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் , மெக்ஸிகோ , போலந்து , ரோமானியா , எதியோபியா , வியட்நாம், ரஷ்யா , பிரிட்டன், ஸ்பெயின் மேலும் நார்வே சார்ந்தவர் இதில் அடங்குவர்.
பிலிப்பின்ஸ் நாட்டவர்தான் இதில் அதிகம்.
"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13
"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46
ஆனால் இதில் இணைபவர்களை தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் சீரழிக்கும் சமூக நிலை. சமூக ஒற்றுமை.இல்லாத சூழ்நிலை ஒரு பெரிய வேதனை.
(Source ; http://www.twocircles.net/2010sep07/over_550_people_embrace_islam_abu_dhabi.html )
Labels:
Islam,
செய்திகள் NEWS
Saturday, August 21, 2010
3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மெ
From: Faizur Hadi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.
இதை எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.
இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.
நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்
http://lunarcalendar.in/?p=1086
நேரடி தளம்
http://coachexcel.webs.com/downloads.htm
இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.
இதை எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.
இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.
நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்
http://lunarcalendar.in/?p=1086
நேரடி தளம்
http://coachexcel.webs.com/downloads.htm
இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
Friday, August 20, 2010
ரமலான் இரவுத்தொழுகைகளில் முழு குர்ஆனையும் ஓதி முடிக்கவேண்டுமா? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on 19th August 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 21-08-2008
இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா
ஆடியோ : (Download) {MP3 format -Size : 516 KB}
வீடியோ : (Download) {FLV format – Size : 5.14 MB}
http://suvanathendral.com/portal/?p=1555
Wednesday, August 18, 2010
Tuesday, August 17, 2010
அன்புச் செல்வங்களுக்கு...பகுதி-2
அன்புச் செல்வங்களுக்கு...பகுதி-2
நன்றி: ஒற்றுமை இணையதளம் மேலும் நல்ல தகவல் நிறைய உள்ளது இத்தளத்தில், அனைவரும் சென்று பார்த்து பயனடையுங்கள்
http://adirainirubar.blogspot.com/2010/08/2_17.html
சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பொதுஅறிவு
தொகுப்பு: அபுபிலால்
1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?
வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?
ஹபஸா (அபிசீனியா)
3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?
முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.
4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?
1. முஹர்ரம்,
2. ஸபர்,
3. ரபிவுல் அவ்வல்,
4, ரபிவுல் ஆகிர்,
5, ஜமாஅத்துல் அவ்வல்,
6. ஜமாஅத்துல் ஆகிர்,
7. ரஜப்,
8. ஷாஃபான்,
9. ரமழான்,
10. ஷவ்வால்,
11. துல் கஅதா,
12. துல் ஹஜ்.
5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.
6. உம்முல் குர்ஆன் எது?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)
7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?
வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்
8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்
9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?
மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்
10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).
11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
அப்துல்ஹமீது பாகவி
12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?
ஜனாஸா தொழுகை
13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?
எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.
14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?
'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)
15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?
'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)
16. உலகின் இறுதி நபி யார் ?
உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்
17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?
நபி முஸா (அலை)
19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?
நபி ஈஸா (அலை)
20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?
நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).
21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?
ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)
22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?
புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ
23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?
கலிபா உஸ்மான் (ரலி)
24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?
அபு பக்கர் (ரலி) அவர்கள்
25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?
அலி (ரலி) அவர்கள்.
26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?
அன்னை சுமையா (ரலி) அவர்கள்.
27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?
காலித் பின் வலீத்(ரலி)
28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?
காலித் பின் வலீத் (ரலி)
29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?
மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்
30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?
லவ்ஹூல் மஹ்ஃபுள்
31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?
கிராமன் - காத்திபீன்
32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?
10 மடங்கு நன்மை உண்டு.
33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?
உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)
34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்
35. திருக்குர்ஆன் - இறைவேதம்
36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?
ஹிரா குகை
37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?
மக்காவிலுள்ள கஃபா
38. கலிபா என்பவர் யார்?
இஸ்லாமிய ஆட்சியாளர்
39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?
நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்
40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?
புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்
41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?
தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்
42. சுன்னா என்றால் என்ன?
நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.
43. ஸலாத் என்றால் என்ன?
தொழுகை
44. ஸஜ்தா என்றால் என்ன?
தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை
45. சூரா என்றால் என்ன?
குர்ஆனின் பாகம்
46. ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
47. ஸவ்ம் என்றால் என்ன?
நோன்பு
48. வித்ர் என்றால் என்ன?
இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை
49. வுளு என்றால் என்ன?
தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது
50. தக்வா என்றால் என்ன?
இறையச்சம்
51. தவ்பா என்றால் என்ன?
பாவ மன்னிப்பு
52. புர்கான் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.
53. தீன் என்றால் என்ன?
அல்லாஹ்வின் மார்க்கம்
54. தூஆ என்றால் என்ன?
இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது
55. பாங்கு என்றால் என்ன?
தொழுகைக்கான அழைப்பு
நன்றி: ஒற்றுமை இணையதளம் மேலும் நல்ல தகவல் நிறைய உள்ளது இத்தளத்தில், அனைவரும் சென்று பார்த்து பயனடையுங்கள்
http://adirainirubar.blogspot.com/2010/08/2_17.html
அன்புச் செல்வங்களுக்கு...சிறுவர் பகுதி-1
அன்புச் செல்வங்களுக்கு...சிறுவர் பகுதி-1
இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்
தொகுப்பு: அபுபிலால்.
அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.
2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?
என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.
3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?
அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.
4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?
மலக்குகள்
5 . உனது நபியின் பெயர் என்ன?
எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.
6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?
எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.
7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?
'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.
8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?
எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.
9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?
நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.
10 . உன் வேதத்தின் பெயர் என்ன?
என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.
11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?
திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)
12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?
ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.
13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?
நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.
14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்
15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?
மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.
16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?
அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)
17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?
தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.
18. நோன்பு என்றால் என்ன?
இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.
19 . ஜகாத் என்றால் என்ன?
ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)
20 . ஹஜ்; என்றால் என்ன?
செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.
21 . ஈமான் என்றால் என்ன?
அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.
22 . முஸ்லிம் என்றால் யார்?
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.
23. மலக்குமார்கள் என்றால் யார்?
அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.
24 . நபிமார்கள் என்பவர் யார்?
அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.
25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?
ஆதம் நபி (அலை)
26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?
ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).
27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?
திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).
28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?
தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்
ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்
இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்
புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.
29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?
இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.
30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?
குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.
31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?
குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.
32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?
அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.
33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?
நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.
34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?
எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.
35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?
அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.
36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?
அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)
37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?
எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.
38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?
அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.
39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?
நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.
40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.
41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?
இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.
42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?
இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.
43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?
ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.
44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?
இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.
'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)
'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)
45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?
1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.
3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?
1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது
2. மழை பொழியும் நேரம் பற்றியது
3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து
4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து
5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது
(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)
47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்?
நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.
48. நரகம் என்றால் என்ன?
மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.
49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?
இறைவனிடமிருந்து தண்டனை.
50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?
இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.
51. சுவர்க்கம் என்றால் என்ன?
மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.
52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?
இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.
53. ஹலால் என்றால் என்ன?
அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.
54. ஹராம் என்றால் என்ன?
அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.
55. கொலையைவிட கொடிய செயல் எது?
பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)
56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.
57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?
நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)
58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு?
எவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.
(நூல்கள் புகாரி, அபு தாவூத்)
மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)
நன்றி: ஒற்றுமை இணையதளம் மேலும் நல்ல தகவல் நிறைய உள்ளது இத்தளத்தில், அனைவரும் சென்று பார்த்து பயனடையுங்கள்.
3 - Comments:
Subscribe to:
Posts (Atom)







அதிரைநிருபர் குழு says
நம் அதிரை நிருபரில் தொடர் கட்டுரையாக அன்புச் செல்வங்களுக்கு என்ற தலைப்பில் வெளிவரகிறது. அனைவரும் படித்து தங்கள் பிள்ளைகளுக்கும் படித்துக்கொடுங்கள். இக்கட்டுரையாளருக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்
shahulhameed says