Tuesday, March 31, 2015

பெரியார்...... யார்!?


கட்டாய இந்தியை ஒழித்த பெரியாரை
ஜின்னா பாராட்டியதும்,
ஜின்னாவை அவரது வீட்டில்வைத்து சந்தித்ததும்/
லெனினுடன் இருந்து பணியாற்றிய திரு.எம்.என்.ராய்,
தனது மனைவியுடன் சென்னைவந்து
பெரியாரின் விருந்தினராகத் தங்கி,
காங்கிரஸ் எதிப்புமுனை உருவாக்கவும்,
கங்கிரஸ் அல்லாத மந்திரிசபையை
முதன்முதலில் சென்னையில் அமைத்து வழிகாட்டவும்
வேண்டுகோள் வைத்ததும் /
அகில இந்தியச் சட்ட மறுப்புகமிட்டி உறுப்பினர்களான
மோதிலால் நேரு, டாக்டர் அன்ஸாரி, டக்டர் அஜ்மல்கான்,
சி.ராஜ கோபாலாச்சாரியார், வித்தல்பாய் பட்டேல்,
கஸ்தூரிரெங்க அய்யங்கார் ஆகியோர்
ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் கூடி விவாதித்ததும்/
வைக்கம் வீரர் என்று திரு.வி.க. புகழ்ந்ததும்/
கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி.
பெரியார் கூட்டிய உயர் வகுப்பினரில்லாத
முதல்மாநாட்டில் கலந்துக் கொண்டதும்/
சிருங்கேரி சங்கராச்சாரியார்,
பெரியாரின் தொண்டினைப் புகழ்ந்து கடிதம் எழுதி,
தமது இடத்திற்கு வரும்படி அழைத்ததும்/
கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே
திருச்சியில் வைத்து, சந்தித்து உரையாடியதும் /
மேற்குவங்க சமூகத் தொண்டரான ஹரேந்திநாத் கோலே,
பெரியாரை சென்னையில் வந்து சந்தித்ததும் /
வினோபாஜி பெரியாரை சந்தித்ததும்/
ஜே.கிருஷ்ண மூர்த்தி பெரியாரை சந்தித்ததுமான....
இந்த நிகழ்வுகலெல்லாம்
ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல!
பெரியாரின் சமூதாயத் தொண்டிற்கு
கிடைத்த அங்கீகாரங்கள்.

Monday, March 30, 2015

”இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” --- சிராஜுல் ஹஸன்

 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அறிமுகமான அத்தனை பேருக்கும் இறைவனின் அருள்நெறியை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நெறி அந்நியமானதாய் – அறிமுகம் அற்றதாய் இருந்தது.

  ஆகவே அவர்களில் பலர் அதனை நம்பவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மிகக் குறைவான பேர்கள்தான் அதனை நம்பி ஏற்றுக் கொண்டார்கள்.

Friday, March 27, 2015

மோடியும் நவாஸ் ஷெரீபும் கூட விளையாடலாம். காஷ்மீர் பிரச்சினை காணாமல் போயிடும்.

" 11 பேர் விளையாடுறதை
11000 பைத்தியக்காரங்க ரசிக்கிறாங்க "
அப்படின்னு பெர்னார்ட்சா என்ற ஆங்கில நாடக ஆசிரியர் சொல்லி இருக்காரு.
இன்னைக்கு கிரிக்கெட் பார்த்தவங்களையெல்லாம்
பைத்தியக்காரங்கன்னு நேரடியாக சொல்லாம மறைமுகமா பெர்னார்ட்சா சொன்னதைச் சொல்லி கிண்டலடிக்கிறாங்க சில " பெருசு "ங்க .

பெர்னார்ட்சா சொல்வதெல்லாம் வேதவாக்கா என்ன ?
அவருக்கு கிரிக்கெட் பிடிக்கவில்லை. விளையாடத் தெரியவில்லை.
அதனால அதை குறை சொன்னாரு.
போகட்டும்....
பெர்னார்ட்சா ஏதாவது விளையாட்டு விளையாடி இருக்காரா ?
இல்லை.

விழுமியங்களும் நடைமுறையும் கடமைகளும்..!! -நிஷா மன்சூர்

மானுடம் முழுவதற்குமே அருட்கொடையாக வந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களை நாம் குறிப்பிட்ட ஒரு சிந்தனைக்குள் சிறைப்பிடித்து விட்டோம்.
அரபுலகத்தின் ஆடம்பர சுகபோக வாழ்வும்
ஆசியக் கண்டத்தின் பல்சமய கூட்டுவாழ்வும்
மேற்கின் நவநாகரீக நுகர்வு கலாச்சாரத்தினூடே தம் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ள முயலும் போராட வாழ்வும் பரஸ்பர ஒற்றுமையையும் பிற மதத்தினரை அணுகும் ஒத்த வழிமுறையினையும் நல்காமலேயே போய்விட்டது.

அரபுலகின் கொள்கை மற்றும் வஹ்ஹாபிய/அமெரிக்க அனுசரிப்பு/உழைப்பற்ற சுகபோகம் மற்றும் இஸ்லாமிய குடைக்குள் ஏனைய உலக முஸ்லீம்களை ஐக்கியப்படுத்தாமல் அரபுக்குடையை மட்டும் தூக்கிப்பிடிக்கும் குறுகிய மனோபாவம் போன்றவற்றிற்கு ஒட்டுமொத்த உலக முஸ்லிம் சமூகமும் பதில்சொல்ல வேண்டிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது.

இல்லையென்பது இல்லை....!


இன்பம் இல்லையென்றால்
இன்னல்களை நேரிட வேண்டியதில்லை
இருப்பது இல்லைஎன்றால்
இழப்பதற்கு என்று எதுவுமில்லை

உறவுகள் இல்லையென்றால்
பிரிவெனும் கடும் துயரிருபதில்லை
வாழ்க்கை இல்லையென்றால்
சுமைகளை சுமக்க வேண்டியதில்லை

Monday, March 23, 2015

தி. ஜானகிராமன் எழுத்தில் - வேதாந்த சாயபு...


மனுதர்மம் இரண்டாயிர வருஷப் பழசாகி, பிராமணர்கள் பலர் அதை மேற்கோள் காட்டவும் வெட்கப்பட்டு, பரண்மேல் ஏற்றிய காலம்தான்.... இந்த வேதாந்த சாயபு என்கிற தலித்தின் காலம்.

என்றாலும், சில மனுதர்மவாதிகள் பழைய ஆக்ரோஷத்தோடு அன்றைக்கும் இன்றைக்கும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தவறவில்லை.

மடங்கள் அமைத்து, 'மதத்தை காபந்து செய்கிறேன்' பேர்வழியாக மனுதர்மத்திற்கு முட்டு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்!.

Friday, March 13, 2015

இஸ்லாமிய வரலாற்றில் நெல்லை மாவட்டத்திற்கு மிக சிறப்பான இடம் உண்டு.


இஸ்லாமிய வரலாற்றில்
நெல்லை மாவட்டத்திற்கு மிக சிறப்பான இடம் உண்டு.
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டத்தில் ஏராளமான முஸ்லிம் ஊர்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான முஸ்லிம்களும் வாழுகின்றார்கள்.

மேலப்பாளையம்
காயல்பட்டினம்
தென்காசி
கடையநல்லூர்
செங்கோட்டை
போன்ற ஊர்கள் முக்கியமானவை.

பல நூற்றுக்கணக்கான ஜமாத்துகள் மாவட்டம் முழுவதும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்கள்
கல்விக்கூடங்கள்
கல்லூரிகள்
மருத்துவமனைகள்
தொழிற்கூடங்கள்
இங்கே உண்டு .

Sunday, March 8, 2015

குடும்பத்தின் சரித்திரம்...! - ஹிலால் முஸ்தபா

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு
எதிர்ப்புரம் கென்னத் லேன் உள்ளிட்ட
சென்னை போலீஸ் ஆஃபீஸ் ரோடுவரை ஒரு காலத்தில் ஜமாலியா குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தது

தற்போது இருக்கின்ற ஹோட்டல் இம்பீரியல் பகுதி முழுவதும், கென்னத் லேனில் இப்போதுள்ள லஷ்மி மோகன் லாட்ஜும் ஜமாலியா குடும்பத்தின் பங்களாக்களாக இருந்தன மீதி இடங்கள் வெற்று நிலமாக இருந்தன

ஹோட்டல் இம்பீரியல் பகுதியில் முன்பிருந்த பங்களாவில் ஓடியாடி விளையாடிய சிறுபிள்ளை ஜமால் மைதீன் பாப்பா சாஹிப்

Friday, March 6, 2015

பசுவதைப் பற்றி - துக்ளக் சோவின் கேலியும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்

சோவின் துக்ளக் இதழ் தொடங்கிய காலக்கட்டத்தில்
தமிழகத்தின் பிரபலமான அரசியல் புள்ளிகள் பலரிடம்
சோ நேர்காணல் நடத்தினார்.

பிராமணர்களுக்கும்
பிராமணர் அல்லாதோருக்குமான
மறைமுக யுத்தம்
நடந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது..

சோ வக்கீலுக்குப் படித்தவர்.
தொழில் முறையில் அவர் படித்த
திறமை / தர்க்கம் மொத்ததையும்
பத்திரிகை வழியே பிராமண அல்லாதோரின்
சமூக சிந்தனையையும்
அவர்களது அரசியலையும்
மிகத் துணிவாகவே கிண்டலடித்து
பந்தாடவே பயன்படுத்தினார்.

குறிப்பாய்
அவரது அந்த நேர்காணல்
அதற்கு ஓர் சான்று.
அது அவரது புகழை கூட்டிய சங்கதியும் கூட.

கம்யூனிஸ்ட்...
இடது / வலது தலைவர்கள் முதலாக
திராவிடக் கட்சியின் செயலாளராக இருந்த
ஆசிரியர் வீரமணி வரை
அந்த நேர்காணலில்
சோவின் தர்க்க ரீதியான கேள்விகளில் இருந்து
வென்று மீண்டுவர முடியவில்லை.

// அந்த வரிசையில்...
முஸ்லிம் லீக தலைவரான
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்களையும்
சோ நேர்காணல் நடத்தினார்.
அந்த நேர்காணல் துக்ளக் இதழிலும் வந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails