எத்தனை மின்னல் !
எனது இருட்டுக்குள்
எத்தனை வெளிச்சம் !
எனது இல்லாமைக்குள்
எத்தனை கொடைகள் !
எனது பலஹீனத்தில்
எத்தனை வலிமை !
எனது அறியாமையில்
எத்தனை ஞானம் !
எனது பசிக்குள்
எத்தனை ருசி !
எனது தோல்வியில்
எத்தனை வெற்றி !
எனது ஜீவியத்தில்
எத்தனை இறப்பு !
இறைவா...
அத்தனையும்
உன் அருளேயன்றி
வேறென்ன ?
No comments:
Post a Comment