Wednesday, October 31, 2018

சகிப்புத் தன்மை, உரை : மௌலவி Ansar Hussain Firdousi

உங்கள் உடலில் தினமும் நடக்கும் சூட்சும நிகழ்வு.

 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எப்படியென்றால் நீங்கள் இறை திக்ரு தியானத்தின் மூலம் உங்கள் உள்ளொளி யாக சென்று ஆழ்மனதை அடைந்து ஆழ்மனதை பயன்படுத்தி நீங்கள் இறை சக்தியுடனும், பிரபஞ்சத்துடனும் இணைந்து தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்ளும் உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோரு வரின் ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள முடியும்.

உங்கள் உடல், உங்கள் உடலிலுள்ள சூட்சும சக்திகளால் தான் இயங்குகிறது. அந்த சக்திகளை கிரகித்துக் கொள்ள உடலில் ஏழ சக்கரங்கள் சுழல்கிறது. அந்த சக்கரம் இயற்கையாகவே தனது உடலுக்கு தேவையான சக்திகளை பிரபஞ்ச சக்திகளில் இருந்து  தனது சுழற்சி மூலம் எடுத்துக் கொள்ளும். அந்த சக்கரத்தின் சுழற்சி குறைந்தால் உடலில் நோய், பிரச்சனைகள்  ஏற்படும். இது உங்கள் உடலில் தினமும் நடக்கும் சூட்சும நிகழ்வு. 

Thursday, October 18, 2018

அத்தியின் மீதாணை!

அத்தியின் மீதாணை!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 95 : அத்தீன்)

இனிக்கும் இயல்பும் இயற்கை மணமும்
கனிந்தப் பழத்துள் கனிம ஊட்டமும்
வாய்க்குச் சுவையும் நோய்க்குப் பகையும்
விதைத்துப் படைத்த அத்தியின் மீதாணை!

உவர்ப்பும் கசப்பும் ருசிக்கும் பதத்தில்
கருப்பும் பழுப்பும் காய்க்கும் விதத்தில்
உழைக்கும் உடலுக் குகந்த ஆற்றல்
மிகைக்கப் பொதிந்த ஒலிவம் மீதாணை!

Friday, October 12, 2018

உடல் முதுமை ஆன்மாவின் அனுபவம்.

ஏழு வயதில் சிறுவனாக இருந்த நான் இப்போது தும் இருக்கிறேன். ஆனால் ஏழு வயது சிறுவனாக இருந்த நான். இப்போழுது இருக்கின்ற நாற்பத்தி மூன்று வயது நான். ஏழு வயது சிறுவனாக இருந்த நான் இல்லை. புரியவில்லை இல்லையா ?.

நீங்கள் ஒவ்வொரு நாளும் நிலக் கண்ணாடியில் உங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் பரவாயில்லை முன்னைய விட இப்போழுது நான் அழகாகவே இருக்கிறேன் என்று பார்த்து பெருமிதம் அடைகிறீகள் ஆனால் பல வருடங்களாக பார்க்காத உங்கள் நன்பர் அல்லது உறவினர்கள் உங்களை சந்திக்கிறபோது அவர்களைப் பார்த்து அல்லது அவர்கள் உங்களைப் பார்த்து செல்லக்கூடிய முதல் வார்த்தை என்ன முடியெல்லாம் நரைத்து விட்டது உடல் கூட தளர்ந்து விட்டதே என்று அப்படியா இருக்கேன் ?. அப்போதுதான் உங்களுக்கு தெரிய வருகிறது நமக்கு முடி நரைத்து விட்டது, உடல் தளர்ந்து விட்டது, முந்தைய இருந்த உடல் இப்போழுது இல்லை. உடனே முதுமை பற்றிய பயமும், மரண பயமும் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் படர ஆரம்பிக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails