Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Monday, September 7, 2015

Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...


"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம்.

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Saturday, May 23, 2015

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு) / ஆமினா


இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)
12ம் வகுப்பு ரிசல்ட் போடப்பட்டதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை என்று  சுட்டிக் காண்பித்த, சிந்திக்கும் திறன் கொண்ட சகோதரர்களுக்கு நன்றி கூறியவளாய் இக் கட்டுரையை தொடங்குகிறேன்.


ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த பத்வா ஓர் உதாரணம் என்பதால்..மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.

Saturday, April 25, 2015

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...

"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)

பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

Monday, August 25, 2014

ஏகன் இறைவன் தந்த மார்க்கத்தை பற்றிக்கொள்..

மகனே ......

வாழப் பழகு
பழகப் பழக பழகும் பலவும்
பார்த்துப் பழகு

பார்த்துப் படி
படிக்கப் படிக்க படிப்பினைகள் பெறு

பேசு நேர்கொண்டு
மெய்யும் பொருளும் அறிந்து உரக்க பேசு

இரு உண்மையாய்
இருப்பதில் இறுதிவரை உறுதியாய் உயிர் கொண்டு இரு

செயல் படு
பாடுபட்டு செல்வம் சேர்
ஊருடன் ஒத்துவாழ்

கொடு கொடைகளை
கிடைத்ததை பகிர்ந்து பகிர்ந்ததை பார்த்து மகிழ்ந்திடு

Saturday, August 9, 2014

நீதான்... உன் இறைவனைத்தான்....

 
உன்னை அழிக்காதே
ஊரை அழிக்காதே
உலகை அழிக்காதே
என்றால் கேட்பாயா?

உன்னை உயர்த்து
ஊரை உயர்த்து
உலகை உயர்த்து
என்றால் ஏற்பாயா?

நீ கேட்பாய்
ஆனால் கேட்க மாட்டாய்

நீ ஏற்பாய்
ஆனால் ஏற்க மாட்டாய்

இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாம் சார்ந்த பதிவுகளையே அதிகம் பதிவிடுகிறோம்?


பல மேற்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனை உள்ளவர்கள் நினைப்பது போல "MUSLIMS ARE NOT MARKETING ISLAM". ஏன் தெரியுமா?

நான் அறிந்த வரையில் இஸ்லாமை எதிர்கும் ஒரு இந்துவுக்கோ, கிரிஸ்தவனுக்கோ அல்லது புத்திஸ்டுகளுக்கோ அவனது வேதவரிகள் தெரிகிறதோ இல்லயோ ஒருசில புனித-குர்ஆன் வசனங்களை தெரிந்து வைத்து இருக்கிறான்.

எப்படி அவனுக்கு தெரிகிறது?

அவனுடய மத போதகர்கள் / மீடியாக்கள் ஒருசில வசனங்களை அதன் சூழ்நிலைகளை விவரிக்காமல் நேரடி வசனபொருளை மக்களிடம் சேர்க்கும் பொழுது அது ஏதிமறை சிந்தனையை மக்களின் மனத்தில் விதைக்கிறது மேலும் எதிர்மறை சிந்தனை எந்த ஒரு மனிதனின் மனத்திலும் நிரந்தரமாக தங்கி விடும் என்பது மறுக்கமுடியா உண்மை. எனவே ஒரு அச்சம் மற்றும் வெறுப்பு அவன் மனத்தை பற்றிக்கொள்கிறது,

அதன் பிறகு அவன் ஒரு இஸ்லாமியனையோ அல்லது இஸ்லாமிய பதிவுகளையோ நிகழ்வுகளையோ அல்லது குர்ஆன் வசங்களையோ பார்க்கும் பொழுது கேட்கும் பொழுது நடுநிலைத்தன்மையை கையாளுவதை இழக்கிறான்.

நான் அறிந்தவரை இஸ்லாமிய வரலாற்றிலும் தற்பொழுதிய காலகட்டத்திலும் இஸ்லாத்திற்கு வந்த பெரும்பாலானோர் இந்த மன நிலையிலிருந்தவர்தான் நான் உட்பட. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. உண்மையை அறிந்தவர் வாய் மூடி இருத்தல் முறையில்லை எனவேதான் எங்களது பதிவுகள் இஸ்லாம் சார்ந்தே இருக்கிறது.

Tuesday, July 15, 2014

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.

Wednesday, February 19, 2014

மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் - ஹங்கேரி அரசியல்வாதி!

துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, "மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே" என இஸ்லாமிய மதத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹங்கேரியின் பிரபரல அரசியல்வாதிகளுள் ஒருவர் கேபர் ஓனா. இவர் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரசுமுறை பயணமாக துருக்கி செல்ல நேர்ந்தது. இஸ்லாமிய மதத்தின்மீது வெறுப்புகொண்டிருந்த ஓனா, துருக்கி செல்வதற்கு விரும்பவில்லை. எனினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக வேண்டா வெறுப்பாக துருக்கி சென்றார்.

Friday, October 25, 2013

முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே

இஸ்லாமிய சோதரீர்!

இப்பிரபஞ்சத்தில் இறைவனால் அருளப்பட்ட அருட் பாக்கியங்களில் மிக மகத்தானது “இஸ்லாமே” என்பதுதான் ஒவ்வொரு

உண்மை முஸ்லிமுடைய உதரத்திலும் உயிரிலும் ஊறிப் போய் இருக்கும் உள்ளக் கிடக்கை. தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளம் உவந்து உவகை பூத்து, எல்லாம் வல்ல இறைவனுக்கு ‘ஷுக்ரு’ என்னும் கடப்பாடு செலுத்துகிறான். அது மட்டுல்ல; அத்தகைய அரும் பெரும்பாக்கியமாய தீனுல் இஸ்லாத்தை ஆண்டவன் புறத்திருந்து நம் மாந்தர் கோடிக்கு அளித்தருளிய ஏக தெய்வத்தூதர் நபி கரீம் முஹம்மத் (சல்) அவர்களுடைய உம்மத்தில் “நானும் ஒருவனா யிருக்கிறேன்” என்று எண்ணும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்து, ஏதோ ஒருவகைப் பேரானந்தங் கொள்கிறான்; “அன்ப! நீ முஸ்லிம்தானே?” என்று கேட்டதும், “ஆம், அல்ஹம்து லில்லாஹ்!” என உடனே பதில் அளிக்கின்றான்.

Saturday, October 12, 2013

இறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன?

 தொழுகை உடல் சார்ந்த வழிபாடு; உண்ணா நோன்பும் அவ்வாறுதான். 'ஸகாத்' எனப்படும் கட்டாயக் கொடை ஒரு பொருளாதார வழிபாடு. புனித ஹஜ் உடல், பொருள் இரண்டும் சார்ந்த வழிபாடு.

இந்த வழிபாடுகள் மூலம் இறைக்கட்டளையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கின்ற அதே வேளையில், தமக்கும் தம்முடன் வாழும் சகமனிதர்களுக்கும் அவர் நன்மை செய்கிறார்.

தொழுகையால் உடல் தூய்மையும் உளத்தூய்மையும் அடைகிறார். தாம் செய்த குற்றங்களை எண்ணி இறைமுன் அழுகிறார். இனிமேல் குற்றமிழைக்கமாட்டேன் என்று சபதம் ஏற்கிறார். குற்றங்களிலிருந்து விடுபடுவது அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையல்லவா?.

உண்ணா நோன்பால் குடலுக்கு ஓய்வு; அதனால் உடலுக்கு ஆரோக்கியம். மதிய வேளையில் பசியும் தாகமும் அவரைவாட்டும்போது, பட்டினியின் கொடுமையை அனுபவிக்கிறார். ஏழை எளியோருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உந்தப்படுகிறார்.

'ஸகாத்' எனும் கட்டாயக் கொடை, சுயநலத்தையும் கருமித்தனத்தையும் செல்வர்களிடமிருந்து அகற்றுவதற்கான அருமையான வழிபாடு. உன்னை அண்டி வாழும் ஏழைகளுக்கு உன் செல்வத்தில் பங்கு உண்டு என்று சொல்கின்ற இறைக்கட்டளைதான் ஸகாத். ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு தொகை ஏழை எளியோருக்கு ஒவ்வொரு செல்வரும் கட்டாயமாக வழங்கிவந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பார்கள்.

Wednesday, August 21, 2013

முஸ்லிம் தீவிரவாதிகள்

.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

Sunday, May 26, 2013

இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது.


இஸ்லாம் எளிய தத்துவங்களையே முன் வைக்கிறது. அவை பின்பற்ற இலகுவானவை .. அவைகளில் முக்கியமாக கூறப்படுவது மூன்று... இந்த மூன்றுக்குள் மனிதனின் மூச்சே அடங்கி இருக்கிறது. அவை.....

இறையை வணங்கி வாழ்வது

எல்லோருடனும் இணங்கி வாழ்வது

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வது

முதலில் ...படைத்த இறைவனுக்கு அவனே இறைவன் என்று கட்டியம் கூறவும் அவன் தருகின்ற அளப்பரிய உதவிகளுக்கு நன்றி செலுத்தவும் அவன் கருணையை எதிர்பார்த்தும் இறைவனை வணங்கித்தான் வாழ வேண்டும். இறையை வணங்காத மனிதனுக்கு மனிதன் என்ற மதிப்பு இல்லை. அடுத்து .....ஜாதி மத பேதமின்றி மக்களிடம் நேசமாக பழகி வாழ வேண்டும். நிற வேறுபாடு காட்டி இன மாறுபாடு காட்டி மனிதர்களில் உயர்வு தாழ்வுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பிரகடனம். மூன்றாவதாக வறுமை வயப்பட்டோருக்கு வழங்கி வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை. செல்வத்தையும் ஏழ்மையையும் இறைவனே படைத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவன் சிலருக்கு வளத்தையும் இன்னும் சிலருக்கு வறுமையையும் வழங்கி இருக்கின்றான். மனித சமுதாயமே உதவி ... ஒத்தசைகளின் இழைகளால்தான் நெய்யப்பட்டிருக்கிறது.முந்திய இரு விஷயங்களிலும் உடன்படும் பலர் பிறருக்கு வழங்கி இன்பம் காணுவதில் மட்டும் உடன்படுவதில்லை.

Wednesday, April 24, 2013

நிகழ்வும்-நிஜமும்-01 (அதிரை குமார்)


அன்புச் சகோதரர்களே ஜித்தா தஃவாகளத்தைப் பொறுத்தவரை, ஜித்தா துறைமுக அழைப்பகம் துறைமுக ஊழியர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகளாக மார்க்கப் பணியாற்றுவதை தாங்களும் நன்கு அறிந்ததே. அந்த வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும்நோக்கில் துறைமுக நுழைவாயில் இலக்கம் ஏழு அருகில் ஒரு படிப்பகத்தை துறைமுக அழைப்பகம் அமைத்துள்ளது. அந்த படிப்பகதில் பயன்பெற்ற பலரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவர் அதிரை குமார்.

Friday, April 5, 2013

பொய்யை சொல்லி மக்கள் மனதில் நச்சுக் கருத்துகளை சிலர் தூவ விரும்புகின்றனர்.


இஸ்லாம் என்றால் கீழ்படிதல், அமைதியை நாடுதல், ஒப்படைத்தல், ஏற்றுக் கொள்ளுதல் இவ்விதமாக பொருள் உண்டு. இஸ்லாம் உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது .இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவன் ஒரு காலமும் வன்முறையை பின் பற்ற முடியாது .முஸ்லிம் என்றால் ஓர்  இறைவனுக்கு அடிபணிதல் என்பதையே குறிக்கும் . இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர் ஏகத்துவ கொள்கையை பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.அல்லாஹ் (இறைவன்)  ஒருவனே  (வணக்கத்திற்கு தகுதியுள்ளவன்) அவன் எவரையும் பெற்றெடுக்கவுமில்லை, அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அவனுக்கு எதுவும் நிகரில்லை.(குர்ஆன்; அத்தியாயம் ; 112)

 குர்ஆனைப் பாதுக்காக்கும் பொறுப்பை இறைவனே எடுத்துக் கொண்டுள்ளான் .குர்ஆன் இருக்க இஸ்லாமும் இருக்கும். இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்புமில்லை. ஒரு இயக்கமும் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள்(இறை நம்ப்பிக்கை அற்றோர்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

Wednesday, March 20, 2013

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

இதற்கான பதில் -
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி:

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.

Sunday, January 6, 2013

இந்தியாவில் இஸ்லாம்-2

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர்

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.

Monday, December 31, 2012

“கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)”

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. “கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.
இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு…

“கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு.

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

Wednesday, December 26, 2012

இந்தியாவில் இஸ்லாம் - (பகுதி 1)

 எழுதியவர் தோப்பில் முஹம்மது மீரான்

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.

தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.

ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.

Friday, December 21, 2012

முஸ்லிம்பெண்மணி- குழந்தை வளர்ப்பு ஒரு இஸ்லாமிய பார்வை

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்….

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்… அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை…..

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும் மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது…..
இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்….

    “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!
    இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74


LinkWithin

Related Posts with Thumbnails