Tuesday, February 28, 2017

அத்தனையும் உன் அருளே..

எனது சூனியத்தில்
எத்தனை மின்னல் !
எனது இருட்டுக்குள்
எத்தனை வெளிச்சம் !
எனது இல்லாமைக்குள்
எத்தனை கொடைகள் !

Tuesday, February 21, 2017

பிப்ரவரி-21 சர்வதேச தாய்மொழி தினம்

'வரலாறும், இலக்கியமும் இரு கண்கள்...' என இன்றைய தலைமுறையினர் கருத வேண்டும். அப்போதுதான் தங்களது சொந்த வரலாறு அறிந்து, தங்களுக்கே உரிய பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பேணி வாழ ஏதுவாக இருக்கும். காலம் கடந்து நிற்கும் சிறப்பு இலக்கியங்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு சமூகமும் தங்களது தனித்த அடையாளத்தை, பாரம்பரியச் சிறப்பை, வாழ்வியலை இலக்கியமாக வடித்து எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். இக்கடமையை முந்தைய தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் செம்மையாகச் செய்து வந்தனர். படைப்பிலக்கியங்களில் பெரும் பங்களிப்புச் செய்து தமிழ்மொழிக்கும் அழகு சேர்த்தனர்.

Thursday, February 9, 2017

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலாச்சார பயணம் 18.02.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால அரபி மொழி கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவை இருந்து வருகிறது.
அரபி மொழி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் கொண்ட நூலகம், பாரம்பர்ய பொருட்கள், அமீரகத்தின் பழங்காலம் குறித்த தகவல்கள், பழங்கால தொலைபேசி உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்த குழுவினர் தமிழகத்தின் நீடூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

Wednesday, February 8, 2017

யார் தடுப்பார் ?..எவர் தடுப்பார் ?...

J Banu Haroon
இங்கே தாலியும் புர்காவும் பற்றிப்பேச ...
யாருக்கும் தகுதியில்லை .நகர்ந்து நில் !...
அவளின் உரிமை ...அவளின் கலாச்சாரம் ...
அன்னியனுக்கிங்கே என்ன வேலை?...
வடக்கே ஒருவர் பேச ...
தெற்கே ஒருவர் கூவ ...
கிழக்கே ஒருவர் கேவ ...
மேற்கே ஒருவர் மாய ...
என்ன கேலிக்கூத்திது ?...
யார்தந்த உரிமையிது ?..
எந்தமத உரிமையை ...
எந்தமதம் தட்டிப்பறிப்பது ?...
எந்த மனிதனின் உரிமையை ..
எந்த மனிதன் எட்டித்தடுப்பது ?.
யாரது ராஜா ?..எட்டுத்திக்கும் கொடிபறக்க ....
யாருக்கேணும் தூக்கட்டும் கூஜா !...

Saturday, February 4, 2017

[Success Through Salah-09] தொழுகையும் அறிவாற்றலும் – Salah and Intellect

S.A. மன்சூர் அலி, நீடூர்  December 30, 2016 தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி, வீடியோ ஆடியோ Leave a comment 237 Views

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-9)

S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 9

தொழுகையும் அறிவாற்றலும் – Salah and Intellect

வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி
(மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)

Thursday, February 2, 2017

அவன் நம் தாய்மார்களை விட கருணையில் மேலானவன்

தூக்கிப் போட்டு கொஞ்சி விளையாடும் குழந்தை அந்த நிலையில் தாயின் முகத்தில் சிறுநீர் பெய்தால், அட என் செல்லமே, என் கண்ணுக்கு ஒண்ணுக்கு வந்துட்டதாக்கும் என்று செல்லமாய் சிணுங்கி தன் முகத்தையும் குழந்தையையும் பொறுமையாய் சுத்தம் செய்யும் தாயை விடவும்.......
இலட்சோப இலட்சம் அளவுக்கு கருணையின் வடிவாக விளங்கும் பேரிறைவன், அறியாமல் அவன் மக்கள் செய்யும் சில தவறுகளை பிழைகளை தப்புகளை மன்னிக்காமல் இருந்து விடுவானா?
அதற்கெல்லாமும் நாளை மறுமையில் குற்றம் பிடிப்பான் என்று விளக்கம் தர இங்கே யாராவது முயன்றால்......

Wednesday, February 1, 2017

நிம்மதியெனும் பேரருளியல்...

சத்திய மார்க்கமும்
அதன் வழி கோட்பாடும்
ஹிஜாபெனும் முக்காடும்
என் உயிரியலில் கலந்த வாழ்வியல்.
இதனால் அடைகிறேன் நிம்மதியெனும் பேரருளியல்...
முக்காடிட்டு மூடியிருப்பது
அமானித மேனியையேதவிர
அறிவுகொண்ட மூளையை அல்ல!
#ஹிஜாப்தினம்
-----------------
இறைதந்த உயிருடல்
இன்றியமையாதது
இவ்வுலக வாழ்வுயென்றும்
இனிமையின்னலேதவிர
இதுவே நிலையாகாது.
- Malikka Farook

Malikka Farook

⁠⁠⁠மந்திரம் சொல்வேன் மகனே...!

ஏக்கம் உன்நெஞ்சில்
---- ஏறாமல் இருந்திடவே
கேட்டது எல்லாம்
---- கிடைக்கச் செய்வேன்
புரவியிலேறி புவியெங்கும்
---- சென்று வெற்றிகள்பெற்றிட
சான்றோனாய் வாழ்ந்திட
---- வழிவகைகள் வழங்கிடுவேன்

LinkWithin

Related Posts with Thumbnails