Thursday, December 1, 2016

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை !


Abu Haashima
எந்தத் தாயும் பெற முடியாத 
அழகானக் குழந்தை !
**************
அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட 
அழகான கண்கள் 
யாருக்கும் இல்லை !
எந்தத் தாயும் 
தங்களை விட 
அழகானக் குழந்தையை 
பெற்றதேயில்லை !
தாங்கள் 
குறையே இல்லாமல் 
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள் 
எப்படிப் படைக்கப்பட வேண்டும் 
என்று விரும்புவீர்களோ 
அப்படி !
பெருமானே 
எங்கள் நாயகமே...

தங்கள் புகழ் 
இவ்வுலகில் பரவுகிறது 
கஸ்தூரியை விட 
அதிக நறுமணத்தோடு !
தங்கள் அதிர்ஷ்டம் 
நிறைவானது !
தங்கள் கரம் 
பெரும் கடலை விட 
தாராளமானது !
தங்கள் தர்மம் 
ஓடும் 
நதியைப் போன்றது !
தங்களைப் பார்த்துப் 
பொறாமைப் படுபவர்கள் 
பொறாமைத் தீயிலே 
வெந்து கொண்டிருக்கிறார்கள் !
இவர்களை விட்டும் 
இறைவன் 
தங்களைப் 
பாதுகாக்கட்டும் !
எங்கள் எஜமானரே...
தங்களுக்குத் 
தகுமான அளவுக்குப் 
புகழ் சேர்க்க 
என்னால் இயலவில்லை !
நான் சொல்லாற்றலில் ஏழை !
ஏழை 
எப்போதும் 
தோற்று விடுகிறான் !
அண்ணலே 
எங்கள் முஹம்மதே ...
என் கவிதைகள் 
தங்களுக்கு 
பெரும் புகழ் எதுவும் 
சேர்த்து விடவில்லை !
தாங்கள்தான் 
என் கவிதைகளுக்கு 
என்றென்றும் 
புகழ் நிலைக்கச் 
செய்கிறீர்கள் !
... நபித் தோழர் ஹஸ்ஸான் பின் தாபித் ( ரலி ) அவர்கள் ...
@ பெருமானார் ( ஸல் ) அவர்கள் முன்னிலையில் அவர்களைப் புகழ்ந்து பாடிய கவிதை. ( என் எளிய தமிழில் )
" ரூஹுல் குத்ஸ் ( ஜிப்ரீல் ) அவர்கள் வழியாக உங்கள் கவிதைகளுக்கு அல்லாஹ் உதவி செய்வான் " என்று நபிகளாரால் அருளாசி வழங்கப்பட்டு ... பெருமானாரின் மேலாடையை போன்னாடையாகவும் பெற்ற பெரும் கவிஞர் இவர் !
வானவனாம் அல்லாஹ்வும் அவன் அமரர்களும் வாழ்த்துக் கூறும் அண்ணல் நபி நாதருக்கு நாமும் கூறுவோம் மாண்பான வாழ்த்துக்கள் !
அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் 
அஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ் !


Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails