Tuesday, August 31, 2010

முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா

தம்மை ஒரு முஸ்லிமாகவே ஐந்தில் ஒரு அமெரிக்கர்கள் கருதினாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன்  ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு நிறுவனமொன்று நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பில், ஒபாமாவை ஒரு முஸ்லிம் என்றே ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் கருதுவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், தொலைக்காட்சி ஓடை ஒன்றில்   பேட்டியளித்த ஒபாமாவிடம் இது குறித்து கேட்டபோது, இந்த கருத்துக்கணிப்பு குறித்து தமக்கு சிறிதும் கவலை இல்லை என்றும், உண்மைகள் தான் உண்மைகளாக இருக்கும் என்றும் பதிலளித்தார். எவ்வளவு பெரிய உண்மை!


தமது மதம் குறித்துள்ள குழப்பத்திற்கு ஊடகங்களில் தவறாக பரப்பப்படும் செய்திகளே காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
 
Source :http://www.inneram.com/2010083110396/obama-dismisses-rumours-on-his-faith

அல்-குர்ஆன் டிஜிட்டல் பிளாஷ் -----المصحف الرقمي الفلاشي


"ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும்."

-திருக்குர்ஆன் 2:185

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

திருக்குர்ஆன் 2:2


(நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)


அல்-குர்ஆன்  டிஜிட்டல்  பிளாஷ் 

அவசியம் பார்க்க வேண்டும் -.பார்த்து ஓதி பயன் அடைய வேண்டும் .--காண  இங்கு  கிளிக் : செய்யவும்المصحف الرقمي الفلاشي Monday, August 30, 2010

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி

புனித ரமலானை முன்னிட்டு "நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை" சங்கமானது அறிவுபோட்டியை ஆரம்பித்துள்ளது. நமதூர் மக்களும் இன்ன இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் தம்முடைய இஸ்லாமிய அறிவாற்றலை மென்மேலும் வளத்துக்கொள்ள வேண்டி இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் விதிமுறைகள், கேள்விகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. விடை அறிந்தவர்கள் தமது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவித்து அவர்கள் வெற்றிபெற உதவலாம். மேலும் இச்செய்தியை தமது நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். முதல் முயறிசியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போட்டி வெற்றி பெறவும், இதுபோன்ற இன்னும் சிறப்பான அறிவுச்சார்ந்த போட்டிகள் எதிர்காலத்திலும் நடத்துவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்யவும். விதிமுறைகளையும், கேள்விகளையும் டவுன்லோட் செய்ய.......
Saturday, August 28, 2010

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]

மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
இறைவனின் சன்னிதானம் அடையப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர்
[ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து நல்லருள் பெறும் மாதம்
நன்மை ஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனமுருகி
கேட்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
அருமையான நோன்பு

நீக்கும் இது நீக்கும்
மனித உடலின்- நோயினை நீக்கும்

போக்கும் இது போக்கும்
மனித மனதின்- மாசுவைப் போக்கும்

கொடுக்கும் இது கொடுக்கும்
புதிய சக்தியை இதுகொடுக்கும்

செழிக்கும் அருள் செழிக்கும்
மனித வாழ்வில் அருள் செழிக்கும்

புனித மாதத்தில்;
தீமைகளைவிட்டு விலகியிருங்கள்

நன்மைகளின் பக்கம் திரும்பியிருங்கள்
இறையச்சம்கொண்டு இறையருளை பெற்றிடுங்கள்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மிக்க அன்புடன்  நன்றி

Friday, August 27, 2010

வள்ளல் சீதக்காதி

 
வள்ளல் சீதக்காதி
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர்பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும்( )அழைக்கப்பெறும்.

வரலாறு

இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'சய்யிது அகமது நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம் மிக்கவர்கள்; ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். சீதக்காதியின் தாயைப்பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்தநாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர்

இவர் பிறந்து வளர்ந்த ஊர் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றுள் கீழக்கரை என்பதே சீதக்காதியின் ஊர் என்பர் ஆய்வாளர்[1] கீழக்கரைக்குத் தென்காயல் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.அந்த நகருக்குப் பௌத்திரமாணிக்கம், அனுத்தொகைமங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் உண்டு என்பர் ஆய்வாளர்.

காலம்

இவர் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர். சீதக்காதி ஒரு தமிழர். இசுலாம் சமயத்தவர்; புகழ்பெற்ற வள்ளல். இந்து-முசுலீம் என்று வேற்றுமை பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதி ஆதரித்தவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றிய பெருமகனார். சீதக்காதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இசுலாமியப் பெரியார் 'சதக்கத்துல்லா வலி' ஆவார்; இவர் இசுலாமியப் பேரறிஞர்; மார்க்கக் கல்வியைப் பரவச்செய்தவர். இவர் சீதக்காதியின் நண்பரும் குருவும் ஆவார். இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன்சேதுபதி இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார். கிழவன் சேதுபதி அவர்களின் இயற்பெயர் 'விசய ரகுநாதத் தேவர்' என்பதாகும்; இவர் 1792 ஆம் ஆண்டில் மதுரையின் கீழ் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தனியாட்சி நடத்தத் தொடங்கினார். அப்பொழுது பாதுகாப்பிற்காக இராமநாதபுரக் கோட்டையும் அரண்மனையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டப்பட்டன. அதற்குப் பொன்னும்,பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி என்பர் 
கிழவன் சேதுபதி, சீதக்காதியை உரிமைபாராட்டி அவருக்கு 'விசயரகுநாதப் பெரியதம்பி' எனத் தன்பெயரைச்சூட்டி மகிழ்ந்தார்.


 செய்தக்காதி(சீதக்காதி)நொண்டிநாடகத்தில்

இந்நிலம்புகழ்ப்ர தாபன் விசய/ இரகுநாத பெரிய தம்பி மகீபன், கன்னாவு தாரனையன் புகழ்பாடி நொண்டி/ களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.(1)
-எனச் சீதக்காதி, 'விசயஇரகுநாத பெரியதம்பி' எனப் புகழப்படுவதைக் காணலாம்.
அக்காலத்தே டில்லியை ஆண்ட முகலாயப்பேரரசர் அவுரங்கசீப் சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர்.

 வங்காளக் கலீபா

மார்க்கப்பற்று மிக்க அறிஞரான சதக்கத்துல்லா வலி அவர்களின் சிறப்பினை அறிந்த அவுரங்கசீப் அவரை டில்லிக்கு வரும்படியும்,தென்னிந்தியாவின் கலீபாவாகப் பதவி ஏற்கும்படியும், அவரிடம் ஒப்புதல் கேட்டு மடல் எழுதினார். ஆனால் வலி அவர்கள் அதனை ஏற்கவில்லை; மாறாக, அவுரங்கசீப்புக்கு எழுதியமடலில் சீதக்காதிபற்றிக் குறிப்பிட்டு அவரின் சிறப்புக்களை எடுத்துக் கூறியிருந்தார். முகலாயமன்னர் மகிழ்ந்து சீதக்காதியை வங்காளத்தின் கலீபாவாக நியமித்தார். சீதக்காதியும் அப்பதவியை ஏற்றுத் தமிழகத்திற்குப் பெருமைசேர்த்தார். பின்சிறிது காலத்திற்குப்பின் தாய்நாடு திரும்பினார். மன்னருக்குச் 'சுண்டைக்காய்ப் பருமனுள்ள முத்துக்களால்ஆன செபமாலை('தஸ்பீஹ்மணி')ஒன்றை அனுப்பினார்; ஆண்டவன் தொழுகையில்பெரும் ஆர்வம்மிக்க அவுரங்கசீப் அதனை மனமகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.


  செல்வவளம்

இவர் பரம்பரையாகப் பெரும் செல்வமிக்க வணிகக்குடும்பத்தில் தோன்றியவர்; அன்றியும் இவரே கப்பல் வணிகம் செய்து பெரும்பொருளீட்டினார்.அக்காலத்தில் இங்கு வணிகம் செய்யவந்த ஆங்கிலக் கும்பெனி யாருக்குச் சீதக்காதியார் எழுதிய கடிதக்குறிப்புக்கள் உண்டு. அதில் "கும்பெனியாருக்கு எவ்வளவு மிளகு தேவையாயிருந்தாலும்தம்மால் அனுப்பமுடியும்" என்று அவர் எழுதிய கடிதக்குறிப்புஉண்டு.எனவே,அக்கால மிளகுவணிகம் முழுவதும் இவர்மூலமாகவே நடந்து வந்தது என்பர் ஆய்வறிஞர்.எனவே வணிகத்தின் மூலம் வானளாவிய செல்வத்தை ஈட்டினார்.ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் வழங்கிச் "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்.

  இலக்கியங்கள்

பெரும்கொடைவள்ளலான இவர்மீது பல சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் எழுந்துள்ளன. அவை:
  • 1.செய்தக்காதி நொண்டிநாடகம்.
  • 2.செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து- ஆசிரியர் உமறு கத்தாப் புலவர்.
  • 3.சீதக்காதி பேரில் தனிப்பாடல்கள்.(படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர், தாசி முதலியோர் பாடியவை).


 வள்ளல்தன்மை

நபிகள்நாயக மான்மியத்தைச் 'சீறாப்புராணம்' மூலமாக, உலகிற்குப் பரப்பப் பொருள்வளம் மிக்க சீதக்காதி பெரிதும் உதவினார். ஆனால் சீறாப்புராணத்தில் இவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அபுல்காசிம் என்பவர் பற்றிய குறிப்புண்டு; மார்க்கப் பேரறிஞர் சதக்கத்துல்லா வலி பற்றிய குறிப்புண்டு; வள்ளல் சீதக்காதியை ஏன் அவர் சுட்டவில்லை என்பது குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்கள் எழுந்ததுண்டு. 'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.

 பஞ்சகாலத்தில்

அவர்காலத்தில் மிகப்பெரும் பஞ்சமொன்று வந்தது. அதில் ஏராளமானோர் உண்ணஉணவின்றி மடிந்தனர். விலைவாசி உச்சக்கட்டத்தினை அடைந்தது. அத்தகைய பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்கு எவவிதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை,

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே
-என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சீதக்காதி இறந்தபின் 'படிக்காசுப்புலவர்' பாடிய பாடல் படிப்போர் உள்ளத்தினை உருக்குவதாம்.
இவரின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் தமிழகத்தில் கீழக்கரையில் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற சீதக்காதி வள்ளல் மிகப்பெரும் புகழ்வாழ்வு வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுள்ளார். அவரின் மதவேறுபாடற்ற மனிதநேயம் இன்றைய உலகில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய ஒன்று; மனிதநேயத்துடன் பிறருக்கு உதவியவாழ்வு அவர்வாழ்வு. வாழ்க சீதக்காதிவள்ளல்!

  சீதக்காதி வள்ளல்மேல் பாடிய தனிப்பாடல்கள்

  • படிக்காசுப்புலவர் பாடியவை


 பாடல்: 1.

நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்/
பூசிக்கு நின்கைப் பொருளொன்றுமே, மற்றைப் புல்லர் பொருள்/
வேசிக்கும், சந்து நடப்பார்க்கும், வேசிக்கு வேலைசெய்யும்/
தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே.


 பாடல்: 2.

ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/
ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/
மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.


 பாடல்: 3.

கஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன எட்டிமரம்/
காயாதிருந்தென்ன, காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்/
போய்,யாசகம்என உரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்/
ஓயாமல் ஈபவன், மால்சீதக் காதி ஒருவனுமே.

 பாடல்: 4.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே/
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில் பன்னூல்/
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும்/
ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமுமே.


 குறிப்புக்கள்

  1. ↑ முகம்மது ஹுசைன் நயினார்,சீதக்காதி வரலாறு,மதராஸ்:சுல்தானா அப்துல்லாஹ் வெளியீடு,1953.
  2. ↑ ஆய்வறிஞர்(2.மு.உ.நயினார்,1953.)
Source : http://www.kilakarainadutheru.com/sethakathi.php

Thursday, August 26, 2010

புனித ரமளான் நோன்பினைப் பற்றி - துபாய் டிவி சேனல் . துபாய் .

புனித ரமளான் நோன்பினைப் பற்றி -

பேட்டி -    துபாய் டிவி  சேனல் .  துபாய் . 

எபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய் மீடியா -

புனித ரமளான் நோன்பினை  தென் இந்திய முஸ்லிம்கள்  எவ்விதம்  

நோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம்   

இதனைக்  காண  இங்கு  கிளிக் : செய்யவும் http://www.dubaimedia.ae/Media/view/77765Ramadan in Dubai is a unique and different experience due to the fact that people from different parts of the world live and bring their own cultural heritage to this cosmopolitan city.

Wednesday, August 25, 2010

ஈரான் தாக்கப்பட்டால் உலக அளவில் பதிலடி! அகமதிநிஜாத்


தங்கள் நாடு தாக்கப்பட்டால் அதற்கான பதிலடி உலக அளவில் இருக்கும் என்று ஈரான் அதிபர் அகமதிநிஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கத்தார் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணுசக்தி பிரச்சனையில் ஈரான் தாக்கப்பட்டால், அதற்கான எங்களது பதிலடி உலக அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஈரான் தாக்கப்பட்டால், அதற்காக பதிலடி கொடுக்க எங்களுக்கு இருக்கும் வழிமுறைகளுக்கு எல்லையே இல்லை. உலக அளவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறோம். எங்கள் திட்டம் எல்லாம் மின்சார உற்பத்திக்காக அணுசக்தியை பயன்படுத்துவது தான் என்று அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.inneram.com/2010082410269/if-iran-attacked-the-counter-attack-will-be-severe

Tuesday, August 24, 2010

ரமளான் மாதத்தை அடைந்தும்...

மீண்டும் ஒரு ரமளான்: பிறை15
வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

எல்லா நற்செயலுக்கும் கூலி தருபவன் அல்லாஹ் என்றாலும் நோன்பைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது ''நோன்பு எனக்கு உரியது'' என இறைவன் சிலாகித்துக் கூறுகிறான்.
"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!" என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்: புகாரி, 1904)
மனிதன் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனுக்கு என்ன தேவை உள்ளது? ஒன்றுமில்லை! ஆயினும் நோன்புக்கான கூலியை நானே  கொடுப்பேன் என நோன்பைச் சிறப்பித்து இறைவன் கூறுவதைச் சிந்தித்தால் பிற வணக்கங்களிலிருந்து நோன்பு எனும் இபாதத்தில் தனிச் சிறப்பு உள்ளதை விளங்கலாம்.
பசிப்பதும் தாகிப்பதும் வெறும் உடல் அசைவுத் தொடர்பான விஷயமல்ல. உணர்வைக் கட்டுப்படுத்தும் செயலாகும். நோன்பு மாதம் அல்லாத மற்ற நாள்களில் மனம் விரும்பும் ருசியான உணவைத் தேடிச்சென்றேனும் பெற்று சாப்பிட்டு நப்ஸை திருப்தியடைய வைத்துவிடுவோம். ஆனால் ரமளான் வந்துவிட்டால் உண்ணக்கூடாத நேரத்தில் ருசியான - விருப்பமான உணவை மனம் விரும்பினாலும் அதற்குத் தடைவிதித்து ஒரு கட்டப்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஸஹ்ர் நேர உணவில் விரும்பும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாங்கொலி கேட்டுவிட்டால் அது எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும் அத்தோடு உண்பது நிறுத்தப்பட்டுவிடும். அதன் பின்னரும் பிறர் பார்க்காத சந்தர்பங்களில் தனிமையில் பசித்தும், தாகித்தும் இருந்து உணவு உண்ணும் வாய்ப்பு இருந்தாலும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று இறைவனுக்காகவே வைகறைப் பொழுதிலிருந்து பகல் நேரம் முழுவதும் சூரியன் மறையத் துவங்கும் நேரம்வரை உண்ணா நோன்புத் தொடர்கிறது.
ரமளான் மாதத்தில் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் வெறும் பட்டினிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கமல்லாமல். இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற அடியாரின் நம்பிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டு, அல்லாஹ்வுக்கும், ரஸுலல்லாஹ்வுக்கும் கட்டுப்படும் பண்பு மேலோங்குகிறது. இப்படி நோன்பின் மாண்பைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ரமளான் மாதத்தை அடைந்தும்...
"எவர் ஒருவர் ரமளான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமளானின் துஆக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது: நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது "ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் "ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் "ஆமீன்" என்றனர்.
"இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுற்றோம்" என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும் என்றார், நான் ஆமீன் என்றேன். உங்களைப் பற்றி நினைவு கூரப்படும்போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும் என்றார், நான் ஆமீன் என்றேன். தனது பெற்றோர் இருவரை அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்குச் சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார், நான் ஆமீன் என்றேன்" என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 | பிறை 14

Source: http://www.satyamargam.com/1310?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Satyamargam+%28SatyaMargam.com%29

ஓ இளைஞனே ! கவிஞர் இரா.இரவி

ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை
விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்
கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்
சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்
எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்
மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்
சுறுசுறுப்பாக மாறிப்பார்

http://eraeravi.wordpress.com/ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!

நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.

விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள "புனித பள்ளிகள் துறை அமைச்சகம்", மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.

மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.

ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.

12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.

நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.
http://www.inneram.com/2010082410263/worlds-biggest-ifthar-programme-at-a-cost-of-25-million-rilyas-per-day

நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள்

                  நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள்
ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை  அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.
 
 
1.1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்.
வ.எ நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் (ராவிகள்) அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை இறந்த ஆண்டு ஹி
01 அபூ ஹூரைரா (ரலி) 5374 57
02 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) 2630 73
03 அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2286 93
04 ஆயி்ஷா ஸித்தீக்கா (ரலி) 2210 57
05 அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) 1660 68
06 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 1540 74
07 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 1170 74
 
 
2.1000 ஹதீஸ்களுக்கும் குறைவாக அறிவித்தவர்கள்
 
08 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி) 848 32
09 அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ்(ரலி) 700 43
10 உமர் இப்னுல் கத்தாப்(ரலி) 537 21
11 அலீ இப்னு அபீதாலிப் (ரலி, 536 40
12 அபூதர்ருல் கிஃபாரி(ரலி) 281 32
13 இப்னு அபீ வக்காஸ்(ரலி) 270 55
14 முஆது இப்னு ஜபல்(ரலி) 200 18
15 அபூதர்தாஃ(ரலி) 179 32
16 உத்மான் இப்னு அஃப்ஃபான்(ரலி) 147 35
17 அபூபக்கர்(ரலி) 142 13
 
3.தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
 
18 ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்)
094
19 நாஃபிஃ மௌலா இப்னு உமர்(ரஹ்)
117
20 முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்)
110
21 இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்)
123
22 ஸயீது இப்னு ஜூபைர்(ரஹ்)
095
23 இமாம் அபூ ஹனீபா(ரஹ்)
80-150
4.தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
 
24 இமாம் மாலிக் இப்னு அனஸ்(ரஹ்)
93-179
25 இமாம் ஷாபியீ(ரஹ்)
150-204
26 இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ(ரஹ்)
161
27 இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்)
198
28 இமாம் அல்லைத் இப்னு ஸஃது(ரஹ்)
94-175
 
5.பெண்களில்
 
 
பெருமானார்(ஸல) அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
29 அன்னை ஆயிஷா(ரலி) 2210
30 அன்னை உம்மு ஸலமா(ரலி) 387
31 அன்னை உம்மு ஹபீபா(ரலி) 065
32 அன்னை ஹஃப்ஸா(ரலி) 060
33 அன்னை மைமூனா(ரலி) 046
34 அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) 011
35 அன்னை ஸஃபிய்யா(ரலி) 010
36 அன்னை ஸவ்தா(ரலி) 005
 
6. ஏனையத் தோழியர்
 
37 அஸ்மா பின்த் யஸீத்(ரலி) 81
38 அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) 58
39 பாத்திமா பின்த் அஸத்(ரலி) 46
40 உம்மு ஹானி(ரலி) 46
41 உம்மு ஃபள்லு(ரலி) 30
42 அர்ருபை பின்த் முஅவ்வத்(ரலி) 21
43 கவ்லா பின்த் ஹகீம்(ரலி) 15
44 உம்மு சலைம்(ரலி) 14
45 புஸ்ரா பின்த் ஸஃப்வான்(ரலி) 11
46 ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) 07
47 உம்முல் அஃலா அல்- அன்சாரிய்யா(ரல) 06
 
 
பின்வருபவர்கள் அறிவித்த நபிமொழிகள் எத்தனை என்பதற்குத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
 
48 உம்முல் ஹகம் பின்த் அபீ சுஃப்யான் (ரலி)

49 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி)

50 உம்மு குல்தூம் பின்த் அபீபக்ர்(ரலி)

51 உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ்(ரலி)

52 ஹிந்த் பினத் உக்பா இன்னு ரபீஆ(ரலி)

53 உமைமா பினத் ரக்கீகா(ரலி)

54 பாத்திமா பின்த் ஹ{ஸைன் (ரஹ்)

 
இன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.
பின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்ப தையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக் கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்).
 
 
இமாம் தேர்வு செய்த ஹதீஸ்கள்
 

வ.எ இமாம்கள் ஹதீஸ் நூல்கள் வாழ்ந்த ஆணடு திரட்டியவை தேர்ந்தவை)
01 இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரஹ்) ஸஹீஹூல் புஹாரி 194-256 600,000 7563
02 முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) ஸஹீஹ் முஸ்லிம் 204-261 300,000 7563
03 இமாம் அபூ தாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ ஸூனனு அபீதாவூது 202-275 500,000 5274
04 இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரஹ்) ஜாமிவுத் திர்மிதீ 200-279
3956
05 இமாம் அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ ஸூனனுந் நஸாயீ 215-303
5761
06 இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசி இப்னு மாஜா இப்னு மாஜா 209-273
4341
07 ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள்


34,458
08
09 இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது 164-241 1000000 27,999
 
 
அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.
இவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகி , ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.
through mail from Faizur  Hadiஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு !

ஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு !

 அன்புள்ள கொள்கை சகோதர, சகோதரிகளுக்கு !

JAQH TRP பிரான்ச் இன்          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

இக்கடிதம் தாங்களை பூரண உடல் நலத்துடனும் , முழு சந்தோசத்துடனும் சந்திக்கட்டுமாக !

ஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு சவூதி அரேபியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிய வாய்ப்பு 60 - 70 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் உண்டு. இந்த வாய்ப்பு பொருளாதாரக் பற்றாக் குறையினால் தங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராஹ் கடமையினை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு மட்டுமே.

இதை அனைத்து ஏழை எளிய மக்களும் பயன்படுத்தி மறுமையில் வெற்றியடைய உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள் (இந்த செய்தியை கொண்டு போய் சேருங்கள்)

இந்த அறிய வாய்ப்பினை MUHAMMADH NATION GROUP, ஜித்தாஹ் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

தொடர்பு எண் : 00966 – 2691 9999

மற்றவை பின்பு,

என்றும் மக்கள் சேவையில்,

JAQH TRP பிரான்ச்
by  mail fromfarook ali

Monday, August 23, 2010

உயிர் வலிக்க வலிக்க ......

/>

அல்லா 'ஸ் மிர்ரக்கில்ஸ். எ மிர்ரக்கில் இஸ்லாம் இன் நேபால்.3gp -Allah's Mircales. A miracle of Islam in Nepal.3gpஇந்த செயலின் பின்னணியில் யார்!

இந்த நிகழ்வு நேபாளத்தில் நடந்தது. இதை நடத்தியது யார்!

நேபால உள்ளூர் முஸ்லிம்கலுக்கு மினாரா கலசம் (டோம்) அமைக்க கனரக இயந்திரம் தேவை. உபயோகபடுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த கலசம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டது. இந்த செயலின் பின்னணியில் யார்!

Sunday, August 22, 2010

வீணாகும் நேரமும் உணவும்

வீணாக்க வேண்டாம்
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11
இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.
நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் "இக்லாஸ்" எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)
நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)
நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
வீணாக்க வேண்டாம்
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11
இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.
நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் "இக்லாஸ்" எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)
நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)
நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

பள்ளிவாசல் இமாம்களுக்கு சம்பளம்: லாலு வலியுறுத்தல்


ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் 17 வருடங்களுக்கு முந்தைய உச்சநீதிமன்றம் ஆணையான அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த கூறியுள்ளன. காங்கிரஸ் சிறுபான்மையினரின் வோட்டு வங்கிக்காக மட்டுமே அவர்களிடம் கரிசனம் காட்டுகிறது. உணமையில் அவர்கள் மேல் அக்கறை இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் நாடாளும்னரத்தின் வெளியே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜீரோ நேரத்தில் இமாம்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தியது. உச்சநீதிமன்ற அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதையும், நிதிபெறாத பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதையும் 6 மாதங்களுக்குள் நடைபடுத்த வேண்டும் என்று 1993ல் தீரிப்பளித்துள்ளது என்பதை லாலு பிராசாத் யாதவ் தெரிவித்தார். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை நடைமுறை படுத்துவோம் என அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிஜேபியினருக்கு பதில் அளித்த அவர் "வேண்டுமென்றால் நீங்களும் சாதுகளுக்கும், சன்யாசிகளுக்கும் சம்பளம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகி கொள்ளாலாம்" எனறார் அவர். அரசு இதை சீக்கிரம் நடைமுறை படுத்த்வில்லை என்றால் போராட்டம் செய்வோம் என்றும் கூறினார் அவர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்த்யோபத்யே இதற்கு தாங்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர் " மேற்கு வங்காளத்தில் இமாம்கள் மோசமான நிலையில் உள்ளார்கள் என்றும் மேலும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து உள்ளனர் என்றும் கூறினார்.
http://www.inneram.com/2010082210201/2010-08-22-06-20-00

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான                         நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்ப‌ உட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாக‌ ஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையான‌ வேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்கள். ( அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ந‌ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

--மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source : http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_22.html

Saturday, August 21, 2010

3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மெ

From:    Faizur Hadi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை  மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.

இதை  எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும். 

இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்

http://lunarcalendar.in/?p=1086

நேரடி தளம்
http://coachexcel.webs.com/downloads.htm

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)  
                 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

- K.L.M இப்றாஹீம் மதனி

Courtesy: Readislam.net

இந்த அருமையான கட்டுரையை தொகுத்தளித்த கட்டுரையாளருக்காக துஆ செய்வோமாக.
 

LinkWithin

Related Posts with Thumbnails