Tuesday, May 27, 2014

கற்றது மற

அமெரிக்கர் ஹிதாயத் சொன்ன ஒரு வார்த்தை அழுத்தமான அர்த்தத்துடன் மனத்தினுள் பாய்ந்தது. ஏதோ அப்பொழுதுதான் முதன்முதலாக அந்த

வார்த்தையைக் கேட்பதுபோல் ஓர் உணர்ச்சி. ““ஐ அம் அன்லெர்னிங் வாட் ஐ லேர்ண்ட்”” என்ற வாக்கியத்தின் இடையில் சிக்கிக் கொண்டிருந்தது unlearn என்ற அந்த வார்த்தை.

இந்தோனிஷியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணைத் திருமணம் புரிந்துள்ள ஹிதாயத் வெள்ளைக்கார அமெரிக்கர். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து அதன் கோட்பாடுகளில் தீவிரமாக இருந்தவருக்கு எங்கிருந்தோ அந்த மாற்றம் வந்தடைந்து, ஒரு தருணத்தில் இஸ்லாமியராகிவிட்டார். அப்படியானவரை முதன் முதலாகச் சந்திக்கும்போது ஆர்வமாய் எழும் வழக்கமான கேள்வி எழுந்தது.

“எப்படி?”

Saturday, May 24, 2014

தாவூத் நபி செய்த தவறு


தாவூத் நபியவர்கள் செய்த ஒரு தவறை இறைவன் சுட்டிக்காட்டிய போது அவர் திருந்திக் கொண்டார் என்ற செய்தியை மட்டும் தான் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். படிப்பினை பெறுவதற்கு இதுவே போதுமானதாகும்.

தாவூத் நபியவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது பற்றி திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. ஆயினும், அவர்கள் எத்தகைய தவறு செய்தார்கள் என்பதை இவ்வசனங்களே நமக்கு உணர்த்துகின்றன.

இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வருகிறார்கள். "இவருக்கு 99 ஆடுகள் உள்ளன. என்னிடம் ஒரு ஆடு தான் உள்ளது. அந்த ஒன்றையும் இவர் எடுத்துக் கொள்ளப்பார்க்கிறார்'' என்று அவர்களில் ஒருவர் தாவூத் நபியிடம் முறையிடுகிறார்.

அரசுப் பள்ளி மாணவி சாதனை!

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹீரா பானுவுக்கு இதய மருத்துவ சிகிச்சை நிபுணராகி சேவை செய்வதே விருப்பம் என்றார்.

பத்தமடை,  பள்ளிவாசல் கீழ முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஹீரா பானு. எஸ்எஸ்எல்சி 2014 பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், இதர ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் என மொத்தம் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் முதலிட சாதனையில் ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Monday, May 19, 2014

" தம்பி கொஞ்சம் அடங்கி நட "

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ...
உமையா ஆளுநர்.
அவனிடம் படைத்தளபதியா இருந்த ஒருவன் அழகான விலை உயர்ந்த ஆடை அணிந்து வீதியில் நடந்து சென்றான்.
நடையில் திமிர்
பேச்சில் திமிர்
பார்வையில் திமிர்
எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்ற
எண்ணத் திமிர் !

Sunday, May 18, 2014

காயிதேமில்லத்திற்குப் பிற தத்துவங்களைப் பற்றிய பரந்த பார்வை இருந்தது;

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.

பெரியாரின் வலி மிகுந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை, இன்றைய முஸ்லிம்களின் அவல நிலையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

காயிதேமில்லத்திற்கு மொழி உணர்வு இருந்தது; அதனால்தான் 1948 இல் அவர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தபோது இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என வாதம் புரிந்தார்.

காயிதேமில்லத்திற்கு இன உணர்வு இருந்தது; அதனால்தான் திராவிட இயக்கத் தலைவர்களுடன் அவர் தோழமை கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அச்சாணியாகச் செயல்பட்டார்.

காயிதேமில்லத்திற்கு சமுதாய உணர்வு இருந்தது; அதனால்தான் முஸ்லிம் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி முறை ஆகிய உரிமைகளுக்காக சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் தொடர்ந்து முழங்கினார்.

Friday, May 16, 2014

இதனால் சகலமானவர்க்கும்.....!!

இதனால் சகலமானவர்க்கும்.....!!

---நிஷா மன்சூர்

மக்கள் உறுதியான செயல்பாடுகளை எதிர்பார்க்கிறார்கள்,
மழுப்பலான பதில்களையும் சப்பைக்கட்டுகளையும் வெறுக்கிறார்கள்.காங்கிரசின் கடந்தகால முதுகெலும்பற்ற செயல்பாடுகளுக்கும் மொண்ணையான எதிர்வினைகளுக்கும் கிடைத்திருக்கும் சவுக்கடிதான் இந்த தேர்தல் முடிவுகள்.

தமிழகத்திலும் இப்படித்தான், திமுகவின் சமரசங்களும் சொல்விளையாட்டுகளும் மிகுந்த பாலீஷ்ட் அரசியலை மக்கள் விரும்பவில்லை. என்னதான் ஜெயலலிதாவின் சர்வாதிகார அகம்பாவ அரசியலை விமர்சித்தாலும் உறுதியான முடிவுகளையும் தடாலடியான செயல்பாடுகளையும் மக்கள் உள்ளூர ரசிக்கவே செய்கிறார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.

காங்கிரசும் திமுகவும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால்,ஊழல்வாதிகள், கல்விக்கொள்ளையர்கள், குடும்ப அரசியல் மற்றும் சமாளிப்பு அரசியலில் இருந்து வெளியாகி முழுதும் மக்கள் நலன் சார்ந்த உறுதியான செயல்பாடுகளை முன்னிருத்தவும் பணம் செலவழிப்பவர்கட்கு சீட்டுக் கொடுப்பதை விட்டொழித்து மக்களுடன் மக்களாக களப்பணியாற்றும் நல்லவர்களை முன்னிருத்தவும் வேண்டும்.

Thursday, May 15, 2014

நீ கொடுப்பது யாருக்கென்றாலும் நாட்டுக்கே அதனால் நலம் கொடு !

இறைவா...
தலைஎழுத்தை
எழுதக் கூடியவன்
நீ !
எழுதிய எழுத்தை
உன்
அடியானின்
பிரார்த்தனையால்
மாற்றி எழுதும்
வல்லமை உள்ளோனும்
நீ !

Wednesday, May 14, 2014

சிலந்தி வலையின் சிறந்த உவமை

தங்கைக்கோர் மடல்
நர்கிஸ் அண்ணா எம். சேக் அப்துல்லா

அருமை தங்கைக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கருத்துக்களை பிறர் மனதில் எளிதாக இடம் பெறச் செய்வதற்கு, உவமை சிறந்த உபகரணமாகும். ஈடு இணையற்ற திருக்குர்ஆன் உவமை படைப்பதிலும் உயர் இடத்தை வகிக்கிறது. இவ்வுலக வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது, தீர்வு காண இறைவனையே அணுக வேண்டும். அதை விடுத்து இவ்வுலகத்தோரையும், உலக வஸ்துகளையும் அணுகுவோர்க்கு அல்லாஹ் தனது அருள் மறையில் சிலந்திப் பூச்சியையும், அதன் வீட்டையும் உவமையாக தந்திருக்கிறான்.Thursday, May 8, 2014

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலை.க்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ்

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது

வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பி.எஸ்.அப்துர் ரகுமான் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, இங்கு 45 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tuesday, May 6, 2014

தீனைப் பெறுதல் நெறியைப் பெறுதல்


*தீனைப் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்

தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தீனை விட்டோர் தானும் கெட்டார்
தீனில் தேடல் வாழ்வின் வழி தேடல்
தீனில் இல்லாததை புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்

Monday, May 5, 2014

நெறியில் வாழ்வதுதான் பெரிய செய்தியாகும்

மோடி நம் நாட்டின் பிரதமராக வாய்ப்பில்லை
மோடி நம் நாட்டின் பிரதமர் ஆனாலும் ...
நாம் நம் நாட்டை விட்டு ஓடப் போவதில்லை
மோடி ஆளத் தெரியாமல் பதவியை விட்டு ஓடிப் போக வாய்ப்புண்டு

ஒருவர் முஸ்லிம் மார்க்கத்திற்கு வந்தால் பெரிய செய்தி அல்ல
இருக்கும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நெறியில் வாழ்வதுதான் பெரிய செய்தியாகும்

ஒருவர் இஸ்லாத்தை விரும்பி வருவதற்குள்
ஆயிரம் இஸ்லாமியர்கள் உலகில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இறக்கிறார்கள்


Friday, May 2, 2014

பிச்சைக்காரன் - Beggar

வசதியும் பணமும் நிறைந்திருக்க
வறுத்த கோழியை வாயில் போட்டு உண்பதில் மன நிறைவு
மனைவியை அருகில் அமர்த்தி அதனை உண்பதில் சுகம்
உண்ணும்போது பிச்சைக்காரன் கதவை தட்டி
உண்பதற்கு கேட்பதில் வெறுப்பு
வெறுப்பு வந்ததால் பிச்சைக்காரனை விரட்டி அடிக்கும் மனம்

ஈயா மனம் காலப் போக்கில் ஏழ்மையை தரும்
ஏழ்மையின் நிலை மனைவியையும் பிரிக்க வைக்கும்

LinkWithin

Related Posts with Thumbnails