Abu Haashima
உறங்கி விழிப்பதே நமக்குக் கிடைக்கிற
முதல் பரிசு.
இறைவன் இன்னும் நம்மை
உயிரோடு விட்டு வைத்திருக்கிறான் என்று நிரூபிக்கிற பெரிய சந்தோஷம் அது.
அடுத்து ...
அதிகாலைத் தொழுகை .!
அதை தொழுதவனுக்கு நாளெல்லாம் நல்லநாள்தான்.
காலை ஊன்றி நடக்க முடிந்தால்
கைகளை நீட்டி மடக்க முடிந்தால்
நீரோ ஆகாரமோ உண்ண முடிந்தால்
பேச முடிந்தால்
நுகர முடிந்தால்
நாம்
எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என நினைத்து அல்லாஹ்வை சுகூர் செய்யலாம்.
பணம் முடங்கி விட்டது
பொருளாதாரம் முடங்கி விட்டது என்று
நாம் புலம்புவதில் அர்த்தமில்லை.
நம்மை முடங்காமல் வைத்திருக்கிறானே
மாபெரும் கருணையாளன் அல்லாஹ் ...
அதுவே பெரும் பாக்கியம்.
அரசும்
அதன் அடக்கு முறைகளும்
அதன் ஆட்சி அதிகாரங்களும்
செயற்கையானவை.
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
அவைகளின் ஆயுள் அற்பமானது.
விரைவில் அழியக் கூடியது.
இறைவனின் அருளே
அழிவில்லாதது.
அது எத்தனை கோடி பேருக்கு வழங்கினாலும்
குறையாதது.
அவன் அருளே அவன் அடியார்களுக்கு
இன்பம் தரக்கூடியது .
அது கிடைக்க வேண்டும் என்று நினைத்தாலே போதும்....
மனதில் சாந்தியும் சமாதானமும் குடியேறிவிடும்.
இந்த இறையருள் நமக்குக் கிடைக்க
ஆசைப்படுவோம் !
Abu Haashima
No comments:
Post a Comment