Sunday, May 26, 2013

இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது.


இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது. அவை பின்பற்ற இலகுவானவை .. அவைகளில் முக்கியமாக கூறப்படுவது மூன்று... இந்த மூன்றுக்குள் மனிதனின் மூச்சே அடங்கி இருக்கிறது. அவை.....

இறையை வணங்கி வாழ்வது

எல்லோருடனும் இணங்கி வாழ்வது

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வது

முதலில் ...படைத்த இறைவனுக்கு அவனே இறைவன் என்று கட்டியம் கூறவும் அவன் தருகின்ற அளப்பரிய உதவிகளுக்கு நன்றி செலுத்தவும் அவன் கருணையை எதிர்பார்த்தும் இறைவனை வணங்கித்தான் வாழ வேண்டும். இறையை வணங்காத மனிதனுக்கு மனிதன் என்ற மதிப்பு இல்லை. அடுத்து .....ஜாதி மத பேதமின்றி மக்களிடம் நேசமாக பழகி வாழ வேண்டும். நிற வேறுபாடு காட்டி இன மாறுபாடு காட்டி மனிதர்களில் உயர்வு தாழ்வுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பிரகடனம். மூன்றாவதாக வறுமை வயப்பட்டோருக்கு வழங்கி வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை. செல்வத்தையும் ஏழ்மையையும் இறைவனே படைத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவன் சிலருக்கு வளத்தையும் இன்னும் சிலருக்கு வறுமையையும் வழங்கி இருக்கின்றான். மனித சமுதாயமே உதவி ... ஒத்தசைகளின் இழைகளால்தான் நெய்யப்பட்டிருக்கிறது.முந்திய இரு விஷயங்களிலும் உடன்படும் பலர் பிறருக்கு வழங்கி இன்பம் காணுவதில் மட்டும் உடன்படுவதில்லை.

Sunday, May 19, 2013

அடீ

இந்தக் கவிதையின் சிறப்பு என்னவென்றால் ஒரே சொல் இரண்டு பொருளில் வரும். மடி - மடி என்ற இரண்டு சொற்களும் வேறு வேறு பொருள் உடையவை. அதே சமயம் அத்தனை வார்த்தைகளும் ஒத்த இசையுடைய வார்த்தைகள். இதை இயைபுத் தொடை என்று யாப்பிலக்கணம் கூறும்.


*

மன்னித்தால் நீயென் மடி
மறுப்பதனால் சேர்ந்தே மடி

அனுதினமும் அடிமேல் அடி
அமைதி என்றால் ஆறே அடி

உள்ளத்தின் உயர்வின் படி
உண்மையான உறவைப் படி

அன்பகலா செல்லக் கடி
அதில் மாயை ஏதுக் கடி

சண்டையிட்டால் சிதையும் குடி
சகிப்பினையே மருந்தாய்க் குடி

குயில் கூவ வேண்டாம் தடி
குடியேறும் மரணத் தடி

Sunday, May 12, 2013

ஒரு நாள் போதுமா

ஒரு நாள் போதுமா


***********

அன்னைக்கென்று ஒரு நாளும் வேண்டாம் என்பதே என் எண்ணம்.

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?

ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?

கடலையும் வானத்தையும் விட

வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...

@ தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம் என இறைவன் சொன்னதாக நபிகள் சொன்னார்கள் . உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"

Tuesday, May 7, 2013

தென்றல் வீசும் . சாந்தியும் சமாதானமும் அரசாளும் !



வெற்றி நிச்சயம்

இன்றில்லாவிட்டால் நாளை !

*************

தாயிப் -

மக்காவின் பக்கத்தில்

உயர்ந்து நிற்கும்

மலை நகரம் !

பச்சையும் பசுமையும்

கிளை விரித்து

மணம் பரப்பும்

மலர் நகரம் !

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மஹ்மூது நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல தாயிப் மலைக்கு நடந்தே சென்றார்கள் ! தாயிபின் ஆட்சியாளர்கள் அப்துல் யலீல், மஸ்வூது , ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள். மூவரும் மூர்க்கர்கள் ! அவர்களிடம் " அல்லாஹ் ஒருவன் ; நான் அவன் தூதர் " என்று நபிகள் சொன்னார்கள். " மலையின் மீது ஏறி வர ஒரு கோவேறு கழுதை கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் " என்று அவர்கள் சிரித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு சீதள நபி மீது கற்களை வாரி எறிந்தார்கள் !

பாதை காட்ட வந்த பண்பாளரை

பைத்தியம் என்றார்கள்

பைத்தியக்காரர்கள் !

தாயிப் வாசிகள்

நபிகளாரை

நடக்கவிட்டு நகைத்தார்கள்

ஓடவிட்டு அடித்தார்கள் !

பெருமானார் பாதம் பட்டால்

பட்ட இடம் வளம் கொழிக்கும்

Monday, May 6, 2013

பொறியியல் படிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

http://hajaashraf.blogspot.com/2013/05/blog-post.html

சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது. பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். (தொடர்ந்து படிக்க மேலே உள்ள சுட்டியை சுட்டவும்)

சுட்டியை சுட்டவும் http://hajaashraf.blogspot.com/2013/05/blog-post.html


வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
 ------------------------------------------------------------------

Saturday, May 4, 2013

விதை -புதுசுரபி

"என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?"


நண்பர் ஒருவர்என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா?


என்னுடைய மொபைல்போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டுஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்னவார்த்தைதான் அது.


என்னபுதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன்,


"என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும்....அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி....."


விஷயத்திற்குவருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு இது ஒரு சாதாரணவிஷயமாகத்தானிருக்கிறது ஆனால் நண்பருக்கு என் மொபைல் போனில் காணக்கிடைத்ததோ சிறுவர்களுக்கான நல்லொழுக்கம் பற்றிய  'அனிமேஷன்' படம் மற்றும் பாடல்கள். இது மேலோட்டமாக பார்க்கும்போது நண்பர் சொன்னது போலவே 'சிறுபிள்ளைத்தனமாக'த்தான் தோன்றும். ஆனால், நண்பர்களை விட அதிக உரிமையுடன் நம் மொபைல் போனைஆராய்பவர்கள் இல்லை இல்லை ஆள்பவர்கள் நமது பிள்ளைகள்தானே?

LinkWithin

Related Posts with Thumbnails