Friday, September 28, 2012

ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?

அமெரிக்கா கூறுவதுபோல உண்மையான கருத்து சுதந்திரம் அங்கு இருக்குமானால் ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?
அசாஞ்ச் அமெரிக்காவின் எதிரி – அமெரிக்க இராணுவம் அறிவிப்பு!
தற்போது அமெரிக்காவின் போலி கருத்து சுதந்திரத்துக்கும் இஸ்லாமிய விரோத போக்குக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இநத விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜீலியன் அசாஞ்ச். அமெரிக்கா கூறுவதுபோல உண்மையான கருத்து சுதந்திரம் அங்கு இருக்குமானால் ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?

ஒரு பக்கம் அல்லாஹ்வின் தூதரை இழிவு படுத்தும் படத்தை தடை செய்ய முடியாது அது கருத்து சுதந்திரம என்று வாய்கிழிய பேசும் அமெரிக்கா மறுபக்கம் அமெரிக்காவின் திருட்டுத்தனத்தை உலகுக்க  ”விக்கி லீக்ஸ்’ இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். அவரை பழிவாங்க துடிப்பது ஏன் ? கருத்து சுதந்திரம என்றால் இதை மட்டும் எதிர்ப்பது இரட்டை வேடம் இல்லையா?

படித்தேன் பிடித்தேன் (பகுதி-4)

by anbudan buhari

படித்தேன் பிடித்தேன் 010 

தவறாகப் புரிந்துகொள்ளும் உலகுக்கு
இஸ்லாத்தைச் சரியாக எடுத்துக் கூறுவது எப்படி?

இஸ்லாத்தின் பண்புகளாகவே
முஸ்லிம்கள் ஆவது ஒன்றுதான் அதற்கான ஒரே வழி

அன்பு அமைதி கருணை ஈகை அறிவு ஆகிய
இஸ்லாத்தின் அடிப்படைக் குணங்களோடு
உலகத்தாரோடு உறவாடவேண்டும்

மென்மையான இஸ்லாத்தின் மேன்மைகளையும்
உண்மையான இஸ்லாத்தின் உயர்வுகளையும்
வாழ்ந்து காட்ட வேண்டும்

Tuesday, September 25, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-3)                                                        படித்தேன் பிடித்தேன் 007
குர-ஆன்
முகம்மது நபி வழியே இறங்கிய இறை வசனங்கள்

ஹதீத்
முகம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகள் உபதேசங்கள்


குர்-ஆன்
எல்லா காலத்துக்கும் ஏற்புடையவை என சில வசனங்கள், நபி வாழ்ந்த காலத்துக்கு என்று சில வசனங்கள், நபிக்கு முன் வாழ்ந்தவர்களின் வரலாறு என்று சில வசனங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

ஹதீத்
முகம்மது நபி சொன்னதாக பத்துத் தலைமுறைகளாக செவி வழியாகவும் ஏடுகள் வழியாகவும் சொல்லப்பட்டு முகம்மது நபி இறந்து இருநூறு வருடங்கள் கழித்து தவறானவற்றை நீக்கி அன்றைய நாள் சுன்னத் ஜமாத் ஆய்வுக் குழுவினருக்கு ஏற்புடையவற்றை மட்டும் தொகுத்த குறிப்புகள்

குர்-ஆன்
பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை

ஹதீத்
பெரும்பாலும் நபி வாழ்ந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவைபடித்தேன் பிடித்தேன் 008

நம்பிக்கையே காமதேனு - பாரதியார்

பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது.

நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது.

சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை.

குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்

 
படித்தேன் பிடித்தேன் 009

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை

அந்த ஏகத்துவக் கொள்கையில்
தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்

உலக வாழ்க்கைப் பயணத்தில்
ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும்
தீர்வு காண்பதும் தவறானதல்ல

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும்
இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத
அக்கறையும் கவனமும் எப்போதும் இருப்பது
எல்லோருக்கும் கடமையாக வேண்டும்

Source : http://anbudanislam
படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)
படித்தேன் பிடித்தேன்

(Thoughtful) யூட்யூப் புறக்கணிப்பு - சாத்தியமா? அவசியமா? விவேகமா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் பீர் முஹம்மது அவர்களால் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு, சகோதரி ஷர்மிளா ஹமீத் அவர்களால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவு பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அலசுகின்றது. 


ஒரு பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..! அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும் அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..!  

அதெப்படி இந்த மோசமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப இயலும் என்கிறீர்களா? இதுக்கும் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு..!  சர்ச்சைக்குரிய படம் வெளியாகி  ஒருவித பதட்டமான சூழலில் உலகம் இருந்த போது கடந்த வாரம் உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க சஞ்சிகைகளில் ஒன்றான NEWSWEEK  கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டது.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Monday, September 24, 2012

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.

யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.

Wednesday, September 19, 2012

சர்ச்சைக் குரிய படம் பற்றி - புதிய தலைமுறையின் 'நேர் பட பேசு'

சர்ச்சைக் குரிய படம் பற்றி ஓர் ஆய்வு - புதிய தலைமுறை டிவி-யில் 'நேர் பட பேசு' நிகழ்ச்சி

Monday, September 17, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)


படித்தேன் பிடித்தேன் 004


ஷரியா சட்டத்தை பின்பற்றாத மலேசியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் Islamic Republic of Malaysia , Islamic Republic of Pakistan  என பிரகடனப் படுத்திக் கொள்ளும்போது , வளைகுட நாடுகள் ஏன் இன்னும் தங்களை

Kingdom of Saudi Arabia
Sultanate of Oman
United Arab Emirates
Amir of Qatar
Kingdom of Bahrain /Kuwait


என அழைத்துக் கொள்கிறது

- சடையன் சாபு
படித்தேன் பிடித்தேன் 005

நீரூற்று ஏதுமில்லை
நிலத்திலும் ஈரமில்லை
விழியருவி பெருக்கும் நீரில்
செழிக்கிறது பாலைவனம்

- சபீர்


படித்தேன் பிடித்தேன் 006

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை.

அந்த ஏகத்துவக் கொள்கையில் தடம் புரளாத
அனைவரும் இஸ்லாமியர்களே.

இன்றைய உலக வாழ்க்கைப் பயணத்தில்
நிகழும் ஏனைய செயல் முறைகளில்
கருத்து வேறுபாடுகள் கொள்வதும்
அதன் காரணமாக எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்வதும் புதிய தீர்வுகளைக்
காண்பதும் தவறானதல்ல வரவேற்கப்பட
வேண்டிய செயலாகும்.

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த
ஒரு முரண்பாடும் இஸ்லாத்தையும்
இஸ்லாமியர்களையும் முன்னேற விடாமல்
தடுத்துவிடாத வகையில் கவனமாக
இருத்தலை ஒவ்வொருவரும் கடமையாக்கிக்
கொள்ள வேண்டும்

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

நன்றி http://anbudanislam

Sunday, September 16, 2012

இல்முதீனுக்கு லீக்வான்யூ விருது

 by நாகூர் ரூமி 
லீக்வான்யூ விருது by நாகூர் ரூமி என் (சகோதரரின்) மகன் இல்முதீனுக்கு சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான லீக்வான்யூ விருது சென்ற ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டுள்ளது. என் தம்பி முஹிய்யித்தீன் அப்துல் காதரின் அர்ப்பணிப்பு பற்றி ஒரு நூலே எழுதலாம். இன்று அவர் சிங்கப்பூரில் DNH Consultants என்ற கம்பனியை சொந்தமாக நடத்தி வருகிறார். பாசிஸ்-ரிஸ் என்ற பள்ளியில் படித்துவரும் அவருடைய மகன் இல்முதீன் All Round Excellnce-க்காக இந்த விருது பெற்றுள்ளார். 

 இது ஒரு பெருமைக்குரிய விருது. எளிதில் வாங்க முடியாதது. இங்கே செய்வதுபோல் அரசியல் செல்வாக்கு போன்ற சமாச்சாரங்களை வைத்து வழங்கப்படும் விருது அல்ல. தகுதி அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் விருது. இந்த ஆண்டு அது எட்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதில் இல்முதீனும் ஒருவர். அதற்காக முதலில் My Greatest Influence in Life என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அவர் அதை எழுதி முதலில் எனக்கு அனுப்பி கருத்து கேட்டிருந்தார். அதைப் படித்துப் பார்த்து நான் அசந்துபோனேன். அவ்வளவு திறமையும், உழைப்பும், அறிவும் அதில் பிரதிபலித்தது. சில மாற்றங்களை மட்டும் நான் அதில் செய்து கொடுத்தேன். அது செலக்ட் ஆனது. 

Saturday, September 15, 2012

முகம் மறைத்த ஒரு முஸ்லிம் பெண்ணும் ஒரு வாலிபனும்

தானாகவே செத்தவைகளையும்
இரத்தத்தையும்
பன்றியின் மாமிசத்தையும்
அல்லாஹ் அல்லாத
கடவுளுக்குப் படைக்கப்பட்டவைகளையும்
உங்களுக்கு அல்லாஹ்
ஹராமாக ஆக்கியிருக்கிறான்

ஆனால்
தானே விரும்பாமலும்
வரம்பு மீறாமலும்
அவசியம் காரணமாக
எவரேனும் கட்டாயப்படுத்தப்பட்டால்
இவற்றை உண்பது குற்றமில்லை

அல்லாஹ் கருணைமிக்கோனும்
மன்னிப்பவனுமாக இருக்கின்றான்
குர்-ஆன் 2:173
Source : http://anbudanislam
.

Friday, September 14, 2012

படித்தேன் பிடித்தேன்

 படித்தேன் பிடித்தேன் 001

மேலும் இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்

இது தவறான பார்வை. இஸ்லாமியர் தங்கள் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ள ஏற்கனவே இஸ்லாமை தழுவியுள்ள நாடுகள் ஒன்றிணைந்தாலே போதும்.

உலகில் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இதில் பாகிஸ்தான், இந்தோனிசியா, மலேசியா இந்தியாவில் மட்டுமே 100 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் உள்ளனர்.

இவர்கள் அன்பால் உலகையே ஆளலாம். அதிகாரத்தால் ஆளத் தேவையில்லை.

அமெரிக்காவையோ இதர தேசங்களையோ ஆள வேண்டும் என்ற தேவையும் இல்லை.


Wednesday, September 12, 2012

குர்ஆனை ஓதுதல்


குர்ஆனை ஓதுதல்

இறைவன் முகம்மது நபியைத் தனக்கான
ஊடகமாய் ஆக்கிக்கொண்டு மனித வாழ்க்கை
நெறிகளை செம்மையாய் வகுத்துக் கொடுத்தான்

அந்த உபதேசங்களின் தொகுப்புதான்
குர்ஆன்

*

இறைவனின் திருமறைக்கு எத்தனையோ
பெயர்கள்

ஆனால் அந்தத் திருமறையிலேயே பல முறை
குறிப்பிடப்பட்டுள்ள “குர்ஆன்” என்ற பெயரே
சிறப்புப் பெயராய் ஆகி அழைக்கப்படுகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”
என்று பொருள்.

*

Tuesday, September 11, 2012

நம்பிக்கைத் துளி C.M.N சலீம் (நேர்காணல்)

சலீம்தமிழக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு களப் பணியாற்றி வருபவர் சகோதரர் சி.எம்.என் சலீம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நலிந்த நிலையிலிருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை இலட்சியமாகக் கொண்டு சிறப்பான திட்டமிடலுடன் செயலாற்றி வரும் சகோதரர்
  சகோதரர் CMN                                  சி.எம்.என் சலீமுடனான கலந்துரையாடலை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Monday, September 10, 2012

பயனுள்ள சமையல் குறிப்புகள்!

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.  இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

நபி வழியும், நபித் தோழர்களும்

 நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்குமிடையில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பள்ளியிலும், கடைவீதியிலும், பிரயாணத்திலும் கலந்தே வாழ்ந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்களை நேரடியாகவோ சந்தித்து உரையாடும் வாய்ப்பை நபி தோழர்கள் பெற்றிருந்தனர்.

 நபி(ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மிக உன்னிப்பாகவும், மிகக் கவனமாகவும் பேணி வந்தார்கள். அறியாமை என்னும் காரிருளில் கிடந்த அவர்களுக்கு எந்த நபியின் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அந்த நபியைத் தங்களின் இவ்வுலக மறுவுலக வாழ்க்கையின் வழிகாட்டியாகப் பெற்றதினால் தான் அவர்களின் சொல், செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எந்த அளவிற்கு நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல்களைக் கண்காணித்து வந்தார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களின் அருகாமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதபோது வேறு தோழர்களைத் தங்களுக்குப் பகரமாக ஆக்கி, நபி(ஸல்) அவர்களிடமிருந்து என்னென்ன சொல், செயல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்காணித்து அவற்றைப் பின்னர் தமக்குக் சொல்லுமாறு கூறுவார்கள்.

Thursday, September 6, 2012

இளவரசியுடன் கைகுலுக்க ஈரான் ஒலிம்பிக் வீரர் மறுப்பு!


லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில், ஈரான் நாட்டைச் சேர்ந்த  மாற்றுத் திறன்  வீரர் ஒருவர் பிரிட்டிஷ் இளவரசி கேத்மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்துள்ளார்.இஸ்லாமிய மரபுகளின் படி அந்நிய எதிர்பாலினருடன் ஆணோ, பெண்ணோ கைகுலுக்குவதில்லை என்பதால் இவ்வாறு அந்த வீரர் நடந்துகொண்டுள்ளார் என்று சொல்லப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி கண்ட வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் இளைய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் இளவரசி கேத் கைகுலுக்கிபாராட்டுகளையும் தெரிவித்தார்.

Wednesday, September 5, 2012

ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?


இஸ்லாம் மார்க்கத்தில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடலும் மனமும் உறுதியும் தூய்மையும் ஆகின்றன.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது. சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது. அந்தத் தொழுகைக்குச் செல்லும்முன் பலரும் குளித்து விடுவார்கள். அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேர ஓசோனை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது. அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவின் பல நிலைகளைப் போன்றது. நெற்றி தரையில் தொடும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது. இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும். அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails