அல்ஜீரியாவின் கட்டிடக்கலை உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது உலகின் மிக உயரமான (870 அடிகள்) மினரா கொண்ட பள்ளிவாசல்.
1,20,000 பேர் தொழுகையில் கலந்து கொள்ளும் விதமாக மிக விசாலமாக, அல்ஜீரிய வளைகுடாப் பகுதியின் கடற்கரை ஓரமாக இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பள்ளியில் குர்ஆன் கல்வி பயிலரங்கம், நூலகம், அருங்காட்சியகம், குடியிருப்புகள், மலர்வனம் மற்றும் பழத்தோட்டம் போன்றவையும் அமைக்கப்படவுள்ளது.
Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Wednesday, January 28, 2015
Sunday, November 17, 2013
பள்ளிவாசல்: ஒரு பார்வை
முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கிறார்கள்.
இப்பெயர் தொடர்பான ஒரு பார்வை:
பள்ளி
சங்க காலத்தில் அரசர்கள் உயிர் துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் பள்ளி என்றே தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவையும் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.
ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறிய பின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் பள்ளிவாசல் என்ற தெருவே உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 'பள்ளிவாசல்' என்ற கிராமம் உள்ளது.
இப்பெயர் தொடர்பான ஒரு பார்வை:
பள்ளி
சங்க காலத்தில் அரசர்கள் உயிர் துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் பள்ளி என்றே தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவையும் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.
ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறிய பின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் பள்ளிவாசல் என்ற தெருவே உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 'பள்ளிவாசல்' என்ற கிராமம் உள்ளது.
Sunday, May 20, 2012
இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும்
ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதும்.ஆட்சி அதிகாரத்தை அதை எடுப்பதும் இறைவன் வசமே. முற்றிலும் உண்மை.
நாளை இறைவன் உங்களிடமும் நிச்சையமாக கேள்விகளை கேட்பான் என்பதை மறவாதீர்கள்- இதுவும் முற்றிலும் உண்மை.
"அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை".- நபி மொழி
"பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்".- நபி மொழி
இவைகளும் அனைவரும் பேண வேண்டிய நல்வழி என்பதும் உண்மை
சில ஆலோசனைகள்
நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவர் வல்லவராகவும் இருக்க வேண்டும்.
இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும் . அதனால் ஊர் ஒற்றுமை கெட்டால் அனைத்தும் கெட்டுவிடும்.அதனால் ஒற்றுமைக்கு முக்கியம் தரப்பட வேண்டும். அல்லாஹ்வே பெரியவன் என்ற நல்ல நோக்கம் வேண்டும். நமக்குள் பெரியவர், உயர்ந்தவர், நம் கட்சிக்காரர் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்கக் கூடாது.
அனைத்துக்கும் மேல் அவர் இறை பக்தியுடன் இருந்து அல்லாஹ்வினை தொழக்கூடியவராக இருக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு முடித்த வரை அவசியம் வர வேண்டும். அனைத்துப் பள்ளிவாசல்களும் இறைவனை தொழக்கூடிய இடம்தான் அதனால் "இது பெரிய பள்ளிவாசல் அது சின்ன பள்ளிவாசல் அது அந்த தெரு பள்ளிவாசல்" என்ற வேற்றுமை காட்டக் கூடாது. பள்ளிவாசல் அழகுக்கா அல்லது தொழுவதற்கா!
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்
அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி தொழ வருபவர்களை ஏதாவது காரணம் சொல்லி அவருக்கு தடை விதிக்கக் கூடாது அவர் மற்றவருக்கு இடையூறாக இருக்கும் வரை!
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? 2:114 அல்-குர்ஆன்
நமது கவனம் நமது தொழுகையில் இருக்க வேண்டும். நம் பார்வை அடுத்தவர் தொழுவதின் பார்வைக்கு போகும் பொழுது நாம் நமது தொழுகையின் ஈடுபாட்டில் இல்லாமல் போய் விடுகின்றோம் என்பது உறுதியாகிவிடுகின்றது
இங்கு கிளிக் செய்து படியுங்கள்
பள்ளிவாசல் எதற்கு? அழகுக்கா அல்லது
இருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள்
.படத்தினை கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள்
http://seasonsnidur.blogspot.in/2010/10/blog-post_2864.html
Wednesday, February 1, 2012
Monday, January 9, 2012
இரண்டு யூதர்கள்!
அவர்கள்
சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது
ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.கிட்டத்தட்ட சுய நினைவை இழக்கும் தருவாயில், விடிகாலை நேரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி கண்ணில் பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர் இருவரும். தொழுகைக்கான பாங்கு சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்க, நெருங்கிச் சென்று பார்த்தபோது அது ஒரு பள்ளிவாசல் என்பதைக் கண்டனர்.
ஏதோ உணர்ந்தவனாக சாமுவேல் கூறினான். “பெஞ்சமின்.. இதோ பார். இது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பது நிச்சயம். நாம் முஸ்லிம்கள் என்று நடித்தால் மட்டுமே உணவு கிடைக்கும். எனவே, என் பெயரை முஹம்மத் என்று சொல்லப்போகிறேன்.”
Labels:
பள்ளிவாசல்,
ரமளான் மாதம்
Saturday, April 30, 2011
மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.
“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை செய்யக்கூடிய எண்ணத்திலும் இடத்திலும் தொழக்கூடிய மஸ்ஜிதிலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கவோ பிரார்திக்வோ கூடாது. மரணித்தவர்களை அடக்கம் செய்யவோ கூடாது.
அல்லாஹ்வை வணங்குமிடத்தில் மரணித்தவர்களை ஏன் அடக்கம் செய்யவேண்டும்?
Saturday, March 12, 2011
Friday, December 31, 2010
அந்த தைரியம் யாருக்கு வரும்?-- by டாக்டர் ஹிமானா சையித்
அந்த தைரியம் யாருக்கு வரும்?
தமிழக தென் மாவட்டமொன்றின் கடற்கரைக் கிராமம். நீண்ட நாட்களாக கட்டுமாணத்தில் கிடந்த பள்ளிவாசல் சுறுசுறுப்புடன் கட்டி முடிக்கப் பட்டு திறப்பு விழா காண்கிறது. அந்தப் பகுதி முஸ்லிம்களின் பெருவாரியான வருகையால் அந்தப் பள்ளி வளாகம் எங்கும் மனிதத் தலைகள்! உச்சி நேரம் நெருங்க நெருங்க வேன்களும் கார்களும் அந்தக் கிராமத்தை முற்றுகையிட ஆரம்பித்தன. ஆயிற்று... ஜும்ஆ நேரமும் நெருங்கிற்று! விழாக் குழுவின் தலைவர் செயலர் போன்ற நிர்வாகிகள் ஒரு வித பதற்றத்தில்!
காரணம், பள்ளிவாசலைத் திறந்து வைக்க வேண்டிய முக்கியப் பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
செல்போனெல்லாம் தமிழகக் கிராமங்களை எட்டியிருக்காத காலம்.
பள்ளிவாசலில் இருந்த போனில் பல முறை கால் போட்டுப் பேசிப்
பார்த்தாகிவிட்டது.பிரமுகர் ஊரிலிருந்து ஜீப்பில் புறப்பட்டு விட்டார் என்ற தகவல் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது.
"இதோ இப்போது வந்துவிடுவார்!"; "இன்னும் அரை மணி நேரத்தில்
வந்துவிடுவார்!";
"இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடுவார்!" என்றெல்லாம் பல முறை அறிவித்தாயிற்று.
ஆனால்.... பிரமுகர் வந்தபாடில்லை!
ஊர் நிர்வாகிகளின் முகங்களில் ஏகமாய் இறுக்கம்!
ஒரு சில இளவட்டங்கள் தங்களின் அதிருப்திகளை முகங்களில்
பிரதிபலிக்க... சிலர் முணுமுணுக்க ..சில சலசலப்புகள்!
அழைப்பின் பேரில் வந்திருந்த பக்கத்து ஜமாஅத்துக்களைச் சேர்ந்த நிர்வாகிகள்
அக்கிராம நிர்வாகிகளை நெருக்கத் தொடங்கி விட்டனர்.
"நேரம் போய்க்கிட்டே இருக்குது பாருங்... ஜும்ஆவை நேரம்
கடத்தியெல்லாம் நடத்த முடியாது... அதுதான் பெரிய ஹளரத்
காலையிலேயே வந்து காத்துக் கெடக்காங்கள்ல?...அவங்கள வச்சே பள்ளியை திறந்துட்டு, ஜும்ஆ ஏற்பாட்டக் கவனிக்கலாம் ....
பிரமுகர் பின்னால வந்து விழாவுல கலந்துக்கிடட்டுமே? " என்ற
ஆலோசனைகள்!
ஊர் நிர்வாகிகள் சிலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அதில் உடன்பாடு
தெரிகிறது. ஆனால் மூத்தவர்கள் அதற்கு ஒப்ப மறுக்கிறார்கள்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது;
சலசலப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.
பள்ளியின் வெளிவராண்டாவில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த
பெரிய ஹளரத் - துஆவுக்காகவும் சிறப்பு ஜும்ஆவுக்காகவும்
திருநெல்வேலியிலிருந்து அழைக்கப் பட்டிருந்த ஹளரத் - மெல்ல எழுந்தார்கள்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
என்று உரக்க ஒலித்தார்கள்!ம்பீரமான அந்த ஸலாம் முழக்கத்தில் கூட்டத்தின்
கவனம் முழுவதும் இப்போது அவர்களை நோக்கித் திரும்பியது !
சலசலப்பு மறைகிறது!
ஹளரத் அவர்களின் பயான்(சொற்பொழிவு) தொடங்கிவிடுகிறது!
"இஸ்லாத்தில் நேரந்தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதிலிருந்து
தொடங்கி, இறையச்சம் பற்றிய உரை கம்பீரமாக நகர்கிறது!
அவசரம் அவசரமாக மைக் சரி செய்யப்பட்டு அவர்கள் முன் வைக்கப்படுகிறது
.
இப்போது ஒட்டு மொத்தக் கூட்டமும் பள்ளியின் வெளிப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
ஹளரத் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்!
"இஸ்லாத்தில் தனிமனிதர்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்றாலும் - நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மனிதர்களுக்காக வணக்க வழிபாடுகளைத் தள்ளிப்போட யாருக்கும் அதிகாரமில்லை. சரியாக ஜும்ஆ நேரம் வந்ததும் நான் குத்பாவைத் தொடங்கிவிடுவேன்."
கூட்டம் முழுதும் அதை அப்படியே அங்கீகரிக்கிறது.
ஆயிற்று...!இன்னும் ஓரிரு நிமிடங்களே பாக்கி !
ஆர்ப்பாட்டமாக- பெரிய ஆர்ப்பரிப்பான பட்டாளத்தின்
'அல்லாஹ¤ அக்பர்' என்ற முழக்கத்துடன் நுழைகிறார் பிரமுகர்!
"இறையில்லக் கொடை வள்ளல் வாழ்!" என்ற கோஷங்களும்
இடையிடையே!
கூட்டத்தில் இப்பொழுது ஒழுங்கு குறைகிறது. உட்கார்ந்திருந்தவர்கள் சிலர் எழுந்து பிரமுகருடன் பரபரப்பாக நுழைகின்ற கூட்டத்துக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஊர் நிர்வாகிகள் பிரமுகரை இழுத்துச் சென்று பள்ளியின் தலைவாசல் கதவைத் திறக்க வைக்க, முண்டியடித்துக் கொண்டு கூட்டம் உள்பள்ளிக்குள் திமுதிமு வென்று ஓடுகிறது! எத்தனை பேர் உளுவுடன் என்பது
அல்லாஹ்வுக்கே வெளிச்சம் என்று ஒருசிலர் முணுமுணுக்கிறார்கள்!
சில ஆயிரம் ரூபாய்களை பள்ளிகள் கட்ட அன்பளிப்புச் செய்கின்ற அந்தப் பிரமுகர் வேண்டுமென்றே இப்படி விழாவுக்குத் தாமதமாக வருவது பழக்கம் என்றும் சிலர் பேசிக் கொள்கின்றனர். அந்த விழாவில் நானும் இருந்தேன்.
அந்த ஹளரத் கிப்லா அவர்களின் தாட்சண்யமற்ற தைரியத்தை நேரில் பார்த்து விளங்கிக் கொண்டேன்.
அதன் மூலமே அவர்களுடன் தொடர்பு... நெருக்கம்!
அவர்களின் 'ஜமாஅத்துல்உலமா' மாத இதழில் 20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து "நாடும் நாமும்" என்ற தொடரை எழுதி வருகிறேன்.
மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதலி ஹளரத் அவர்களை
- அவர்களது தைரியத்தை மறக்க முடியுமா என்ன?
.டாக்டர் ஹிமானா சையத்
( 'ஊற்றுக்கண்' எனது 36- வது நூல்.
அதில் சில கட்டுரைகள் என் வாழ்வில் சந்தித்த ஆலிம்கள்)
Labels:
நிர்வாகிகள்,
நேரந்தவறாமை,
பள்ளிவாசல்
Subscribe to:
Posts (Atom)




















