Sunday, December 25, 2016

பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)

70 ஆண்டுகால வரலாறு மாறியது - ஐநாவில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானம் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறியது......!!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீனை 90 சதவீதம் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்கினர். இப்பிரச்சினை 70 ஆண்டுகளாக முடிவுக்கு வராத பிரச்சினையாக இருந்து வந்தது.
70 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா திகழ்ந்து வந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எகிப்து கொண்டு வந்தது.
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு முதன் முறையாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தது.
தீர்மானம் நிறைவேறிய போது ஐநா சபையிலுள்ள உலக நாடுகளின் பிரதிநிதிகள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினர்.
இந்த தீர்மானத்தினால் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலஸ்தீனில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் அனைத்தும் சட்ட அங்கீகாரத்தை இழக்கும். இனிமேல் பாலஸ்தீனில் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.
வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த தீர்மானத்தை ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாள் பாலஸ்தீன் சம்பந்தமாக அவர் சொன்ன அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். ஐநாவில் முதலில் பாலஸ்தீனுக்கான அங்கீகாரம் கிடைத்தது. இப்போது இஸ்ரேலுக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)
தகவல் தந்த Engr Sulthan
அவர்களுக்கு நன்றி
நன்றி  jaffnamuslim.com

உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் ...



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails