Sunday, August 1, 2010

பிளாக் பெர்ரி போன்களுக்கு சவுதி, அமீரகத்திலும் தடை ?

இனியவன் 
 
துபாய் : பாதுகாப்பு காரணங்கள் கருதி ஏற்கனவே இந்தியாவில் பிளாக் பெர்ரி போன்களை தடை செய்ய இந்தியா பரீசிலித்து வருவதை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம். தற்போது அதே காரணங்களை கூறி வரும் அக்டோபரில் இருந்து பிளாக்பெர்ரி போன்களை தடை செய்ய போவதாக ஐக்கிய அரபு அமீரகமும் அதனை தொடர்ந்து சவூதி அரேபியாவும் கூறியுள்ளது.
இது பற்றி கருத்து கூறிய ஐக்கிய அரபு அமீரக தொலை தொடர்பு அதிகாரி பிளாக்பெர்ரியின் மின்னஞ்சல், அவுட்லுக் மற்றும் பிற வசதிகள் அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடியாத படி கனடாவில் உள்ள சர்வரோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாய் உள்ளது என்று கூறினார்.
இது இறுதி முடிவு என்று கூறிய அவ்வதிகாரி பிளாக்பெர்ரி தங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுபட்டால் அவை அனுமதிக்கப்படும் என்றும் அதன் போட்டியாளர்களான் நோக்கியா, ஸாம்ஸங் போன்களில் எப்பிரச்னையும் இல்லை என்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எடிஸலாட், தூ இரண்டும் இம்முடிவை ஆதரிப்பதாகவும் சொன்னார்.
அமீரக முடிவு பற்றிய செய்தி வெளியான சிறிது நேரத்தில் சவூதி அரசாங்கமும் பிளாக்பெர்ரியை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருவதாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாதையை பிற வளைகுடா அரசுகளும் பின்பற்றினால் பிளாக்பெர்ரிக்கு பெரும் பிரச்னை ஏற்படும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன
Source : http://www.inneram.com/201008019707/saudi-uae-to-ban-black-berry-phones

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails