Tuesday, March 31, 2015

பெரியார்...... யார்!?


கட்டாய இந்தியை ஒழித்த பெரியாரை
ஜின்னா பாராட்டியதும்,
ஜின்னாவை அவரது வீட்டில்வைத்து சந்தித்ததும்/
லெனினுடன் இருந்து பணியாற்றிய திரு.எம்.என்.ராய்,
தனது மனைவியுடன் சென்னைவந்து
பெரியாரின் விருந்தினராகத் தங்கி,
காங்கிரஸ் எதிப்புமுனை உருவாக்கவும்,
கங்கிரஸ் அல்லாத மந்திரிசபையை
முதன்முதலில் சென்னையில் அமைத்து வழிகாட்டவும்
வேண்டுகோள் வைத்ததும் /
அகில இந்தியச் சட்ட மறுப்புகமிட்டி உறுப்பினர்களான
மோதிலால் நேரு, டாக்டர் அன்ஸாரி, டக்டர் அஜ்மல்கான்,
சி.ராஜ கோபாலாச்சாரியார், வித்தல்பாய் பட்டேல்,
கஸ்தூரிரெங்க அய்யங்கார் ஆகியோர்
ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் கூடி விவாதித்ததும்/
வைக்கம் வீரர் என்று திரு.வி.க. புகழ்ந்ததும்/
கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி.
பெரியார் கூட்டிய உயர் வகுப்பினரில்லாத
முதல்மாநாட்டில் கலந்துக் கொண்டதும்/
சிருங்கேரி சங்கராச்சாரியார்,
பெரியாரின் தொண்டினைப் புகழ்ந்து கடிதம் எழுதி,
தமது இடத்திற்கு வரும்படி அழைத்ததும்/
கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே
திருச்சியில் வைத்து, சந்தித்து உரையாடியதும் /
மேற்குவங்க சமூகத் தொண்டரான ஹரேந்திநாத் கோலே,
பெரியாரை சென்னையில் வந்து சந்தித்ததும் /
வினோபாஜி பெரியாரை சந்தித்ததும்/
ஜே.கிருஷ்ண மூர்த்தி பெரியாரை சந்தித்ததுமான....
இந்த நிகழ்வுகலெல்லாம்
ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல!
பெரியாரின் சமூதாயத் தொண்டிற்கு
கிடைத்த அங்கீகாரங்கள்.
*
நான் எழுதிய,
'பெரியார் - உலகை நோக்கிய பயணம்.'
கட்டுரையில் இருந்து....
*
கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

பெரியார் வரலாற்றுக் கையேடு - தஞ்சை மருதவாணன்
பெரியார் - தலித்துகள், முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்
பெரியார் களஞ்சியம் -4 - தொகுப்பு:கி.வீரமணி
குடியரசு தொகுப்பு-3 - தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

Taj Deen
******************************************
 
 ஜின்னா, அம்பேத்கார் & பெரியார் [ பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் சந்திக்கிறார்: முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் ''மக்கள் பூங்கா'' என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails