இஸ்லாம் என்றால் கீழ்படிதல், அமைதியை நாடுதல், ஒப்படைத்தல், ஏற்றுக் கொள்ளுதல் இவ்விதமாக பொருள் உண்டு. இஸ்லாம் உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது .இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவன் ஒரு காலமும் வன்முறையை பின் பற்ற முடியாது .முஸ்லிம் என்றால் ஓர் இறைவனுக்கு அடிபணிதல் என்பதையே குறிக்கும் . இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர் ஏகத்துவ கொள்கையை பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.அல்லாஹ் (இறைவன்) ஒருவனே (வணக்கத்திற்கு தகுதியுள்ளவன்) அவன் எவரையும் பெற்றெடுக்கவுமில்லை, அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அவனுக்கு எதுவும் நிகரில்லை.(குர்ஆன்; அத்தியாயம் ; 112)
குர்ஆனைப் பாதுக்காக்கும் பொறுப்பை இறைவனே எடுத்துக் கொண்டுள்ளான் .குர்ஆன் இருக்க இஸ்லாமும் இருக்கும். இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்புமில்லை. ஒரு இயக்கமும் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள்(இறை நம்ப்பிக்கை அற்றோர்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
இஸ்லாத்தினைப் பற்றி தவறாக எழுதியும் பேசியும் வருவோர் ஒரு புறம் முயற்சிக்க உண்மையான நிலையறிய மக்கள் அதிகமாக இஸ்லாத்தினைப் பற்றி அறிய ஆவல் கொண்டு இஸ்லாத்தின் மகத்துவத்தினை அறிந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் மக்கள் உலகளவில் அதிகமாகி வருகின்றனர்.அதிலும் படித்த நன்மக்கள் ,அறிவு ஜீவிகள் அதிகம் இணைகின்றனர்
No comments:
Post a Comment