Sunday, October 31, 2010

உண்மையான மஸ்ஜீத் அல் அக்ஸா எது ! + மஸ்ஜீத் அல் அக்ஸாவின் 3D படம் பார்க்க

உண்மையான மஸ்ஜீத் அல் அக்ஸா எது ! வீடியோ பார்க்க

 
அஸ்ஸலாமு அலைக்கும்,

மஸ்ஜீத் அல் அக்ஸாவின் 3D படம் பார்க்க இந்த லிங்கை காணவும்,

Friday, October 29, 2010

பா.தாவூத்ஷா ஓர் அறிமுகம்

தஞ்சை மாவட்டம். கும்பகோணம் தாலுக்காவில் அமைந்துள்ள (நறையூர் எனும்) நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் பா.தா. என அழைக்கப்படும் பா.தாவூத்ஷா. இவர் 1885ஆம் ஆண்டு பிறந்தார். தமிழக மக்களிடத்து அதுவும் குறிப்பாய் தமிழக முஸ்லிம்களிடத்து கல்வியறிவு மிகவும் மங்கியிருந்த காலத்திலேயே B.A. பட்டம் படித்துத் தேறியவர். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் முதல்வனாய்த் தேறி தங்கப் பதக்கம் பரிசு பெற்றவர். ஆகையினால் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லமை பெற்றிருந்தார்.

ஒன்பது ஆண்டுகள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர், 1921-ல் தன் சப் மாஜிஸ்திரேட் பதவியை இஸ்லாம் மீது கொண்ட பற்றினாலும், மெளட்டீகத்தில் மூழ்கிக்கிடந்த தமிழ் முஸ்லிம்களை தட்டி எழுப்பி தீன் அறிவை புகட்ட வேண்டிய கடமையினாலும், அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த கிலாபத் புரட்சியின் போது ராஜினாமா செய்து விட்டு, மார்க்க சேவையே தனது வாழ்க்கை என நிர்ணயித்துக் கொண்டவர்.
துண்டுப் பிரசுரமாக 1919-இல் துவங்கிய அவரது இஸ்லாமிய ஊழியம்  எனும் மாதாந்திரப் பத்திரிகையாய் பரிணமித்து, அது மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 வருடங்கள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த இதழ. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மாபெரும் கிளர்ச்சியையும், மன மாற்றத்தையும் நிகழ்த்தி சாதனை புரிந்தது ”தாருல் இஸ்லாம்”. அது ஒரு வரலாறு.
பா. தாவூத் ஷா
ஆங்கிலமும் தமிழும் “காபிர்“ மொழிகளாக தென்னகத்து மௌலவிகளாலும் ஆலிம்களாலும் பிரகடணப்படுத்தப்பட்டு, தமிழக முஸ்லிம்கள் குர்ஆன் கூறுவது இன்னது, நபி மொழி பகர்வது இன்னது என ஏதொன்றும் அறியாமல், அந்த மௌலவிகளும் ஆலிம்களும் கூறும் முற்றும் தவறான முறனான வியாக்கியானங்களில் தமதறிவை அடகிட்டிருந்த காலகட்டத்தில் குர்ஆனை தமிழ் மக்கள் தெள்ளு தமிழில் முறையாய் அர்த்தம் உணர வேண்டும் என தமிழிலேயே முதன் முறையாய் ”குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுத ஆரம்பித்து, தனது மூத்த மகன் N.B.அப்துல் ஜப்பாருடன் அவர் சாதித்தது - அது ஒரு வரலாறு.
மேலும் தமிழக முஸ்லிம்களுக்காக தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதி வெளியிட்டது, முதல் நான்கு கலீபாக்களின் வரலாற்றை ”குலபாஎ ராஷீதீன்” என நான்கு புத்தக தொகுப்பாய் எழுதி வெளியிட்டது, முதன் முதலாய் சஹீஹ் புகாரியிலிருந்து குறிப்பிட்ட ஹதீத்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதியது, ஏறக்குறைய 100 புத்தகங்கள், பற்பல கட்டுரைகள் என எழுதியது - அது ஒரு வரலாறு.
அல்லாஹ்வின் பேரருளால் இன்று தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியறிவு பரவலடைந்து, மார்க்க விஷயத்தில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டள்ளது. குர்ஆன், நபிகள் நாயகத்தின் (ஸல்) வரலாறு, ஹதீத் தொகுப்புகள் மற்றும் மாபெரும் இஸ்லாமிய கிரந்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என வரத் துவங்கிவிட்ட நிலையிலுங்கூட இன்றும் மௌட்டீக மௌலவிகள் ஆலிம்கள் ஆகியோறால் நேர் மார்க்க முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பெற்று வரும் போரை காணும் இத்தலைமுறையினர் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பெற்ற பா.தா.வின் இந்த விழிப்புணர்வு தொண்டு எத்தகைய கடுமையான சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து சாதனை புரிந்திருக்கும் என ஓரளவு யூகித்துக் கொள்ளலாம். எவ்வாறான போராட்டங்களையெல்லாம் கடந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம். அது ஒரு வரலாறு.
தற்கால தமிழக முஸ்லிம்கள் அறியாமல் போன, தமிழக முஸ்லிம்களின் இஸ்லாமிய மேன்மையே தனது வாழ்க்கையின் இலட்சியம் என வாழ்ந்து வறுமையில் உழன்று மறைந்த அந்தத் தூய இஸ்லாமியப் பெரியவர் பா.தா.வின் வரலாற்றுப் பதிவே இந்த இணையத் தளம். தற்கால தமிழக முஸ்லிம்களும் இனிவரும் காலத்தவரும் இப்படியொருவர் இருந்தார், இப்படியெல்லாம் உழைத்தார், இதோ இன்று மலரும் விழிப்புணர்வுக்கு வித்திட்டார் என அறிந்து கொள்ளட்டும் என்பதே இந்த இணையத் தளத்தின் நோக்கம்.
பா.தா.வின் மூத்த மகன் N.B.அப்துல் ஜப்பார் B.A., அவருடன் இணைந்திருந்து ஆற்றிய தொண்டும், எழுத்தாசிரியராய் அவர் சாதித்தனவும் தொகுக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்கால தலைமுறையினர் படித்தறிய வேண்டிய பதிவு.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் உழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்களின் மீது கருணை பொழிந்து மறுமையில் தக்க நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.


அமெரிக்க நியூ யார்க் சிட்டியில் முஸ்லீம்கள்.





அல்லாஹ்வின் கிருபையால் அமெரிக்கா நியூ  யார்க்  சிட்டியில்  மட்டும் 98  பள்ளிவாசல்  உள்ளன.சுமார் ஒரு மில்லியன்  முஸ்லீம்கள்    உள்ளனர்
அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர்.

Thursday, October 28, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.

â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.

â            நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.

â        வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.

â        பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.

â        எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.

இப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

இங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா? என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.

சகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா? வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம்  பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோடு கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.

ஆடம்பர கடன் எது தெரியுமா?

வீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ??? நம் கௌரவம்??? குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம்.  இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

சகோதரிகள் வாங்கும் கடன்கள் :

சகோதரிகளே! தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

புதிய நகை :

நகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்தின் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா? அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:

... உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)

நகை கடன் :

நகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே! சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்! எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா? அல்லது மருத்துவ செலவுக்கா? (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்)  பெரும்பாலும்  வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.

வங்கியின் நிலைபாடு :

வங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.

உங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா? சிந்திப்பீர்களா சகோதரிகளே! (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்).
இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி? வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.

வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன?????? நகையை விற்றால் வாங்க முடியுமா????? அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா? என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).

வட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.


உதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.


இரவல் நகை கடன் :

சில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).

அடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா? அல்லது துணை போவீர்களா?

உறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே! எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள்? கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை  இந்த கடன் அவசியம்தானா? வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.

Wednesday, October 27, 2010

ஹிஜாப்-ஏன் ? எங்கிருந்து வந்தது !

ஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும்! இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது .‘ஹிஜாப்’ என்பதனை   நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதுதான்  ‘ஹிஜாப்’.உடல் அனைத்தையும் மறைப்பது அல்ல. மறைக்க வேண்டியதனை மறைக்காமல் விடும்பொழுது பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய நிலைமை எற்பட்டு விடுகின்றது. அந்த நிலை  யாருக்கும் வரக்கூடது.பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள். தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்தும் தவிர்ந்துக் கொள்கிறார்கள்.  
பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்து அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செலகின்றது .

சிலர்    நினைகின்றனர் ஹிஜாப் என்னும் இஸ்லாமிய பண்பாடு முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏற்படுத்திய முறை என்று. ஆனால் இதனை பழைய பைபிள்(Old Testament) ,புதிய பைபிள்(New Testament)இரண்டிலும் இதனைக் காணலாம் .
  The Book of Genesis, [24:64, 65] says: “Rebekah also looked up and saw Isaac. She got down from her camel and asked the servant, “Who is that man in the field coming to meet us?” “He is my master,” the servant answered. So she took her veil and covered herself.”

The fifth song of the Songs of Solomon, a woman says: “Tell me, you whom I love, where you graze your flock and where you rest your sheep at midday. Why should I be like a veiled woman beside the flocks of your friends?”  
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    
அல்குர்ஆன் (24 : 31) 
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.    அல்குர்ஆன: (33 : 59) 


வேலைக்கு செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிவதெப்படி 



பெண்கள் முகம் மறைப்பது அவசியமா?

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று


வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.
 Source : http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post_27.html

Tuesday, October 26, 2010

இடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை.


God is Nothing but a projection of man on a cosmic screen.
- Julien Huxely

“இறைவன் என்பது பிரபஞ்சம் என்னும் திரையில் மனிதன் கற்பனை செய்து உருவாக்கிய ஓவியமாகும்” என ஐரோப்பாவின் முக்கியமான சிந்தனையாளர்களின் ஒருவரான ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர் தனது Religion without revelation, page 19.ல் எழுதியுள்ளதாக கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி எழுதிய “மதமும் அறிவியலும்” எனும் நூலிலில் குறிப்பிடுகின்றார். 


கலாநிதியவர்கள் சுட்டிக் காட்டுவதைப் போன்ற இறைமறுப்பு வாசகங்களை பல்வேறு வகையில் அடிக்கடி நாம் படிக்க நேருகின்றது.

“இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கின்றான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்?” என்பது போன்ற வாசகங்கள் பாடல் ரூபத்தில் போகிற போக்கில் நம் காதுகளில் விழுகின்றது.

நம்மைச் சுற்றி இப்படி பல்வேறு வகைகளில் இறைவனின் இருப்பைப் பற்றிய கேள்விகள் விதவிதமாக எழுப்பப்படுகின்றது.இறைவனைப் பற்றிய அறிவு ஒரு இறை நம்பிக்கையாளனின் முதல் கடமை என்ற வகையில் இறைவனின் இருப்பைப் பற்றிய தெளிவை ஆகுமான வழிகளில் குர்ஆன், ஹதிஸின் படி அறிய வேண்டியது நம் மீது கடமையாக இருக்கிறது. அந்த தெளிவைத் தேடும் சிறு முயற்சியாக இந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. 

அல்லாஹ் இருந்தான். அவனோடு எந்த படைப்பும் (வஸ்துவும்) இருக்கவில்லை என்பது புகாரி ஷரீபில் உள்ள நபிமொழி. காலம், இடம் என்பதெல்லாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது. காலம், இடம் மட்டுமின்றி எந்த ஒரு படைப்பும் அவனை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை. வரையறைகளுக்குட்பட்ட அனைத்தையும் படைப்பவன் அல்லாஹ்.
காலம், இடம் இவைகளால் கட்டுப்பட்டு, இடைவிடாமல் மாற்றங்களுக்குட்பட்டு வருவது சிருஷ்டிகளின் நிலை. இடைவிடாமல் நிலை மாறும் சிருஷ்டிகள் அனைத்துடனும் இருந்து அவைகளின் நிலைமாற்றங்களை படைத்து இயக்கி, வளர்த்து, வாழவைத்து வருபவன் அல்லாஹ். அதனால் காலம், இடம் என்பதை எல்லாம் படைப்பதற்கு முன்பு அல்லாஹ் எப்படி இருந்தானோ (ஹுவ அல் ஆன காமா கான) அந்த அவனது ஆதி நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

அர்ஷின் தேவை அல்லாஹ்வுக்கு இல்லை:
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை மறுப்பது குர்ஆனை மறுக்கும் நிராகரிப்பில் முடியும். அதைப் போலவே அல்லாஹ் நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்(50:16) என்பதும், நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கின்றான் (57:4) என்பதும் குர் ஆன் கூறும் உண்மைகள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மறுப்பவர்கள் கூறுவது என்ன? 

அல்லாஹ் அர்ஷில் மட்டும் தான் இருக்கின்றான். அவன் அங்கிருந்த வண்ணமே அனைத்தையும் கண்காணித்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருக்கின்றான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும், பார்வை, மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைகள் தாம் என்பதாகும்.

இப்படி கூறுவதன் மூலம் அல்லாஹ்வை அர்ஷில் மட்டும் இருப்பவனாக வரையறை செய்வதாய் இருந்தால் பின் வரும் கேள்விகள் எழுகின்றது. 

அர்ஷு என்பது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கும் மேல், கீழ், முன், பின், இடம், வலம் என்ற திசைகள், எல்லை, அளவு, இடம், வடிவம், காலம் இருக்கிறது. அப்படிப்பட்ட அர்ஷில் தான் அல்லாஹ் இருக்கின்றான் என்றால் அல்லாஹ்வுக்கும் எல்லை, திசை, அளவு, இடம், வடிவம் காலம் வகுத்து விட்ட குற்றம் நேரிடும். காலம், இடம், ஏன் எந்த ஒன்றுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல அல்லாஹ். இவைகளையும் இந்த வரையறைகளுக்குட்பட்ட அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். 

அர்ஷும் படைக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் புதிதாக வந்தது தான். அவன் இருப்பதற்கு அர்ஷு என்பது தேவை என்றால் அர்ஷை படைப்பதற்கு முன்பு அல்லாஹ் எங்கிருந்தான்?

Monday, October 25, 2010

"HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY" in Englsih By:Dr.Naji(Saudi Arabia) Translated in TAMIL:"அதன் உள்ளழகைக் கண்டுகொண்டீர்களா?"by:"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

டாக்டர் நாஜி இப்ராஹிம் அர்ஃபாஜ் என்னும் முஸ்லிம் மார்க்க அறிஞர்(சஊதி அரபிய்யா)அவர்களால்  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  "HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY? என்ற நூலினை இறையருளால் தமிழாக்கம்:"அதன் உள்ளழகைக் கண்டுகொண்டீர்களா?"என்ற தலைப்பில்
 செய்துள்ளேன்; இத்துடன் உங்கள் யாவர்க்கும் எனது அன்பளிப்பாக அனுப்புகின்றேன்.
மனம் திறந்து இந்நூலினைத் திறந்து படியுங்கள்; உண்மைத் தேடும் உள்ளங்களே....!!!!
தினம் உங்களின் சிந்தையில் ஓர் மாற்றமும்; மகிழ்வும் காண்பீர்கள்...
இறைவன் நாடினால், அவன் மார்க்கத்தில் இணைத்துக் கொள்வான்;
மறைகூறும் மார்க்கம் மனித குலம் யாவர்க்கும்..
எல்லாப் புகழும் இறைவனுக்கே..!(அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) மற்றுமொரு மொழிபெயர்ப்பு நூலுடன்
சந்திப்போம்;அந்த ஓர் உண்மை இறைவனையே எந்நேரமும்
சிந்திப்போம்............
மிக்க நன்றியுடன்,
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி, (இருப்பிடம்)

00971-50-8351499 (MOBILE)
00971-2-6770080 EXT; 343
to view the book called "HAVE YOU DISCOVERED ITS REAL BEAUTY" click the following link
http://d1.islamhouse.com/data/en/ih_books/signal/en_Have_you_discovered_its_real_beauty.pdf


Downlad
as PDF

தமிழாக்கம் பார்க்க :மேல் உள்ள Downlad as PDFகிளிக் செய்யவும்

Sunday, October 24, 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்

ஜோதி 
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத். 
Source : http://www.inneram.com/2010102411414/lauren-booth-converts-to-islam

பொன் மொழிகள்

1. சிக்கனமாய் இருங்கள், விரயம் வேண்டாம். [39]
2. சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவராக இருந்த இமாம் அஸ்கரீயம் இவர்களைப் பார்த்து அழுது கொண்டிருந்தார். இதனைக் கண்ட பஹ்லுல் தனக்கும் விளையாட்டுப் பொருள் கிடைக்க வேண்டுமென இவர் அழுவதாக நினைத்து,'உமக்கும் விளையாட ஒரு பொம்மை வாங்கித் தரட்டுமா?' எனக் கேட்டார்.
இமாம் அலைஹிஸ் ஸலாம் கூறினார்: அறிவில்லாதவனே! நாம்
விளையாடவா  படைக்கப்பட்டுள்ளோம்.
'பிறகு எதற்காகப் படைக்கப் பட்டுள்ளோம் '? பஹ்ளுலு; கேட்டார்.
'அறிவுக்காகவும் இபாதத்துக்காகவும்'.
'இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்'
'நாம் உங்களை வீனாகப் படைக்க வில்லை. மேலும் நம்மிடமே நீங்கள் திரும்பி வருவீர்கள்' [40] என்று இறைவன் கூறுகிறானே.
3. இழிசொல் பேசாதே உன் கண்ணியம் போய்விடும். கேலி செய்யாதே, உன்னையும பழிப்பார்கள். [41]
4. கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஸலாம் சொல்லும் சபையில் ஒதுங்கி அமர்வதும் பணிவைக் காட்டும். [42]
5. உள்ளம் உற்சாகமாகும் போது அதற்கு வழிவிடுங்கள் ஆனால் வெறுப்புண்டானால் விலக்கி விடுங்கள். [43]
6. துக்கத்திலுள்ளோரிடம் மகிழ்ச்சியை காட்டுவது பண்பான செயல் அன்று. [44]
7. பணிவு என்பது பொறாமை கொள்ளப்படாத அருட்கொடையாகும். [45]
8. இரகசியமாக தன் சகோதரனை உபதேசித்தவன் அவனை மதித்தான். பகிரங்கமாகப் போதித்தவன் அவனைப் பழித்தான். [46]
9. மற்றவர்களிடமிருந்து தான் வெறுப்பதை தானும் செய்யாதிருப்பது உனக்குப் போதுமான பண்காடாகும். [47]
10. அழகிய தோற்றம் வெளிப்படை அழகாம். நல்ல சிந்தனை அந்தரங்கத்தின் அழகாம். [48]
11. இறைவனை அடைதல் ஒரு நீண்ட பயணமே. இரவில் விழித்திருக்காது அந்த இலக்கை அடைய முடியாது. [49]
12. தீமைகளின் வீட்டுக்கு பொய் திறவுகோள் ஆகும். [50]
13. கொடைக்கும் மட்டுமுண்டு, மீறினால் விரயம் ஆகும். [51]
14. பொறுமைக்கும் எல்லையுண்டு மீறுவது கோழைத்தனம். [52]
Source : http://www.al-shia.org/html/tam/ahlulbayt/14_masoum/askari/04.html#link14

இணையத்தில் வலை வீச்சு ! ?

வலை வீசித் தேடல், வலையில் சிக்கிட்டான், வலைத்துப் போட்டாங்க இப்படியாக 20 வருடங்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் தலைப்பில் அல்லது அன்றைய ஊடங்கங்களில் செய்திகள் வந்திருப்பதை யாவருக்கும் ஞாபகமிருந்திருக்கும். சரி அதுக்கென்ன இப்போவென்று பார்க்கும் windowவை minimizeசெய்ய வேண்டாம்.



சமீபகாலமாக எல்லோராலும் பேசப்படும் புலம்பப்படும் வார்த்தை நெட்வொர்கிங்க் (networking) இதனை நம்மவர்களின் நிகழ்வுகளில் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சு பார்த்துட்டு இருந்தேன் அதன் விளைவுதாங்க இங்கே.

வீட்டில் நெட் வேலை செய்யவில்லை இப்படியும் புலம்பல் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலில் எழத்தான் செய்கிறது அந்த நெட் (net) என்று எதைச் சொல்கிறார்கள் இவர்கள் வலைத்தளங்கள் அல்லது தனிதூது வாயாடி தங்களுடைய கணினியில் தெரியவில்லை அல்லது வேலையை செய்யவில்லை என்பதால்தானே இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் அதன் பின்னால் என்னதான் சிக்கல் இருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாது இதுக்காக நம்மவர்கள் படுத்தி எடுக்கும்பாடு இருக்கிறதே சொல்லி மாலாது ! இதனை தனிக்கோர்வையாக எழுதனும்.

அதுவல்ல இன்றைய மக்கள் பேசும் நெட்வொர்கிங் ? அப்போ என்னதான் நினைக்கிறாங்க !

மெய்யாலுமே நல்ல வெளக்கமா மக்களுக்கு ஒரு பதிப்பு எழுதலாம்னு இருக்கும் போது மாத்தியோசிக்கச் சொன்ன கவிக் காக்கா இங்கே நெனப்புல வந்துட்டாங்க அதானலதான் ரூட்டு மாறிடுச்சுங்க.

நட்புகளின் நெட்வொர்க்குன்னா (friends network) இருவரோ அல்லது அதற்குமேலோ இருப்பவர்களின் கூட்டுதான் இங்கேயும் நெட் துண்டிப்பு இருக்கும், அல்லது சிலருக்குள்ளேயே அதிவேக இணைப்பாக இருக்குக்கும் அதுவே நிறைய நன்மைகளையும் கொண்டுவரும் அதுபோல் வேண்டாத வைரஸ்களும் உள்ளே நுழைந்து சீரழிக்கும். இன்றோ ஆணுக்கும் பெண்ணுக்குமென்று நட்பு வலைச் சிக்கலில் மாட்டித் தத்தளிக்கும் இளசுகள் மட்டுமா பார்க்கிறோம் மருமகன் மருமகள் எடுத்த பெருசுங்களும் இவ்வலைக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

குடும்பங்களுக்கிடையான நெட்வொர்க் (family network) இரு குடும்பங்கள் மட்டும்தான் என்றில்லாமல் அவர்களின் கிளைக் குடும்பங்களும் இதிலே உள்ளடக்கம், ஒவ்வொரு குடும்பங்களுக்கு இடையே அவரவர்களின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் அன்றாட நிகழ்வுகள் வேறுபடுவதும், வீட்டிலிருப்பவர்களுக்கு இடையேயான நெட்வொர்க்கில் சிக்கலும் உண்டு சீறிப்பாயும் வேகமும் உண்டு, இந்த நெட்வொர்க்கு அறுபடுவதும் மீண்டும் சரிசெய்வதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான். இந்த நெட்வொர்க்கிற்குள் கணக்கிடலங்காத நட்புகளானாலும் வெறுப்புகளானாலும் வென்றிடவும் வீழவும் செய்யும்.

சரி, இன்றைய சூழலில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் மற்றொரு நெட்வொர்கிங் "சோஸியல் நெட்வொர்க்கிங்" - "சமூக பிணைப்பு"ன்னு இங்கே சிக்கித் தவிக்கும் இளசுகளும் பெரிசுகளும் படுத்தும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை, இதன் சாதக பாதகங்களை நாம் யாவரும் அறிந்திருக்கிறோமா ? இல்லை அறியாமலே அதனுள்ளே உலாவருகிறோமா ? இதனை நிச்சயம் அலச வேண்டும்.

இவ்வகை சமூக பிணைப்புகள் (social networking) இன்றைய நிலையில் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, இங்கே முதலில் ஆரம்பிப்பது பொய்தான் அதனை நிஜமாக்கப் அவர்களும் படும் பாடு இருக்கிறதே சொல்லிமாலாது, இதன் வலைக்குள் சிக்கியவர்களின் தனித்தன்மை சின்னா மாகிவருதை அவர்களாளே உணர முடிவதில்லை அப்படி இதன் போதை எல்லா வற்றையும் மறைத்து அடிமையாக்கி விடுகிறது.

இந்த சமூக பிணையம் (social networking) வரவினால் சமுக கட்டுக்கோப்பும் தனித்தன்மையும் சீர்செட்டு போவது ஒருபக்க வாதமாக இருக்கும்போது, இதனால் எல்லையில்லா வருமானத்தை கொட்டிக் குவிக்கும் இதனுடைய உரிமையாளர்கள் சூதாட்டம் எப்படி நடந்தேறுகிறது என்பதை விலாவாரியாக பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...

என்னடா இவனும் தொடரும்னு போடப்போறானேன்னு யோசிக்காதீங்க வேற வழியில்லை நேரம் அமையும் போது மிதமிருக்கும் பதிவும் வரும்...

-அபுஇபுறாஹீம்

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா · இந்தியாவில்

Saturday, October 23, 2010

இந்தியாவில் ஆர்க்கிடெக்டுகளுக்கு வளமான எதிர்காலம் – Special Report

இனியவன்
 
இந்தியாவில் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உள்ள மிகப்பெரும் சவால் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது தான். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட துறையில் படிப்பவர்களை விட வேலைகள் குறைவாக இருப்பது தான். ஆனால் இந்தியாவில்  5 இலட்சம் ஆர்க்கிடெக்டுகள் தேவைப்படும் நிலையில் அதில் பத்தில் ஒரு பங்கு தான், அதாவது வெறும் 50 ஆயிரம் பேர் தான் ஆர்க்கிடெக்டுகளாக பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது அதிகமாகக் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது நாம் போதிய அளவு ஆர்க்கிடெக்டுகளை உருவாக்குவதில்லை என்று கூறுகிறார் ஆர்க்கிடெக்சர் கவுன்சிலின் தலைவரான விஜய் கிருஷ்ண சோஹானி. தேவை அதிகமாக இருந்த போதிலும் ஐ.டி அல்லது மெக்கானிகல், எலக்டிரிகல் இஞ்சினியரீங் போன்று இது அவ்வளவாக விரும்பிப் படிக்கப் படுவதில்லை.

இந்தியா முழுவதும் 170 ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளே உள்ளன. அவற்றில் அரசாங்க கல்லூரிகள் 23 மாத்திரமே. ஒரு வருடத்திற்கு சுமார் 3000 - 4000 நபர்கள் மாத்திரமே ஆர்க்கிடெக்டுகளாக வெளியேறுகின்றனர். ஒரு கோடி நபர்களுக்கு 5,450 ஆர்க்கிடெக்டுகளே உள்ளதாக சொல்கிறார் அண்ணா பல்கலைகழகத்தின் ஆர்க்கிடெக்சர் துறை டீன் மன்சிங் தேவதாஸ்.

மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது உடனடியாக அதிகப் பணம் சம்பாதிக்க முடிவதில்லை என்பதே மாணவர்களின் ஆர்வமின்மைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு புதிய ஆர்க்கிடெக் தன்னை நிலை நிறுத்தும் முன் ஆரம்பமாக சிறு நகரங்களில் சுமார் 15,000 ரூபாயும் பெரு நகரங்களில் சுமார் 25,000 ரூபாயுமே சம்பளமாகப் பெற முடியும். ஓரளவுக்கு தன்னை நிலை நிறுத்தி கொண்ட அனுபவசாலியால் மாதம் 2 இலட்சம் வரை சம்பளமாகப் பெறலாம்.

ஆர்கிடெக்டுகளின் முக்கியத்துவம் அரசாங்கம் மற்றும் தொழில் துறைகளால் முழுமையாய் உணரப்படாததாலேயே அவர்கள் ஒப்பீட்டளவில் ஐ.டி. மற்றும் பிற இஞ்சினியர்களை விட குறைவாக சம்பளம் பெறுகின்றனர். மேலும் பல கல்லூரிகளில் ஆர்க்கிடெக்சர் என்பது தனி துறையாக இல்லாமல் ஒரு பாடமாக மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது என்பதும் குறைபாடாக உள்ளது.

5 வருட ஆர்க்கிடெக் படிப்புக்கு அரசாங்க கல்லூரிகளில் சுமார் 15,000 ரூபாய் ஒரு வருடத்திற்கும் தனியார் கல்லூரிகளில் கல்லூரிக்கேற்ப சுமார் 1 முதல் 10 இலட்சமும் வசூலிக்கப்படுவதாக சொல்கிறார் பெங்களூரூவில் உள்ள ஆர்.வி. பொறியியல் கல்லூரி முதல்வர் கே.எஸ். அனந்த கிருஷ்னா. மேலும் கல்லூரிகளில் ஆர்கிடெக்ட் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை 50 சதவிகிதமாக உள்ளது.

மஹாராஷ்டிராவில் 52 கல்லூரிகளும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் முறையே 32, 26, 8, 8 கல்லூரிகள் உள்ளன. புதுச்சேரி மற்றும் பிஹாரில் தலா 2 கல்லூரிகளே உள்ளன. ஆனால் சீனாவில் 600 கல்லூரிகளும் அவற்றிலிருந்து வருடத்திற்கு 1,20,000 ஆர்க்கிடெக்டுகளும் உருவாகின்றனர். இந்தியாவில் வெறும் 3,000 நபர்களே வருடந்தோறும் ஆர்க்கிடெக்டுகளாக வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் முந்தைய வருடங்களை விட இப்படிப்பில் 10 மடங்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்திருப்பது நல்ல முன்னேற்றம் என்று சொல்லும் கல்வியாளர்கள் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக மாணவர்கள் இப்படிப்பில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மற்ற துறைகளை போல் ஆர்க்கிடெக்டில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்கும் என்று நம்புவோம்.
Source :http://www.inneram.com/2010102311378/india-faces-large-shortage-of-architects?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+inneram+%28

திருச்சி பட்டதாரி தொகுதிக்கு பதிவு செய்யுங்கள் .


அன்புடையீர் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

திருச்சி பட்டதாரி தொகுதிக்கு  பதிவு செய்யுங்கள் .

தாசில்தார் அலுவகத்தில் விண்ணப்பம் கிடைக்கும்விண்ணபிக்க கடைசி தேதி நவம்பர்  6 ..

டிகிரி ஒரிஜினல்,இருப்பிட அடையாள சான்று ( Ration card, driving licence , etc) நேரில் சென்று காண்பிக்க வேண்டும் .

டிப்ளமா பெற்றவர்களும் தகுதி பெற்றவர்களே .
 
அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும்,  M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.

 விரைந்து செயல்படுக
அனைத்து முஹல்லாக்களுக்கும் இதன் நகலை ஒட்ட செய்க .

வஸ்ஸலாம்
Kudanthai Prof. Tamil maamani. Dr. Haji.
M.A.Mohamed Hussain.
Kumbakonam.
by mail from    anandam consultancy

Thursday, October 21, 2010

புனித ஹஜ் - பல தடவைகள் செய்யப்பட வேண்டிய கடமையா?

    புனிதமான துல்-கஃதா மாதத்தில் நாம் இருக்கிறோம். இப்பொழுது, நம்மில் பலரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களாக இருப்போம். நம்மைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், அயலில் உள்ளவர்கள், ஊர்வாசிகள் என புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லக் கூடியவர்களை வழியனுப்பி வைக்கக் கூடியவர்களாகவும் இருப்போம். அறிந்தோ, அறியாமலோ தாம் பிறருக்கு இழைத்திருக்கும் குற்றங்களுக்காக, ஏழையோ, தம்மை விடவும் வசதி குறைந்தவர்களோ, தமக்குக் கீழே பணி புரியும் ஊழியர்களோ அவர்களுடனான கோபதாபங்களை மறந்து, அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்து, அவர்களிடம் தாம் செய்த குற்றங்களை மன்னித்துக் கொள்ளக் கேட்டு, இன்முகத்தோடு விடைபெறச் செய்து மனிதர்களிடையே ஒற்றுமையையும், உறவினையும் பலப்படுத்தும் புனித மாதமிது.

    இம் மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஹஜ் கடமையானது பர்ழான ஹஜ், சுன்னத்தான ஹஜ் என இரு வகைப்படுகிறது. உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். ஒன்றுக்கு மேலதிகமாகச் செய்யும் ஹஜ் எல்லாம் சுன்னத்தான ஹஜ்ஜுக்குள் வகைப்படுத்தப்படும். இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி - 1819, 1820)


    ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பை வலியுருத்திக் கூறுகின்றன. எனவே இக் காலகட்டத்தில் முன்பை விடவும் அதிகமான அளவு மக்கள் ஹஜ் கடமைக்காக ஒன்று கூடுகிறார்கள். ஹஜ்ஜுக்காக மட்டுமல்லாது உம்ராவை நிறைவேற்றுவதற்காகவும் அதிகளவான மக்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். 'ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடும் மக்களில், சரி பாதியிலும் குறைந்த சதவீத அளவு மக்களே தமது முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள்; ஏனையோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்ற வருகை தருபவர்கள்' என ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

    இது பிழையென்றோ தவறான செயலென்றோ கூற வரவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜைச் செய்யவெனச் செல்கிறவர் மஹ்ரமாக (ஒரு பெண்ணுக்கு வழித் துணையாக), வழிகாட்டியாக, மருத்துவராக இப்படியான அவசியத் தேவையின் காரணமாகச் செல்லலாம். ஆனால் 'நான் ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கிறேன்..நான் பத்துத் தடவை ஹஜ் செய்திருக்கிறேன்' என்று பெருமை பேசிக் கொள்பவர்களும், அதற்காகவே பல இலட்சங்களைச் செலவழித்து ஹஜ்ஜைப் பல தடவைகள் நிறைவேற்றுபவர்களும் கூட நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா?

    நமது நாட்டிலிருந்தும், ஊரிலிருந்தும் கூட இவ்வாறு பல தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்றப் புறப்பட்டுச் செல்வோர் அனேகர் நம்மில் இருக்கிறோம். நாம் வசிப்பது செல்வந்த நாடொன்றல்ல. நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது சகோதரர்கள் எல்லோருமே அவர்களது ஹலாலான எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சௌபாக்கியங்கள் நிறைந்தவர்களல்லர். நாட்டில் அகதிகளாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த அநேக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது நிறைவேற்றப்படாத பல தேவைகள் இன்னும் இருக்கின்றன. நம் தேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்தாலும், மண் சரிவுகளாலும், காற்றினாலும், கோடையினாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டே வருகிறது. நமது மக்கள் இவற்றால் பெரும் துயரடைகிறார்கள். அவர்களது துயரங்களுக்கு மத்தியிலிருந்து நாம் ஸுன்னத்தான ஹஜ் கடமையைச் செய்யச் செல்கிறோம்.

    நம்மைச் சுற்றிலும் அன்றாட சீவனத்துக்கே வழியற்றுப் போன வறியவர்கள் இருக்கிறார்கள். சொந்த வீடுகளின்றி வாடகை வீடுகளில் வசித்து, வாடகை கொடுக்க இயலாது கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள். ஹலாலான தேவைக்காகக் கடன் வாங்கி, அதை மீளச் செலுத்திக் கொள்ள வழியற்றவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளின் திருமண வயது தாண்டியும் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல திறமையிருந்தும், நன்றாகக் கற்கும் ஆர்வமிருந்தும் உதவி செய்ய ஒருவருமின்றி சிறு வயதிலேயே சிறு சிறு கூலிவேலைகளில் இறங்கிவிடும் சிறுவர்களும், இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். மருத்துவ வசதியற்ற நோயாளிகள், இன்னும் அநாதைகள் இருக்கிறார்கள். நம்மை அண்டிப் பிழைக்கும் எளிய ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களது பெருமூச்சுகளுக்கு மத்தியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டேயிருக்கிறோம்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்ற, ஒருவர் தயாராகிச் செல்லும் வரையிலும், சென்று திரும்பும் வரையிலும் எத்தனை இலட்சங்கள் பணம் செலவு செய்யப்படுகிறது? இந்த வருடமும் ஹஜ் செய்யத் தீர்மானித்ததன் பின்னர் வீட்டுக்கு வந்துசெல்லும் உறவுகளுக்கான விருந்துபசாரங்களாகட்டும், ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பி வருகையில் குடும்பத்தினர், நண்பர்களுக்காக வாங்கி வரப்படும் அன்பளிப்புப் பொருள்களாகட்டும், கணக்கற்ற பணம் செலவழிக்கப்படுகிறது அல்லவா?

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்" எனக் கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புஹாரி 1421)


    மேலுள்ள ஹதீஸைப் பாருங்கள். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தஆலா நமக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து நாம் செய்யும் தர்மமானது இன்னுமொரு மனிதனின் நிலையை மாற்றக் கூடியது. அவனைத் துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியது. சுன்னத்தான ஹஜ்ஜுக்களுக்காக செலவாகும் இலட்சக்கணக்கிலான பணத்தினைக் கொண்டு எவ்வளவெல்லாம் செய்யலாம் பாருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் பர்ழான ஹஜ்ஜைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடும் நிய்யத்தோடும் செல்ல வழியற்ற நம் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம். ஹலாலான தேவைகளுக்காகக் கடன்பட்டு அதை மீளச் செலுத்திக் கொள்ளவியலாமல் தவிப்பவர்களை அதனிலின்றும் மீட்டு விடலாம். திருமணம் செய்ய வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வசதியின்றி, கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு அவர்களுக்கான எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். நம்மை நம்பி நம்முடன், நமக்காக உழைக்கும் ஊழியர்களின் ஊதியத்தைச் சிறிதளவாவது அதிகரித்து விடலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுபவர்களின் குடும்பத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலொன்றைச் செய்யவோ, வேறு தொழிலுக்கோ பணத்தைக் கொடுத்துதவலாம்.

    கட்டாயக் கடமையான ஸகாத்தை ஒழுங்காகக் கணக்கிட்டுக் கொடுக்காது, சுன்னத்தான ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமானது கட்டாயக் கடமைகளை உதாசீனம் செய்துவிட்டு, சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வரவேற்கவில்லை. நமக்குக் கடமையான முதலாவது ஹஜ்ஜை ஒழுங்காக நிறைவேற்றிவிட்டோம். அதற்குப் பிறகும் அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லவும் ஆசை வருகிறது எனில், ஹஜ்ஜுக்குச் செல்லாமல் அதற்குச் செலவாகப் போகும் பணத்தில் தன்னைச் சூழவுள்ள இயலாதவர்களுக்கு உதவுவேன் என மேலதிக ஹஜ் செய்யப் போகும் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதனைச் செயற்படுத்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் எளியவர்களிடத்தில் எவ்வளவு நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும், சிந்தித்துப் பாருங்கள்.

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ' மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
1.எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா)
2.பிரயோசனமளிக்கும் கல்வி
3. நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்


    ஒரு மனிதன் மரணித்து விடும்போது அவரது செயல்களின் இயக்கமும் நின்று போய்விடுகிறது. அவரால் தொடர்ந்தும் நற்செயல்கள் செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர் கப்றாளியாக ஆன பின்பும் அவரது நன்மைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும்படியான நற்செயல்கள்தான் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸில் உள்ளவை. பல தடவை ஹஜ் செய்யும் வசதி படைத்தவர்களின் பணத்தில் இவ்வாறாகக் கப்றிலும்  நிரந்தரமாக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய எத்தனை எத்தனை நல்ல விடயங்களைச் செய்துவிடலாம்? செய்ய முயற்சிப்போம், சிந்திப்போம் சகோதரர்களே !

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி

# விடிவெள்ளி வார இதழ் - 51 (21.10.2010)
நன்றிhttp://rishanshareef.blogspot.com/2010/10/blog-post_21.html

Wednesday, October 20, 2010

நான் முஸ்லீம் இல்லை - பொற்கோயில் தரிசனத்தை தவிர்க்கும் ஒபாமா

வாஷிங்டன் : அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தன் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் செல்ல வேண்டிய இடங்களில் பஞ்சாபில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாகிய பொற்கோயிலும் இருந்தது. ஆனால் அப்படி சென்றால் தன்னை முஸ்லீம் என்று சொல்லி விடுவார்கள் என்பதால் அவரின் பயண திட்டத்தில் இருந்து பொற்கோயில் நீக்கப்பட்டுள்ளது.
பொற்கோயிலுக்கு செல்லும் நபர்கள் சீக்கியர்கள் வழமையாக தலையை மறைக்க அணியும் துணியை அணிய வேண்டும். ஏற்கனவே அமெரிக்காவில் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று எதிரணியினர் பிரச்சாரம் செய்வது ஒபாமாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முஸ்லீம்களை போல் தலையை மறைத்து கொண்டு போனால் மீடியாக்கள் அப்படத்தை போட்டு தாம் முஸ்லீம் என பிரச்சாரம் செய்து விடும் என்று ஒபாமா நினைப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் முஸ்லீம்கள் என்று நினைத்து சீக்கியர்கள் மேல் தாக்குதல் நடந்ததும் அரிசோனா மாநிலத்தில் ஒரு சீக்கிய கார் பழுது பார்க்கும் நிலைய அதிபர் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த பொற்கோயில் டிரஸ்டி குருபச்சன் சிங் ஒபாமா வெறும் தொப்பி அணிந்து கொண்டு வந்தாலும் அனுமதிப்போம் என்றார். இந்திய அரசாங்க உயரதிகாரி ஒருவர் இது குறித்து கூறும் போது ஒபாமா எங்கு செல்ல வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது தங்கள் வேலை அல்ல என்று பதிலளித்தார்.
Source : http://www.inneram.com/2010102011326/obama-drops-golden-temple-trip-due-to-headscarf-fear

கடன் வாங்கலாம் வாங்க - 4

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

கான மயிலாட!
கடன் வந்து நிழலாட!
வாங்கியவன் கொண்டாட!
கொடுத்தவன் திண்டாட!
கடனே கேட்காதே!


விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முடிவு செய்து விட்டால் நம்மிடம் என்ன சேமிப்பு இருக்கிறதோ ( சேமிக்க முடியவில்லை என்று புலம்புவது புரிகிறது. ஏன்? திட்டமிடுவதில்லை? ) அல்லது இருக்கும் கையிருப்புக்குள் சென்று வர முயற்சி செய்வதில்லை. நண்பர்களிடமோ, கம்பெனியிடமோ, கடன் அட்டையிடமோ கடனுக்கு விண்ணப்பித்து பணத்தை பெற்று நீங்கள் வாங்கிச் செல்லும் பொருள்களால் குடும்பத்தில் யாராவது சந்தோஷம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை நீங்கள்தான் நான் கடன் வாங்கி பொருள்கள் வாங்கி வந்துள்ளேன் என்று சொன்னதுண்டா? பிறகென்ன யாருக்காவது சரியாக பொருள்கள் கொடுக்கவில்லை, கொண்டு வந்த பொருட்கள் சரியில்லை என்ற புலம்பல்தான். இந்த மனக்குறை ஒருபக்கம் மறுபக்கம் குடும்பத்தை பிரிந்த கவலை இரண்டையும் சுமந்து மீண்டும் திரும்பி இந்த பாலை வெயிலுக்கு வந்து விடுகிறோம்.

இதற்கிடையில் கடன் கொடுத்தவரின் நிலைதான் பரிதாபம். பணத்தையும் கொடுத்து விட்டு எப்பொழுது கொடுத்த கடன் திரும்ப வரும் என்று வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கடன் வாங்கியவரோ கொடுத்தவருக்கு எந்த தேவையுமில்லை என்ற நினைப்பில் தன்னுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இப்பொழுது சிலரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

ஒரு சகோதரர் அவர் நண்பருக்கு பல தடவை (கடன் கொடுத்து)உதவி செய்கிறார்.

வல்ல அல்லாஹ் கடன்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்:

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். (அல்குர்ஆன்: 2:282)

வாங்கியவர் எதற்காக என்ன தேதியில் வாங்கினோம் என்று எதுவும் எழுதி வைத்துக்கொள்வதில்லை. ஆனால்  கொடுத்தவர்தான் எழுதி வைத்துக்கொள்கிறார். கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க  வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் ஊருக்கு போகும்பொழுதெல்லாம் கடன் கொடுத்தவரையும் (நண்பராக இருப்பதால்) அழைத்துக்கொண்டு நகைகள், துணிகள் வாங்கிக் கொண்டு ஊர் சென்று வருகிறார். பழகி விட்டோமே எப்படி கேட்பது என்று கொடுத்தவர் கேட்பதற்கு தயங்குகிறார் (லூசா நீ என்று கடன் கொடுத்தவரைப்பார்த்து கேட்க தோன்றுகிறதா?). கடன் வாங்கியவருக்கு வரவேண்டிய தயக்கம் கொடுத்தவருக்குத்தான் பெரும்பாலான இடங்களில் வருவதை பார்க்க முடிகிறது. சில வருடங்கள் ஆன பிறகு கொடுத்த கடனை நண்பனிடம் திருப்பி கேட்கிறார். வாங்கியவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள்: ஏன் நான் கடனை திருப்பித்தரமாட்டேனா? அல்லது ஓடிவிடுவேனா? ஏன் என் மீது நம்பிக்கையில்லையா? நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்ற கணக்கை காட்டு என்று கடன் வாங்கியவர் கொடுத்தவர் போல் கோபப்படுகிறார். (இதில் கடன் வாங்கியவர் குறித்து வைத்துக்கொள்வதும் இல்லை, கெடுத்தவர் எந்த தேதியில் எதற்காக கொடுத்தோம் என்று தெளிவாக கூற வேண்டுமாம்??? ) இவர்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க மனம் வருமா?

நபி(ஸல்) அவர்கள் இப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி அறிவிப்பதை பாருங்கள்:

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி  அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, எண்: 2387)


இரண்டாவது சகோதரரைப்பற்றிப்பார்ப்போம்: அவர் வேலை செய்யும் கம்பெனி வெளியில் வேலை செய்து கொள்ளும்படி கூறி விடுகிறது. ஊருக்கு போக முடிவு செய்கிறார். போய் விட்டு வந்து வேலை தேட வேண்டுமாம். இந்த சூழ்நிலையில் துணிமனிகள் வாங்கி போக வேண்டுமாம். ஊரில் துணிகள் கொடுக்காவிட்டால் நன்றாக (மதிப்பு?) இருக்காதாம், கடன் வாங்குகிறார். கொடுத்தவரிடம் எப்பொழுது திருப்பி கொடுப்பேன் என்ற எந்த வாக்குறுதியும் கிடையாது. திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். கடன் கொடுத்தவர் நிலைதான் இப்பொழுது பரிதாபம். ஏன்? வேலைக்குச் சேர்ந்து, அவர் பிரச்சனைகள் அனைத்தும் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்  வேலையே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவர் வாங்கிய கடன் அவசியத்திற்குத்தானா? இல்லை என்பது புரிகிறது. இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்து உதவி செய்ய மனம் வருமா?

மூன்றாவது சகோதரர் ஊருக்கு செல்ல முடிவு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அதே கம்பெனியில் வேலையை தொடர முடியாத நிலை தெரிந்திருந்தும் கடன் வாங்கிச் செல்கிறார். இவருக்காக சில சகோதரர்கள் ஜாமீன் போடுகிறார்கள். ஊர் போய் வந்த பிறகு கடன் கொடுத்தவர்களிடம் அவருடைய நிலையை எடுத்துச் சொல்லி இத்தனை மாதங்களில் தருகிறேன் என்று சொல்லலாம். ஆனால் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் நிலைதான் பரிதாபம். ஏன்? வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நினைத்தார்கள். இதுபோன்ற சகோதரர்களுக்கு ஜாமீன் போடவோ, கடன் கொடுத்து உதவவோ நமக்கு மனம் வருமா?

நண்பர்கள் இப்படி என்றால் ஒரு அக்கா தங்கை கடன் கொடுத்த விபரத்தை பார்ப்போம்: தன் உடன் பிறந்த அக்கா மகன் வெளிநாடு செல்வதற்காக பணத்திற்கு சிரமபடுவதை பார்த்து தன்னிடம் உள்ள பணத்தை சகோதரிக்கு கடனாக கொடுக்கிறார். விஸாவுக்கு முயற்சித்து விஸா வரவில்லை. அவர் மகன் பயணம் போகவில்லை. பணம் கட்டிய இடத்திலிருந்து  ஒரு வருடம் கழித்து பணம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த கடனை அடைக்காமல் இருக்கிறார். அக்காவிடம் எப்படி கேட்பது அவராக தரட்டும் என்று (சில வருடங்கள்)  காத்திருக்க அந்த அக்காவோ வெளிநாட்டில் இருக்கும் தன் கணவரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் நகை வாங்கி வாருங்கள் என்று சொல்கிறார். மேலும் தன் வீட்டை கட்டுவதற்கு பேங்கில் கடன் வாங்கி வீட்டை கட்ட ஆரம்பித்து விட்டார். தங்கைக்கு கோபம், பார்த்தார் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் அக்காவிடம் பணத்தை திருப்பி கேட்காமல் இருந்தால் நம் பணம் வர வாய்ப்பே இருக்காது என்று நேரடியாக கேட்க தயங்கி வேறு ஒரு சகோதரியின் மூலம் சொல்லி பணத்தை வாங்கி விடுகிறார். கடன் கொடுத்ததால் அவர்களுக்குள் மனஸ்தாபம்.

மேற்கண்ட நால்வரின் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன சொல்கிறது - கடன் கொடுத்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமா? என்று நினைக்க தோன்றுகிறது. மார்க்கம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், கடனைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்று அறியாமல் இருப்பது தெளிவாகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.   (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, எண்: 2397 )

கடன் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் இது போல் நாமும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். அடுத்த தொடரில் இன்னும் எத்தனை வழிகளில் கடன் வாங்கப்படுகிறது என்று பார்ப்போம்.

அன்பு வாசக நெஞ்சங்களே! தாங்களும் கடன் கொடுத்து வாங்கியிருப்பீர்கள் வித்தியாசமான அனுபவங்கள் தங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.
  Source :http://adirainirubar.blogspot.com/2010/10/4.html

LinkWithin

Related Posts with Thumbnails