Monday, October 31, 2016

நேற்று நடந்தது ....

தற்போது இங்கே கத்தரில் சூடு மறைந்து சாயங்காலம் இதமான காற்றும் நல்ல சுகமான சீதோஷண நிலையுமிருப்பதால் நான் 5.30 மணி தொழுகையான மஃரிப் தொழுதுட்டு இரண்டு மணி நேரம் ஆபீஸூக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்து வருவது வழக்கம் ..அப்படி அமர்ந்திருக்கையில் நேற்று தொழுகை முடிந்த பிறகு எத்தியோப்பியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச்சேர்ந்த சிலர் என்னை சந்திக்க வந்தார்கள் .............வந்தவர்கள்
தாங்கள் மாதம் இருமுறை விஷேஷ பிறார்த்தனை செய்வதாகவும் அதற்கு மைக் வெளியே உபயோகப்படுத்த நீங்கள் அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டார்கள்

இறைவன் என்பவன் ...


ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று
படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்
வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் - அவன்
ஒருவன் என்று கொள்

Friday, October 28, 2016

உழைப்பெனும் வழிபாடு ....!

குத்துக்கல்லு போல
வாடாத இருப்பிருந்து
வாழ்வின்
வெம்மையையும் வளமையையும்
ஒருபொருட்டாய் கொண்டு
ஓடியாடி உழைத்திருந்தும்
சிறு மீனோ உறுமீனோ
வந்ததை வரவில் வைத்து
நில்லாமல்

Sunday, October 23, 2016

தனி ஒருவன்

மரம்தான்...அவன்
தனிகட்டைதான்!.
துறந்தான் குடும்பம்...
அவன் சவம்தான்!

இணைந்த கைகள்
ஓசைதரும் என்பது

THE LOSS IS THE GAIN / Vavar F Habibullah

பேரிழப்புகளில் தான் வெகுமதி அடங்கி இருக்கிறது என்பது தான் அப்பட்டமான உண்மையாகும்.
மரணங்களை அநுதினமும் சந்திக்கும் மனிதனே வாழ்க்கை சுகங்களை தேடி
அலைகிறான். தோல்விகளின் வலிகளை சுமந்து கொண்டே வெற்றியின் படிகளில் காலடி
எடுத்து வைக்க துடிக்கிறான்.
உலக பற்றில்லாத வாழ்க்கை சுகம் தருமா?
சூபித்துறவிகள் அவையில் நடந்த ஒரு உரை யாடல் நம்மையும் சிலிர்க்க வைக்கிறது.

ஒய்வு - உற்சாகம் - உழைப்பு ....! /ராஜா வாவுபிள்ளை

ஓடியோடி உழைப்பதில்
கிடைக்கும் உற்சாகம்
கொஞ்சம் சாய்ந்து கொண்டால்
கிடைக்கும் ஒய்வு
உறங்காது உழைப்பதில்
கொள்ளும் உற்சாகம்

இறையச்சம் .../ அப்துல் கபூர்





இன்பமூட்டும் செல்வத்தின்
வாழ்மைப் படிகளிலும்
துன்பமூட்டும் வறுமையின்
ஏழ்மைப் படிகளிலும்
இறைவனை துதிப்பதும்
திருமுறை அறிவுறுத்தும்
கொள்கைகளை மதிப்பதும்
ஆத்மார்த்தமான இறையச்சம் ...

Saturday, October 22, 2016

முதிர்ந்த ஆன்மிக நிலை என்பதென்ன?


1). மற்றவர்களைத் திருத்த முனைவதற்கு முன் உங்களைத் திருத்த முயல்வதே ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

2). மற்றவர்களை (அவர்தம் குறைநிறைகளுடன்) இயல்புமாறாமல் ஏற்பது ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

3). ஆன்மிக முதிர்ச்சி என்பது, அவரவர் கோணத்தில் அவரவர் சரி என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

4). ஆன்மிக முதிர்ச்சி என்பது "போகட்டும்" என்று விட கற்றுக் கொள்வதாகும்.

5). ஆன்மிக முதிர்வு நிலை என்பது, உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதும், அதே சமயம் கொடுக்கும் இன்பத்திற்காக கொடுத்துக் கொண்டிருப்பதும் ஆகும்.

Friday, October 21, 2016

திருமணம் என்பது

Abu Haashima
திருமணம் என்பது
ஒரு ஒப்பந்தம்தான்.
உனக்கு நான்
எனக்கு நீ
துணையாக இருப்போம்.
அப்படிங்கிறதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து.
இருவரும் பிணக்கின்றி
ஒருவரை ஒருவர் புரிந்து
அனுசரித்து இயைந்து வாழும் வரை
நோ ப்ராப்ளம்.
இருவரின் குணங்களும் ஒத்துப் போகாமல்
பிரச்சினைகளே வந்து கொண்டிருந்தால்
ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.
அதிலேயும் இருவருக்கும் சம உரிமை இருக்கிறது.
பின்னே ...

ஆயுதம் ஒழிப்போம் ....!

ஆதிமனிதன் ஆயுதம் செய்தான் உணவுக்கு வேட்டையாடவும், பயிர்செய்ய ஏரும் கலப்பையும் ஆயுதமாக செய்தான் காலம் காலமாக மனிதம் தழைத்தோங்கியது. நதிக்கரைகள் ஓரம் நாகரீகம் வேருன்றியது. கலையும் இலக்கியமும் மிளிர்ந்தன. சமயங்களும் மார்க்கமும் மனிதனை நேர்வழிப்படுத்த வந்தன.
மக்கள் தொகை பெருகத் துவங்கியது. வணிகம் வளரத்துவங்கியது. போக்குவரத்தும் பயணிக்கும் பாதைகளும் பலவழியாக கடல், ஆகாய, இருப்புப்பாதை மற்றும் பாரம்பரிய தரைவழியாக வும் மக்களுக்கும் பொருட்களுக்கும் திறக்கத் தொடங்கியது.

Tuesday, October 11, 2016

திருச்சி ஜமால் முகம்மது கல்லூாி, தமிழாய்வுத்துறையும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்ம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 திருச்சி ஜமால் முகம்மது கல்லூாி, தமிழாய்வுத்துறையு சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவாி மாத முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
 இவ் அறிவிப்பு மடலை உலகறியச் செய்ய வேண்டுமாய் நான்  கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
முனைவர் க. சிராஜுதீன்
உதவிப்பேராசிாியர்
தமிழாய்வுத்துறை
ஜமால் முகம்மது கல்லூாி
திருச்சிராப்பள்ளி - 20
9865721142

From: kamarudeen sirajudeen <<jmctins2015@gmail.com>
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்





திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருளில்  பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகின்றது. பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

Monday, October 10, 2016

மரணத்தின்போது யார் யார் அழுவார்கள்

அப்துல் கையூம்

என் மரணத்தின்போது
யார் யார் அழுவார்கள் என்று
அனுமானித்து விட்டேன் !
இதோ
பட்டியலும் தயார்..!
அந்த பட்டியலில்
நண்பர்கள் சிலரின் பெயர் கிடையாது.
விரோதிகள் பலரும் உண்டு !
அன்பாக நடித்தவர்களின்
அரிதாரம் கலைவதைப் பார்த்து
அன்று நான் அதிர்ந்து சிரிப்பேன்..
அது யார் கண்ணுக்கும் புலப்படாது !
அதோ...

Tuesday, October 4, 2016

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
47   ‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபிகளார் உணர்ந்தார்கள்.
எந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள் என்றபோதிலும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்து நபிகளார் பெரிதும் கவலை கொண்டார்கள்.
இதனால் இன்னல்களுக்கு ஆளான முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்குச் செல்லட்டும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இதன்படி பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும் அபிசீனியா சென்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

LinkWithin

Related Posts with Thumbnails