Sunday, March 30, 2014

தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா!

கடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின் ஜீனத் பிரிவின் எக்ஸக்யூட்டிவ் டைரக்டருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் புதிய வடிவத்தைத் துவக்கி வைத்தார்.

துபையில் வசந்த பவன் அரங்கில் மாலை 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தூதுஆன்லைன் இணையதளத்தின் முதன்மை ஆசிரியர் பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Thursday, March 27, 2014

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!

பணி நிமித்தமாகவோ, படிப்பு காரணமாகவோ வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இனி அவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் நிற்கும், தனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்) வாக்களிக்கக்கூடிய முறை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனின் இந்த இணைப்பில் காணலாம் :
http://eci.nic.in/eci_main/nri/regelectors.pdf

Tuesday, March 25, 2014

அதிர்ச்சி - முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நிராகரித்தது ஆம் ஆத்மி...

அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் பலருக்கும் இது அதிர்ச்சியான செய்தி. பெரும் அதிர்ச்சியான செய்தி. முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து ஆம் ஆத்மி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது வட இந்திய மார்க்க தலைவர்களின் ஆதங்கமாக இருந்தது. இந்த காரணத்தினாலேயே காங்கிரஸ்க்கு மாற்றாக ஆம் ஆத்மியை பரிந்துரைப்பதில் அவர்களுக்கு மிகுந்த குழப்பம் இருந்து வந்தது.

பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்த தங்கள் கண்ணோட்டத்தை நேற்று தெளிவுபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி. மதரீதியான இட ஒதுக்கீட்டை தாங்கள் மேற்கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ள இக்கட்சி, இதற்கு காரணமாக, சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை சுட்டி காட்டியுள்ளது. அதே நேரம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கு புறம்பானதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லியுள்ளனர். சட்டத்திற்கு புறம்பில்லாத ஒன்றை சட்ட சிக்கல்களை காரணம் காட்டி நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

Saturday, March 22, 2014

தேர்தல் வர்த்தகம்!

அடுத்த

ஐந்தாண்டுகளுக்கு

நாட்டைக் குத்தகை எடுக்க

ஏலம் துவங்கிவிட்டது.

அசாதுத்தீன் உவைசி....

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவிலேயே டச் பண்ண முடியாத ஒரு தொகுதி உண்டென்றால் அது ஹைதராபாத் தொகுதியாகவே இருக்க முடியும் என்கின்றது சமீபத்திய தி ஹிந்து இதழ். காரணம் அசாதுத்தீன் உவைசி. கல்வி, விவேகம், வேகம், சாதுர்யம் இவை தான் இவரின் அடையாளங்கள். இவை நிச்சயம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் கிடையாது. பாரிஸ்டர் பட்டம் பெற்ற அசாதுத்தீன் உவைசியின் உரையை அல்லது விவாதத்தை நீங்கள் பார்த்திருந்தால் எளிதாக இந்த முடிவுக்கு தான் வருவீர்கள். 1984-ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதியை உவைசி சகோதரர்களின் MIM கட்சியே தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. மற்ற தொகுதிகளில், எனக்கு சீட் கொடுக்கவில்லை அவருக்கு சீட் கொடுக்கவில்லை என்று சண்டைகள் நடந்துக்கொண்டிருக்க, இங்கேயோ உவைசியை யார் எதிர்ப்பது என்ற தயக்கமே மிஞ்சுவதாக தி ஹிந்து சொல்கின்றது.

எப்படியெல்லாம் போடுகிறாய் வேஷம் ஆ ஹா


இவர்க்கும் ஒருவர் ஓதுகிறார் பாத்தி ஹா

இந்த தேசத்தில்
இவர்களின் வேஷத்தை பாத்தியா

இந்த வேசத்தில்
காவி கொள்கை போனது பாதியா

ரத யாத்திரை சென்றாய் பள்ளியை தகர்க்க

தர்காவிற்க்கு செல்வதால் முடியுமா அந்த
பழி யில் இருந்து தற்க்காக்க

வேறு பாடு இருக்கலாம் துணி கடை நல்லி யில்

Sunday, March 16, 2014

கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி!

பிரபல கணினி மற்றும் இணைய  நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி  ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.

தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன சாதித்து விட்டார்?

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபூதபியில் வசித்து வரும் ஃபாத்திமா அல் ஜாபி எனும் பெண்மணிதாம் அவர்.

சிறிதளவு கம்ப்யூட்டர் அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்!

காப்பிரைட் ஒன்றின் மூலம் மட்டும் தினந்தோறும் மில்லியன்களில் சம்பாதிக்கும் AutoCAD போன்ற மென்பொருட்களை சாமான்யர்கள் பயன்படுத்த இயலாது.  அதற்குரிய கல்வி கற்பதோடு முறையான பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

ஆனால், Microsoft PowerPoint மென்பொருளை அடிப்படையாகக்  கொண்டு ஃபாத்திமா வடிவமைத்துள்ள மென்பொருள் நேர்மாறானது. எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியது.

Friday, March 14, 2014

ஒரு படம் இரு நண்பர்களின் சிறந்த கவிதைகள்

இத்தனை சோகம் ஏன்,
புறக்கணிப்பைப் புறக்கணித்து
அன்பின் நற்சுவாசத்தில் கலந்து கரைந்திடு...!


by  Nisha Mansur-
 --------------------------------------------------------------

Saturday, March 8, 2014

திருமாவளவன்

திருமாவளவன் முஸ்லிம்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கிறார்.

தமது கடந்தகால செயல்பாடுகளின் மூலம் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரியவராகவும், தமது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்களின் பேரன்பைப் பெற்றவராகவும், தமது எதிர்கால இலக்குகளின் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்குரியவராகவும் திருமா காட்சியளிக்கிறார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார். ஆனால், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.
1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

“எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம் - அ.மார்க்ஸ்


இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை டைப் செய்து அனுப்பினேன். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை.

 இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

Friday, March 7, 2014

கீழக்கரை தொதல்

ராமேஸ்வரம் ராஃபி  —

 இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது.

தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் தொதல் முக்கியமான பண்டமாகும்.

இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கிறது. ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.. 250 வரையிலும் விற்கப்படுகின்றது.

Monday, March 3, 2014

ஸலாம் (முகமன்)

காலை வணக்கம்
மாலை வணக்கம்
இரவு வணக்கம்
பிரியும் போது குட் பை
நமஸ்தே இன்னபிற

இத்தனயும் ஒன்று சேர
அத்தனையும் விட உயர்வு

இறைவன் அருளால் உங்கள் மீது இறைவன் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என வாழ்த்துதல்
முஸ்லிம்கள் அதன் பொருளாக உலகமெங்கும் சொல்வது 'அஸ்ஸலாமு அலைக்கும்'
இதனை தமிழில் 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் ' எந்த இனத்தவரும் சொல்லலாம் .எந்த நேரத்திலும் சொல்லலாம்.

வாழ்த்துவதில் கூட காலை .மாலை .இரவு பாகுபாடு எதற்கு !

Sunday, March 2, 2014

" தூதுபுறா" கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் ! இப்படிப்பட்ட சூழ்நிலையில் குமரிமாவட்டம் தக்களையைச் சேர்ந்த ஷர்மிளா சித்தீக் என்ற பெண் எழுதிய " தூதுபுறா"
என்ற கவிதைத் தொகுப்பு இன்று மாலை நாகர்கோயிலில் வெளியிடப்பட்டது.
ஷர்மிளா ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறந்த சிந்தனாவாதி. சமுதாய சீர்திருத்த கொள்கைகளில் பற்றுள்ளவர்.
முதிர் கன்னி, வரதட்சணை கொடுமை போன்றவற்றை தன் கவிதை வரிகளில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிக அருமையான இந்த கவிதை நூலை ஒளிவெள்ளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற வெளியீட்டு விழாவுக்கு கவிஞர் தமிழ்க்குழவி தலைமை தாங்கினார். பதிப்பாளர் பிதலிஸ் வரவேற்றார்.
நான் ( அபு ஹாஷிமா ) நூலை வெளியிட
வழக்கறிஞர் உதுமான் மைதீன் பெற்றுக் கொண்டார்.
கல்வியாளர்கள் ... எம்.எஸ்.அலிகான் , தக்கலை முஹம்மது காசிம் , உதுமான் மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கவிஞர் வானம்பாடி சிறப்புரையாற்றினார் .
ஷர்மிளா ஏற்புரை வழங்க அவரது கணவர் சித்தீக் நன்றி கூறினார்.
தக்கலை ஹாமீம் முஸ்தபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவின் சில காட்சிகள்

Saturday, March 1, 2014

கும்பகோணத்தில் இஸ்லாமியை தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் இடம் பெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சி

 இசையமைப் பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். பாடல் வரிகளை சிதைக்காத, கதைக்கான இசையைத் தருவதில், இளம் இயக்குநர்களின் தேர்வாக இருக்கும் தாஜ்நூர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்.  கும்பகோணத்தில் ’இசையும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற 8 -வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள இசை நிகழ்ச்சியை நடத்தினார்
மேலும் படிக்க  
கும்பகோணத்தில் இஸ்லாமியை தமிழ் இலக்கியக் கழகம்  நடந்த மாநாட்டில் இடம் பெற்ற  இசை நிகழ்ச்சி

LinkWithin

Related Posts with Thumbnails