Monday, May 19, 2014

" தம்பி கொஞ்சம் அடங்கி நட "

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ...
உமையா ஆளுநர்.
அவனிடம் படைத்தளபதியா இருந்த ஒருவன் அழகான விலை உயர்ந்த ஆடை அணிந்து வீதியில் நடந்து சென்றான்.
நடையில் திமிர்
பேச்சில் திமிர்
பார்வையில் திமிர்
எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்ற
எண்ணத் திமிர் !

சூபி ஒருவர் அவனைக் கவனித்தார்.
" தம்பி கொஞ்சம் அடங்கி நட " என்று அவனிடம் சொன்னார் .
அவனுக்கு கோபம் வந்து விட்டது .
" ஏய்...நான் யார் தெரியுமா ? யாருகிட்டே பேசுறே தெரியுமா ? என் அந்தஸ்து என்னான்னு தெரியுமா ? பரதேசிப் பயலே ..."
அப்படின்னு அவர்மேலே கோபப்பட்டான்.
அவருதான் பக்கிரிசாவாச்சே... பயப்படுவாரா ?
அமைதியா சொன்னார்..
" நீ யாருன்னு நல்லாவேத் தெரியும். தெரிஞ்சுதான் சொல்றேன்.. அடங்கு " என்று.
" தெரியுமா ? தெரிந்துமா என்னோடு பேசுகிறாய் ? சொல்லு ..சொல்லு ... நான் யாருன்னு சொல்லு ?" அப்படின்னான்.
" நீ ஒரு அற்பத்துளி விந்திலிருந்து பிறந்தவன் . ஒரு அருவருப்பான இடத்திலே இறந்து அடங்கப்போறவன் . பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலே உன் குடலில் மலத்தை சுமந்து கொண்டு அலைபவன் . போதுமா இன்னும் சொல்லணுமா ?" ன்னு சூபி கேட்டாரு.
" போதும் அய்யா...போதும்னு சொல்லிட்டு பணிவா நடக்க ஆரம்பிச்சான்... அந்த வீரன்.
இங்கே கொஞ்சம் பேரு பெருமையில இல்லாத நெஞ்சை நிமித்திகிட்டு மாவு இடிக்கிரதை பார்த்தா...
அடேங்கப்பா... வானத்தில இருந்து குதிச்சு வந்த புனிதர்கள் மாதிரி ... என்னா பெருமை...என்னா பெருமை ...
அடங்குங்கப்பா...
Abu Haashima Vaver

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails