Wednesday, April 30, 2014

பயணத்தின் போது செய்ய வேண்டிய பிராத்தனை!


அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்

பின்னர்

ஸூப் ஹானல்லதீ சக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க பீ ஸப ரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மாத்தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸபரனா ஹாதா வத்வி அன்னா புக்தஹு, அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு பிஸ் ஸபரி வல்கலீபத்து பில் அஹ்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின்
வக்ஸாயிஸ் ஸபரி வகாபதில் மன்ளரி வஸுயில் முன்கலபி பில் மாலி வல் அஹ்லி.

Sunday, April 27, 2014

வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?

ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ,  இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு – மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது!

இது நல்ல பழக்கம்தானா?

காலையில் எழுந்ததும் face ஐ கழுவுவதற்கு பதில், facebook இல் கழுவி குடிக்கின்றோம். டிஃபன் பட்டர் ஐ அசை போடுவதற்கு முன் ட்விட்டெரை அரைக்கின்றோம்! அரைமணி நேரம் ரோட்டில் ஒடுகின்றோமோ இல்லையோ, அரை நாள் முழுவதும் சாட்டிங்கில் ஒட்டுகின்றோம்.

கண் டியூப்கள் வெடிக்கும் அளவிற்கு யு டியூபைக் கண்டு களிக்கின்றோம். இது நல்ல பழக்கம்தானா? சிந்தித்துப் பார்க்கவும்!  வேலைக்கு உலை வைக்காதா? சில வருடங்களுக்கு முன் வேலை போக மீதி நேரம் கிடைத்தால் சாட்டிங் என்ற நிலை மாறி, இப்போது சாட்டிங் போக மீதி நேரம் கிடைத்தால் வேலை என்ற நிலையல்லவா இருக்கின்றது!

Saturday, April 26, 2014

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில்  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Thursday, April 24, 2014

வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி!

அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

Tuesday, April 22, 2014

சிறுவர்கள் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் அமர்ந்தால் எலும்புகள் பலவீனமடையும்: ஆய்வில் தகவல்!

லண்டன்: சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Saturday, April 19, 2014

பிணத்திற்கு போர்த்தும் ஆடையில் பாக்கெட்டுகள் இல்லை !

ஒரு அருமையான கட்டுரை..
படித்துத்தான் பாருங்களேன் !

அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட்டின் (WARREN BUFFET) ஒரு நாள் வருமானம் 222 கோடி ரூபாய். கழிந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவரும் அவர்தான்.
அவரைப்பற்றி துபாய் தோஷிபா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எம்.ஜே.எம் . முஹம்மது இக்பால் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...
" சமீபத்தில் vaarran buffet ன் நேர்காணலை டிவியில் பார்த்தேன். உயர்தரமான ஒளி பரப்பு அது.
இவர் 2006 ல் செய்த தர்மம் மட்டும் 31 பில்லியன் அமெரிக்க டாலர். எவ்வளவு இந்திய ரூபாய் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ) இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுத்துவிட்டு தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறினார் இவர். அப்படிப்பட்ட மனம் இவருக்கு இருப்பதுதான் இவருக்குள்ள தனி சிறப்பு."

" எப்படி இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுக்க உங்களுக்கு மனம் வந்தது ? உங்கள் மனைவி இதற்கு ஒப்புக் கொண்டார்களா ?" என்று நிருபர்கள் கேட்டதற்கு ...

Friday, April 18, 2014

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

------ ஹாஜியா K. கமருன்னிஸா M.A.,B.T.,
 
நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவருக்கும், அவரவர் மார்க்கத்தை பேணும் உரிமையும், வழிபடும் உரிமையும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கலாசாரத்தை மேம்படுத்தும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று வாக்குரிமையும் உண்டு. இவ்வுரிமையை செம்மையான முறையில் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மணியும் தெரிந்திருக்க வேண்டும்.

Sunday, April 13, 2014

துபாயில் இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற ................

துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார்.


இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரிமியர் மெடிக்கல் கிளினிக்

அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?

 
 ( Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் )   

‘தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்’ எட்மண்ட் பர்க்.

‘உண்மையை அறிந்த பின்னரும், உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்’ மார்டின் லூதர் கிங்.

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன. ஆனால், இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ, மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே, பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல், அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால்தான், நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதை எந்தச் சமூகமும் மறந்து விடக்கூடாது.

தேர்(மோ)தல் பிரச்சாரம்!

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் என்று எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டுக் களப் பிரச்சாரத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு தேர்தலிலும் பல பரிமாணங்களைக் கடந்து வந்திருக்கின்றது. இப்போது, இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது; இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் பிரச்சாரம் நடந்த தேர்தல்கள் இதற்கு முன்பு குறிப்பாகத் தமிழகத் தேர்தல் வரலற்றில் உண்டு. எம்ஜிஆர் பிரச்சாரத்திற்காக நள்ளிரவு வரை விழித்திருந்து மக்கள் அவரது உரையினைக் கேட்க தவமிருந்துள்ளனர்.

Sunday, April 6, 2014

புத்தி

“அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார் மன்னர் அல்-அஷ்ரஃப். அப்பொழுது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்தது. ஆனால் நோயைவிடக் கடுமையான வேதனை ஒன்று இருந்தது. நிம்மதியையும் தூக்கத்தையும் அறவே இழக்கச் செய்யும் பிரச்சினை. அது கிழக்கிலிருந்து புயலாய் வந்து கொண்டிருந்தது. இனத்தையே அழித்துவிடும் அபாயப் புயல்.


ஹிஜ்ரீ ஆறாம் ஏழாம் நூற்றாண்டு முஸ்லிம்களுக்கு பெரும் சோதனையாய் அமைந்திருந்த ஒரு காலகட்டம். ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்த சிலுவை யுத்தங்கள் இஸ்லாமிய அரசுகளைப் படு பலவீனமாக ஆக்கியிருந்தன. ஸிரியாவும் சுற்றியுள்ள பகுதிகளும் பல மாநிலங்களாகத் துண்டாடப்பட்டு, சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்டு, அங்கெல்லாம் அவர்களது ஆட்சி, அரசாங்கம். முஸ்லிம்கள் பறிகொடுத்த பகுதிகள் சிலுவைப் படையினர் வசம் என்ற அவலம் போதாதென்று, முஸ்லிம் மன்னர்கள் சிலர் தத்தமது ராஜாங்கத்தைப் பாதுகாக்கவும் மற்ற முஸ்லிம் மன்னர்களிடமிருந்து தங்களை மேம்படுத்தி வலுவாக்கிக் கொள்ளவும் முஸ்லிம்களின் எதிரிகளாகிய சிலுவைப் படையினரிடமே கூட்டுச் சேர்ந்திருந்த கொடூரமும் நிகழ்ந்தது. அந்தக் கூட்டணிக்காகத் தங்களது நிலப்பரப்புகள் சிலவற்றை எவ்வித வெட்கமோ, தயக்கமோ இன்றி சிலுவைப் படையினருக்கு அள்ளித்தந்திருந்தது அதைவிடக் கொடுமை.

Thursday, April 3, 2014

தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்)

  ஸ்பெயின் நாட்டை ஆண்ட விசிகோத் மன்னர் ரொடெரிக் கொடுங்கோலராக இருந்தார். இவரால் அடக்கி ஒடுக்கப்பட்ட செர்புகளும், யூதர்களும் உமய்யா கிலாபத்தின்   வடஆப்பிரிக்க ஆளுநரானமூசா இப்னு  நுசைரின்உதவியை நாடினர். வீரமிக்க தளபதியான தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) அவர்கள் தலைமையில் சென்ற   12,௦௦௦இஸ்லாமிய ராணுவ வீரர்களை மன்னர் ரோடிரிகின் 90,௦௦௦கிறிஸ்தவ படையினர் எதிர்கொண்டனர். தாங்கள் பயணித்தகப்பல்கள் அனைத்தயும்தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) அவர்கள்எரித்துவிட்டு ராணுவ வீரர்கள் மத்தியில்எழுச்சிமிக்க உரையை ஆற்றினார். தங்கள் முன்பு  மாபெரும் எதிரிகளின் அணிவகுப்பு, பின்புறம் திரும்பி செல்ல முடியாமல்கடல் என்ற இக்கட்டான சூழலைக்கண்டுபதறிய ராணுவ வீரர்களை, வெற்றி அல்லது வீரமரணம் என்ற நற்செய்தியைக்கொண்டு தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) உற்சாகப்படுத்தினார்.ஹிஜ்ரி 92 ரமலான் மாதத்தில்நடைபெற்ற இந்த போரில்முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியை பெற்றனர்.ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியைஇஸ்லாமிய அரசுடன் இணைத்தனர். இது அப்பகுதிகளின் (அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று. இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.

Tuesday, April 1, 2014

நான் இஸ்லாமியனாக மாறிய பிறகு.....

நான் இஸ்லாமியனாக மாறிய பிறகு தாய் தந்தயர்கும் முன்னோர்களுக்கும் பிறந்த சாதி சமயத்திற்கும் துரோகம் செய்து விட்டதாக ஏகப்பட்ட குற்றசாட்டுகளும் நாசமாய் போய் விடுவேன் பிச்சை தான் எடுப்பேன் என்ற சாபங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது அதுவும் எனக்கு பிரியமான உறவுகளின் நண்பர்களின் நாவுகளில் இருந்து..

தாய் தந்தயர்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் பல சமயம் நான் தவறி இருக்கலாம், அவை எல்லாம் தற்காலிகமே.. அவர்களின் மீதான மரியாதையும் அவர்களின் கண்ணியமாக பேசும் முறையும் நான் இஸ்லாமியனாக ஆனா பிறகுதான் எனக்கு தோன்றியது.. அவர்களுக்கு எந்த துரோகமும் செய்பவனாக எனக்கு தெரியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails