Wednesday, March 31, 2010

திருமணத்திற்குப் பின் துபாயில் செட்டிலாகிறார் சானியா!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுகைப் மாலிக்கை திருமணம் செய்தபின் தாமும் சுகைபும் துபாயில் செட்டிலாவோம் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தமக்கும் சுகைப் மாலிக்கிற்கும் திருமணம் நடைபெற இருப்பதை செய்தியாளர்களிடம் சானியா மிர்சா செவ்வாய்க் கிழமை (30-03-2010) ஹைதராபாத்தில் அறிவித்தார். 2012ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தான் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாக்கிஸ்தான் செல்ல விசா பெறுவதற்காக டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று விசா பெற்று ஹைதராபாத் திரும்பிய சானியா மிர்சாவிடம் செய்தியாளர்கள் சுகைப் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்தார். சுகைபுடன் கடந்த 7 ஆண்டுகளாக நட்பு உள்ளதாக அவர் கூறினார்.

திருமணத்திற்குப் பின் தாமும் சுகைபும் துபாயில் தங்க இருப்பதாகக் கூறிய சானியா, துபாயில் இருப்பது இந்தியாவில் இருப்பதைப் போன்ற மகிழ்ச்சியைத் தமக்குத் தரும் என்றும் அவர் கூறினார்.
 
நன்றி : http://www.inneram.com 
திருமணத்திற்குப் பின் துபாயில் செட்டிலாகிறார் சானியா!

அல்-ஜுபைல் 12-வது மாபெரும் இஸ்லாமிய மாநாடு (அழைப்பிதழ்) நாள்: ஏப்ரல் 09, 2010

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ சஆத்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புடன் அழைக்கின்றோம்…
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 9 ஏப்ரல்-2010 அன்று அல்-ஜுபைல் மாநகரில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரைநிகழ்த்த உள்ளனர். மாநாட்டிற்கு தாங்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
குறிப்பு: மாநாட்டிற்கான சிறப்பு கேள்வித் தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
அன்புடன்
12th அல்-ஜுபைல் மாநாட்டின் விளம்பர பிரிவு
பிரிவு: அறிவிப்புகள், முகப்பு கட்டுரைகள் 

Source : http://www.islamkalvi.com/portal/

Tuesday, March 30, 2010

மங்குஸ்தான் பழம் & ரீ

Posted by ஹைஷ்126

ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.


மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.


இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

Tamil - Mangosthan
English - Mangosteen
Malayalam - Mangusta
Telugu - Maugusta
Botanical Name - Garcinia mangostana


இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன் படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். வாய் துர்நாற்றம் நீங்க, வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி


மங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தவிர்க்கப்படும் :)

 ,
நன்றி:http://haish126med.blogspot.com


 

Monday, March 29, 2010

கணவன் மனைவி ஆசை குறைகிறது

 கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார்.

வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும்.

மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள்.

அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. ]

ஒரு பெண்ணின் இதயம்,

முதுமை அடைவதே இல்லை.

அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால், அது
வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.

கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்.

நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.

இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வுகளையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?' -என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''.

நேரமின்மை:

கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.

இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது.

அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள்.

அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.

பலகீனநிலை:

வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

உடற்கூறு அறிவின்மை:

ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகிறார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.

ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்-மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்

ஒரு பெண்ணின் இதயம், முதுமை அடைவதே இல்லை.
அன்பு செலுத்துவதை அது நிறுத்தி விட்டால், அது

வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது.

நன்றி:www.nidur.info

விலகாமல் செல்லும் கோள்கள்

பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன.
பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலம் (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன.Milky Way 
Galaxy
இந்த சந்திரன்கள் கோள்களின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. கோள்கள் சூரியனின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் விண்ணடுக்குகளில் காணப்படும் ஈர்ப்பாற்றலால் அந்த விண்ணடுக்குகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்கின்றன. நமது பூமி, சந்திரனை சூரியக் குடும்பத்திலிருந்து விலகி சென்றிடாமல் பாதுகாப்பாக தடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பாற்றல்கள் என்றுமே மாறாத (Constant) தன்மையுடையதா என்றால் இல்லை என்றே நவீன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஈர்ப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கக் கூடியது. பின்னர் அவைகள் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஈர்ப்பாற்றலில் மாற்றம் ஏற்படும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால்,
வானம், பூமியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றைப் படைத்த இறைவன் உருவாக்கியிருக்கும் ஈர்ப்பாற்றல் தான்.Solar System
 Planets

அல்லாஹ்வால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஈர்ப்பாற்றலை, அல்லாஹ் நீக்கி விட்டால் அல்லது அதில் அவன் மாற்றத்தை ஏற்படுத்தினால் வானங்கள், பூமி இவைகள் ஒன்றோடொன்றிலிருந்து விலகி சென்று விடும். அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:42)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
நன்றி :http://suvanathendral.com/portal/?p=237
விலகாமல் செல்லும் கோள்கள்

Saturday, March 27, 2010

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
 
ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).
இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.
நன்றி : http://thuruthi.blogspot.com/

Friday, March 26, 2010

போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை

சென்னை,​​ மார்ச் 24: போலி-காலாவதியான மருந்துகளை பொது மக்கள் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் ​ ​செ.நெ.​ தெய்வநாயகம் கூறினார்.

 உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்துக் கடைக்காரரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடாமல் இருத்தல்,​​ நோய்க்கான காரணத்தை மருத்துவரிடம் ​ முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்,​​ சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் குறித்த விவரம்,​​ பிரபலமான-தரமான மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்துகளைத் தொடர்ந்து வாங்குதல்,​​ உடனடியாக நிவாரணம் ​பெற நினைத்து அதிக அளவுக்கு மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
''வைரஸ்,​​ பாக்டீரியா காரணமாக ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.​ வைரஸ் காரணமாக மூக்கு,​​ சைனஸ்,​​ தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஜலதோஷம் மருந்துகள் ஏதும் இன்றி இயல்பாக சரியாகி விடும்.​ குறிப்பாக குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை இத்தகயை ஜலதோஷம் ஏற்படுவது இயல்பானது.​ ஆனால்,​​ பயம்-அறியாமை காரணமாக பல பெற்றோர் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்து குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
மார்புச் சளி,​​ ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும்.​ இத்தகைய சளி பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும்;​ துர்நாற்றமும் இருக்கும்.​ சிகிச்சை தேவைப்படும் நிலையில்,​​ குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் முதல் கட்டமாக வீரியம் குறைந்த ​குறைவான எண்ணிக்கையிலான மாத்திரைகளைச் சாப்பிட்டால் போதுமானது.
பிரச்னை தொடர்ந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.​ மேலும் மாத்திரைகளின் தன்மை குறித்து மருத்துவரிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்பதை நோயாளிகள் உணர வேண்டும்.
சித்த மருத்துவம் இருக்க கவலை ஏன்?​ அலோபதி மருத்துவத்தைப் போல் அல்லாமல்,​​ பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத நல்ல சித்த மருந்துகள் உள்ளன.​ ஜலதோஷம்,​​ சர்க்கரை நோய்,​
 நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி என எல்லாவற்றுக்கும் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.
 தாளிசாதி சூரணம் ​(தூள்),​​ சிவனார் அமுதம் ​(தூள்),​​ தூதுவளை லேகியம் ​ஆகிய சித்த மருந்துகள் சளியைப் போக்கும் ஆற்றல் படைத்தவை.​ ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால் ஆடாதொடை மணப்பாகு ​(சிரப்)​ உதவும்.​ இதேபோன்று மதுமேக சூரணம் உள்ளிட்ட மருந்துகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு நிவாரணம் தரும்.​ அமுக்கரா,​​ பிரம்மி,​ வல்லாரை மாத்திரை ஆகியவை நரம்புத் தளர்ச்சியைப் போக்க உதவும்'' என்றார் டாக்டர் தெய்வநாயகம்.

போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை    Source ; http://www.tamilsaral.com/

Thursday, March 25, 2010

முஸ்லிம் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் இலவசக் கல்வி! -- அதியமான்

                                                                     
சென்னை: நாட்டில் உள்ள முஸ்லிம் ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு தமிழ், உருது மற்றும் ஆங்கிலம் மீடியத்தில் இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது.  இதில் சேர விருப்பமுள்ள, ஆர்வமுள்ள முஸ்லிம் மாணவர்கள் கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742 (அல்லது) டாக்டர் சையது எம்.எம்.அமீன்- 0091-44-2848 1344

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும். இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த பிரபல யுனானி மருத்துவர் டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

 
நன்றி:http://www.inneram.com

Wednesday, March 24, 2010

பெண் பார்த்தல்…

dsc_0198
நாளை
உன்னைப்
பெண்பார்க்கப் போகிறேன்.
நம்
ஜாதகங்கள்
சில நாட்களுக்கு முன்
சந்தித்து
வருத்தமற்ற பொருத்தமென்று
கைலுக்கிக் கொண்டன.
உன்
சுற்றத்தோடு
என்
தூரத்து சொந்தங்கள்
தொலைவிலிருந்தே
தகவல் திரட்டிய
அத்தனை
ஆய்வு அறிக்கைகளும்
சாதகமாகவே அமைந்தன.
உன்
மத நம்பிக்கைகளையும்
என்
மத நம்பிக்கைகளையும்
மதில் சுவருக்கு வெளியே நின்று
யாரோ
ஒப்பிட்டுச் சொல்லி
சந்தோஷித்தார்கள்.
உன்
பொருளாதார பலமும்,
என்
நிகழ்கால வளமும்
நமக்கு எதிராய்
சதி வலைகள் பின்னவில்லை.
நீ என்னையோ
நான் உன்னையோ
சந்தித்ததில்லை,
எனக்குள்
விரியும் எதிர்பார்ப்பு தான்
உனக்குள்ளும் எரியும் என்பது
புரிகிறது எனக்கு.
நாளை
உன்னிடம் பேசப்போகும்
முதல் வாக்கியம்
என்ன என்பது மட்டும்
சிக்கவேயில்லை இன்னும்.
ஏதேனும்
யோசித்து வைத்திருக்கிறாயோ
நீ
என்னிடம் பேச ?
(கவிதைகள்)
Tags:  
நன்றி : http://xavi.wordpress.com/2009/02/06/marriage-3/

இஸ்லாத்தை நோக்கி திருமாவளவன்!


இஸ்லாத்தை நோக்கி திருமாவளவன்!

[''இஸ்லாத்திற்குள் நுழைந்தால் அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் - திருமாவளவன் ]

நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுஃப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.
கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ''மக்கா மஸ்ஜித்'' இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - ''பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ''இஸ்லாத்தை'' விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார்'' என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ''நாரே தக்பீர்'' முழக்கம் ஒலித்தது..

கூட்டம் தொடங்கிய பிறகுதான் ஜனாப் எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு (பெரியார் திராவிட கழகம் மற்றும் இந்து முன்னனி) பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ''நாரே தக்பிர்'' முழங்க வைத்தது.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி.

திருமாவின் உரை - வழக்கம் போல ''கனீரென்று'' தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது.

மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.

மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ''மகர்'' சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ''தாழ்த்தப்பட்ட'' மக்கள் இன்னும் ''வர்னாசிரம'' பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ''வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்'' நுழையமாட்டேன் -  அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன்'' என்று ''பலத்த'' நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ''இறைவன்'' தூண்டியதாகவும் ''முஸ்லிம்கள்'' எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ''குழு மனப்பானமை பற்றி வருந்தினார். குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ''இந்து முன்னனியினர்'' மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

தோழமையுடன், பிறைநதிபுரத்தான்

நன்றி:பிறைநதிபுரத்தான்.

www.nidur.info

Sunday, March 21, 2010

ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!

ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.

வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.

நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.

Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.

முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.

மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.

அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.

ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.

இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.

இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.

இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.

பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?

இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.

மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.

சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே

ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.

அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.

ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.

ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.

ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.

சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.

சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.

பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.

சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.

சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.

சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.

பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ''கேன்சல்'' பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.

இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.

முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ''ஏமாற்று'' வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ''ஏமாற்று வேலை'' என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.
www.nidurinfo

Friday, March 19, 2010

செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்யமுடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். "செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது" அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது. மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம். வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்! செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது. சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி! சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும். அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:
2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24
இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்துஉதவ வேண்டுமென்பதை விளங்க முடியும். 
நன்றி :
செல்வந்தர்களே!

Wednesday, March 17, 2010

அன்னையின் மடல்

 என் செல்லமே!  நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில்  சுவனம்  இருக்கிறது" எனும்
நபி மொழியை மறந்து விட்டோமே என
வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.
என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை   தெரியாது.  மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்   மீண்டு வரமாட்டார்.  அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!

 என் செல்லமே!உன் தாயின் முகத்தைப்பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் -  உன் தாயின் விழிகளில்
தெரிவதைப் பார் மகனே!
மூன்று விஷயங்களை கண்களால்   காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?
என் செல்லமே!இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு,  இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!

கர்ப்பம் தரிக்க எந்த நேரம் நல்ல நேரம்!!

By . மயிலாடுதுறை டாக்டர்.M.Aஹாரூன்
MD(MA) D.ACU. Ph.D (Cey) MNSA (INDIA)
யுனானி – லேசர் அக்குபஞ்சர் சிறப்பு மருத்துவர்

குழந்தையின்மை என்பது ஆண் – பெண் இருவர்களில் ஒருவருக்கோ
அல்லது இருவருக்கோ ஏற்படும் உடல் ரீதியான குறைபாடு ஆகும்.
குழந்தையில்லாதவர்கள் யுனானிஇ ஆங்கில மருத்துவம், சித்தா,
ஆயுர்வேதம் இப்படி பல வகையான மருத்துவங்களை மேற்கொண்டு
குழந்தை பாக்கியம் அடைகின்றனர்.
மனித உடலில் ஏற்படும் நோய்களும், குறைபாடுகளும், நமது உடலில்
ஏற்படும் இரசாயன மாற்றமே (ஊர்நுஆஐஊயுடு ஐஆடீயுடுயுNஊநு)
என்கின்ற மேலே நான் குறிப்பிட்ட மருத்துவங்கள். இதன்படி
மூலிகைகள் மற்றும் செயற்கை இரசாயனங்களை கொடுத்து குழந்தை
பாக்கியம் அடைய செய்கின்றனர்.
வேறுமுறையில் அதாவது ஓரியண்டல் எனப்படும் தென்கிழக்காகிய
நாடுகளான சீனா, கொரியா, ஜப்பான் ஆகியவை நோய்களையும்,
குறைபாடுகளையும் நீக்க சக்தி மருத்துவம் (நுNநுசுபுஐவுஐஊ
ஐஆடீயுடுயுNஊநு) மூலம் நமது உடலில் சக்தி ஓட்ட மாற்றங்களை
சீரமைக்கும் வைத்திய முறைகளை கடைபிடித்து சாதனை
படைத்துள்ளார். இதுவே அக்குபஞ்சர் – மற்றும் அக்குபிர~ர் என
உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. பக்க விளைவுகளோ
தீமையோ இந்த மருத்துவத்தில் சிறிதும் இல்லாதது தான் இதன்
சிறப்பாக கருதப்படுகிறது.
அக்கு பஞ்சர் சிகிச்சை செய்யப்படும் போது நோயாளிக்கு வலியோ,
துன்பமோ தெரியாது. ஏனெனில் மிக மெலிதான ஊசிகள் கண்
இமைக்கும் நேரத்தில் செலுத்தப்படுகிறது. ஒரு சிறந்த அக்குபஞ்சர்
நிபுணர் சிறிது கூட வலியை நீங்கள் உணராமல் செய்வதனாலேயே
அந்த பெயரை பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது ஊசியே இல்லாமல் உங்கள் உடலில் குறிப்பிட்ட இடத்தில்,
உங்கள் கைகளாலேயே (விரல் மூலம்) அழுத்தம் – கொடுத்து சிகிச்சை
செய்யும் முறையை சொல்லித்தர முடியும். இதன் பலனோ மிக
அதிகம்.
உதாரணமாக பெண்களுக்கு குழந்தை பிறக்க தடையாக அமைவது,
மாதவிடாய் கோளாறுகள், இதை அக்கு பிர~ர் முறை மூலம் நீங்களே
குணப்படுத்திக் கொள்ளலாம். மாதவிலக்கு முன்பு ஏற்படும்,
தலைவலி, டென்~ன், தூக்கமின்மை, கோபம் போன்றவைகளும்,
மாதவிடாயின் போது குறைந்தது அல்லது அதிகமாக ஏற்படும் இரத்த
போக்கு கூட இவைகளை எளிமையாக உங்கள் கைவிரலால்
மண்ணீரல் பகுதி, வயிறு பகுதி, முழங்கால் பகுதி ஆகியவற்றில் ஓடும்
சக்தி நாளங்களை விரலால் அழுத்துவதன் மூலம் மேற்சொன்ன
பிரச்சினைகள் குணமாகும் அக்குபஞ்சர் வைத்தியத்தின்
தத்துவத்தின்படி பெண் இன உறுப்பு மற்றும் ஆண் இன உறுப்பில்
ஏற்படும் போதிய சக்தி ஓட்டம் இல்லாமையே குழந்தையின்மைக்கு
முக்கிய காரணம் என்று கூறுகிறது. குழந்தையில்லாத ஆண்-பெண்
இருவர்களின் (Pருடுளுநு – னுஐயுபுNழுளுஐளு) நாழப் பரிசோதனை
செய்து அந்த உறுப்பின் சக்தி ஓட்டத்தை சீரமைப்பு செய்வதன் மூலம்
அந்த உறுப்புகள் நன்றாக இயங்கவைக்க முடியும். உதாரணமாக
ஆண்களின் விந்தணுவில் குறைந்த எண்ணிக்கை உடையவர்களுக்கு
அதிக உயிரணுக்கள் எண்ணிக்கை உயர்த்த முடியும். பெண் கருப்பை
வளர்ச்சியின்மை, மாதவிடாய் கோளாறுகள், குர்ந்தை கருப்பையில்
தங்காத நிலை, ஆண்மை குறைபாடு இப்படி அனைத்தையும் அக்கு
பிர~ர் சிகிச்சை மூலம் (வலியில்லா சிகிச்சை) குணப்படுத்த முடியும்.
அவரவர்களே தங்களின் சிகிச்சைகளை என்னிடம் கற்றுக் கொண்டு
நேரிடையாக பயிற்சியை துவங்கிவிடலாம்.
பயிற்சியின் போது உடலில் இரசாயன சக்தியை அதிகரிக்கச் செய்ய
பக்க விளைவுகள் இல்லாமல் குழந்தை பாக்கியம் உருவாக யுனானி
மூலிகை மருந்துகள் மூன்று மாதத்திற்கு கொடுக்கப்படுகின்றன.
ஆண்களைப் பொருத்தவரை ஆண்மைக் குறைபாடு மிகப் பெரிய
பிரச்சினை (ஐஆPழுவுநுNயுNஊநு) இவர்களுக்கு பெண்ணிஸ்
பாயிண்ட், சிறுநீரக பாதை, ஈரல், மண்ணீரல், வயிறு இவற்றில்
சக்திய+ட்டும் புள்ளிகளை அக்கு பிர~ர் செய்வதன் மூலம் ஆண்மை
சக்தியை மீண்டும் அடைய முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக
நேரம் என்ற காலக்கடிகாரம் நம்மை இயக்குகிறது. இதை திருக்குர்
ஆனில் இறைவன் துல்லியமாக கூறுகின்றான். “நேரத்தின் பிடியில்
உடல் நலம்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள திருக்குர் ஆன்
இயற்கை மருத்துவம் என்ற நூலில் மிக ஆழமாக
விளக்கியிருக்கிறேன்.
எந்த நேரம் கருத்தரிக்க நல்ல நேரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்ட அந்த நேரம் என்ன? நமது உடலில் பாலியல்
ஹார்மோன்களின் இயக்கம், உயிரணுக்கள் உச்சத்தில் உள்ள நேரம்
சரியான நேரத்தை அறிந்து செயல்பட்டால் தாம்பத்ய உறவின் மூலம்
குழந்தை பாக்கியம் அடைவது சாத்தியமாகிறது. ஜெர்மன் நாட்டு
நல்வாழ்வு இதழில் வெளியான தகவல் ஒன்றை உங்களுக்கு
தருகிறேன். குழந்தையில்லாதவர்கள் மாலை நேரத்தில் தாம்பத்ய
உறவு கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
ஏனெனில் மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள் உடலில் அதிக
அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி என்ற ஜெர்மன்
விஞ்ஞானி. நமது நாட்டு நல்வாழ்வு இதழில் வெளியான தகவல்
ஒன்றை உங்களுக்கு தருகிறேன். குழந்தையில்லாதவர்கள் மாலை
நேரத்தில் தாம்பத்ய உறவு கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்க
வாய்ப்புள்ளது. ஏனெனில் மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள்
உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி
என்ற ஜெர்மன் விஞ்ஞானி. நமது உடலின் அத்தனை
நடவடிக்கைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் தான்
நிகழ்கின்றன. நாம் காலத்தைத்தான் நேரம் (வுஐஆநு) என்கிறோம்.
ஒவ்வொரு செயலும் நேரத்தின் அடிப்படையில் தான் நிகழ்கிறது
என்கிறது திருக்குர்ஆன். இந்த அறிவியல் கருத்துக்கள் இன்று
மருத்துவ விஞ்ஞானிகளுக்கு மனித படைப்பை ஆய்வு செய்வதன்
மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இன்ஷா அல்லா, குழந்தை பாக்கியத்தை கொடுப்பதில் இயற்கை
மருத்துவ சிகிச்சைகள், சீனா, ஜப்பான், இந்தியா, தைவான் என்ற
தென்கிழக்காகிய நாடுகளிலிருந்து பரவி உலக முழுவதும் இன்று
அற்புத சிகிச்சையாக புகழ்பெற்று விளங்குகிறது.

Tuesday, March 16, 2010

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்

 
தகவல் : அபூ பாத்திமா

ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

    ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

    ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர்.

    பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.

    கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

    ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.

    தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.

    பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.

    நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.

    பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.

நன்றி  http://www.islamiyadawa.com/women/index.htm
பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்

எதிர்மறை

மாடிவீடு சொகுசுகாரு
பளபளக்கும் டிரஸு பட்டுபோன்ற சூவு
பாந்தாவனபேக்கு பசித்தால் சாக்கிலெட்டுகேக்கு
போதாததற்க்கு பொசுபொசுன்னுசோறு
வாசலுக்குவந்தவுடன் அழுதுஅடம்பிடித்தது குழந்தை
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
ஸ்கூலுக்குபோகமாட்டேனென்று

குடிசைவீடு ஆங்காங்கே கரையான்கூடு
ஒட்டுபோட்ட பாவடை சுறுங்கிபோனசட்டை
பசியெடுத்தால் பழையகஞ்சிசோறு அதுவும்
இல்லையின்னா ஊசிப்போன பன்னு
கையில் மஞ்சபையி காதறுந்த செருப்பு
வாசலில்வந்து நின்னு வம்புபண்ணிஅழுதது குழந்தை
பள்ளிக்கூடம் போறேம்மா
பள்ளிக்கூடம்போறேமான்னு..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய் 
 
நன்றி :

Monday, March 15, 2010

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோபணமே உலகத்தின் ஒரே கடவுள்,அதற்காக எத்தனை குட்டிக்கரணங்களும் போடும் இவ்வுலகில் பாமரர்களுக்கு இந்த படித்த அறிவாளி எவ்விதத்திலும் சளைத்தவரில்லை என இவர் எச்சத்தால் அறிகிறோம். நேற்று முன்தினம் இந்து நேற்று பவுத்தம் இன்று முஸல்மான் இடையில் பெரியாரிஸ்ட் நாளை கிறித்துவர்?!?!?! ஆனாலும் ஆகலாம்.

அறிஞர்கள் என மக்களால் காட்டப்படுகிற சிலரில் இது போன்ற கோமாளிகளும் உண்டு என்பது தான் கசப்பான உண்மை. அதுசரி இவருடைய பயணத்திற்கும்,ம(த)ன மாற்றத்திற்கும் என்ன செலவு ஆனது??/
This Periyar thasan is one useless guy.
He is looking for monetary gain for converting to Islam and hence announced that in Riyadh.
It's good for Hinduism and loss to Islam.

என்றும் இன்னும் பலவாறும் பெரியார்தாசன் இஸ்லாத்தை தானாக தழுவி ஏற்றுக்கொண்ட பின் வர்ணிக்கின்றவர்களுக்கு பெரியார்தாசன் தரும் விடியோ பதில் இதோ.

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.
டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பேட்டி (Video)
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் தமுமுக இணையதளத்திற்காக அளித்த நேர்காணல்.
நன்றி : T.M.M.K
**********************

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர்,

பெரியார்தாசன் வெகு காலத்துக்கு முன்பே சங்கராச்சாரியார், ராமகோபாலன் ஆகியோருடன் வாதாடி, அவர்களை ஓட ஓட விரட்டியவர். இவரது கேள்வி எதற்கும் அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களைக் குறித்து கூறும்போது, இறையியல் தத்துவம், வணக்க வழிபாடுகள், மறுமை நம்பிக்கை என்கிற மூன்று அம்சங்களிலேயே மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்களே தவிர, இரத்தமும் சதையும் உள்ள சகதமிழர்களாக, அவர் தம் தொப்புள்கொடி உறவாகத்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கடத்தல்காரர்களாகவும், பலதார மணமுடிப்பவர்களாகவும் கருதும் போக்கு கடந்த சில வருடங்களாகத்தான் கட்டிஎழுப்பப்பட்டது என்ற பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் , பாபர்மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியே என்றார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்கள் உரிமைகளை சரியாகப் பெற முடியும் என்ற பேராசிரியர் அப்படி ஒன்றிணைந்து விடாமல் சுட்டா'ராம்' கட்சியும், செத்தா'ராம்' கட்சியும் சூழ்ச்சி வலை பின்னுவதை எளிதாக விளக்கினார். "நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழற மாதிரி அழு" கதை தான்.

செத்தவனும் ராம் ராம் என்று சொன்னான், சுட்டவனும் ராம் ராம் என்று தான் சொன்னான். ஆக, இந்த சூனாராம் சேனாராம்களே இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை 'நாம்' தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இங்கே, 'நாம்' என்பது ஒடுக்கப்பட்ட அனைவரும்.

" முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் ஆதிக்க வாதிகள். அப்படிப்பட்ட முஸ்லிம்களைத் தான் தம் இயக்கத்தில்; கட்சியில் பதவியில் வைத்து அழகு பார்ப்பார்கள்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்

"ஒரு ஊரில் மூன்று முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. நாலாவதாக வெளியிலிருந்து வந்தவன், இந்த மூன்று பேரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே இயக்கம் கண்டதாகச் சொல்கிறான்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன் 
நன்றி :

Sunday, March 14, 2010

நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!

எம்.ரிஷான் ஷெரீப்


கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!

காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!

-எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை
 நன்றி:

Friday, March 12, 2010

செங்கிஸ்கான் (ஒரு வரலாறு)

[sen.jpg]வருடம் 1211. மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின்
யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்) நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார். வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார் ஷாங்சூன். சீன அரசர்
கோபாவேசத்துடன் போருக்குக் கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன.
நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,
யான்ஜிங்க் நகர் வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, ‘‘தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத் தெரியும். இதுதான் என்னுடைய போர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்’’ என்றான்.
வருடம் 1162.

Wednesday, March 10, 2010

வெளிநாட்டு மோகம் எதுவரை?


 
[ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள், கட்டுரையின் இரண்டாம் பகுதி.]

சில வேளைகளில் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் பரிதாபரமாக அம்பலமாகும். துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பிய போது நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக துருக்கியில் குர்து மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்க மனப்பான்மையை மெச்சிய படியே, துருக்கியில் இருந்து குர்து அகதிகள் கப்பல் கப்பலாக இத்தாலி வந்திறங்கினர். இதைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக் கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. நேரே துருக்கி சென்று: "நான் சும்மா மனித உரிமை, அது இதென்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்து விட்டாயே!" என சமாதானப் படுத்திய பின்னர் தான், அகதிகளின் வருகை நின்றது.

பின்னர் ஒரு நேரம், கொசோவோ அல்பேனியர் மீது திடீர் பாசம் பொங்கி வரவே, அவர்களைப் பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது புதிய அகதிகள் படை தமது நாடுகளை நோக்கி வரலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்கு தேவையான அளவு அகதிகளை போய் கூட்டி வந்தன. கொண்டு வந்த அகதிகளை சிறப்பு முகாம்களில் சில காலம் (யுத்தம் முடியும் வரை) வைத்திருந்து விட்டு திருப்பியனுப்பினார்கள். ஐரோப்பிய அரசுகள், வருங்காலத்தில் "யுத்த அகதிகள்" விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என தெரிகின்றது. அதாவது ஐரோப்பிய நேரடித் தலையீட்டால், யுத்தம் தீவிரமடைந்தால், அகதிகளை எப்படி சமாளிப்பது என்ற Crisis Management .

ஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டத்தை உருவாக்குவதும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதும் அந்த முகாமைத்துவத்துக்குள் அடங்கும். இதற்கென பின்லாந்தில் கூடிய மகாநாடு எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியன, செல்வந்த வட ஐரோப்பிய நாடுகளுடன் சமமாக பங்கு போடா தயாராக இல்லை. மேலும் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான அகதிகளை ஒடுக்கும் சட்டம் வர நீண்ட காலம் எடுக்காது. ஷெங்கண், டப்ளின் என்று புதிது புதிதாக வரும் சட்டங்கள், ஒரு நாட்டில் நிராகரிக்கப்படும் அகதிகள், மற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட வழி வகுக்கின்றது. இதனால் வாய்ப்பற்ற அகதிகள் தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டிய நிலை. இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாட்டு மக்களின் இடப்பெயர்வு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது.

இப்படியான மாற்றங்களால், பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்தில் இருந்து, ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எஜமானர் மீது வெறுப்படையும் நிலை தோன்றும். ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது. இதை தெரிந்து கொண்டும், மூன்றாம் உலக மக்கள், தமது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதேன்? அரசியல், அல்லது யுத்த அகதிகளை தவிர்த்து விட்டு, பொருளாதார நோக்கங்களுக்காக இடம்பெயரும் மக்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

நாடு விட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு, ஐரோப்பிய காலனித்துவ காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. இந்திய,சீனக் கூலிகள் காலனிகளை வளம் படுத்த ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, மிகக் குறைந்த ஊதியம் பெறும் கூலிகள் செய்தனர். வேலை நேரத்திற்கு கூலி, ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் வசதி, மேலதிக ஊக்குவிப்புத் தொகை, என்பன இவர்களை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றை தவிர, வேலைப்பளு, வேலை நேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே தொடர்ந்தது. இவ்வாறு தான் நவீன அடிமைகள் உருவானார்கள்.

பின்-காலனித்துவ காலத்தில், காலனிப்படுத்திய ஐரோப்பிய எஜமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருந்தன. புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறிய நாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடமைச் சமுதாயத்துக்குள், சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம்பிடித்தது. புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென வளர்க்கப்பட்ட மத்தியதர வர்க்கம் வசதி படைத்திருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட பணம் என்ற மந்திரக்கோல் இருந்தது. அதன் மந்திர சக்தியைக் கண்டு வியந்த மக்கள், தாமும் அதைப் பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் ஏழைகள் என்ற போதிலும், அவர்களும் வாதியை தேடித் போயினர். "அவரவர்க்கு விதிப்படி தான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாக வாழ்பவன், மறுபிறவியில் செல்வந்தனாவான்." என்று மதங்கள் கூறிய உபதேசங்களை இன்று யாரும் நம்புவதில்லை. வசதியான வாழ்வை உத்தரவாதம் செய்யும் பணம் எனும் புதுக் கடவுளின் உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி. இவர்கள் தமது கடவுளை தரிசிக்க, அருள் வேண்டி அவர் இருக்கும் இடம் தேடித் போவதில் வியப்பில்லை.

பணக்கடவுளும் அவ்வளவு சுலபமாக அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு, ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே "அழுக்கு வேலை" செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை, தனியொருவர் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விசா இன்றி இருப்பவர் ஆயின், அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என்று பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவைகளின் இரத்ததி உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கின்றனர். மறு பக்கம் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் இருண்ட மூலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப் பற்றி யாரும் அக்கறைப் படுவது கிடையாது. மிகுந்த சிரமத்துடன் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரும் அகதிகள் இறுதியில் கண்டடைவது இதைத் தான்.

இந்த இடத்திலாவது வறிய நாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கப் போகிறோம்? நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். "எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை." எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா? மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை, அறுபது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம். கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம். குழந்தைத் தொழிலாளிகள். அசுத்தமான சேரிகள். வாக்குரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம். இது தான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.

அந்த அவலநிலை திடீரென் ஒரே நாளில் மாறி விடவில்லை. ஆளும் வர்க்கம் தானாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப் படுத்தப் பட்டனர். அடித்தட்டு மக்களிடமிருந்து ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்த போராட்டம், ஜனநாயக மயப்படுத்தலுக்கும், இன்று நாம் காணும் நலன்புரி அரசுக்கும் வழி வகுத்தது. சுருங்கச் சொல்லின், மக்கள் தமது உரிமைகளை போராடித் தான் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணய சட்டங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமை. நிறுவனமயப் படுத்தப் படாமை. அடங்கிப் போகும் குணாம்சம். இவற்றை தமக்கு சாதகமாக எடுத்தக் கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர் வாழ்கின்றன. கலாச்சாரப் புரட்சியின் போது சீனா சென்று வந்த, இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய மக்கள், போர்க் குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச்சாரம் பற்றி கற்பிக்கப் படுகின்றது. ஆசிய மக்கள், இதற்கு மாறாக கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம் பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது."

(முற்றும்)
["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]
நன்றி : http://kalaiy.blogspot.com/2010/02/blog-post_07.html

Tuesday, March 9, 2010

வெளிச்ச அழைப்புகள்

 அன்புடன் புகாரி


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமை கட்டுகள் அறுந்து விழவேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு தொழுதிடணும்

அன்புடன் புகாரி

உலக கல்வியும் - மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு..

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான். தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.

உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?

சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம் , ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.

எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா?

இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்

1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.

2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.

குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.

பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.


வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.

1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.

2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

ஆக்கம் :S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

Monday, March 8, 2010

சங்ககால விலங்குகள் (படம்)புவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.
இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.
இயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.
இயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.

இயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.
அதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

சங்கத் தமிழரும் விலங்கினங்களும்.


சங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.

வளர்ப்பு விலங்குகள்.

நாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.

யானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.

கழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.

யானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.

குரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..

சங்கத்தமிழரின்,

பண்பாட்டில்,
போரில்,
உணவில்,
போக்குவரத்தில்,
உவமையில்,


எனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.

சான்றாக,

கீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.


1. சகுனம் பார்த்த பன்றி

2. சிறுபிள்ளையும் பெருங்களிறும்

3. விட்டகுதிரையார்
4. அணிலாடு முன்றிலார்
5. இரும்பிடர்த்தலையார்

6. கூவன் மைந்தன்

7. இம்மென் கீரனார்

8. கொட்டம்பலவனார்.
9. துன்பத்தில் இன்பம் காண.
10. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்.
11. சங்ககால ஒலி கேளுங்கள்
12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)நன்றி

Sunday, March 7, 2010

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

 • உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
 • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
 • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
 • தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
 • குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
 • மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
 • குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
 • சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
 • குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
 • குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
 • கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
 • குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
 • கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
 • இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
 • ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
 • தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
 • சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
 • கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
 • பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
 • வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
 • மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
 • மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
 • இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
 • சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
 • சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
 • ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
 • சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
 • வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
 • கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
 • தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
 • சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
 • ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
 • கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
 • எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.
 • வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
 • குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
 • குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
 • தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
 • வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
 • குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
 • துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
 • தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
 • குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
 • குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
 • நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
 • வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
 • குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
 • விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்  நன்றி:  http://sathik-ali.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails