Monday, October 31, 2011

இந்தியாவில் 700 கோடியாவது குழந்தை "நர்கிஸ்"

லக்னோ: உலக நாடுகள் பலவும் 700 கோடியாவது குழந்தைகளை கொண்டாட்டங்களுடன் வரவேற்றுள்ளன. முன்னதாக, உலகின் மக்கள்தொகை 700 கோடியாக இன்று உயர்வதை ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரப்பூர்மாக அறிவித்தது.

இந்தியாவில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று காலை 7.10 மணிக்கு பிறந்த நர்கிஸ் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை, 700 கோடியாவது குழந்தை என்ற அடையாளத்தைப் பெற்றது.

உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுள்ளது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள செய்தி:

"மக்‍கள்தொகை மிக அதிகமாக பெருகி வருவதால் ஜனநெருக்கடி என்று சிலர் கூறலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில் 700 கோடி வலிமை படைத்த மக்‍களைக்கொண்ட சமுதாயமாக நாம் உருவெடுத்துள்ளோம் என்றே கருதுகிறேன்.


பூவி வெப்பமடைதல், பொருளாதாரச் சிக்‍கல், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்‍கு தீர்வு காணும் ஒரே குறிக்‍கோளுடன் உலக மக்‍கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். உலகலாவிய பிரச்னைகளுக்‍கு, உலகலாவிய தீர்வுகள் தேவைப்படுவதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/

ஸ்பெசல் கருவாடு குழம்பு!
தேவையான பொருட்கள் :
வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு
முட்டை : 3
மிளகு சீரகம் : 25 கிராம்
நாட்டு பூண்டு : 30 பல்
நல்லெண்ணை : 50 கிராம்
புளி : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை :
* மிளகு சீரகத்தைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்.
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தைப் போட்டு நன்றாக வதக்கி, கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
* கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையைத் திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.
குறிப்பு : இந்தக் குழம்பிற்கு நல்லெண்ணெய்த்தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/ -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, October 30, 2011

போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் முஸ்லீம்-கிரிஸ்துவர் பெயர்கள்

போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின்  -  முஸ்லீம்-கிரிஸ்துவர் பெயர்கள்  அரபி  மற்றும் ஆங்கிலத்தில் அழைப்பது 

Muslim-Christian names of the Prophets believed by the Ahl-e Kitab
Prophets of People of the Book - Ahl-e Kitab
Arabic English Equivalent
Adam ஆதம்  Adam
Nuh நூஹ்  Noah
Ibrahim இப்ராகிம் Abraham
Ismail இஸ்மாயில் Ishmael
Ishaq இஷாக் Isaac
Lut லூத் Lot
Dawood தாவூத் David
Ayoub Job
Yaqoub Jacob
Sulaiman Solomon
Talut Saul
Uzair Ezra
Yunus Jonah
Yusuf Joseph
Hud Hud
Zul'Kifl Zul'Kifl
Zul'Qarnain Two-Horned -Alexander
Idris Idris
Luqman Luqman
Al Yasha Elisha
Saleh Salih
Shuaib Shoaib
Mousa Moses
Haroun Aaron
Issa Jesus
Yahya John the Baptist
Zakariya Zacharias
Ilyas Elias
Muhammad, Ahmed Mahomed, Praised One
Other
Allah அல்லாஹ் God
Quran Koran
Firoun Pharaoh
Habeel Abel
Hassan Shabur
Hussain Shabir
Imran Amran
Injeel Gospel
Taurat Torah
Zaboor Psalms
Jalut Goliath
Jibreel Gabriel
Qabeel Cain
Hajar Hagar
Juj Gog
Majuj Magog
Maryam Mary
Masjid Mosque
Mikaeel Michael
Misr Egypt
Nasrani Christian
Yahudi Jew
Qarun Korah
Muslim Moslem
Sabah, Bilqees Sheba
Suad Sad
Ad Aad
Khidr Khezr
Iblis Satan
Madyan Midian
Samood Thamoud
Source : http://www.amaana.org/arch/ismail.htm  

குழந்தையின் மூளை, பதிவுக் களஞ்சியம்

குழந்தையின் மூளை, பதிவுக் களஞ்சியம்: குழந்தையின் மூளை, ஒரு பதிவுக் களஞ்சியம் அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது "புதிய" மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தை கள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்வர். அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும். ALHAMDULILLAH
Source :http://dharussalam.blogspot.com/2009/02/blog-post_7573.html

மக்கா, மதினா மேலும் பல நேரலை பாருங்கள்

AdiraiTV
====================================================================

மக்கா நேரலை,மதினா நேரலை மற்றும் பல நேரலைகள்

உலகலாவிய இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இணையத்தில்):
· MAKKAH LIVE மக்கா நேரலை (24x7 திருக்குர்ஆன்) : http://adiraitv.blogspot.com/2011/07/makka-live-new-link.html

· MADINA LIVE மதீனா நேரலை (24x7 ஹதீஸ்): http://adiraitv.blogspot.com/2011/07/madina-live.html

· ISLAM TV LIVE இஸ்லாம் டிவி (24x7ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/10/islam-tv.html

· HUDA TV LIVE ஹுதா டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/huda-tv.html

· PEACE TV LIVE பீஸ் டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/peace-tv-live_20.html


மக்கா நேரலை - 1 
Makka Live
Madina Live
SAUDI CHANNEL 2
SAUDI CHANNEL 2
RAMADAN TV AL MAJD QURAN TV 

SHARJAH TV
NDTV  
PEACE TV 
மக்கள் TV 
Makka Live 
BBC  
Madina Live 
CNN  
ISLAM TV 
Al Jazeera - Eng 
HUDA TV 
Al Jazeera - Ara  
SAUDI CHANNEL 1 
CNBC  
SAUDI CHANNEL 2 
OLD CARTOON 
RAMADAN TV
 NASA TV 
AL MAJD QURAN TV  
SHARJAH TV

Saturday, October 29, 2011

ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து கிளம்புகிறார்கள்.இது முறையா…?

கேள்வி – ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா… போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா…? ஜின்னா – யாஹூமெயில் வழியாக.

நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் – தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் – இந்த நோக்கத்திற்காக – ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளுள், எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை அடைந்து விட்டோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 22:28) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று காலங் காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின்
(அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன?" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும்
(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
(அல்குர்ஆன், 37:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்
"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

"குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).
நடக்கக்கூடிய, அமரக்கூடிய, பார்க்கக் கூடிய உறுப்புகள் கருமை நிறமுடைய ஓர் ஆட்டை, குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். (ஆடு வந்ததும்) "ஆயிஷாவே கத்தியை எடுத்து வா!" என்றார்கள். பிறகு, "அதைக் கல்லில் தீட்டு!" என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பர். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து,  நீர் பார்க்கக்கூடிய (பெருமைக்காகப் பிராணிகளை அறுக்கும்) இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

"குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளங்கள்; தர்மமும் செய்யுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்துப் பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்து இருக்கிறார்கள் எனும் அறிவிப்பின் மூலம் கூடுதலாக அறுப்பது ஆகுமானதே என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகமோ ஒரு மாடோ குர்பானியாகக் கொடுக்கலாம்.
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?
"இன்றைய நாளில் நாம் முதலாவதாகச் செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர், "என்னிடத்தில் 'முஸின்னாவை' விடச் சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். "முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இவ்வாறு (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?
வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.
முஸல்லா என்னும் திடலில் நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணிகளைஅறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

"ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!" எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்
"தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10இன் பெருநாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!
Source : http://www.satyamargam.com/691 

குர்பானியின்  சட்டங்கள் .
குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை ஆனால் உங்களுடைய  தக்வா (இறையச்சம் ) தான் அவனை அடையும் . ( அல் குர்ஆன்-22:37) 
குர்பானி செய்ய சக்தி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது பெருநாள் தொழுமிடத்திற்கு வர வேண்டாம் !-அல்ஹதீஸ்
குர்பானி தினத்தில் குர்பானி கொடுப்பதை தவிர மிகச் சிறந்த செயல் வேறு எதுவுமில்லை.
குர்பானி செய்தால் என்ன நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சஹாபா பெருமக்கள் வினவியபோது   குர்பானி செய்யப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமதிற்கும் ஒரு நன்மை அளிக்கப்படுகிறது.நரகத்திற்கும் அவனுக்கும் மத்தியில் திரையிடப்படுகிறது என்று பதில் கூறினார்கள்.
குர்பானி தினத்தில்  செய்யும் மற்ற எல்லா  அமல்களின் நன்மையைவிட குர்பானி நன்மை அதிகம் . குர்பானி பிராணியை அறுக்கும்போது வடியும் இரத்தம் பூமியை அடையுமுன்  அல்லாஹ் இடத்தில இந்த  குர்பானி ஏற்றுக் கொள்ளப்படுகிறது . எனவே, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு குர்பானி கொடுங்கள் ! என்று நபிகள் நாயகம்  (ஸல்) நவின்றுள்ளார்கள் (நூல் :திருமதி)  

நம்ம ஊரு செய்தி - நவம்பர் 2011

N OoruSeythi Nov 2011

நகர்மன்றம் முதல்… நாடாளுமன்றம் வரை…

நகர்மன்றம் முதல்… நாடாளுமன்றம் வரை…:
276272_100001340672741_3562728_n

எழுதியவர் வேங்கை சு.செ.இப்ராஹீம்(நார்வே)

தமிழகத்தின் உள்ளாட்சித்தேர்தல்கள் முடிவடைந்து புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்

பதவி ஏற்றுவரும் தருவாயில் என் சமுதாயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன சாதித்துள்ளது…?

அதுதான் இந்த கட்டுரையின் கேள்வி..


கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட்டது

அதில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும் அடக்கம்.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இராமநாதபுரம்,

ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிகண்ட மமக, திமுக கூட்டணியில் மூன்று தொகுத்களில்

திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு படுதோல்வியடைந்த முஸ்லிம்லீக்… முதல் தேர்தல் என்றாலும்

தனித்தே களமிறங்கிய எஸ்.டி.பி.ஐ. ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது.


தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்ற அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அனைத்துமே

தாங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் என பிரகட்டனபடுத்திகொண்டு சமுதாயத்தை பின்னோக்கி

அழைத்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சி…


மமக 600 இடங்களில் போட்டியிட்டு சுமார் 140 இடங்களில் வெற்றி கண்டுள்ளது… அந்த வெற்றியை அக்கட்சியின் அதிகாரபூர்வ

இணையதளமும் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வருகிறது… அதேபோல முஸ்லிம்களின் அரசியல் தாய்ச்சபை என

வர்ணிக்கப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 390 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றுள்ளது…

எஸ்.டி.பி.ஐ எனப்படும் சோசியல் டெமோக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கிருத்துவ இயக்கங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்டு சுமார் 62 இடங்களில் வென்றி பெற்றுள்ளது… மாநகர மேயர் தேர்தலில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ இன்

வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்கள்…


இதுதவிர கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்களின் ஆதவுடன் போட்டியிட்ட சகோ.அமீர் அல்தாப் முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்….


மேலே குறிபிட்டபட்டிருப்பவைகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிகொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் வாங்கி இருக்கும் வாக்கு விகிதம்… ஒவ்வொருவரும் தாங்கள் அளப்பரிய வெற்றிகண்டுள்ளதாக பெருமைபட்டுகொண்டிருக்கும் இந்த தருவாயில் இவைகள்

எவ்வளவு எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவு என்பதை நாம் கவனிக்கவேண்டும்… அதேபோல பலம்பெரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கோவை மாநகர மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளர் சகோ.அமீர் அல்தாப் அவர்களால் எப்படி மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்… கோவையை போல ஏன் மற்ற இடங்களில் நமது சமூக வேட்பாளர்களால் கவுரவமான வாக்குகள் வாங்க முடியவில்லை

இந்த தோல்விகளுக்கு யார் காரணம்…?

Thursday, October 27, 2011

வெள்ளிக் கிழமையின் மகத்துவம்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... 

62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.


62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

62.10. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
 

Wednesday, October 26, 2011

அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும்

அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும் உலகமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என நீங்கள் கற்பனை செய்தால் ஈராக் தாக்குதல்களுக்கு உதவி புரிந்த குறுதீஸ்யினத்தின் ஒருபகுதி போல- லிபியாவை சீரளித்த ஏகாதிபத்திய கூலிப்படைபோல நிலையேற்படுவதும் அல்லாமல் சதாம் இல்லாத ஈராக் போல கடாபி இல்லாத லிபியா போல ஒரு இருள்சூழ்ந்த நிலையே காணப் படும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் இருந்தவேளை லிபியாவிற்கெதிராக போர் தொடுத்ததை அறிவோம் அந்த நேரம் கடாபியை சாதாரணமாக அவா்கள் கொன்றிருக்கலாம் ஆனால் அவா்கள் வேறு நலன்களை இட்டு ஒரு மிரட்டலுடன் நிறுத்திக்கொண்டார்கள். சா்வாதிகாரிகள் தம் நிலைகளை காப்பாற்றிக்கொள்ள மேற்க்குலகுடன் பாதாள திரைமறை அழுக்கு வியாபாரங்களில் ஈடுபடுவதும் பின்பு அந்த இரகசியங்கள் கசியும் நிலை வருகின்றபோது மேற்க்குலகம் தம் போலி முகத்தை காப்பாற்றிக்கொள்ள அதிரடியில் இறங்குவது சாதாரண விடயம் இதன் விளைவே கைது செய்து நீதியின் முன் நிறுத்தாமல் சதாம் குசைன்,ஒசாமா பின்லாடன்,இப்போது கடாபி போன்றோர்கள் கொல்லப்பட்டதன் காரணம்.லிபியாவின் எண்ணைக்குதங்களை எப்பவோ உலகின் முன்னணி நாடுகளின் கம்பனிகள் குத்தகை எடுத்துவிட்டன இதில் இந்தி...
Mohamed Ali
 Alaavi Ma
அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நேட்டோவும் உலகமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என நீங்கள் கற்பனை செய்தால் ஈராக் தாக்குதல்களுக்கு உதவி புரிந்த குறுதீஸ்யினத்தின் ஒருபகுதி போல- லிபியாவை சீரளித்த ஏகாதிபத்திய கூலிப்படைபோல நிலையேற்படுவதும் அல்லாமல் சதாம் இல்லாத ஈராக் போல கடாபி இல்லாத லிபியா போல ஒரு இருள்சூழ்ந்த நிலையே காணப் படும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் இருந்தவேளை லிபியாவிற்கெதிராக போர் தொடுத்ததை அறிவோம் அந்த நேரம் கடாபியை சாதாரணமாக அவா்கள் கொன்றிருக்கலாம் ஆனால் அவா்கள் வேறு நலன்களை இட்டு ஒரு மிரட்டலுடன் நிறுத்திக்கொண்டார்கள். சா்வாதிகாரிகள் தம் நிலைகளை காப்பாற்றிக்கொள்ள மேற்க்குலகுடன் பாதாள திரைமறை அழுக்கு வியாபாரங்களில் ஈடுபடுவதும் பின்பு அந்த இரகசியங்கள் கசியும் நிலை வருகின்றபோது மேற்க்குலகம் தம் போலி முகத்தை காப்பாற்றிக்கொள்ள அதிரடியில் இறங்குவது சாதாரண விடயம் இதன் விளைவே கைது செய்து நீதியின் முன் நிறுத்தாமல் சதாம் குசைன்,ஒசாமா பின்லாடன்,இப்போது கடாபி போன்றோர்கள் கொல்லப்பட்டதன் காரணம்.லிபியாவின் எண்ணைக்குதங்களை எப்பவோ உலகின் முன்னணி நாடுகளின் கம்பனிகள் குத்தகை எடுத்துவிட்டன இதில் இந்தியா,சீனா போன்றவையும் அடங்கும் இந்த குத்தகைகளை தட்டிப்பறிக்கும் நோக்கம் மேற்குலகிற்கு இருக்குமாயின் லிபியாவின் கடாபிக்குப்பிந்திய காலம் இருண்ட காலமாகிவிடும் முதலில் சா்வதேச ஒப்பந்தங்களை எந்த புதிய அரசுகளும் மீற முடியாது இரண்டாவது வழா்ந்து வரும் நாடுகளான இந்தியா,சீனா போன்றவைகளை தவிர்த்தல் இன்றய நிலையில் இயலாத காரியம்.

இதை விட்டு கடாபி எண்ணைக்கிணறுகளை காப்பாற்றி வைத்திருந்தார் என்பது அறியாமையாகும்.

லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இது வரைக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர் மேற்கின் சூழ்ச்சியால் அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார். ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது
 
Ayath Rehman

Tuesday, October 25, 2011

சேவை செய்ய வயது ஒரு தடையல்ல - தேர்தலில் வெற்றி பெற்ற 102 வயது மூதாட்டி!


மதுரை மாவட்டத்தில் உள்ள புதுக்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் தடகதி எனும்  102 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார். கிராமப் புற மருத்துவச்சி தொழில் செய்து வரும் தடகதி, 1000 பேருக்கு மேல் பிரசவம் பார்த்தவராவார்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 102 வயது மூத்தவர் என்ற சாதனையைச் சத்தமில்லாமல் செய்து இருக்கிறார் தடகதி.
''என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பணத்தையோ, அரசுப் பணத்தையோ மோசடி செய்ய மாட்டேன்'' என்பதே இவரது தேர்தல் வாக்குறுதியாம். ''என் கிராமத்தில் அமைதி நிலவ உரிய முயற்சி எடுத்து விட்டு ஊரை சுத்தம் செய்வதே என் முதல் பணி'' என்று கூறும் தடகதியின் பேச்சில் நம்பிக்கை தெரிகிறது.

Saturday, October 22, 2011

கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي  كُنتُ مِنَ الظَّالِمِينَ

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். ''அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். ''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:87.


கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்

கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.

இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று மாற்றப்பட்டு விட்டது. காட்டுக் கூச்சல் இடுவதும் கை,கால்களை உதறுவதும் கோபம் வரவில்லை என்றாலும் வரவழைக்க முயற்சி செய்வதும்  இன்றைய மக்களிடத்தில் சகஜமாகி விட்டது,

இவ்வாறு செய்வது அவரது அமலையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைப்பதை அவரகள்; அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டாரகள்;. 

கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாப் புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்தும் விடும்.  
  
பாதிக்கும் ஆரோக்கியம்.
ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளும் பொழுது நரம்பு மண்டலம் விரிவடைந்து கோபம் தனிந்தப் பின் நரம்புகள் சுருங்கத் தொடங்குகின்றன சுருங்கிய நரம்புகள் பழைய நிலையை அடையாமல் தளர்ந்து விடுவதுண்டு அவ்வாறுத் தளர்ந்து விட்ட நரம்புகளில் ஓடும் இரத்தம் பழைய படி மிதமாக ஓடாமல் வேகமாக ஓடத் தொடங்கும். இதன் மூலமாகவே இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், கொழுப்புச் சத்துப் போன்ற உடலை ஆக்ரமித்துக் கொண்டு அகலாத நோய்கள் உருவாகின்றன. 

இரத்தத்தில் கலக்கக் கூடிய, இரத்த வேகத்தை அதிகரிக்கக் கூடிய இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புப் போன்ற  நோய்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஹெவிடோஸ் கொடுக்கின்றனர் இந்த ஹெவிடோஸ்கள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து வெகுவிரைவில் மரணத்திற்கு இழுத்துச் செல்கின்றதை அவர்கள் அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டார்கள். 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் -- நீடூர் ஊராட்சி + கங்கணம்புத்தூர் ஊராட்சி (நீடூர் நெய்வாசல் )

 VP Name:  KANGANAMPUTHUR      Votes Polled:  1524      Valid Votes:  1426      Invalid Votes:  98
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அப்துல்மஜீது.சு சுலைமான்
97 Deposit Lost
2 அன்சாரி.அ மஜீது
157 Deposit Lost
3 கமலா.ம மதியழகன்
269 Elected
4 சந்திரகாசு.ப பஞ்சாயத்து
102 Deposit Lost
5 சம்பத்.மு முனியன்
59 Deposit Lost
6 சிவலா.அ அம்பேத்கர்
30 Deposit Lost
7 செந்தில்குமார்.ஆர் ராஜேந்திரன்
19 Deposit Lost
8 தமீமுல் அன்சாரி.அ அப்துல்லா
25 Deposit Lost
9 பதரூல்ஜமான்.மு முகமதுசாலீ
10 Deposit Lost
10 பாரேஸ்வரன்.மு முனுசாமி
24 Deposit Lost
11 மதிவாணன்.மா மாரியப்பன்
58 Deposit Lost
12 முகமதுஇஸ்மாயில்.அ அப்துல்ஜலீல்
14 Deposit Lost
13 மும்தாஜ்பேகம்.இ இப்ராஹிம்
55 Deposit Lost
14 ரவி.ர ராசு
60 Deposit Lost
15 ராஜேந்திரன்.கோ கோவிந்தசாமி
7 Deposit Lost
16 வரதராஜன்.த தங்கையன்
35 Deposit Lost
17 ஜெயராமன்.ப பஞ்சவர்ணம்
168 Deposit Lost
18 ஜெனிபர் அலி.மு முகமதுஷரிப்
237 Deposit Lost
VP Name:  NEEDUR      Votes Polled:  2385      Valid Votes:  2257      Invalid Votes:  128
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அப்துல்கமீது.கா காதர்பாட்சா
92 Deposit Lost
2 அப்துல் சலாம்.ரா ராஜ்முகமது
36 Deposit Lost
3 இந்திரஜித்.தை தையான்
17 Deposit Lost
4 குளஞ்சிநாதன்.க கலியபெருமாள்
155 Deposit Lost
5 சமீர் அகமது.அ அப்துல் மஜீது
565 Elected
6 செல்வராஜ்.அ அண்ணாமலை
443 NotElected
7 நாகராஜன்.ப பக்கிரிசாமி
30 Deposit Lost
8 பஜல் ரஹ்மான். முகமது இப்ராகிம்
120 Deposit Lost
9 பஜ்ருதீன்.மு முகமதுஇஸ்மாயில்
202 Deposit Lost
10 புருசோத்தமன். மகாதேவன்
19 Deposit Lost
11 முஹம்மது நஜிம். ஷேக் தாவூது
263 Deposit Lost
12 ரமேஷ்.க கலியமூர்த்தி
303 Deposit Lost
13 ஜபருல்லா.ஸே ஸேக்தாவுது
12 Deposit Lost

  Ward No:  15      Votes Polled:  2386      Valid Votes:  2215      Invalid Votes:  171
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அரசப்அலி.அ அன்சாரி சுயேட்சை 234 Deposit Lost
2 ஆதித்தன்.பா பாண்டித்துரை தி.மு.க 525 Elected
3 சசிகுமார்.கோ கோசலராமண் பா.ம.க 254 Deposit Lost
4 சாகுல்ஹமீது.ர ரஹமத்துல்லா சுயேட்சை 166 Deposit Lost
5 சுரேஷ்குமார்.சூ சூரியமூர்த்தி சுயேட்சை 33 Deposit Lost
6 சோழவேந்தன்.ரா ராமையன் சுயேட்சை 256 Deposit Lost
7 முகம்மதுஅஜிமல்கான்.அ அப்துல்கையூம் தே.மு.தி.க 79 Deposit Lost
8 முகம்மதுயூனுஸ்.ச சர்புதின் இ.தே.கா 235 Deposit Lost
9 முகம்மதுரபீக்.க கமாலுதீன் மற்றவை 183 Deposit Lost
10 ராஜேந்திரன்.கோ கோவிந்தசாமி அ.இ.அ.தி.மு.க 250 Deposit Lost
    
District ::     AGAPATTINAM
Block::     MAYIADUTHURI
Post ::             Panchayat Union Ward memberWard No:  16      Votes Polled:  2529      Valid Votes:  2391      Invalid Votes:  138
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அப்துல்மாலிக்.அ அப்துல்முத்தலிப் தி.மு.க 566 NotElected
2 ஆறுமுகம்.த தனபால் பா.ம.க 126 Deposit Lost
3 இளங்கோவன்.க கலியபெருமாள் தே.மு.தி.க 279 Deposit Lost
4 சந்தோஷ்குமார்.பா பாஸ்கர் அ.இ.அ.தி.மு.க 1211 Elected
5 ராஜா.அ அன்பழகன் சுயேட்சை 209 Deposit Lost
Please Click Here to see Election Commision’s Declaration

LinkWithin

Related Posts with Thumbnails