Wednesday, April 24, 2013

நிகழ்வும்-நிஜமும்-01 (அதிரை குமார்)


அன்புச் சகோதரர்களே ஜித்தா தஃவாகளத்தைப் பொறுத்தவரை, ஜித்தா துறைமுக அழைப்பகம் துறைமுக ஊழியர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகளாக மார்க்கப் பணியாற்றுவதை தாங்களும் நன்கு அறிந்ததே. அந்த வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும்நோக்கில் துறைமுக நுழைவாயில் இலக்கம் ஏழு அருகில் ஒரு படிப்பகத்தை துறைமுக அழைப்பகம் அமைத்துள்ளது. அந்த படிப்பகதில் பயன்பெற்ற பலரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவர் அதிரை குமார்.



இந்த சகோதரர் இந்தப் படிப்பகத்திலுள்ள அநேகமான நூல்களைப் படித்தவர் இவர் கடைசியாகப் படித்த நூல் அர்ரஹீக் அல்மக்தூம். (நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு) இந்த நூலைப்படித்துவிட்டு இவர் கண்ணீரோடும், ஆதங்கத்தோடும் நம்மோடு சில கருத்துப்பரிமாற்றங்கள் செய்ததை "நிகழ்வும்-நிஜமும்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளோம், அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் பிறமதத்வர்களின் உள்ளங்களில் புதைந்துள்ள எண்ணங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்ற எமது நீண்டகால எண்ணங்களை "நிகழ்வும்-நிஜமும்" என்ற இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வெளியிட உதவிபுரிந்த அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப்புகழும்.

இது எமது முதல் தொகுப்பு, இதிலுள்ள குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டினால் அடுத்த தொகுப்பில் அதைத்திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் இன்ஷாஅல்லாஹ்.

தயாரிப்பு மற்றும் வெளியீடு:
துறைமுக அழைப்பகம்-ஜித்தா
_____________________
SEAPORT DAWA OFFICE
Jeddah islamic port
Jeddah-Tel:+96626275573
-------------------------------------
 தகவல் தந்தவர் தண்டேல் அமீன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails