Saturday, June 27, 2015

வசந்த காலம்

திருமலர் மீரான்
-----------------

ரமலானுல் முபாரக்

புனித காலம்

இறையருள் குறிஞ்சிகள்

பூத்துக் குலுங்கும்

வசந்த காலம் !விண்ணவர் குயில்கள்

தீன் ராகம் இசைக்க

மண்ணகம் தேடும்

அபூர்வ காலம் !


அஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறை - தி இந்து

அஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறை - தி இந்து

 டாக்டர் எல். மகாதேவன்

நன்றி http://tamil.thehindu.com

Wednesday, June 24, 2015

சிரித்து வாழவேண்டும் ! பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !?

மனிதப்பிறவியைப் பெற்றிருக்கும் நமக்கு மனிதனுக்கான அனைத்து தகுதிகளையும் அறிவுகளையும் இறைவன் வழங்கியுள்ளான். நாம் அதை உபயோகிக்கும் விதத்தில்தான் நமது வாழ்க்கைத் தரம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக அமைகிறது. அப்படி அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் ஒன்றுதான் நாம் சிரித்து சந்தோசமாக வாழ்வதும் , பிறர் சிரிக்க நாம் கேலிச் சித்திரமாய் ஆவதுமாக இருக்கிறது. சிரித்து வாழ்வதும் பிறர் சிரிக்க வாழ்வதும் எல்லாம் தத்தமது பழக்க வழக்கம், நடவடிக்கை, அணுகுமுறை, செயல்பாடு இவைகளில்தான் அடங்கியுள்ளது.

Tuesday, June 23, 2015

தராவீஹ் தொழுகையில் பள்ளிவாசலுக்கு வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிப்பது அவசியமா ?

மனிதனாகப் படைக்கப் பட்ட அனைவருக்கும் ஐந்து வேளை தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதேபோல ரமளான் மாதத்தின் 30 நாட்களில் இரவுத் தொழுகையான தராவீஹ் தொழுகையையும் நாம் அனைவரும் இடைவிடாது கடைபிடித்து வருகிறோம். தராவீஹ் தொழுகை சுன்னத்தான தொழுகைதான் என்றாலும் நோன்பு காலங்களில் இதனை தொழுவதால் நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியில் அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகிப்பதை பல பள்ளிவாசல்கள் பின்பற்றி வருகின்றன. குர்ஆன் வசனத்தை பலரும் கேட்க வைப்பதற்காகத்தான் இரவுத் தொழுகையில், பள்ளிவாசலுக்கு வெளியில், ஒலிப்பெருக்கி உபயோகிப்பதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது அருகில் உள்ள வீடுகளிலோ, அல்லது அதே பகுதியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்காத பிற பள்ளிகளிலோ தொழுபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே !
       மவ்லவீ. அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவீ

  “உமது இறைவன் அவன் விரும்பியவற்றைப் படைக்கிறான். அவன் விரும்பியவாறே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.” (அல்குர்ஆன் 28:68)

 மனிதன் உலகில் வாழப் பிறந்துள்ளான். அவ்வாறு வாழப் பிறந்துள்ள மனிதர்களுள் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையென்றே கருதுகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தான் இவ்வாறு நினைக்கிறார்கள் என்பதில்லை. செல்வத்தின் உச்சநிலையில் இருப்பவர்களும் அவ்வாறே எண்ணுகிறார்கள். பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வாழ்க்கை என்பது ஒரு காணல் நீராகவே கருதப்படுகிறது.

  இந்நிலைக்கு காரணமென்ன வென்பதையும், அதன் தீர்வையும் மேற்காணும் இறைவசனம் குறிப்பால் உணர்த்துகிறது.

Friday, June 19, 2015

எங்களுக்கு தூய ரமலானை தந்தோனே !...- ஜே .பானு ஹாருன் .

எங்கள் இறைவனே !....
>>>>>>>>>>>>>>>>>>>

எங்களுக்கு தூய ரமலானை தந்தோனே !...
பசித்து நிற்போரின் பசியறிய செய்தோனே ..
துன்பித்து நிற்போரின் வலியறிய செய்தோனே !...
காயம் பட்டோரின் ரணமரிய செய்தோனே !...

நேர்மையான வழியை காட்டியோனே !...
கடமைகளின் மேன்மையை உணர்த்தியோனே !...
கட்டுப்பாடுகளின் தரத்தை காட்டியோனே !...
காலம் தவறாமையை உணர்த்தியோனே !...

'அன்பான நற்சேவை புரிவோருக்கு நல்லருள் விளையட்டும்'

சென்னையில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலை ரோகினிதங்கும்விடுதி எதிரில் உள்ள பிரபல அசைவ ரெஸ்டாரண்ட் விருதுநகர் உணவகத்தில் ரமலான்மாதத்தின் எல்லா நாட்களிலிலும் ஷஹர் உணவு இலவசமாக வருவோருக்கெல்லாம் விருந்தோம்பலுடன் வழங்கப்படுகிறது.
பிரபலமிக்க உஸ்மான்சாலை,ரங்கநாதன்தெருவில் பணிபுரியும் இஸ்லாமியச கோதரர்கள்மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கே வழங்கப்படும் ஷஹர் உணவை பலரும் எந்தசங்கோஜமுமின்றி சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.இந்த உணவகத்தின் உரிமையாளர் ரமலான்மாதத்தில் செய்யும் இந்த சேவைக்கென தங்களின் லாபத்தில் கணிசமாக ஒருதொகையை தனியே பிரித்து எடுத்துவிடுவாராம்.

Thursday, June 18, 2015

அல்லாஹ்வின் அருள்கனிந்த அண்ணல்நபி சமுதாயம் [பகுதி -2]

 அல்லாஹ்வின் அருள்கனிந்த
அண்ணல்நபி சமுதாயம்
பொல்லாங்கு பொய்சூது
புரியாத சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

மானத்தை விலைபேசி
ஈனத்தில் கிடக்காது
தேவைக்குக் கரமேந்தி
தெருவோரம் நிற்காது!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
உண்மையே இறைசக்தி
என்றுரைத்த அபூபக்கர்
என்றைக்கும் அச்சத்தை
ஏற்றறியா உமர்பாருக்

அருள்மறையைத் தொகுத்தளித்த
அன்புநிறை அருள் உதுமான்
இருகரத்தில் வாளேந்தி
எதிர்ப்பழித்த புல் அலியார்

வழிவந்த சமுதாயம்
வளம்கண்ட சமுதாயம்
பழிசொல்லித் தரிவோரைப்
புறம்கண்ட சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

நம்ரூத்தை பிர்அவ்னை
எதிர்கொண்ட சமுதாயம்
கொம்பனாம் அபூஜஹலை
கூறுபோட்ட சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

பெண்ணுக்குச் சொத்துரிமை
பிள்ளைகட்கு முழுஉரிமை
கண்ணுக்கு நிகரான
கல்விக்கு முன்னுரிமை

ஈட்டுகிற பொருளுக்கும்
ஏழைவரி விதிபடைக்கும்
ஆட்சியை உலகுக்கு
அறிவிக்கும் சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

உன்னத சமுதாயம்
ஒருக்காலும் தாழாது
என்னதான் எதிர்த்தாலும்
எப்போதும் வீழாது

அல்லாஹ்வின் அருள்கனிந்த
அண்ணல்நபி சமுதாயம்
பொல்லாங்கு பொய்சூது
புரியாத சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

(வேண்டிய கவிதைக் கண்ணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.)
ஹனீபா நவ்ஷாத்திற்குச் சென்ற மாதம் அனுப்பிய மீதம் உள்ள
மூன்றில் இரண்டாம் கவிதை:----2--
 
Hilal Musthafa

Tuesday, June 16, 2015

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !

ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

Sunday, June 14, 2015

ஞானம் இங்கேயும் கிடைக்கும் ..

ரொம்ப அருமையான தம்பதிகள் அவர்கள்.
ரொம்பப் பாசம் .
மனமொத்த வாழ்க்கை.
கணவனின் திருப்தியில் இறைவனின் திருப்தியைக் கண்ட பெண் அவர்.
மனைவியின் முகம் வாடப் பொறுக்காத கணவர் அவர்.
இதயங்கள் ஒன்றாகி இரு தேகங்களாக வாழ்ந்தவர்கள்.
அவர்களுக்குக் கல்யாணமாகி கொஞ்ச வருஷங்களே ஆகி இருந்தது.
குழந்தைகள் இல்லை.
இறைவன் நாட்டத்தில் பொருத்தம் கொண்டு பொறுமையோடும் இனிமையோடும் வாழ்ந்தார்கள்.
ஒருநாள் கணவரின் உள்ளத்தில் ஒரு எண்ணம் உதயமானது.
இல்லறத்தில் இருந்து கொண்டே இறை இன்பத்தை பெற முயற்சித்தால் என்ன ?
எண்ணத்தை மனைவியிடம் சொன்னார்.
மணாளன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத மனையாள் அப்படியே ஆகட்டும் என்றார்.
இருவரும் தொழுகை நோன்பு இபாதத் என்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.
ஆனாலும் அவர்களால் அதில் முழு இன்பம் பெற முடியவில்லை.
இறைவனைப் பெரும் பேரின்பத்தை அடைய முடியவில்லை. இறை ஞானத்தின் துளியைக் கூட பருக முடியவில்லை.
காரணம்...

Friday, June 12, 2015

படச்சோனே ...

அல்லாஹ்வைத் தமிழில் எப்படி அழைப்பது என்பது குறித்து பலருக்கும் பலமாதிரி அபிப்பிராயங்கள் இருக்கின்றன.
இறைவன் என்று சொல்லலாமா ?
அது சரியா என்று கேட்கிறார்கள்.
மனதில் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு ஆண்டவன் என்றாலும் இறைவன் என்றாலும் அது அல்லாஹ்வைத்தான் குறிக்கும்.
இந்த விஷயத்தில் கேரளா முஸ்லிம்கள் தெளிவு.
குமரி மாவட்ட முஸ்லிம்களிலும் ஏராளமானவர்கள் தெளிவுதான்.
அவர்கள் " படச்சோனே " என்பார்கள்.
அதற்கு " படைத்தவனே " என்பதே பொருள்.
அல்லாஹ் தனது தூதருக்கு இறக்கிய குரானின் முதல் அத்தியாயத்திலும் ...

Thursday, June 11, 2015

நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக…கான் பாகவி
 நான் மத்ரசாக்களில் ஆசிரியராக இருந்த வரை, பெரும்பாலும் எனக்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் என்று பார்த்தால், அரபி இலக்கணம், இலக்கியம், தர்க்கவியல், கிரேக்கத் தத்துவம் போன்ற துறைகளாகவே இருக்கும். அதிலும் தத்துவம் மற்றும் தர்க்கவியல் பாடங்கள் புரிவதும் புரியவைப்பதும் எளிதல்ல. உயிரைக் கொடுத்து, குரல் உயர்த்தி, வியர்க்கவிறுவிறுக்கச் சிரமப்பட்டு பாடத்தை விளக்கி முடிப்பேன்.

பத்தில் நான்கு மாணவர்களாவது விளங்கியிருப்பார்கள். ஆறு மாணவர்கள் விரக்தியின் உச்சியில் நிற்பார்கள்; விரக்தி வெறுப்பாக மாறி, வகுப்பையும் வகுப்பாசிரியரையும் கடித்துக் குதறிவிடும் நிலையை அடைந்திருப்பார்கள். பாடம் புரிந்திருக்காது. அல்லது புரிந்தும் புரியாதிருக்கும். அல்லது புரிந்தாலும் இதனால் என்ன புண்ணியம் என்று யோசிக்கவைக்கும்.

நானும் படித்துக்கொடுத்து முடித்தபின், இப்பாடங்களால் இம்மைக்கோ மறுமைக்கோ என்ன பலன் எனயோசிப்பேன். கிரேக்கத் தத்துவங்களைச் சொல்லிக்கொடுத்தபின், அதனால் நேரவிரயமும் மூச்சு வீணானதும்தான் மிச்சம் என்று மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டியதுண்டு. “அணுவைப் பிளக்க முடியுமா?” என்றொரு விவாதம் கிரேக்கத் தத்துவத்தில் உண்டு. ‘முடியும்’ என்ற கருத்தாளர் தங்கள் வாதங்களையும் ‘முடியாது’ என்போர் தம்வாதங்களையும் முன்வைத்து அடித்துக்கொள்வார்கள் பாருங்கள்! பிராணன் போய்விடும்!

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !

மெளலானா மெளலவி சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாகவி

  தன்னம்பிக்கை என்பது மனிதனின் வாழ்வில் இடம்பெறவேண்டிய இன்றியமையாத உணர்வாகும். தன்னம்பிக்கையற்ற மனிதர் தம் தனிப்பட்ட வாழ்விலும் இல்லறவாழ்விலும் பொதுவாழ்விலும் வெற்றிபெற முடியாதவராகவே இருப்பார். பொதுவாக தன்னம்பிக்கையே மனிதனைச் செயல்பட வைக்கும் ஊக்குவிப்புக் கருவியாக உள்ளது. சாதனையாளர்களின் வெற்றிக்குத் தன்னம்பிக்கையே ஆணிவேராகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது. ஒரு தனிமனிதனுக்கு இது ஏற்புடையது போன்றே ஒரு சமூகத்தின் வெற்றி வாழ்வுக்கும் இது பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

Monday, June 8, 2015

மனதை ஆன்மீகத்தின் பால் செலுத்த ஆரம்பித்து விடுங்கள் .....உங்கள் மனம் உங்கள் சொல் கேட்கும் !...

எதையெல்லாம் இஸ்லாம் செய்யக்கூடாது என்று போதிக்கிறதோ அதையெல்லாம் செய்யக்கூடியவர்களே நம்மில் அதிகம் !.

.எதைக்கூர்ந்து நோக்கினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு நோக்குங்கள் .இஸ்லாம் நமக்கு தவறிழைக்க ஒருபோதும் கற்றுத்தரவில்லை !..

.அடுத்தவர் பசி உணரச்செய்த மார்க்கம் !..

.வட்டி வாங்குவது அறவே கூடாது என்று அடுத்தவர் வலி உணரச்செய்த மார்க்கம் !...

Friday, June 5, 2015

ஆரூயிர் அண்ணன். டி.எம். உமர் பாரூக் மரணமடைந்தார் -Jawahirullah MH

தஞ்சை மாவட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக களமாடியவர் திருப்பனந்தாள் டி.எம். மணி. பல்வேறு துயரங்களைச் சந்தித்து இறுதியில் சாதியை ஒழிக்க வல்ல வாழ்வியல் வழிமுறை இஸ்லாம் என்பதை உளமாற உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அவரது வாழ்வே தீண்டாமைக்கு எதிரான போராக இருந்தது. முதன் முதலாக 1989ல் நீடூரில் தீண்டாமை குறித்து ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாட்டை அப்போது இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தமிழக மண்டலத் தலைவர் நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி செய்திருந்தார். டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, மு. குலாம் முஹம்மது கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், மவ்லவி இஸ்மாயீல் நாஜி, மவ்லவி இப்றாஹீம் ஜமாலி முதலியோருடன் நானும் பங்குக் கொண்டேன். அந்த நிகழ்வில் தான் முதன் முதலாக சகோதரர் டி.எம். மணியின் உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வியந்துப் போனேன் அவரது தியாகம் நிறைந்த சிந்தனை வெளிப்பாட்டை அறிந்தேன்.

Thursday, June 4, 2015

மகளுக்குத் தாயின் அறிவுரை !

மகளிர் பக்கம் :

           மகளுக்குத் தாயின் அறிவுரை !

  அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செயல்பாடுகள் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

  உம்மு அயாஸ் பின்த் அவ்ஃப் இப்னு முஸ்லிம் அஷ்ஷைபானீ என்பவள் கிந்தாவின் அரசன் அம்ர் இப்னு ஹிஜ்ர் என்பவருக்கு மணமுடிக்கப்பட்டாள். திருமணம் முடிந்து வழியனுப்பி வைப்பதற்கு முன் அவளுடைய தாய் உமாமா பின்த் அல்ஹாரிஸ் தன் மகளைத் தனியாக அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினாள்.

Monday, June 1, 2015

சில நேரச் சிறகுகள் !

சில நேரச் சிறகுகள் !

                                 -கம்பம் ஹாரூன் ரஷீத்

சில நேரங்களிலாவது

சிந்தனைச் சாளரத்தில்

படைப்பியல் நுகர்வோம்;

பிறப்பியல் நுணுக்கங்கள்

சிறப்பியல் சிந்தையிடும் !சில நேரங்களிலாவது

கோபக் குமுறல்களில்

குளிர் நீருற்றுவோம்;

இரத்தக் கொதிகலன்

சத்தமின்றிச் சாந்தமிடும் !

ஐ.ஏ.எஸ்.- இலவசப் பயிற்சி

ஐ.ஏ.எஸ்.- இலவசப் பயிற்சி

ஐ.ஏ.எஸ்- தேர்வு எழுதுவதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த

முஸ்லிம் ஆண்-பெண் பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு,

பயிற்சிக் கட்டணம் ஆகியன ஸ்பான்ஷர்ஷிப் மூலம் இலவசமாக
professorsemumu@gmail.com

வழங்கப் பெற்றுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதற்கான தகுதித் தேர்வு வரும் 13-06-2015 அன்று காலை சென்னை, திருச்சி, திருநெல்வேலி,

ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.  கலந்துகொள்ள

விரும்புவோர் விண்ணப்பத்திற்கும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:-

E.mail: professorsemumu@gmail.com
Mobile: 0091- 9444165153

from:    Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>

நீயே .... எல்லாம் தந்தாய் ....!

நீயே .... உயிர் தந்தாய்
இவ்வுலகில் வாழ்ந்திட
நீயே .... உடல் தந்தாய்
உழைத்து உண்டிட

நீயே .... மனம் தந்தாய்
மகிழ்ச்சியாய் இருக்க
நீயே .... அறிவு தந்தாய்
தீதும் நன்றும் பிரித்தறிய

நீயே .... பார்வை தந்தாய்
பார்ப்பதை பழகிக்கொள்ள
நீயே .... கேள்வி தந்தாய்
கேட்டதை பேசிப்பழக

LinkWithin

Related Posts with Thumbnails