Abu Haashima
திருமணம் என்பதுஒரு ஒப்பந்தம்தான்.
உனக்கு நான்
எனக்கு நீ
துணையாக இருப்போம்.
அப்படிங்கிறதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து.
இருவரும் பிணக்கின்றி
ஒருவரை ஒருவர் புரிந்து
அனுசரித்து இயைந்து வாழும் வரை
நோ ப்ராப்ளம்.
இருவரின் குணங்களும் ஒத்துப் போகாமல்
பிரச்சினைகளே வந்து கொண்டிருந்தால்
ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.
அதிலேயும் இருவருக்கும் சம உரிமை இருக்கிறது.
பின்னே ...
உறவே இல்லாத ஒரு உறவு
கணவன் மனைவி உறவுதான்.
தலாக் ஆகிவிட்டால்
இருவருக்கும் எந்த உறவுமில்லை.
இவர் இன்னொருத்தி கணவர்.
அவள் இன்னொருத்தர் மனைவி.
எந்த பந்தமும் கிடையாது.
ஆனால் ...
அவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருந்தால்
அவை ரத்த உறவு.
பெற்றோர்கள் பிள்ளைகளை வேண்டாம் என்றோ
பிள்ளைகள் பெற்றோரை வேண்டாமென்றோ
சொல்ல முடியாது.
தாய் தகப்பன் உறவை வெட்டிவிட முடியாது.
இதுதான் திருமண உறவின் சிறப்பம்சம்.
No comments:
Post a Comment