Saturday, April 30, 2011

மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?


-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.
“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை செய்யக்கூடிய எண்ணத்திலும் இடத்திலும் தொழக்கூடிய மஸ்ஜிதிலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கவோ பிரார்திக்வோ கூடாது. மரணித்தவர்களை அடக்கம் செய்யவோ கூடாது.
அல்லாஹ்வை வணங்குமிடத்தில் மரணித்தவர்களை ஏன் அடக்கம் செய்யவேண்டும்?

Friday, April 29, 2011

முயன்றால் வெல்லலாம்..!!!

கல்லினை உளியால் நீக்கி
            கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
            சொல்வனம்  புலவன்  யாப்பில்
நெல்லினை  விதைத்து  ஆவல்
            நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து  நெற்றி
             வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
           வழிகளின் துணிவு என்போம் 
            
 
துயரமாம் நோயில் வீழ்ந்துத்
            துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
           நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
          உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
        வித்தகர் வழிகள் போற்று

Thursday, April 28, 2011

ஆம்பூர் பிரியாணி!

தேவையான பொருட்கள் :
 பாசுமதி அரிசி - ஒரு கிலோ              
ஆட்டுக்கறி - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோஇஞ்சி - 250 கிராம்
பூண்டு - 150 கிராம்
பச்சைமிளகாய் - 10 அல்லது 8
 
தக்காளி - அரை கிலோ
மல்லி இலை - ஒரு சிறிய கட்டு
 
புதினா - ஒரு சிறிய கட்டு

தயிர் -  ஒன்றரை கப்
எலுமிச்சம்பழம் - ஒன்று
நெய் - 100 கிராம்
எண்ணெய் - கால் லிட்டர்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - 5 கிராம்
 

Saturday, April 23, 2011

நீரின்றி அமையாது உலகு ...

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:
அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் ...” (24:45) என்றும்
... நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் ...” (21:30) என்றும் கூறுகிறான்.

அடுத்த தமிழக முதல்வர் யார்? அமீர் பரபரப்பு பேட்டி

சென்னை: 'ஆதிபகவான்’ பட இயக்குரான அமீரிடம் தற்போதைய தமிழக அரசியல் நிலைமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்து பேசிய அமீரிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்த தமிழக முதல்வர் யார்? என்று கேட்டார் அதற்கு  பதிலளித்த இயக்குனர் அமீர்.....

ஆதிபகவான் படத்தை பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யார் என்று கேட்கிறீர்கள்  அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமே அல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண் தப்பினால் பெண்’ என நான் சொல்ல முடியாது
இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், அரசியல் நாகரிகம் செத்துவிட்டது. கேவலமான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல்,  அவர் குடிக்கிறார்,  போதையில் அடிக்கிறார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள்.
நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சில திரையுலக சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற்றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!'' என்று கூறினார்

Friday, April 22, 2011

வாசிப்பதை நேசிப்போம் - இன்று உலக புத்தக நாள்

இன்று ஏப்ரல் 23  உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நல்ல புத்தகம்  ஒரு நல்ல நண்பனுக்கு  சமம் என்பார்கள்.
ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள், 1616 ம்  ஆண்டு  ஏப்ரல்  23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை நினைவு கூரும்  வகையில், ஏப்ரல்   23ம் தேதியை, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.

Thursday, April 21, 2011

பருவமறிந்து பயிரிடலாமே ! - அனுபவம் பேசுகிறது !

மாணவமணிகள் பள்ளி மேல்நிலை இறுதித் (+2) தேர்வில் மதிப்பெண்கள் எப்படியிருக்குமென்றும் அல்லது இவ்வளவு நிச்சயம் பெற்றிடுவோம் என்றும் முடிவுகளால் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கும் இளசுகளே !

நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? ஒருவேளை கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? சந்தேகங்கள் அலையலையாய் அடிக்கத்தான் செய்யும்!. சரி மறுபக்கம், கட்டுக்கோப்புடனிருந்த பள்ளி வாழ்க்கை நிறைவுக்குள் வந்து விட்டது. இனி, ஜாலியான கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்டமாகக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் பலர்.

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்

    பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களும் அதற்கப்பாலுள்ள ஒரு காரணத்தைத் தேடுகின்றது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மைக்கும் மனிதன் காரண்தைத் தேடுகின்றான். அணுமுதல் நட்சத்திர மண்டலங்கள் வரை உள்ள எல்லா சிறிய பெரிய வஸ்துக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொன்றினதும் காரணத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும்போது அந்தக் காரணத்தின் காரணத்தைத் தேடி சிந்தனை நீளுகின்றது. இது சங்கிலித் தொடர் போன்று நீண்டு செல்வதில்லை. அது காரணங்கள் தேவைப்படாத ஒருவனில் சென்றடைகின்றது. அவன் எல்லாத் தேடுதல்களினதும் இறுதியாக இருக்கின்றான். எல்லா வகையான தேட்டங்களும் விசாரணைகளும் இந்த பரமமான எல்லையில் முடிவடைகின்றன. பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் காரணங்களற்றது என்று நம்மால் கூற இயலாது. சிறிதாகட்டும் பெரிதாகட்டும் எல்லா வஸ்துக்களுமே காரணங்களைத் தேடுகின்றன. ஆக காரணங்கள் அவசியமற்ற பராசக்தி பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். பதார்த்தத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தையே இஸ்லாம் அல்லாஹ் என்றழைக்கின்றது.

Friday, April 15, 2011

பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்

தேர்வுகள் முடிந்துவிட்டன -  பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்

10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன.  மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம்வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்கப் பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.


விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?

1. ஆங்கில மொழித்திறனை (English language skill) வளர்த்துகொள்ள முயலலாம்

ஆங்கில மொழித்திறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழிப் பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள மிகச்சிறந்த வழி, ஆங்கில குர்ஆனை, தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும்; அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

Tuesday, April 12, 2011

நீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…!

தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும்  என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.
கருத்தராவுத்தர் அப்பா, காதிர் முகைதீன் அப்பா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது, பெரியவர் ஜமால் முகம்மது போன்ற பல தன்னலமற்ற தியாகிகள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் தான் இன்றைய தலைமுறை கல்வி பயின்று வருகிறது. இந்த நிறுவனங்கள் சிலவற்றின் இன்றைய செயல்பாட்டில் பலருக்குத் திருப்தி இல்லையென்றாலும் கூட உருவாக்கியவர்களின் உயர்ந்த தியாகத்தை யாராலும் மறுக்க இயலாது. அது இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.
இவையெல்லாம் 1950-1970 வரை வாழ்ந்த வள்ளல் பெருமக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஓய்வறியா உழைப்பின் வெளிப்பாடு.

Friday, April 8, 2011

இதயத்தில் இருக்கிறது இலவச மின்சாரம் !

பெற்றவளின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது.

நம் இதயம் நாள் ஒன்றுக்கு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் அணைபோடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதயம் சுயேட்சையாக துடிப்பது இல்லை, அது துடிக்கவும் இயங்கவும் ஓர் உந்துதல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது அதோகதிதான். மின்சாரம் உற்பத்திச் செய்யும் நிலையம் இதயத்தின் மேல் வலது பக்கமிருக்கும் ஒரு சிறு அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை நமது ஜெனரேட்டராகும். இதனை ஆற்காட்டாரின் இயங்கு விதிப்படி கீழ் இயங்கவைத்தால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்கு இதயத்தின் பல பகுதிகளில் இருந்தும் மின்சாரம் கிடைக்கும். இதனால் திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரித்து, கூடுதல் மின்சாரம் பாய்ந்து மரணம் கதவைத் தட்டவும் வாய்ப்பு உண்டு!


''இதயம் என்பது மின் உற்பத்தி மூலமும், ரத்தக் குழாய்களில் ஊட்டச் சத்துகள் இதயத் தசைக்குக் கொண்டுசெல்லப்படுவதன் மூலமும் இயங்குகிறது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படும்போது, ஊட்டச் சத்து கொண்டுசெல்லப்படுவது பாதிக்கப்பட்டு, இதயம் செயல் இழக்கிறது. இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதும், மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரச்னைக்கு ஆளானாலும், இதுபற்றி போதிய விழிப்பு உணர்வு இன்னமும் ஏற்படவில்லை.

மேலேச் சொன்ன சைனஸ் நோட் எப்போதும் ஒரே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்பது மருத்துவர்களின் கருத்து. மனித உடலின் உழைப்பு அசைவுகளுக்கு ஏற்ப உற்பத்தி மாறுபடும். அதாவது தூங்கும்போது குறைவாகவும், ஓடுதல், மாடிப் படி ஏறுதல், பயம் ஏற்படும்போது என சமயங்களில் அதிகமாகவும் உற்பத்தியாகி இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்கிறது.

இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்​மியா எனப்படுகிறது, இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா எனப்படுகிறது. இதயத்தின் எந்த ஒரு திசுவில் இருந்தும் தேவை இல்லாமல் மின்சாரம் வெளியாகத் தொடங்கிவிடுவது. உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், திடீர் படபடப்பு, வியத்துக்கொட்டுதல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதயக் கீழ் அறைகளில் மின் உற்பத்தி ஏற்படுமானால், உயிருக்கு ஆபத்து நேரிடும்.

இந்த பிரச்சினை கருவில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய வால்வு பிரச்னை, தைராய்டு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கும், புகையிலை, மதுப் பழக்கம் உள்ளவர்​களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை ஈ.சி.ஜி. எடுப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இதில் தெரியவில்லை என்றால், எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மூலம் கண்டறியலாம்.

தேவை இல்லாத மின் சக்தி எங்கு உற்பத்தியாகிறது என்பதைக் தேடிக் கண்டறிந்து, அதனை மருத்துவர்கள் அழிப்பதன் மூலம் கூடுதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்படுகிறது (இந்த மருத்துவ தொழில் நுட்பத்தைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்).

இப்போ சொல்லுங்க மின்சாரம் ஏன் தடைபடுகிறது ? ஒரு வேளை மின்சாரம் தயாரிக்கும் ஜெனெரேட்டரோடு இதயங்கள் திருடப்படுவதலா ?

வாசித்ததும் நேசித்ததும் உங்களின் சுவாசத்தை சீராக்கத்தான் இப்பதிவு !

தொகுப்பு: அபுஇபுறாஹிம்.

Saturday, April 2, 2011

"இந்தியா மீது வெறுப்பு வேண்டாம்": அஃப்ரிதி

இந்த உலகக் கோப்பையில் அஃப்ரிதி தலைமையில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேறி எழுச்சி கண்டது. ஆனால், அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து வெளியேறி பின் நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு கராச்சி விமான நிலையத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அணித்தலைவர் அஃப்ரிதி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்த கருத்து சரியல்ல. இதுகுறித்து அவர் என்னிடம் விளக்கம் தர முயன்றார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுபோன்ற நேரத்தில் அவர் இதை தவிர்த்து இருக்கலாம்.

இந்தியாவில் தயாராகும் இந்திப் படங்களை பார்க்கிறோம். அங்குள்ள "டிவி' தொடர்களை ரசிக்கிறோம். திருமணம் போன்ற மதச்சடங்குகளும், இங்கு போலத்தான் உள்ளது. ஆனால், இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் போது மட்டும், அதிகளவில் ஏன் வெறுக்கின்றீர்கள். இங்குள்ள மக்களின் மனநிலையை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு தான்; இதனை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்.
என்று கூறி இருக்கிறார். 
Source : http://www.inneram.com/2011040215129/afridi-says-no-need-of-hatred-against-india
(இது இரண்டு நாடுகளுக்கும் பொருந்தும்)

Friday, April 1, 2011

டேஸ்டி முட்டை குருமா


தேவையான பொருட்கள் :

முட்டை - 5

கேரட் - 1

பீன்ஸ் - 4

சிறிய வெங்காயம் - 20

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

மிளகாய்த்தூள் - காரத்திற்க்கேற்ப

மஞ்சள்தூள் - சிறிதளவு

கரம் மசாலாத்தூள் - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - அரை கப்

மல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

LinkWithin

Related Posts with Thumbnails