பள்ளிவாசல் எதற்கு?
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. 4:142 அல்-குர்ஆன்
நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அல்-குர்ஆன் 6:162
நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)
நபி வழியின் அடிப்படையில் நம்முடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்க வேண்டும். நாம் தொழும்பொழுது எவ்வளவு மன நிம்மதி.இன்னும், நாம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை நம்முடைய தொழுகையால் அலங்கரிப்போம்.
நமக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன் !
(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)
பள்ளிவாசல் அழகுக்கா ! அல்லது இறைவனை தொழுவதர்க்கா !
பெரிய பள்ளிவாசல் என்றதும் பளிங்குக் கற்கள், ... அவ்வளவுதான்
அழகிய பள்ளிவாசல் கட்டினால் ஊருக்கு பெருமை என்பதோடு சரி .பெரிய பள்ளிவாசல் ஆனால் தொழுபது ஒரு வரிசைதான் , பள்ளிவாசலின் அழகு நிறைவாக தொழுவதில்தான் உள்ளது.
பள்ளிவாசலில் வீண்பேச்சு எதற்கு?
பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டு ஊரில் பல பிரட்சினைக்கு வழி வகுக்கின்ரனர் வீண் பேச்சுகளின் மூலம் பாவமூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் .
இப்பொழுது கிடைத்துவிட்டது அவர்களுக்கு ஒரு தலைப்பு `அவர் நஜாத்தானே` இது போதும் .இஸ்லாமியர்களை பிளவு படுத்த.
நஜாத்துக்கு விளக்கம் அளிப்பவர்களும் மார்க்க அறிஞர்கள் தான்.
இதனால் ஒரு போராட்ட களம் உண்டாகியது யார்? மார்க்க அறிஞர்கள் தான்! .பள்ளி நிர்வாகமும் அதற்கு உடன்பட்டு விடுகின்றது!
இதனால் பாதிக்கப் பட்டது பலர் . இது கொடுமை
பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள்.
பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள்.
No comments:
Post a Comment