படித்தேன் பிடித்தேன் 001
மேலும் இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்
இது தவறான பார்வை. இஸ்லாமியர் தங்கள் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ள ஏற்கனவே இஸ்லாமை தழுவியுள்ள நாடுகள் ஒன்றிணைந்தாலே போதும்.
உலகில் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இதில் பாகிஸ்தான், இந்தோனிசியா, மலேசியா இந்தியாவில் மட்டுமே 100 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் உள்ளனர்.
இவர்கள் அன்பால் உலகையே ஆளலாம். அதிகாரத்தால் ஆளத் தேவையில்லை.
அமெரிக்காவையோ இதர தேசங்களையோ ஆள வேண்டும் என்ற தேவையும் இல்லை.
படித்தேன் பிடித்தேன் 002
குர்ஆன், ஹதீஸ் என்று வரும்போது பதவிகளுக்கும் பணத்துக்கும் ஆசைப்படும் சிலர், அவற்றை மக்கள் மத்தியில் விளக்குவதற்குப் பதிலாக, அவை சாதாரண மக்களாகிய உங்களுக்கு விளங்காது அவ்வாறு விளங்கிக்கொள்ள நீங்கள் முயன்றால் வழிகேட்டில் நுளைந்து விடுவீர்கள் என்ற அச்சத்தை ஊட்டி அந்த மக்களையே தவறான திசைகளில் தூண்டி விடுகிறார்கள்.
யாரெல்லாம் குர்ஆன், ஹதீசுகளை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கிறார்களோ அவர்களைப் புறக்கணித்து, அடித்துத் துரத்தி விடுமாறும், அவர்களுக்கு எந்த விதத்தில் என்றாலும் பரவாயில்லை, எப்படியாவது நோவினைக் கொடுத்து, சமூகத்தில் அவர்களை மானபங்கப்படுத்தி இழிவாக்கும்படி செய்கிறார்கள். இவைகள் இதுவரை நடந்த, இன்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்கள்.
துருக்கியில் இருந்து செய்யத் நஸ்ரத்தீன்
படித்தேன் பிடித்தேன் 003
ஆங்கிலம் சைத்தானின் மொழி என்று அதைப் பயிலவிடாமல் பலப்பல ஆண்டுகள் இருட்சிறையில் முஸ்லிம்களை வைத்தவர்கள் யார் என்று அலச வேண்டும்.
குர்ஆனை மனப்பாடம் செய்து ஓதினால் மட்டும் போதும் ஆயிரம் கோடி நன்மைகள்; குர்-ஆனை விளங்கிக்கொள்ளத் தேவையில்லை என்று குர்ஆனை அருளிய இறைவனின் வார்த்தைகளுக்கே எதிரான கருத்தை அமல் படுத்தியவர்கள் யார் என்று அடையாளம் காணவேண்டும்.
இஸ்லாமை அறிந்துகொண்டால்தான் இஸ்லாமியர்கள் வளர்வார்கள். இஸ்லாமியர்கள் வளர்ந்தால்தான் இஸ்லாம் வளரும்.
நன்றி: நமக்குள் இஸ்லாம்
Source : http://anbudanislam
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
No comments:
Post a Comment