Wednesday, February 29, 2012

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- அஷ்ஷெய்க் அபூ ஹுனைப்
குத்பா என்றால் என்ன?
குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார்.
உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.
மேலும், மார்க்க ரீதியில் இவ்வாசகமானது, “இன்மை, மறுமை இரண்டினதும் நலவைக் கருதிற்கொண்டு மார்க்க சட்டதிட்டங்கள், மற்றும் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குச் செய்யப்படும் உபதேசம், எத்திவைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும்.” (லிஸானுல் அறப், அல்கானூனுல் முகீத், முஃஜமு முஸ்தலஹாதுல் புகஹா)
இவ்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நபியவர்களினது குத்பாக்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாகப் பின்வரக்கூடிய நபிமொழியை அவதானித்துப் பாருங்கள்.
“நபியவர்கள் தனது குத்பாவின் போது, நின்ற நிலையில் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், இரு குத்பாக்களுக்கும் மத்தியில் உட்காரக் கூடியவர்களாகவும், அல்குர்ஆன் வசனங்களை ஓதக் கூடியவர்களாகவும், மக்களுக்கு ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.” (முஸ்லிம்)
தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதும் மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும்

Monday, February 27, 2012

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

Sunday, February 26, 2012

திருவள்ளுவர் படம் வரைந்து ஓவியர் வேணுகோபால் சர்மா


"நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்". -  கருணாநிதி 
source

  -----------------------------------------------------------------------------------------------------

Saturday, February 25, 2012

தன்னிலை விளக்கம் > “கவியன்பன்” அபுல்கலாம்


முழுப் பெயர்:                             அபுல்கலாம் ABUL KALAM
சுருக்கப்பட்டப்பெயர்:                கலாம் (அப்துல் கலாம் என்று தவறான உச்சரிப்பை அனேகர் செய்வதால்..)
பட்டப் பெயர்:                             “கவியன்பன்” (திருவாரூர் கலைக்கல்லூரியில் கலைஞரால் வாய்வழிப் பாராட்டாக வழங்கப்பட்டது)
                                                     புதிதாக நான் பிறந்த ம்ண்ணின் வாசகர்கள் சூட்டியது “ “கவிக்குறள்”
(பட்டங்களைத் தேடி அடியேன் சென்றது கிடையாது; ஆனால் பட்டங்களால் என்னை மதிக்க நாடும் அன்பை மறுப்பதும் கிடையாது)
தகப்பனார் பெயர்:                       ஷைக் அப்துல் காதிர் (ஸ்ரீலங்காவில் வணிகராய் வளம்பெற்று 1957ல் அந்நாட்டை விட்டு வந்து சொந்த ஊரில்
                                                      வணிகம் செய்து நொடித்த பின்னர் இன்று புதல்வர்களின் வளர்ச்சியினைக் கண்டு உயிருடன் உள்ளார்கள்
தாயார் பெயர்                               உம்முல் ஹபீபா (இறந்து விட்டார்கள்) அவர்களின் நினைவால் என் மனம் வாடும்; அதனால் ஒரு கவி பாடும்

சொந்த ஊர்:  தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் , அதிராம்பட்டினம்(ஓர் அழகியக் கடலோரக் கிராமம்)

படிப்பு                                         பி.காம். (வணிகவியல்) 1979 சென்னைப் பல்கலைக்கழகம்/ திருவாரூர் கலைஞர் கலைக் கல்லூரி

வாழ்வின் மாறாத நிகழ்வுகள் > தந்தைக்கு ஒரு தாலாட்டு


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

தாய்  தந்தைக்கு இறைவனிடம் துவா செய்வோம் . : ஒரு மனிதன் இறந்தபின் அவனைஅவரை  தொடரும் மூன்று விஷயங்களில் அவருக்காக  துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள். தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள்  அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச் சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்
வாழ்வின் மாறாத  நிகழ்வுகள்
 =====================================================================

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2  

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2
சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

Wednesday, February 22, 2012

அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!

அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!  

பழ. கருப்பையா
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
 உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி! முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
 நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது. அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.

நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்


மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.

சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது. இப்போட்டியில் வண. கசிம தேரர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இதன் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சமய, கலாசார கல்விக்கான மன்றத்தின் தலைவர் எம்.எம்.ஏ. தஹ்லான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன், அஷ்ஷெய்க் உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட வண. கசிம தேரர் உள்ளிட்ட நாடாளாவிய ரீதியிலான வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வண. சுசிம தேரர்,

“ஒவ்வொரு மாணவனும் ஏனைய மதங்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாடசாலை புத்தகங்களில் ஏனைய மதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

அப்போது தான் நாட்டில் நிரந்தர சமாதானம் உருவாக முடியும். இது காலம் கடத்தாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

(செய்தி மற்றும் படம்: தமிழ்மிரர் இணையம்)

ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புக்கள், கைதிகள் மீதான சித்திரவதைகள், வன்முறைகள், மத நிந்தனைகள் குறித்தெல்லாம் நியாயமான விசாரணை வேண்டும் என்று யாராவது அழுத்தம் கொடுப்பார்களா? இலங்கைக்கு ஒரு நீதி! அமெரிக்காவுக்கு வேறொரு நீதியா? செப்டம்பர் 11 தாக்குதலை அல்-கைதாதான் செய்ததென்று எத்தகைய ஆதாரமும் இல்லாமல் கூறி ஆப்கான் மீதான போரை அமெரிக்கா ஆரம்பித்தது. அதற்குப் பாகிஸ்தான் பெரிதும் உதவியது. இப்படி உதவாவிட்டால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்ததே தெரியாமல் போய்விடும் என அப்போதைய அதிபர் கூறினார். ஆனால் இப்போது பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது.

Monday, February 20, 2012

மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம்

மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.Source
எமது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகள் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன. தொடக்கமாக தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் இதோ உங்களுக்காக நாங்கள் வெளியிட்டுள்ளோம். உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் Apple Storeலும் கிடைக்கும்.-- 

நன்றி

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)


”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்(சூறா மாயிதா :02மின்னஞ்சல்  வழி  தகவல் அனுப்பியவர் 

வடகரை தாரிக்

நாகூர். ஹாஜி, E.M.ஹனீபா


 Source : http://nagoori.wordpress.com/

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்!
ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.

தேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை!

by நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,.
இறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.  (3:110)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).
அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
பொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பாபரி மஸ்ஜித்,  இட ஒதுக்கீடு, போன்ற பிரச்னைகளுக்கு நாம் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுக்கத் தான் வேண்டும். உரிமைகளைப் பெற்றிடப் போராடித் தான் ஆக வேண்டும்.
ஆனால் அது மட்டும் போதாது. பொதுவாக மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்னைகள் அனைத்துக்கும் நாம் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும். லஞ்சம், ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள், ஆபாசம், விபச்சாரம், வன்முறை, பெண்களுக்கெதிரான கொடுமைகள், குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள், இன்னும் இது போன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்ற வரை களம் இறங்கிப் பணியாற்றிட வேண்டும்.

Sunday, February 19, 2012

நீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா? - ஓர் நினைவூட்டல் !

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?. நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவை இல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.

உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” அல்லது “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது... எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.

உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்கலாம்.பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.

Saturday, February 18, 2012

வட்டி தடுக்கப்பட்ட வரலாறு

முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித்  தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).

Friday, February 17, 2012

அரிய நீல நிற வைரம்!
அரிய நீலநிற வைரம்

உறுதிக்கு வைரத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.
'வைர நெஞ்சம்',
'வைரம் பாஞ்ச கட்டை'
என்றெல்லாம் சொல்வார்கள்.
'வைரத்தை
வைரத்தால்தான் அறுக்க வேண்டும்' என்றொரு சொலவடையும் உண்டு.

வைரம் கருப்பு, மஞ்சள், வெள்ளை என
பல நிறங்களில் கிடைத்தாலும்
சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பது
மிக அரிது. அப்படி இந்த இரு நிறங்களில்
கிடைக்கும் வைரங்கள் மிக, மிக விலை
மதிப்பு மிக்கவை.

Monday, February 13, 2012

சந்தோஷத்தை கொண்டு வரும் சாதனங்கள்

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
1. நற்ச்செயல்கள்:
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். திருக்குர்ஆன்: 16:97
2. இறையச்சமுள்ள துணைவி:
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! திருக்குர்ஆன்: 25:74
3. விசாலமான வீடு:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே! எனது வீட்டை எனக்கு விசாலமாக்குவாயாக.”
4. நேர்மையான வழியில் பெறப்படும் மற்றும் சம்பாதிக்கபபடும் ஆகாரம்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தய்யிப் (நன்மை மிகுந்தவன் மற்றும் தூய்மையானவன்). அவன் நல்லதையும் தூய்மையானதையும் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.”
5. நற் பண்புகள் மற்றும் மக்களுடன் நட்புடன் பழகும் மனப்பான்மை:
இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்… திருக்குர்ஆன்: 19:31
கடனற்றவராக இருப்பதும் ஊதாரித்தனமாக செலவழிக்காமல் இருப்பதும்: இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்… திருக்குர்ஆன்: 25:67
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்… திருக்குர்ஆன்: 17:29

Source : http://theheartopener.wordpress.com

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா!

"ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா" என்பது பழமொழி . மாயவரம் மறந்து மறைந்து போக முயலும் நிலை.
"மயூரபுரி"  மாயவரமாகி, மாயவரம் மாயூரமாக மாறி தற்போது மயிலாடுதுறையாக வந்து அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கினால் முன்னேற்ற நடைபோட முடியாமல் தடுமாறுகின்றது .
   மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. 
 
  தஞ்சை மாவட்டத்தில்  மயிலாடுதுறை (Mayiladuthurai) புகைவண்டி நிலையம் மிகவும் பெரியதாகவும் அகாகவும் அமைக்கப்பட்ட அருமையான பல புகைவண்டிகள்  சந்திக்கும் நிலையம்  
   
   தஞ்சை மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை ஒரு தனி மாவட்டமாக மாறும் என்று பலர் மிகவும் ஆவலோடு இருந்தனர். அரசியல் விளையாடி அது நாகப்பட்டினத்திற்கும்  திருவாரூருக்கும் வாய்ப்பாகிவிட்டது.  திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும்24 கி.மீ.தான்.
இவைகளுக்கு
மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து). 
பலவகையிலும் நடு நாயகமாக இருக்கும்,எல்லோரும்  எளிதில் வரும் வசதியுடைய மயிலாடுதுறைக்கு மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து) கொடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையானது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறாமல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தினால் தடுக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி வேட்பாளர்கள்  மயிலாடுதுறை தொகுதியிலிருந்து  நெடுங்காலமாக தேர்வு செய்யப்படாமல் போனதுதான்.  
இப்பொழுது உள்ள அரசாவது மயிலாடுதுறையை  மாவட்டமாக ஆக்க முயலட்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!

Saturday, February 11, 2012

ஊடக போதை

கடந்த ஊடக போதை தொடர் பதிவில், நவீன ஊடகங்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை விமர்சனம் செய்திருந்தோம், மேலும் மார்க்க கல்வியாளர்களின் எண்ணிக்கை குறந்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் நவீன ஊடகங்களின் தாக்கம் என்பதை கோடிட்டும் காட்டினோம். அதன் தாக்கம் எவ்வாறு என்பதையும் வசகர்களின் கருத்துகள் பறைசாற்றியது. அல்ஹம்துலில்லாஹ்..!
இந்த பதிவில் நம் சமுதாயத்தில் கணக்கிலடங்கா இயக்கங்கள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டு சமுதாய சேவை செய்திகள் தருகிறோம் என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அவதூறுகளை அசிங்கங்களை மாறி மாறி சேற்றை வாரியிரைத்து முகத்தில் பூசிக்குக் கொள்கிறார்கள். இதற்கு அளவே இல்லை. இவைகளுக்கு காட்டாக எதனையும் இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றாட இணையதளங்களில், மின்னஞ்சல் குழுமங்களிலும், தனி மின்னஞ்சல்களிலும் நேரத்தை வீண் விரயம் செய்து குழப்பங்களை அவர்களுக்கே உரிய பாணியில் பரப்பி வருகிறார்கள். 
ஒருவர் மார்க்க விடையத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு தவறான தகவல் தருகிறார் என்றால் அவரின் கருத்துக்கு நளினமான முறையில் அவரின் தவறை திருத்தும் விதமாக மிகச் சரியான ஆதாரத்தகவலுடன் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அவரின் கருத்தை விமர்சிப்பதை புறந்தள்ளிவிட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செய்திகளை பொதுவில் கட்டுரைகளாக விவாதிப்பதன் மூலம் அந்த மனிதனை அவமானப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அந்த மனிதரைத் திருத்த முடியுமா?  மேலும் அடுத்தவனுடைய மானத்தில் விளையாடுவதால் பாவத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும். 

சிறுபான்மையினருக்காகப் பேசினால் தூக்கில் போடுவீர்களா? - சல்மான் குர்ஷித் காட்டம்

"தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் உள்ள இடங்களில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

குறிப்பாக சட்ட அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித்  சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியதை அடுத்தே அறிவிப்புகளை, இவ்வாறான பேச்சுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

"ஆனால் தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி சிறுபான்மையினர் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியுள்ளார். அவர் இவ்வாறு  பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

by
Dr. A.P. Mohamed Ali
 பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை
இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள். ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப் பட்டார் அவர் கடைக்கு. வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார். மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப் பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார். மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் சரியில்லை என்றார். பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும் நான்காம் வியாபாரி அவரை பார்த்து உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று
சொன்னாரேப் பார்க்கலாம் தன் தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு போன பின்பும் சரியாக சாப்பிடாமல் தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார். கடைக்கும் சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடு மாறாமலும் இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப் பட்டுள்ளது இந்த கட்டுரை.
எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள் :
ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும். ஒரு பள்ளிகூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மொய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தல் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். "செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்".

Thursday, February 9, 2012

இஸ்லாமிய ஆசிரியர் படிப்பு B.I.S.Ed.

தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்; அதற்கு இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிக் கூடங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலையாய நோக்கம்.
இன்ஷா அல்லாஹ் 2030க்குள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே அல்லும்பகலும் அயராது உழைத்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களின் முக்கிய கருத்தாகவும் இதை வலியுறுத்தி வருகின்றோம்.
தற்கால நடைமுறையில் இஸ்லாமிய நர்சரி & பிரைமரி பள்ளிக்கூடங்களை உருவாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இஸ்லாமியப் பள்ளிகளில் பாடம் நடத்தும் சிறப்புத் தகுதியைப் பெற்ற ஆசிரியைகள் இல்லாதது பெரும் தடையாக இருக்கிறது.
மார்க்க அறிவோடு ஆங்கில மொழிப் புலமைப் பெற்ற ஆசிரியைகள்தான் இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிகளில் பணியாற்றத் தகுதியுடையவர்களாகிறார்கள். தற்போது மார்க்கம் கற்றுத் தர ஆலிமா, ஆங்கிலம் கற்றுத்தர ஆங்கில ஆசிரியை என்று இரட்டைச் சுமைகளை தற்போதைய இஸ்லாமிய பள்ளிகள் சுமக்கின்றன. பாடத்தில் மட்டுமல்லாமல் பயிற்றுவிப்பு வழிமுறையிலும் கலாச்சார போதனை முறைகளிலும் பள்ளிக்கூடங்களை இன்றைய காலத்திற்கு தகுந்தாற்போல இலாபகரமாக நிர்வகிப்பதிலும் கூட ஆசிரியை மற்றும் அவர்களின் தகுதியில் பற்றாக்குறை நிலவுகிறது.

Monday, February 6, 2012

கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம்

ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலையை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம்.  எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாக உருவெடுக்கும் வகையில் - கிறிஸ்தவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்து இருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.

உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் நம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களை இந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள். சொந்த அனுபவத்தைக் கூறி சுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல் இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள். மாஷா அல்லாஹ்! அனைவரும் ஆப்ரிக, எகிப்திய, ஜோர்டானிய, பிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிறிஸ்தவர்கள். ஒரு கர்நாடக மாநில இந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails