Monday, April 24, 2017

சொல்லாதீர்கள்..சொல்லுங்கள்.

நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என்று சொல்லாதீர்கள்...
நாங்களும் செய்கிறோம்
எனச் சொல்லுங்கள்..
எங்களால் தான் முடியும் எனச் சொல்லாதீர்கள்.எங்களாலும் முடியும் எனச் சொல்லுங்கள்..
நான் நினைத்ததால்
தான் நடந்தது எனச் சொல்லாதீர்கள்..நானும் நினைத்தேன் எனச் சொல்லுங்கள்..

Wednesday, April 19, 2017

மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் மோசமான தோல்வியால் கேரள பாஜக அதிர்ச்சி: கடுமையாக உழைத்தும் வாக்கு விகிதம் உயரவில்லை

மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் மோசமான தோல்வியால் கேரள பாஜக அதிர்ச்சி: கடுமையாக உழைத்தும் வாக்கு விகிதம் உயரவில்லை: இத் தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகமது வெற்றி பெற்றார்.

மாட்டு இறைச்சிகேரளாவில் அதிகமானோர் மாட்டு இறைச்சி பிரியர்கள். மாட்டுக் கறிக்கு பாஜகவின் கிடுக்கிப்பிடியே மலப்புரத்தில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதை உணர்ந்ததாலேயே பிரச்சாரத்தின் போது, பாஜக வேட்பாளர் பிரகாஷ், தான் வெற்றி பெற்றால் இங்கு நல்ல மாட்டு இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்றே பேசினார். ஆனால், கேரள மாநில பாஜக தலைவர் சிம்மனம் ராஜசேகரன், `அவர் எந்த சூழ்நிலையில் அப்படி பேசினார் என விளக்கம் கேட்பேன்” என்றார்.அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ‘’மாட்டுக்கறி குறித்து வாயால் சொன்னால் போதாது. அதனை சிம்மனம் ராஜசேகரனே தொடங்கி வைக்க வேண்டும்” என பிரச்சாரத்தில் கிண்டலடித்தார்.இடைத்தேர்தலில் தோல்வி ஒருபுறம், வாக்குகள் எண்ணிக்கை உயராதது மறுபுறம் என அதிர்ந்து போயிருக்கிறது கேரள பாஜக.

நட்புகள் மீது

நட்புகள் மீது
வெறுப்புமில்லை..
உறவுகள் மீது
பகையுமில்லை..
இருக்கும் என்று
அலட்டவுமில்லை..
இல்லை என்று
விரட்டவுமில்லை..

Monday, April 10, 2017

மனிதம்

 மனிதம்
                           ஆலிம் புலவர்
                      எஸ். ஹூஸைன் முஹம்மது
                     ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ, , திண்டுக்கல்

மனிதம் அன்பின் மறுபெயரா
  மனதில் கசியும் வாசனையா
குணத்தால் எழுப்பிடும் கோபுரமா
  குளிர்ந்த பண்பின் கூறுகளா

உனது எனது என்பதெலாம்
  ஓய்ந்தபின் தோன்றும் உயிர்சுகமா
அனைத்து உயிரும் தன்னுயிராய்
  ஆராதிக்கும் தவநிலையா?

Monday, March 13, 2017

சமூக நல்லிணக்க விருது விழா, திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை சார்பாக 11.03.17 அன்று திருநெல்வேலியில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் மூவரில் நானும் ஒருவன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கையால் அவ்விருது வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது. மாலை ஆறரை மணியளவில் மேடையில் அமர்ந்த நான் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நகர முடியாமல் இருந்தேன்! ஒன்பதைரை மணி வாக்கில் ஸ்டாலின் வந்தார்.
என் அருகில் அமர்ந்திருந்த திரு நெல்லை கண்ணன் என்னிடம் பேசிக்க்கொண்டே இருந்தார். இல்லை என்னிடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொன்னதில் நிறைய அரசியல் சமாச்சாரங்கள் இருந்ததால் எனக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் நான் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு கேட்பது மாதிரியே நடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தேன்!

Friday, March 3, 2017

கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண் (உம்மத்)


;இறைவனை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பெண் முஸ்லிம் பெண் எனப்படுகிறாள். அவள் தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை விட்டுக் கொடுக்கக்கலாகாது.

தற்போது நாம் காணும் உலகம் ஆடம்பரங்கள் நிறைந்ததாகவும், கலாச்சாரங்களைச் சீரழிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்ணினம் உயிருடன் புதைக்கப்பட்டும், சிதையில் ஏற்றப்பட்டும் வதைக்கப்பட்டது. 1987 ல் இந்தியாவில் மான்சிங் என்பவர் இறந்துவிட்டதால் பச்சிளம் பெண்ணான ரூப்கன்வர் என்பவர் தன்னுடைய கணவனுடைய சிதையில் உயிருடன் ஏற்றப்பட்டால். அவள் துடிதுடித்து கருகிச் செத்ததை இந்தியமக்கள் நேரிலும், மீடியாக்கள் வாயிலாக செய்தியாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

Tuesday, February 28, 2017

அத்தனையும் உன் அருளே..

எனது சூனியத்தில்
எத்தனை மின்னல் !
எனது இருட்டுக்குள்
எத்தனை வெளிச்சம் !
எனது இல்லாமைக்குள்
எத்தனை கொடைகள் !

LinkWithin

Related Posts with Thumbnails