உர்வத்து இப்னு மூபைர்(ரலி) அவர்கள்(624-692) உடல் பாதிக்கப் பட்டு அவரது ஒரு கால் முழங்கால் வரை எடுக்கப்பட வேண்டிய அவசியம் வந்தது. மருத்துவர் அறுவை செய்யும் போது வலி அறியாமல் இருக்க ஒரு குவளை மது சாப்பிடச் சொன்னார். உயிருக்கு ஆபத்தான நிலை வர அவசியம் கருதி சில நேரங்களில் சில விதிவிலக்கு மார்க்கத்தில் அனுமதித்திருப்பதனையும் சுட்டிக் காட்டினார். அதற்கு உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் மறுத்து விட மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்யும்படி மருத்துவரிடம் சொல்லிவிட்டார்கள். 'அப்படியானால் நான்கு நபர்கள் அவரது உடலைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று மருத்துவர் சொல்ல அதற்கும் உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'தேவை இல்லை உங்கள் அறுவை சிகிச்சையை தொடருங்கள்' என சொல்லி விட்டாகள். இறைவனது பெயரை மனதில் சொல்லி துதித்துக் கொண்டிருக்க நல்ல முறையில் அறுவை சிகிச்சை முடிந்தது .அல்ஹம்துலில்லாஹ். அனைத்துப் புகழும் இறைவனுக்கே .
உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'அறுவை செய்து எடுக்கப் பட்ட காலின் பகுதியை முறையாக குளிப்பாட்டி அடக்கம் செய்யுங்கள்' என மற்றவரிடம் சொல்லும்போது அவர் கூரியது 'அந்த கால் என்னை இறைவனை தொழ என்னை சுமந்துக் கொண்டு பள்ளிவாசலுக்குப் போக இவ்வளவு காலங்கள் உதவியது' என நெஞ்சுருக சொன்ன நிகழ்வு இஸ்லாமிய சரிதத்தில் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்து விட்டது.
No comments:
Post a Comment