Tuesday, July 30, 2013

ஒரு மாணவியின் துஆ...!


யா அல்லாஹ்; யா ரஹ்மானே!
என்
இதயத் துடிப்புகள்
இறைவா உனக்காக

எந்நிலையிலும்
நிற்கச் சம்மதமாய்
என் இதயம் இருப்பினும்
ஆழ் மனதில்
மரணத்தை எதிர்கொள்ள
மருகும் கோழை நான்!

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்
பலகீனமான படைப்பே
பெண்ணினம் -
மறுப்பதற்கில்லை!

என்னினத்தை
ஏய்ப்பது எளிது
எள்ளளவு அன்பு காட்டி!

Friday, July 26, 2013

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்;


இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
Quran  17/24

Yusuf Ali
And, out of kindness, lower to them the wing of humility, and say: "My Lord! bestow on them thy Mercy even as they cherished me in childhood."
Quran  17/24


(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
Yusuf Ali
Your Lord knoweth best what is in your hearts: If ye do deeds of righteousness, verily He is Most Forgiving to those who turn to Him again and again (in true penitence).
Quran 17/25

அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
Quran 15/88

Yusuf Ali
Strain not thine eyes. (Wistfully) at what We have bestowed on certain classes of them, nor grieve over them: but lower thy wing (in gentleness) to the believers.
Quran 15/88

Source : http://quran.com/

Wednesday, July 24, 2013

மகளுக்கொரு மனு

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!
வீடு முழுவதும்
ஊடுருவினாய் - நீ
இல்லத்தில் இல்லாத
நேரத்திலும் - என்
உள்ளத்துள் நிறைந்து நின்றாய்!

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பட்டறிவு பெற்றாய்!

அலிஃப் பா தா உன்
அழகுவாய் கற்கையில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!

Sunday, July 21, 2013

பிற மதத்தினருக்கான "நோன்பு முகாம்"

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பின் மாண்புகளை ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் பிற சமூக மக்களிடையே அறிமுகப்படுத்தி,  நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில்,  "ஒருநாள் நோன்பு மற்றும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி" க்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

எதிர் வரும் ஜூலை 28, 2013 (இவ்வருட ரமளான் பிறை 19) ஞாயிறு அன்று ஒரு நாள் முழுவதும் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Thursday, July 18, 2013

துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது.

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்ததாவது ஈமான் அமைப்பு கடந்த 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையிலும், துணைத்தலைவர்கள் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் எம். அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலிலும், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர்கள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கல்விக்குழுச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், இஸ்மாயில் ஹாஜியார், ஜமால், முஹைதீன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நோன்புக் கஞ்சி ஆரம்ப காலத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து தற்பொழுது தினமும் 3500 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி கும்பகோணம் அன்வர் குழுவினரால் காலையில் ஆறு மணிக்கு துவங்கப்பட்டு நண்பகல் வரை தொடர்கிறது. அதன் பின்னர் அவை தனித்தனி கோப்பைகளில் ஊற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர், இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு, ஜுஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இச்சேவை குறித்து பலரது கருத்துக்கள் இதோ :

தமிழகத்திலிருந்து அலுவலகப் பணியின் காரணமாக அமீரகம் வருகை புரிந்த கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் ஈமான் அமைப்பு அமீரகத்தில் தினமும் 3000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதை அறிந்து ரமலானின் முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

அவர் கூறியதாவது ஈமான் அமைப்பின் நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டினார். அமீரகத்தில் தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

இனம், மதம், மொழி என்ற பேதமின்றி இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேஷவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக மனம் நெகிழ குறிப்பிட்டார்.

நீக்ரோ நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வரிசையாக பரப்பி வைக்கப்பட்டிருந்த நோன்பு திறப்பு உணவுகளைப் பார்த்து சொன்னார் :

Tuesday, July 16, 2013

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து!

பேரானந்தம் பெருந்துயரம் இவ்விரு காரணங்களால்தான் மனித உணர்ச்சிகள் பற்றி எரிகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் மூடத்தனமான அவக்கேடான இரண்டு சப்தங்களை வெளிப்படுத்துவதிலிருந்துத் தடுக்கப் பட்டுள்ளேன்: ஏதேனும் ஒரு நன்மை ஏற்படும்போது (மகிழ்ச்சியில் சப்தமிடுவதிலிருந்து)ம் ஏதேனும் ஒரு துன்பம் நேரும் போது (ஒப்பாரி வைப்பதிலிருந்தும்)ம் தடுக்கப்பட்டுள்ளேன்.


لِكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍِ
“உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்!” (குர்ஆன் 57:23)
மேலும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “துன்பம் ஏற்பட்ட உடனேயே மேற்கொள்ளப்படுவதுதான் பொறுமை.” (புகாரி).

இன்பம் துன்பம் ஆகிய இரண்டு நிலைகளிலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவன்தான் ‘வீரன்’ எனும் சொல்லுக்குத் தகுதியானவன். உணர்ச்சிகளுக்கு கடிவாளமிடுவதன் மூலம் உண்மையில் அவன் தனது ஆன்மாவிற்கு நிம்மதியையும், வெற்றியையும் சுவைக்கச் செய்து விட்டான். இறைவன் மனிதப் பன்புகள் குறித்து திருமறையில் கூறுகிறான்:


وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي ۚ إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌِ

“நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடைக் கூடியவனாகவும் பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான்” (குர்ஆன் 11:10)

இறைவனை வணங்கக் கூடியவர்கள் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் காண்பார்கள் நல்லது நடக்கும் போது இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.சோதனைகள் வரும்போது பொறுமையை மேற்கொள்வார்கள்.

எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மனிதனை எளிதில் சாகடித்து விடும்; அது அவனை தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவன் கோபம் கொள்ளும் போது வெறிபிடித்தவனைப் போல மாறி விடுவான்; பிறரை மிரட்டுவான்.சுயக்கட்டுப்பட்டை இழந்து, மூச்சு வாங்கி,நிலை தடுமாறுவான். மற்றவர்களுக்கு அநீதியிழைப்பான். அதைப்போல மகிழும் போது எல்லை மீறி,தன்னையே மறந்து விடுவான்.

எவர் மீதாவது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டால் அவரைத் திட்டித் தீர்த்து விடுவான். அவர் செய்த நல்ல காரியங்களையெல்லாம் மறந்து, அவரது பெயருக்குக் களங்கம் ஏற்ப்படுத்துவான். அதே நேரம் எவரையாவது நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு மரியாதைப் பதக்கங்களை அணிவித்து அழகு  பார்ப்பான்; அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று விடுவான்.

Monday, July 15, 2013

சங்கை மிகு ரமலான்


காத்திருந்து காத்திருந்து
பூத்ததிந்த புனித நோன்பு

வருசத்தில் ஓர் உதயம்
வந்து போகும் வசந்த மாதம்

இறை மறையாம் திருக்குர்ஆன்
இறங்கியதும் இம்மாதம்

அருள் நலமும் ஒருங்கே பெற்று
அகம் மகிழச் செய்திடும் மாதம்

பாவங்கள் விட்டொழித்து
இறைப் போதனைகள் பொழியும் மாதம்

இச்சைக்கு விடைகொடுத்து
இறைப் பொருத்தம் தேடும் மாதம்

பசித்தாகம் மறந்த நிலையாய்
புனித நோன்பு நோற்கும் மாதம்

Saturday, July 13, 2013

இவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்!

 
 


ஜுலை 11: கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில ஐரோப்பா நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 20 மணிநேரத்திற்கு கூடுதலாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுவந்தனர். இதே போல் இம்முறையும் இப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 18 மணி நேரம் முதல் 20 மணிநேரம் வரை நோன்பு நோற்கின்றனர்.

ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது கோடை காலம் நிலவுவதால் அதிகாலை 2:30 மணியிலிருந்து பஜ்ர் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது. சூரிய அஸ்தமனம் இரவு 9:30 லிருந்து ஆரம்பமாகிறது. இந்நாடுகளில் இரவு 11 மணிவரை சூரிய வெளிச்சம் கிடைப்பதுடன் இஷாத் தொழுகைக்கான நேரம் இரவு 11:30 மணிக்கு பின்னரே ஆரம்பமாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தமட்டில் அதிகாலை 04:20 தொடக்கம் மாலை 07:30 மணிவரைக்கும் நோன்பு வைப்பதற்கான நேரமாக இருந்து வருகிறது. இந்நாடுகளிலும் வெயில் காலமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் இரவு 8 வரைக்கும் கிடைக்கின்றது.

இதே போல் கனடா, அமெரிக்கா மற்றம் ஜப்பான் மற்றும் அதனைச் சூழவுள்ள நாடுகளில் சுமார் 16, 17 மணிநேரமும், நார்வேயில் 20 மணித்தியாலங்களும் முஸ்லிம்கள் இம்முறை நோன்பு நோறபதும் குறிப்பிடத்தக்கது.
Source : http://muthupet.org/?p=7073

Thursday, July 11, 2013

The Chips are up....சிப்ஸ் உள்ளன ....

அஸ்ஸலாமு அலைக்கும்,

http://info-vlsi.blogspot.in/2013/07/the-chips-are-up.html

சில வருடங்களுக்கு முன்பாக, டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஜீனுக் சௌத்ரி அவர்கள், இந்திய SEMICONDUCTOR/VLSI துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் மின்/மின்னணுவியல் மாணவர்கள் இந்த துறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆழமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த துறையில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் என்ற நோக்கில் அந்த கட்டுரையை முழுமையாக மேலே உள்ள லின்க்கில் கொடுத்திருக்கின்றேன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்

Tuesday, July 9, 2013

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் அல்லாஹ்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

30 நாட்கள் பயிற்சி

சமீபத்தில், ஒரு இணைய தளத்தில் பிரபலமான அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறி விடுவீர்கள், நான் உத்திரவாதம்.

நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது நாளில் நடந்த அதிசயம்” என்றும். இந்த அவர் மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கைப் பின்பற்றி வெற்றி பெற்றதாகவும் மேற்கோளிட்டார்.

”ஒரே நாளில் சில மாற்றங்களைக் கொண்டு வருகிறேன் என்று சிலர் மாறிவிட்டு பிறகு சில நாட்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றனர். அதே வேளையில் மாற்றத்தினை சிறிது சிறிதாக தொடந்து 30 நாட்கள் முயற்சித்தால் 31-ஆம் நாள் அந்த முயற்சி, அது தவிர்க்க வேண்டிய ஒரு கெட்ட பழக்கமோ அல்லது புதிதாய் பழகிக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல பழக்கமோ அதில் வெற்றி கண்டிருப்பீர்கள்” என்றும் அந்த 30 நாள் இரகசியத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனார். எனக்கென்னவோ, அவர் சொன்ன தத்துவ ஞானியின் வார்த்தைகள் ஆச்சர்யம் தரவில்லை. இவர் சொல்வதற்கு முன்னரே இதனைப் பயின்று பழகியிருந்ததால், உடனே கையில் இருந்த அல் குர்ஆனைப் புரட்டினேன்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. ....., உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (அல்குர்ஆன் 2: 185)

கண்களில் பளிச்சிட்ட மேற்கண்ட இறைவசனத்தின் மூலம், இறைவன் தேர்ந்தெடுத்துள்ள கால அளவு (மாதம்), அதற்கானக் காரணம், அதனால் நாம் பெறப் போகும் பயன், அந்தப் பயனை நாம் சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்காக நம் உடலையும் மனதையும் கட்டாய நோன்பைக் கொண்டு பக்குவப்படுத்தும் அற்புதமான நேர்த்தி, அப்பப்பா... அனைத்தும் எவ்வளவு நேர்த்தியான, துல்லியமான ஏற்பாடு. ஆனால் ஏனோ நாம் அந்த 30 நாட்களின் பயனறியாது வீணடிக்கிறோமே? அதனால்தான் இறைவன் அதே காலத்தின் மீதே சத்தியமிட்டு மனிதன் நஷ்டவாளி என்கிறானோ?


பொதுவாக ரமளான் என்றாலே நமக்கெல்லாம் நோன்பு, நோன்புக் கஞ்சி, இஃப்தார், தராவீஹ் பயான், சஹர் உணவு இதையெல்லாம் விட பிரியாணி, புதுத் துணிமணிகள் இவை போன்ற விஷயங்களே சட்டென நினைவுக்கு வரும்.

நோன்பு என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டுப் பின்பற்றிய பழக்கமாய் இருந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் இறைவசனம் ஒன்று நினைவுக்கு வந்தது:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

அந்த முக்கியக் கடமை ரமளானில் விதித்திருப்பதோ நம்மின் நற்பேறு. ரமளான் என்ற அரபிச் சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’, ’பொசுக்கிவிடுதல்’ என்று பொருள் அறியப்படுகிறது. நம்மிடையே உள்ள தீயவை களைய, நன்மைகள் பல நாளெல்லாம் நம்மோடு இணைய கவசமாகிய நோன்பு பெற்ற ரமளான் மாதம் அழகிய பயிற்சிக் களம்.

பொதுவாக பயிற்சிக் களம் என்பது நிஜக் களத்தினை விட முற்றிலும் எதிரானதாய் இருக்கும். இலகுவானதாய் இருக்கும். பயிற்சி மட்டுமே கடுமையானதாய் இருக்கும். எதிரிகளின் ஆயுதங்கள் நிறைந்த போர்க்களத்தில் சண்டையிடும் வீரர்களுக்கு பயிற்சி மைதானத்தில், நெரிசல் மிகுந்த சாலையில் வாகனம் செலுத்தவோருக்குப் பயிற்சியோ சாலையில் நெரிசலில்லாத நேரத்தில் தான்.

Wednesday, July 3, 2013

குர்ஆனின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர்செய்தி தகவல் தந்தவர்  Noorul Anis Bin Hasan


ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தன்னுடைய பதவி பிரமாணத்தை குர்ஆனின் மீது எடுத்துள்ள இவரது பெயர் எட் ஹுசிக் என்பதாகும். ஆஸ்திரேலிய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவரது செயல். பைபிள் மீது பதவி பிரமாணம் எடுக்காமல் குர்ஆன் மீது எடுத்து, ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தை எட் குலைத்து விட்டதாக சமூக தளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.

அதே நேரம், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் எட்-டின் செயலை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, மத நம்பிக்கைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாகவும், தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவரவர் விருப்பம் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்த முழு விபரத்தை பின்வரும் லின்க்கின் மூலம் அறியலாம்: http://onislam.net/english/news/asia-pacific/463355-aussie-muslim-minister-defends-quran-oath.html

 தகவல் தந்தவர் Aashiq Ahamed

LinkWithin

Related Posts with Thumbnails