Saturday, December 31, 2016

புதியப் பக்கம் புலப்படுகிறது...!

புதியப் பக்கம்
புலப்படுகிறது...!
நல்லவையோ... கெட்டவையோ...
நம்மைக் கடந்து போய் விட்டன...!
இந்தக் கணிதம்
எத்தனையோ ஆண்டுகளாய்
இடைவெளி இன்றி நடக்கின்றன...!
நல்லதைத்தான் நாடுகிறோம்
அதுவும்
நம் கைவசம் வந்து சேரலாம்...!

Friday, December 30, 2016

இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே விடிகிறது.

Abu Haashima

உறங்கி விழிப்பதே நமக்குக் கிடைக்கிற
முதல் பரிசு.
இறைவன் இன்னும் நம்மை
உயிரோடு விட்டு வைத்திருக்கிறான் என்று நிரூபிக்கிற பெரிய சந்தோஷம் அது.
அடுத்து ...
அதிகாலைத் தொழுகை .!
அதை தொழுதவனுக்கு நாளெல்லாம் நல்லநாள்தான்.
காலை ஊன்றி நடக்க முடிந்தால்
கைகளை நீட்டி மடக்க முடிந்தால்
நீரோ ஆகாரமோ உண்ண முடிந்தால்
பேச முடிந்தால்
நுகர முடிந்தால்
நாம்
எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என நினைத்து அல்லாஹ்வை சுகூர் செய்யலாம்.
பணம் முடங்கி விட்டது
பொருளாதாரம் முடங்கி விட்டது என்று
நாம் புலம்புவதில் அர்த்தமில்லை.
நம்மை முடங்காமல் வைத்திருக்கிறானே
மாபெரும் கருணையாளன் அல்லாஹ் ...
அதுவே பெரும் பாக்கியம்.
அரசும்
அதன் அடக்கு முறைகளும்
அதன் ஆட்சி அதிகாரங்களும்
செயற்கையானவை.
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
அவைகளின் ஆயுள் அற்பமானது.
விரைவில் அழியக் கூடியது.
இறைவனின் அருளே
அழிவில்லாதது.

Thursday, December 29, 2016

Manithanin aasai - மனிதனின் ஆசை - Islamic short flim

மக்கள் அல்லாஹ்வின் அருளை குறைத்து மதிப்பிட வேண்டாம்
அல்லாஹ்வின் அருள அளவிடமுடியாதது

படைத்தவன் ஒருவனுண்டு ....!

ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஒவ்வொன்றிலும் இவ்வுலகில்
இணையாய் இணையாய்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஈரேழு உலகைப் படைத்தது
பாரபட்சமின்றி பரிபாலிக்கும்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு

Sunday, December 25, 2016

பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)

70 ஆண்டுகால வரலாறு மாறியது - ஐநாவில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானம் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறியது......!!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீனை 90 சதவீதம் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்கினர். இப்பிரச்சினை 70 ஆண்டுகளாக முடிவுக்கு வராத பிரச்சினையாக இருந்து வந்தது.
70 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா திகழ்ந்து வந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எகிப்து கொண்டு வந்தது.
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, December 21, 2016

இறையறிந்த ரகசியங்கள் ...

அலைகள் நடனமாடும்
கடல் நீரில்
உப்பு கரிப்பு
இறையறிந்த ரகசியம் ....
மேகங்கள் கறுத்து
ஆகாயம் பொழிந்திடும்
மழை முத்துக்கள்
இறையறிந்த ரகசியம் ....

Tuesday, December 13, 2016

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி

ஆசிரியர் - அல் அஸ்ரார் மாத இதழ்

அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில உலகில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் வருகையால் இவ்வுலகம் இருள் நீங்கி விடிவு கண்டது, அறியாமை அகன்றது, மடமைகள் மறைந்தன. கல்லாமை இல்லாமல் ஆனது, கண்மூடித்தனங்கள் மண்மூடிப் போயின.

Thursday, December 1, 2016

ஏகனே இறையோனே ....!

பெருமையுடன் தலைக்கனம் பிடித்தவருக்கு
===== சிறுமையே வருமென்பதை கிஞ்சித்தும்
அறியாமல் தனக்கெல்லாம் தெரியுமென
===== தற்பெருமையுடன் இப்புவிதனை மிதித்தே
நடந்திடும் மாந்தர்க்கு புத்திபுகட்டிடுவாயே
===== எல்லாமிருந்தும் தேவைகளின்றி நிறைவாய்
நித்தமும் அடியார்க்கெல்லாம் அருள்பொழியும்
===== பெருமைக்குரியவனே ஏகனே இறையோனே
படைப்பினங்கள் பலவற்றையும் மாண்புடனே
===== படைத்து இவ்வுலகினில் படைத்தோனை
தப்பாது வணங்கிடவே பணிப்பித்தோனே
===== படைப்பினில் சிறப்பாய் மாந்தரை
படைத்து தீதும்நன்றும் பகுத்தறிந்தே
===== இம்மைதனில் இயல்பாய் வாழ்ந்துகாட்டி

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை !


Abu Haashima
எந்தத் தாயும் பெற முடியாத 
அழகானக் குழந்தை !
**************
அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட 
அழகான கண்கள் 
யாருக்கும் இல்லை !
எந்தத் தாயும் 
தங்களை விட 
அழகானக் குழந்தையை 
பெற்றதேயில்லை !
தாங்கள் 
குறையே இல்லாமல் 
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள் 
எப்படிப் படைக்கப்பட வேண்டும் 
என்று விரும்புவீர்களோ 
அப்படி !
பெருமானே 
எங்கள் நாயகமே...

LinkWithin

Related Posts with Thumbnails